Posts

Showing posts with the label புனைவு

தேசியவியாதி+1

கதவை பூட்டினேனா இல்லையா என்ற சந்தேகம், வாரத்தில் ஒருநாளேனும் வரவில்லையானால் அதுதான் ஆச்சர்யம், அப்படி ஒரு தேசிய வியாதி அவனுக்கு. திருநாளாய் இல்லாத அந்த ஒருநாளும் அப்படித்தான் கதவை பூட்டியது நினைவில்லை. வீட்டைவிட்டு ஒரு கிலோமீட்டர் நடந்து கடந்துவிட்டான், திரும்பிச்சென்று பார்க்க வெயிலின் உக்கிரம் அனுமதிக்கவில்லை. மணிக்கொருமுறை இந்த யோசனை வருவதும் போவதுமாக அந்தநாள் கடந்தது. சாயங்காலம் அவசர அவசரமாய் வீடு திரும்புகையில்தான் பூட்டைபூட்டி சாவியை வெளிச்சுவரின் ஷெல்ஃபின் மேல் வைத ்தது நியாபகம் வந்தது. மறதி என்னும் வியாதியிலிருந்து விடுபட்டதாய் எண்ணி ஒரு நிம்மதிப்பெருமூச்சிற்குப்பின் சாவகாசமாய் இருந்தது அவன் நடை. பிறகு வீடுதிரும்பி ஷெல்ஃபிலிருந்து சாவியை எடுத்ததும்தான் கவனித்தான் தாழ்பாளிடாமலே வெறும் கொண்டியில் தொங்கிக்கொண்டிருந்தது அவன் பூட்டிய அந்த பூட்டு!. ஒரு தேசியவியாதியால் அனுதினம் அவதிப்பட்டவனுக்கு இனி இன்னுமொரு கூடுதல் வியாதி.

பீச்சாங்கை

இரவு நேரங்களில் எவருக்கும் தன் பைக்கில் லிஃப்ட் கொடுத்து பழக்கமில்லை அவனுக்கு. நைட் ஷிஃப்டில் வேலைக்குச்செல்வதால், வழக்கம் போலவே இரவு இரண்டு பணியளவில் ஆஃபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். ஆஃபிசிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டில் ஒரு கிலோமீட்டர் கடக்கையில் பஸ் ஸ்டாப் ஓரம் ஒருவர் லிஃப்ட் கேட்டு கைகளை நீட்டிக்கொண்டிருந்தார். கவனித்தபோது அவரின் முகம் அவனுக்கு அவ்வளவு தெளிவாக தெரியவில்லை. 'சரி லிஃப்ட் கொடுப்போமே' என நினைத்து இடதுகை க்ளட்சை பிடித்து நிருத்த முற்படுகை யில், பைக் ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த நபரின் மூக்கும் கண்ணும் அவர் ஒரு நார்த் இந்தியன் என்பதை காட்டிக்கொடுக்க, அடுத்தகணம் வடதுகை ஆக்சிலேட்டரை முறுக்கிவிடுகிறது. எனினும் அடுத்த 4 கிலோமீட்டரில் ஒரு கண்ஸ்ட்ரக்சன் கிரவுண்ட் அருகில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடம் வந்துவிடம் ஆக அந்தநபரை நம்பலாம் என நினைத்து மறுபடியும் இடதுகை க்ளட்ச்சை பிடிக்க, மறுகணமே வட இந்தியர் ஒருவர் லிஃப்ட் கொடுத்த ஒருவரின் கழுத்தையே அறுத்து, பர்ஸையும் லேப்டாப்பையும் கொள்ளையடித்ததாய் எங்கோ படித்த செய்தி ஒன்று நியாபகம் வர, ஒர...

