Posts

Showing posts with the label எண்ண அலைகள்

The Castless Collective - Songs

Image
List of songs which are played in the Castless Collective's gana music concert: 01.Vaa sonna vada chennai 02.Chennaiya pola oore illa 03.Engu poranthu 04.Medrasin magilchi 05.Aanum pennum kaadhal 06.Vivasayam pannaporen 07.Nanga Platforum 08.Un paattanellam 09.Karuppu kulla kamarkattu 10.Babasaheb rap 11.Tik tik yarathu 12.Karuvadu macha 13.Kaalu ruba thuttunalum 14.Vayithu polappukkaaga 15.Talaiva 16.Kaalaraththaan thookikinu 17.Tinki tinki naina 18.Namma kari 19.Vada chennai eppadi irukkum Download Link:   TCL all songs Credits: Neelam Cultural Center

பெட்ரோல் ட்ரை சம்பவம்

சுமார் ஒரு மாசத்துக்கு முன்ன இருக்கும், இன்னைக்கு மாதிரியே அன்னைக்கும் ஆஃபிஸ்லேர்ந்து கெளம்பும்போதே பைக்கு முக்க ஆரம்பிச்சிருச்சு, ஆல்மோஸ்ட் டேங்க் காலி. ஆனா அன்னைக்கு சரியா மணி பண்ணிரண்டு, இன்னைக்கு பத்துதான். ஒரு ரெண்டு கி.மீட்டர் தாண்டிதான் புதுசா ஓபன் பண்ணின பெட்ரோல் பங்க் இருக்கு. ச்சோக்கையும், ஆக்ஸிலேட்டரையும் முறுக்கிபிடிச்சு வந்ததால நல்லபடியா கரெக்டா பெட்ரோல் பங்க் கிட்ட வந்து ஆஃப் ஆகியிருந்தது. உள்ள போனதும், இரநூறு ரூபாய்க்கு போடுங்க ப்ரோன்னேன், இல்ல சார் பெட்ரோல் இல்ல என்றார். 'என்னங்க நைட் க்ளோஸ் பண்ணிடுவிங்களா என்ன? லாஸ்ட் வீக் வந்தேனே இந்த டைமுக்கு இருந்ததே?' என்று கேட்டேன். 'இல்ல சார் நம்ம பங்க் 24 ஹவர்சும் உண்டு, இன்னைக்கு ஸ்டோரேஜ் டேங்க்ல கொஞ்சம் வேலை போயிட்ருக்கு அதான்' அப்படின்னு டேங்கை நோக்கி கையை காட்டினார். இது என்னடா நமக்கு வந்த சோதன இன்னும் மூனு கி.மீட்டர் வேற தள்ளனுமேன்னு நெனச்சுட்டே வண்டிய அங்கிருந்து நகர்த்த ஆரம்பிச்சேன், சரியா மூனு நாளு செகண்ட்லயே 'சார்! வண்டி ட்ரையிங்களா!?'ன்னு அந்த நபர் கூப்பிட்டு கேட்டார். 'ஆமா ப்ரோ! ...

Gutland - Beauty of not explaining much

Image
'Govinda Van Maele' இந்த பேருதான் முதல்ல GUTLAND படத்த பார்க்க ஈர்த்தது, நம்ம நாட்டுக்காரர் போல, ஜெர்மன்ல செட்ல் ஆகிருக்கணும், எப்படி படம் எடுத்துருக்காருன்னு பாக்கணும்னுதான் தேவிபாலா போனேன். முன்னாடியே நண்பர்கள் எச்சரித்ததுமாதிரியே தியேட்டராயா அது? எல்லா தியேட்டர்லயும் முன்னாடி நிக்கிறவன்/உட்காந்திருக்குறவன் தல தான் மறைக்கும் இதுல பின்னாடி போறவன் வர்றவன் தலைலாம் ஸ்கிரீன்ல தெரியுது, அதும் தேசிய கீதத்துக்கு எல்லாரும் எழுந்து நிக்கிறப்போ பாக்கணுமே தியேட்டர்ல இருக்குற பாதி பேரோட பாதி உடம்பு நிழல் ஸ்க்ரீன்ல பட்டு அப்டியே பேக்ட்ராப்பில நம்ம தேசியக்கொடி ஸ்க்ரீன்ல பறக்குறத பாக்க புல்லரிச்சுருச்சு. படத்துக்கு வர்றேன், Beauty of not explaining much'னு ஒன்னு சொல்லுவாங்க அதுக்கு நல்ல எக்ஸ்சாம்பில் இந்த படம், பாக்குறவங்கதான் தானே புரிஞ்சிக்கணும், ஆனா அதுக்காக ரொம்போ தட்டையாவெல்லாம் கதை சொல்லல, நல்ல அழகா கொண்டு போயிருக்கார். லக்ஸம்பர்க்ல ஒரு சின்ன கிராமத்துல நடக்குறமாதிரி கதை, படம் பாத்ததும்தான் தேடி பாத்தேன் லக்ஸம்பர்க்கின்றது ஒரு சின்ன யூரோப் கன்ட்ரியாம் சுற்றி பெல்ஜியம், ஃபி...

