LEARN JAPANESE - தமிழில்
யாண்டு 2024, ஜப்பானிய மொழியைக் கற்க துவங்கிய போதே இணையத்தில் இந்தப் புத்தகங்களின் முகப்புப் படத்தை பார்த்ததுண்டு எனினும், இங்கே கொட்டிக்கிடக்கும் பல ஆங்கில-வழி ஜப்பானிய மொழி பயிற்றுவிக்கும் புத்தகங்களில் இதுவும் மற்றுமொன்று என கடந்துவிட்டேன். (அட்டை வடிவமைப்பை கவனிக்கவில்லை; அதில் ஜப்பானிய அகரமும் (あ), தமிழ் அகரமும் (அ ), ஆங்கில அகரமும் (a) கோர்க்கப்பட்டுள்ளன) இந்த புத்தகமானது Cognitive Approach-ல், அதாவது வெறுமனே வார்த்தைகளையும் இலக்கணங்களையும் ஒரு மொழிபெயர்ப்பு போல் மட்டும் பயிற்றுவிக்காமல், மொழி மற்றும் பண்பாட்டு சாரத்தை சூழ்நிலை வழி புகுத்தி மொழிச் சிந்தனையை தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான Minna No Nihongo (அணைவருக்குமான ஜப்பானியமொழி ) புத்தகத்திலும் இந்த சாரம் உள்ளது எனினும் அது தமிழர்களுக்காக செய்யப்பட்டது அல்ல. மாறாக இந்த "Learn Japanese" புத்தகங்கள் தமிழர்களுக்காகவே செய்யப்பட்டது; தமிழிடம் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் மூலம் ஜப்பானிய மொழியை நமக்கு மிகவும் நெருக்கமாக கொண்டுவருகிறதன. இது வேறெந்த புத்தகத்திலும் இல்லை. மேலும், ஆங்கில விளக்கங்களையும...