எண்ணச்சிதைவு

இருபது நிமிடம் விடாது பேசிய அவளின் வார்த்தைகள், அவன் காது வழியே பயணித்து மூளையில் பரவி பல யோசனைகளை தந்துகொண்டிருந்தது. என்ன பேசுகிறாள் என்றெல்லாம் யோசிக்க மனம் ஒத்துழைக்கவில்லை, எதோ ஒருநாள் இருநாள் என்றால் வார்த்தைகளின் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள முயற்சித்திருப்பான், தினமும் மணிக்கணக்காக தொடரும் அவளின் பேச்சு, அவனுக்கு தீராத்தலைவலியையும், எண்ணச்சிதைவையும் தந்துகொண்டிருந்தது. வாசலில் நீர் தெளிப்பதுபோல இடைவெளியற்று அடுத்தடுத்து பல விசயங்களை சொல்லிவிட்டு 'இப்போ நா என்ன சொன்னேன் சொல்லு?' என கேட்பாள் , அவன் சரியாகவே சொன்னாலும் 'அது இப்போ சொன்னது அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன் சொல்லு?' என கேள்விகளை அடுக்கிகொண்டே போவாள். அவள் தெளித்தவையெல்லாம் அவனிடத்தேதான் இருக்கின்றன, ஆனால் தொடக்கமும், முடிவும், இடையும் தெறியாது அவனுக்கு. 'நேத்து கனவுல உன்ன வேற பொண்ணுகூட பாத்தேன்!, ஏண்டா நீ என்ன எமாத்திடுவியா?' என கேட்டாள். அவனுக்கு அடிக்கடி வரும் ஒரு கனவு நியாபகம் வந்தது, ட்ரவுசர் போடாமலேயே ஸ்கூலுக்கு போவதுமாதிரியான ஒரு கனவு அது. சட்டென நினைவு மீள இப்போது அவளின் பேச்சு புதியத...

முழுமை

Image
அவனுக்கென சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் இருக்கிறது, அது ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட ஒரு ஆம்னிவேன். தினமும் விடியற்காலையிலேயே எழுந்து குளித்துமுடித்து தன் துணையாள் எழும்பும் வரைக்கும் காத்திருப்பான், அவள் எழும்பியபின் காப்பி போடுவதுமுதல், மகனை ஸ்கூலுக்கு கிளப்புவதுவரை எல்லாவேலையையுமே இருவருமாக சேர்ந்து செய்வதுதான் வழக்கம். தினமும் இது வழக்கமென்றாலும் எல்லாமுமே ஒரு எமெர்ஜென்சி ஃபோன்கால் வரும்வரைதான் நீடித்திருக்கும். எப்பவுமே இருவரும் மனதளவில் கொஞ்சம் தயாராகத்தான் இருப்பார்கள். ஃபோன்கால்  வந்ததும், அவனுக்கு சட்டை மற்றும் சாவி எடுத்துகொடுத்து அனுப்பிவைப்பது அவளுக்கு வழக்கம். தினமும் சாமி கும்பிட்டாலும் ஒவ்வொருமுறை எமெர்ஜென்சிக்கு கிளம்பும்போதும் தன் நெற்றியில் இருக்கும் திருநீரை அழித்துவிட்டு கிளம்புவது அவனுக்கு வழக்கம், ஒவ்வொருமுறை கிளம்பும்போதும் மகன் வீட்டிலிருந்தால் முதலில் மகனை, அப்புறம் மனைவியை, கடைசியாக வீட்டிலிருக்கும் கடிகாரத்தை ஒரு கணம் பார்த்துவிட்டுதான் அவனது ஓட்டம் ஆரம்பிக்கும். அவன் இலக்கு இல்லாமல் வேகமாக பயணிப்பதில்லை, அவனுக்கென இரண்டு இலக்குகள். ஒன்று எமெர்ஜென்சி ஸ்பா...

ஆடோ ஆஃப் - அமானுஷ்யம்

இரவு ஏழு மணி, அம்மா அருகிலிருக்கும் அம்மாச்சி வீட்டிற்கு போயிருந்தார்கள், வீட்டில் அந்த சிறுவன் மட்டும் தனியே இருக்கிறான். புது கலர் டிவி வாங்கி ஓரிரண்டு நாட்கள் தான் ஆகிறது. அவனுக்கு கதவு வைத்த அந்த பழைய டிவி தான் பிடிக்கும் என்றாலும், இந்த புது டிவியின் கலரும், ரிமோட்டும் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது, ரொம்ப நேரம் டிவி ரிமோட்டின் மெனுக்களை ஆராய்ந்தவாரே இருந்தவனுக்கு 'கார்ட்டூன் பார்க்கணும், அம்மா வந்தா அப்புறம் ஒரே சீரியல் தான்' என ஞானோதையம் வர கார்ட்டூன் சேனல் மாத்தி பார் க் க ஆரம்பித்தான்.  மெத்தை கட்டிலில் அமர்ந்து கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான், அவன் முன்னே கட்டிலில் ரிமோட் இருந்தது, டிவி சத்தத்தை தவிற வீட்டில் வேறெந்த சப்தமும் இல்லை. ஆர்வமாய் பார்த்து கொண்டிருக்கையில் திடீரென டிவி ஆஃப் ஆனது, ஃபேனும், லைட்டும் ஆனிலேயே இருக்கின்றன, கரண்டும் போகவில்லை, ரிமோட்டும் கையிலில்லை, ஆக தவறுதலாக ஆஃப் ஆகவும் வழியில்லை. இப்போது ஃபேன் சத்தத்தை தவிற தெருவிலேவையே வேறெந்த சத்தமும் கேட்கவில்லை. ஒருகணம் திகைத்து போனான். ஃபேனின் சப்தமும், தெருவின் நிசப்தமும், அவனுக்கு பயத்...