15வது சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல்-முதல் நாள்

போன மாசம் உபெர்ல மிஸ் பண்ணின tripod'அ வாங்க கார் ட்ரைவர் வீட்டுக்கு போக வேண்டி இருந்தது, மேடவாக்கம்ல இருந்து ஆவடிக்கு முன்ன இருக்கிற காடுவெட்டிக்கு மொத்தம் 35 கிலோ மீட்டர், அப்புறம் அங்கிருந்து அண்ணா தியேட்டர் ஒரு 25 கிலோமீட்டர் அங்க ஃபர்ஸ்டு ஷோ முடிச்சு, அப்புறமா பக்கத்துல தேவி தியேட்டர்ல அடுத்த ஷோ, அப்புறமா அங்க இருந்து ஆஃபிசுக்கு ஒரு 25 கிலோமீட்டர், மொத்தமா இன்னைக்கு மட்டும் 85 கிலோமீட்டர். இப்படியாக ஆரம்பிச்சிருக்கேன் இந்த வருட சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல. இன்னைக்கு கீழ இருக்குற இரண்டு படங்கள பார்க்க முடிஞ்சது 1. The President (El Presi) 2017/70”/Spanish . கொஞ்சம் லேட்டா போனதால முதல் 10 நிமிசத்த தவற விட்டுட்டேன். பார்த்த மிச்ச படத்தோட கதை சொல்லும் விதம் கொஞ்சம் ஓல்டு ஸ்கூலா இருந்தாலும் சூப்பரா இருந்தது. படம் முழுக்க ஒரு கார்லயே நடக்குற மாதிரி இருந்தது. எனக்கு தெரிஞ்சு கேமிராவை காரவிட்டு வெளிலயே கொண்டு வரலன்னு நினைக்கிறேன். ஒரு ப்ரெசிடெண்டா தேர்வாகிட்ட மனுசனோட உண்மையான கேரக்ட்டரையும், அதை எப்படி அவன் ஒரே நாள் இரவுல மறைக்க ட்ரை பண்ணுறான்றதையும், அவனோட ஊர்ல, ஒரு கார்லயே சொ...

choker என்றொரு வஸ்து

Choker என்ற ஒரு வஸ்து இருக்கிறது, இதுவரை அதோட பெயர்தான் நமக்கு தெரியாமல் இருந்திருக்கும். அது பெண்கள் கழுத்த சுத்தி போட்டுக்குற ஒரு நெக்லெஸ் டைப், சில படங்களில் பார்த்திருக்கலாம். இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு பொண்ணுங்கள மட்டும்தான் இந்த choker போட்டிருந்து பாத்திருக்கிறேன். ரெண்டு பேரும் அவ்வளவு அழகு!. Matter is simple, இந்த நோஸ் ரிங் போட்டிருக்கும் பெண்களை நமக்கு பாத்ததும் பிடிச்சிரும் இல்லையா அதேமாதிரிதான் இதுவும். ஆனா பார்க்குற சிலருக்கு பிடிக்காமாவும் போகவும் வாய்ப்பிருக்க ு, அதுக்காக அவங்களோட ரசனையை நாம கேள்விகேக்கணும்னு அவசியம் இல்ல. ஆக்சுவலா அவங்களே அவங்கள நல்லா கேள்வி கேட்டுக்கணும். இன்னொரு விஷயம், பார்த்ததுமே பிடிச்சிரும்னு சொன்னேன் இல்லையா? நிச்சயமா பிடிக்கும்! ஆனா அவ்ளோ சிக்கிரம் அவங்ககிட்ட நம்மளால நெருங்கி பேசிரமுடியாது, ஏன்னா நம்மளோட டிசைன் அப்புடி! விஷயம் என்னன்னா "choker வந்து மேற்கத்திய நாடுகள்ல ஒரு காலத்துல prostitutes'ங்கதான் போட்டுட்ருந்தாங்க, அது அவர்களுக்கான அடையாளம், ஆக அத போட்டுக்குற பொண்ணுங்களா! கொஞ்சம் அத தெரிஞ்சுக்கிட்டு போடுங்க!"ண்றதுபோல கொஞ்ச...

Hugo- Hugo

Image
போனமுறை ஊருக்கு சென்றிருந்தபோது லோக்கல் சேனலில் புரூஸ்-லி என்கிற காவிய தமிழ்படத்திலிருந்து ஒரு காமெடி(?) சீன் பார்க்க நேர்ந்தது, 'ஜோக்கர் சீன் இன் புரூஸ் லீ' என்று யூ-டியூப்ல் தேடினால் அது கிடைக்கும். அந்த சீனில் ஜோக்கர் வேடத்தில் முனீஸ்காந்த் காரிலிருந்து இரங்கியதும் ஒரு இங்க்லிஷ் ஆல்பம் மியூசிக் வரும், கேட்ட முதல் தடவையே சில பாடல்கள் ஈர்த்துவிடுமல்லவா அதுபோன்றதொரு பாடல் அது. கொஞ்சம் pharrell williams'ன் happy பாடலை நினைவுபடுத்தியது. பின்னர் அதைப்பற்றி தேடியதில்  அது Old tyme relegion என்கிற ஆல்பத்தில் வரும் 99 problems என்கிற பாடல், Hugo என்பவர்தான் அந்த ஆல்பத்தின் ஆர்டிஸ்ட். ஏற்கனவே 'Hugo' என்கிற ஹாலிவுட் படம் ஒன்று பார்த்திருக்கிறேன், எனக்கு சிறுவயதில் கண்டிருந்த பல கனவுகளின் கோர்வை போன்ற அனுபவத்தை தந்த லவ்லி படம் அது. கனவுகளை விளக்கிச்சொல்வது கஷ்டம் அல்லவா ஆக படத்தை இறக்கி பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது விக்கி அல்லது ஐ.எம்.டி.பி-யில் தேடிப்படித்துகொள்ளுங்கள். இப்போ இந்த 'Hugo' விற்கு வருகிறேன், இவரைப்பற்றி தேடியதில் இவர் இங்கிலாந்தில் பிறந்து த...

Koh-i-noor hardtmuth toison d'or 1900

Image
Koh-i-noor hardtmuth toison d'or 1900, இதுதான் நான் யூஸ் பண்ணுற பென்சில், அப்புறம் என்கிட்ட சஜ்ஜசன் கேக்குறவங்களுக்கு நான் சொல்லுறதும் இதுதான். கூடவே நான் சேத்து சொல்லுற இன்னொரு பிட்டு, 'அதாவது டார்க் ஷேட்லாம் அப்டி இருக்கும், சூப்பர் பென்சில்தான், ஆனா சீவ சீவ முக்குதான் உடஞ்சிட்டே இருக்கும்'னு சொல்லுவேன். இப்டியே சொல்லிட்டே இருந்தா வேலைக்கு ஆகாதுனு அந்த கம்பெனிக்கு கடுதாசி ஒன்னு எழுதுயிருந்தேன், ரெண்டுநாள்க்கு முன்ன பதில் வந்தது. 'உங்களோட அப்சர்வேஷனுக்கு நன்றி, நாங்க நல்லா  செக் பண்ணிட்டோம் அந்த மாதிரி ப்ரச்சனையெல்லாம் இந்த பென்சில்ல இல்ல, எதுக்கும் நல்லா யோசிச்சு பாருங்க, நீங்க டேபில்ல இருந்து அல்லது அதுபோல கொஞ்சம் ஒசரத்துல இருந்து கீழ போட்டிருக்கலாம், அதுனால பென்சில் disrupted ஆகிருக்கலாம். However, we thank you for the information, we will keep an eye on the quality of graphite pencils.'னு சொல்லி சுபம் போட்டுருக்காங்க. நானும் உக்காந்து நல்லா யோசிச்சு பாத்ததுல, நாந்தான் பல முறை கீழபோட்ருக்கேன்னு நியாபகம் வந்திருக்கு. அனாலும் ஒரு டெஸ்ட் எஞ்சினியறா உட்காந்து...

நண்பேன்

பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்த சமயம், நீ வாங்கின மார்க்குக்கு கூடவெல்லாம் வந்து காலேஜ்ல சீட்டு கேக்க முடியாது நீங்களே எதாவது ஒரு காலேஜ்ல போயி ஃபார்மெல்லாம் வாங்கி போட்டுகோங்க, சீட்டு கெடச்சுதுன்னா வந்து சொல்லுங்க ஃபீசு பணம் மட்டும் கொடுக்குறோம் என்று வீட்டில் சொல்லிருந்தார்கள். . நானும் என் நன்பனொருவனும் திருச்சியில் ஜோசப், ஜமால், பிஷப் அப்புறம் நேஷனல் என்று ஒவ்வொரு காலேஜாக போகலாமென்று முடிவு பண்ணியிருந்தோம். முதலாவதாக நாங்கள் ஃபார்ம் வாங்கச்சென்ற காலெஜ் ஜோசப், மெயின் கேட ்டிலிருந்து ஒரு நூறு இருநூறு மீட்டர் தாண்டியதும் நாங்கள் முதலில் பார்த்தது அந்த காலேஜின் டாய்லெட். பார்த்துவிட்டு பக்கத்திலிருந்தவனை பார்த்தால் ஆளை காணவில்லை, வினாடி நேரத்திலேயே அந்த டாய்லெட்டின் வாசல்வரை சென்றிருந்தான். . உள்ளே சென்று ஓரிரண்டு நிமிடம் கடந்து வெளியே வந்தவனிடம் ஏண்டா அவ்ளோ அர்ஜெண்டா? என கேட்கலாமென்றிருந்தேன். ஆனால் அதற்கு முன்னமாக, வந்த மறுகணமே 'அப்பாடா அப்துல் கலாம் ஒன்னுக்கு போன டாய்லெட்ல நானும் ஒன்னுக்கு போயிட்டேண்டா!!' என்றான், ஒருநிமிடம் புல்லரித்துவிட்டது. இன்று அவன் போன்ற ...

பல்சர் 220

அது ஒரு பல்சர் 220, ஒரு 60கிமி வேகமிருக்கும் அன்றும் என்னை கடந்துசென்றது, ஏற்கனவே ஒருமுறை ஓ.எம்.ஆரிலும், ஒருமுறை பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் ரோட்டிலும் பார்த்திருக்கிறேன். பேக் ச்சேஸிலிருக்கும் ஃபெண்டர் நீக்கப்பட்டிருக்கும். ஒரிஜினலாகவே அந்த வண்டிக்கு தனியாக மட் குவார்ட் இல்லாததாலும், கூடவே இந்த ஃபெண்டர் நீக்கப்பட்டிருப்பதாலும் எப்போது பார்த்தாலும் சட்டென கவனத்தை ஈர்த்துவிடும். கூடவே அந்த பல்சருக்கே உரித்தான அந்த தடித்த சைலன்சரும் அதன் பின்புறத்தை இன்னும் பிரமாண்டமாக காட்டும ். வெறும் பெயருக்காக சின்னதொரு நம்பர் பிளேட் மாட்டப்பட்டிருக்கும். அந்த வண்டியில் செல்பவனை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அடுத்தடுத்து வண்டிகளை கட் செய்து போகையில் பார்க்க ஒரு விதமாய் அம்சமாய் இருக்கும். எனக்கும்தான் அதுபோல சின்னதொரு மோட் செய்து ஓட்டவேண்டுமென்றுதான் ஆசை. ஆனால் இந்த மழைக்காலத்தை பார்த்துதான் பயம், வண்டிக்கு பின் வருபவரின் முகத்தில் சேற்றை வாரியடிக்க விருப்பமில்லை. உண்மையாக இதுபோன்ற சின்ன சின்ன மோடிஃபிகேஷன்களை செய்ய நினைக்கையில்தான் நம்மூரின் சாலைகளை எண்ணி கோபம் வரும். மட் குவார்டை நீக்குவ...

போஹா லைஃப்-ஸ்டைல்/ஃபேஷன்

Image
போஹோமியன் லைஃப்-ஸ்டைல்/ஃபேஷன் பத்தி பார்க்கும் முன்னால, ஹிப்பி எந்த இடத்துல போஹாவிடமிருந்து வித்தியாசப்படுதுனு பார்த்தோம்னா அது அழகியல். முன்னமே ஒரு பதிவுல சொன்னதுபோல, 'பிடிச்சா ட்ரெஸ்ஸ போட்டுக்குறதும், பிடிச்ச ட்ரெஸ்ஸ போட்டுக்குறதும்' ஹிப்பி ஃபேஷனுக்கு எளிமையான விளக்கம் (இப்படித்தான் இருக்கணும்ன்ற பொது மனப்பான்மையை உடைக்குமிடமிது). இதன் வாழ்வியலும் முழுக்க முழுக்க பொதுமனப்பான்மைக்கு எதிரானது, பாலினத்தை கடந்தது, போருக்கு எதிரானது, இயற்க்கைக்கு ஆதரவா னது, அரசியல் கருத்துக்களால் வளர்ந்தது, ஆக அழகியலின் வீச்சு முழுமையாக இருக்காது. இப்போ போஹோக்கு வருவோம், போஹோமியன் ஃபேஷனும் பொதுமனப்பான்மைக்கு ஆப்போசிட்டானதுதான். ஆனால் இதன் வாழ்வியலும், உடைகளும் அழகியல் சார்ந்தது. கொஞ்சம் சில்க், கொஞ்சம் மெட்டல், கொஞ்சம் மினிமலிசம், கொஞ்சம் கிரியேட்டிவ், கொஞ்சம் வின்டேஜ், கொஞ்சம் மாடர்ன் என கலந்துகட்டிய ஏஸ்த்தட்டிகள் லைஃப்ஸ்டைல் அது. ஒரு வருஷம் முன்னால வந்த மலையாள மூவி சார்லி'யின் முதன்மை கேரக்ட்டர்களின் காஸ்டியூம்களுக்கான ரெஃபிரன்சும் நிச்சயம் போஹா ஃபேஷனாகத்தான் இருக்கனும். காரணம் வழக்...

கலகக்காரன்

Image
2010ல எங்க ஊர் லால்குடில உள்ள பொது நூலகத்துக்கு வாராவாரம் நானும் என் ப்ரெண்ட்ஸ் மூனுபேரும் வெறித்தனமா போகிட்ருந்தப்போ, எஸ்ரா'வ படி சாருவயெல்லாம் படிக்காதன்னு லைப்ரரில யாரோ சொன்னதா நியாபகம். ஏதோ நியூஸ் பேப்பர்ல வந்த ஆர்டிகள்லகூட போட்ருந்தாங்கனு நினைக்கிறேன் சாரு ஒரு க்ரிடிக் ஊரே நல்லா இருக்குனு சொல்ற விசயங்கள கழுவி ஊத்துவாரு அப்டி இப்டினு. ஆனா உண்மையா இப்போவரைக்கும் சாரு, எஸ்ரா ரெண்டு பேரோட எந்த நாவலையும் உருப்படியா படிச்சது இல்ல. எஸ்ராஓட, ஓவியங்கள் பத்தின ஒரு புக்க முழுசா ப டிச்சிருக்கேன் ஆனா பேரு நியாபகம் இல்ல, அதேபோல சாருவோட 'சினிமா-அலைந்து திரிபவனின் அழகியல்' புக்கையும் படிச்சிருக்கேன், இளையராஜா மேலயும் கமல் மேலயும் இந்த ஆளுக்கு ஏன் இவ்ளோ காண்டு, ஏன் இப்டி கழுவி ஊத்திருக்காருன்னு நினச்சேன். அப்போ நான் படிச்சு ரசிச்ச புக்குன்னா அது ஆசான் இறையன்பு ஐ.எ.எஸ் எழுதுன 'அவ்வுலகம்' நாவல்தான்  :p .   அதுக்கப்புறம் சாருவை சுத்தமா படிக்கல, ஆனா சாருவபத்தி நிறைய படிச்சேன் ஆனா அதெல்லாமும் நெகட்டிவ்தான், அவரு வலது காதுல அவரு கடுக்கன் போட்டுருக்கிறதுல ஆரமிச்சு,...

மூணு-வீல் அவெஞ்சர்

Image
தினமும் ஆஃபிஸ்ல இருந்து வெளியே வந்ததும், கழுத்துல இருக்குற அந்தப்பாசக்கயிற கழட்டி வண்டியோட டேங்க் கவர்ல வைக்கறது வழக்கம். இன்னைக்கும் சில மணிநேரத்துக்கு முன்ன ஆஃபிஸ்ல இருந்து கிளம்பி வெளிய வந்ததும் அத கழட்டி வைக்க வண்டிய ஓரமா நிப்பாட்டினேன். அப்போதான் எதிர்ல இருக்குற இன்னொரு கம்பெனியோட கேட்டு'கிட்ட புது பஜாஜ் vvvவண்டி ஒன்னு நிக்கிறது கண்ணுல பட்டது. பாத்தமாத்திரமே கண்ண வேற எங்கவும் திருப்ப முடியல!. பொதுவா எனக்கு அவெஞ்சர் வண்டி பிடிக்காது, அத பாத்தாலே சின்ன கொழந்தைங்க பெடல் இல்லாம காலால தள்ளி ஓட்டி வெளாடுர பொம்ம சைக்கிள் நியாபகம்தான் வந்துபோகும். ஆனா இன்னைக்கு, அந்தநியாபகம் வந்துபோற கேப்புக்கு முன்னமே சட்டுன்னு அந்த வண்டியில இருந்த ஏதோஒரு வித்தியாசம் அந்த வண்டிய ரொம்போ அழகா, கொஞ்சம் பிரமாண்டமா காட்டுச்சு. அது அந்த வண்டியில எக்ஸ்டராவா இருந்த அந்த ரெண்டு வீல். அது மாற்றுத்திறனாளி ஒருத்தரோட வண்டி, மொதோமுறையா கியர் வண்டி ஒன்ன எக்ஸ்டரா வீலோட பாக்குறேன். அந்த வண்டியோட கருப்பு கலரும், ரெண்டு எக்ஸ்டரா வீலும், அதோட ஷாக்-அப்சர்வரும், அந்தவண்டிக்கே உரிய அந்த விண்ட்-ஷீல்டும் அதோட கெத்த ...

கேரளாவும் பிலிப்பைன்சும்

Image
Modified Two-Whealers பத்தி ஆர்வமா தேடிக்கிட்டிருக்கிறப்போ, பஜாஜ் M80க்கே டியூக் என்ஜின ஃபிக்ஸ் பண்ணி அசால்ட்டு பண்ணுன கேரள பைக்ஸ் போட்டோஸ் கூகுள்ல வராம இருக்குமா!?. வண்டியவெல்லாம் தாறுமாறா ஆல்டர் பண்ணுறது அவனுங்கதான். ஆடெர்னா எதோ புல்லெட் ஒன்னுல ஹேண்டில் பாரும் பில்லியன் சீட்டும் ஆல்டர் பண்ணி ஓட்டுறதோ, இல்ல RX100க்கு கலர் பெயிண்ட் மாத்தி ஓட்டுறதோ இல்ல. ஸ்ப்லெண்டரையே ஸ்க்ரேம்புலறா மாத்துறது. என்ன பொறுத்தவரைக்கும், வீட்டுல எப்பவுமே இருக்குற ஒரு வண் டியவே பக்காவா மெயின்டெய்ன் பண்ணி, சில ஆல்ட்ரேசன்சோட ஒட்டுறதுதான் கெத்து. அதுக்கு நம்ம சென்னை ஒன்னும் கொறஞ்சது இல்லனாலும், இங்கயெல்லாம் போலீஸ் கிட்ட மாட்டுனா மினிமம் நூறு ரூபா இருந்தாலே போதும் தப்பிக்க. ஆனா நான் கேள்விப்பட்ட வரைக்கும் கேரளாவ்ல அப்டி இல்ல, ரூல்ஸ் எல்லாம் ரொம்போ ஸ்ட்ரிக்டு. ஆனாலும் பைக் கிறுக்கனுங்க பூராவும் ஏதாவது ஆல்ட்ரேசன் பண்ணிதான் ஓட்டுறானுங்க. இப்போல்லாம் கேரளால வர்ற பாதி படங்களோட போஸ்ட்டர்ஸ்லகூட டூ-வீலரோட ஹீரோ வர்றமாதிரி போட்டுத்தான் ப்ரோமோட்டே பண்ணுறாங்கனு ஒரு ஆர்டிகல் கூட பாத்தேன். அந்த அளவுக்கு பைக் கிரேஸ் அங்க!...

ஏழைக்கேத்த எள்ளுருண்டை - OLX

Image
ரெண்டுமாசத்துக்கு முன்னால Bajaj V பைக்க டெஸ்ட் ட்ரைவ் பண்ணிட்டு, இத வாங்க முடியுமா முடியாதானு தெரியலன்னு அதோட ஃபோட்டோவ ஸ்டேடசா போட்டதுதான் கடைசி போஸ்ட். அதுக்கப்புறம் அந்த பைக்கை வாங்க முடியாதுனு தெரிஞ்சது, அப்புறம் ஏழைக்கேத்த எள்ளுருண்டைனு TVS Star City வண்டி ஒன்னு Secound Hand'ல வாங்கியாச்சு. OLX லதான் தேடி வாங்கினோம், ஒரு பத்து பைக்குக்கிட்ட பாத்து வச்சு அதுல அமைஞ்சதுதான் இந்த பைக். OLX 'ல வண்டி வண்டி வாங்குறதுன்றது மதில்மேல் பூனை நிலமைதான், டெசிஷனே எடுக்க முடியாது. அங்க விளம்பரத்துல வர்ற பாதி வண்டி ஏதாவது ஒரு பிரச்சனைனாலதான் வருது. இல்லனா ஓனர் ஏதாவது ஏமாத்துவாங்க, வண்டியோட சரியான விலைய கெஸ் பண்ணவே முடியாது, இப்படி பல பிரச்சனைய இருக்கும். எனக்கு கிடைச்ச அனுபவத்துல எப்படி வண்டி வாங்குறதுனு லிஸ்ட் பண்ணுறேன். கீழ நான் சொல்லப்போறது நம்ம சென்னைக்கு நல்லா பொருந்தும், சென்னைன்னு போட்டு OLX ல வண்டி சேர்ச் பண்ணி பாருங்க தினந்தினம் எப்படியும் ஒரு நூரு வண்டிவரைக்கும் ஆட் ஆகுது. ஆட் ஆகுறது மட்டுமில்ல, நல்ல பைக்னா உடனே ஒன்னுரெண்டு நாள்ல சேல்'லும் ஆகிடும். ஆனா மத்த டி...

Flatland by Aydın büyüktaş

Image
Surreal Photography'யாம். இந்த Inception, Elysium, Upside down படத்துங்கள்ல வர்ற சில சீன்ஸ எல்லாம் நியாபகப்படுத்திருச்சு, லவ்லி.  <3 informed by the satirical novel by edwin abbott titled ‘flatland: a romance of many dimensions’ — the story of a two-dimensional world occupied by geometric figures — turkish artist aydın büyüktaş sets his series ‘flatland’ in a surprising context that defies the laws of physical existence. இது இஸ்தான்புல், ஏற்கனவே இஸ்தான்புல்ல பத்தி கேள்வி பட்டிருக்றதாலயும், " Istanbul | Flow Through the City of Tales " அப்டின்ற இஸ்தான்புல் ஏர்லைன்சோட விளம்பர வீடியோ ஒன்னு பார்த்ததாலயும், ஃபாரிசுக்கப்புறம் காதல்வயப்பட்டிருக்றது இஸ்தான்புல்கிட்டதான். இப்போ அதுக்கு தீனி போட்டிருக்கு இந்த ஃபோடோக்ராஃபி சீரீஸ்.   :)

ரவீந்தர்'ஸ் மாம்ஸ் ரெசிப்பி

போனவருஷக்கடைசில வந்த வெள்ளத்துக்கு நிறைய கார்பொரேட் கம்பெனிகள்ல லோன் கொடுக்கப்பட்டது, எங்க கம்பெனிலயும் ஒரு லட்சம் வரைக்கும் வட்டியில்லாத லோன் இருந்தது, இருபது மாசம் நாலாயிரம் நாலாயிறமா கட்டினா சீக்கிரம் அடைச்சிடலாம். கிட்டத்தட்ட எங்க பேட்ச்ல இருந்த பாதி பேர் அந்த லோன எடுத்துகிட்டோம். நம்ம ஊரு பசங்க, பொண்ணுங்களுக்கு அவங்கவங்க தேவைய பொருத்து, education லோன அடைக்க, நகை எடுக்க, ஃபிக்ஸ்டு டெப்பாசிட்ல போட, வேறு சில கடன்கல அடைக்க என இப்படி அந்த பணத்த எடுத்து செலவு பண்ணத்தான் முடிஞ்சது, ஒரு காலத்துலயும் இப்படியான ஒரு லட்சம் பணத்த எடுத்து எதுலயாவது இன்வெஸ்ட் பண்ணவோ, இல்ல சைடுல ஒரு தொழில் தொடங்கவோ நமக்கும் சரி, நம்மள சுத்தியிருக்கிரவங்களுக்கும் சரி தைரியம் வரவே வராது, நாம வளர்க்கப்பட்ட விதம் அப்படி, இதுதான் இங்கு பெரும்பான்மை. இது நம்மள சுத்தி இருக்கிற நிலம, அப்படியே அடுத்த பக்கம் போவோம், நார்த்-இந்தியன்ஸ். அவங்களுக்கும் நமக்கும் இருக்கிற வித்தியாசத்திற்கு ஒரு காரணம் உண்டு, அதாவது காலனி ஆதிக்க காலங்கள்ல வடஇந்திய மக்கள் பல போர்களை சந்திச்சது உண்டு, அவங்க அனுபவிச்ச அளவு போர்களின் நிதர்சன...

க்ளட்ச் பென்சில்

Image
சின்ன வயசுல என்கிட்டே ஒரு பென்சில் இருந்தது, அது பேரு 'Mechanical Clutch pencil', கிட்டத்தட்ட அப்படியே முதல் ஃபோட்டோல இருக்குறமாதிறியேதான் இருக்கும். அது எங்க ஸ்கூல் ப்ரேயர் க்ரவுண்ட்ல பரப்பியிறுந்த மணல்ல கிடச்சதா நியாபகம். ஆனா அத எங்க எப்போ தொலைச்சேன்னு நியாபகம் இல்ல. அது என்கிட்டே இருந்தப்போ அது ஒரு ஏலியன் வஸ்துவா தான் எனக்கு தெரிஞ்சது. மொதோமுறையா பார்த்ததும் பென்சில்தான்னு மட்டும் தெரிஞ்சிடுச்சு. ஆனா அது எதோ எங்கயும் கிடைக்காத பென்சில்னும், முன்னால எப்பவாது யாராவது யூஸ் ப ண் ணிருப்பாங்க, இப்போ எங்கயும் கிடைக்காதுன்னும் நினைச்சு ரொம்போ பத்திரமா வச்சிருந்தேன். அந்த பென்சில்க்கான லெட்டும் தனியா கிடைக்கும்னெல்லாம் அப்போ தெரியாது, பென்சில சீவுறப்போ உடையுற பென்சில் மொக்கத்தான் அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன், அப்புறமா ஒரு நட்ராஜ் பென்சில் வாங்கி காம்பஸ வச்சு ரெண்டா பொளந்து அதுல இருக்குற பென்சில் லெட்ட தனியா எடுத்து அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன். கொஞ்சநாள்ல அதுல உள்ள அந்த ப்ளாஸ்டிக் ஹோல்டர் உடஞ்சிருச்சு, அப்புறமா எதோ ஒரு பேனாவோட ஹோல்டெர்லர்ல ஃபிக்ஸ் பண்ணி யூ...

பைரைட் கியூப்

Image
வட்டம்/கோளம் என்பது இயற்கை வடிவம், சதுரம்/கனசதுரம் என்பது செயற்கை வடிவம் என்பதுதான் என் புரிதலாக இருந்தது, இந்த 'பைரைட் கியூப்'ஐ பார்க்கும் வரை. "Natural Pyrite cubic crystals - இயற்கையாக உண்டான பைரைட் கனசதுர கனிமப்படிகம்" இதன் பெயர். பல கனிம படிகங்களை பற்றி நாம் பள்ளியிலே நிறைய படித்திருப்போம், படிகமானது வித விதமான வடிவ அமைப்புகளை பெற்றிருக்கும், உதாரணத்திற்கு, பனிக்குகைகளில் கூர் கூராக நீர் உறைந்து தொங்கிகொண்டிருக்கும் பனிக்கட்டி புகைப்படங்களை நினைத்துக்கொள்ளலாம், அது ஒரு உ தாரணம் தான், அது போல பல வடிவ அமைப்புகளை கொண்ட க்ரிஸ்டல்கள் இயற்கையாகவே உள்ளன என்பது அறிந்ததே, ஆனால் கனசதுர அமைப்புகளில் இதுபோல இயற்கையான எந்த வடிவத்தையும் முன்னர் கண்டது இல்லை, குறிப்பாக உள்ளங்கை அளவுகளில். இந்த பைரைட் கனிமம், இரும்பு & சல்பைடின் கலவைதான், இது பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் துப்பாக்கிக்கு தீப்பற்றவைக்கும் மருந்தாக பயன்பட்டிருக்கிறது, பார்க்க தங்கம் போல இருப்பதால் 'Fool's Gold' என்ற பெயரும் உண்டு, இது கனசதுரம் மட்டுமல்லாமல் பல வடிவங்களில் இருந்தாலும் கவனத்தை ஈ...

நிதர்சனம்

வாழ்வின் நிதர்சனத்தை எண்ணி வானத்தையே பார்த்துகொண்டிருந்தான் அவன். நீலவானமும், உஷ்ணம் பீய்ச்சும் சூரியனும், வெண்மேகமும், இடம்பெயரும் பறவைகளும் தெரியுமென நினைத்திருப்பான் போலும் ஆனால் கண்களின் மேல் தெரிந்ததென்னவோ மிதக்கும் சில வஸ்துகள் தான். ஒன்றையாவது சற்று நிறுத்தி பார்த்துவிடலாம் என ஒவ்வொரு முறை எத்தனிக்கையிலும் வஸ்து அங்குமிங்கும் நகர்ந்துகொண்டேயிருந்தது. வஸ்துவின் மேலிருந்த கவனம் விலகி சலிப்புதட்டியபின், எவையெல்லாம் தெரியுமென நினைத்தானோ அவையெல்லாம் தெரிய ஆரம்பித்தது. நிதர்சனமென்பது யாதென அப்போதுதான் புரிந்தது அவனுக்கு. நிதர்சனமென்பது பார்வைதான்!

சைக்கோக்கள் எங்கும் இருக்கிறார்கள்

வட இந்தியர்களுக்கென்று பல மொழிகளிருந்தாலும், இந்தியை தூக்கி பிடித்து, இங்கிருந்து அங்கு செல்லும் ஹிந்தி தெறியாத தென்னிந்தியர்களை, அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஏன்? பலரும் அங்கு இவ்வாறு சைக்கோக்கள் போல் நடந்துகொள்கிறார்களென்று பல முறை யோசித்தது உண்டு. சில நாட்களுக்கு முன் பதில் கிடைத்தது, அது யாதெனின், அங்கு மட்டுமல்ல சைக்கோக்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதே!. எங்கள் அலுவலகம் இ ருக்குமிடங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டியவாறே இருக்கின்றனர், அங்கெல்லாம் வேலை செய்வது வட இந்தியர்கள் மட்டுமே, அவர்கள் பேசுவது ஹிந்தியா இல்லை வேறெதும் மொழியா என தெறியவில்லை. சிலர் அவர்கள் வேலை செய்யும் கட்டிடத்திலேயே தங்கியும், சிலர் வேறெங்கிருந்தோ தினமும் பஸ்சில் வந்தும் வேலை செய்கின்றனர். தினமும் பஸ்ஸில் வரும்போதும், போகும்போதும் அவர்கள் படும் அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒருமுறை இரண்டு வட இந்தியர்கள் 22ரூபாய் டிக்கெட்டுக்கு முப்பது ரூபாய் கொடுத்தனர், வழக்கம்போலவே சலித்துக்கொண்டே "ரெண்டு ரூவா சில்லற கொடு" என அந்த கண்டக்டர் ...