தூக்கம் பறித்த வார்த்தைகள்

அவனுக்கு எட்டு மணிக்குதான் தினமும் பஸ். ஆஃபீஸ் முடிந்து ஏழு நாற்பதுக்கு அருகிலிருக்கும் பேருந்துநிருத்தத்திற்கு சென்று காத்திருப்பது வழக்கம். காத்திருப்பது என்றால் பேருந்துநிருத்தத்தின் நீண்ட இருக்கைகளில் அமர்ந்திருப்பது அல்ல, தினமும் நிற்கவே செய்வான். அது ஒரு நீளமான பேருந்துநிருத்தம், நான்கைந்து நீண்ட இருக்கைகள் இருக்கும் என்றாலும் யாராவது ஒருவராவது அவைகளில் அமர்ந்திருப்பர். அவனுக்கு தனியே அமர்வதுதான் இஷ்டம் என்பதால், ஒருநாளும் அவற்றில் அமர்ந்தது இல்லை. அன்று ஏனோ சீக்கிரம்  வேலைகள் முடிய ஏழு இருபதிற்கே வந்துவிட்டான், ஒரு நீண்ட இருக்கை மட்டும் ஆளின்றியிருக்க, மீதமணைத்திலும் ஓரிருவர் அமர்ந்திருந்தனர். பேருந்திற்கு வெகுநேர காத்திருக்க வேண்டுமென்பதால் சென்று அமர்ந்தான். பேருந்து நிருத்தத்திற்கே உண்டான அழுக்கு துணி உடுத்திய தாடி மழிக்காத உருவம் கொண்ட ஒருவர் அவனருகே வந்து நிற்பதை கவணித்துகொண்டு கையிலிருந்த ஃபோனை நோண்ட ஆரம்பித்தான். கண நேரத்தில், மெலிந்த குரலில் “கொஞ்சம் அங்க போயி வுட்க்காருப்பா!” என்றார் அவர். அவன் கவணிக்காததுபோல் இருந்தான். அப்படி அவன் கவணிக்காதபடி அமர்ந்திருந்தது...

இலவச கிரைண்டர்

நாலுரோட்டுல இருந்து பிரிஞ்சு வர்ர ஒரு ஊர்ல தமிழக அரசோட இலவச அல்லது விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் எல்லாம் கொடுக்குறாங்கலாம். குடும்பத்துக்கு ஒரு டோக்கன் கொடுத்து, விழா நாள்ல மீட்டிங் போட்டு குடிம்பத்தலைவி கிட்டதான் பொருட்கள எல்லாம் கொடுப்பாங்கலாம், குடும்பத்தலைவன் கிட்ட கொடுக்க மாட்டாங்களாம். காரணம் குடும்பத்தலைவரு ஃபிரியா கொடுக்குற பொருள வித்து குடிச்சிடுவாராம். இத கேள்வி பட்ட ஒரு குடும்ப தலைவரு, விரக்தியில, நாலுரோட்டு டாஸ்மாக்கு கடைக்கு போயி சம்பளக்காசு முழுக்க வழுவா  குடிச்சி, மீட்டிங்ல வந்து “ஓட்டு கேக்குறப்போ மட்டும் எங்கல கண்டா இனிச்சுச்சு, இப்போ எங்கல கண்டா கசக்குதா”னு கூப்பாடு போட்டு கத்த. ஓடிவந்த அவரு வீட்டுக்கார அம்மா “சும்மா கொடுக்குறதையும் கெடுத்துறாதய்யா! இந்தா”னு ஒரு அம்பது ரூவா கொடுத்து அனுப்பிவச்சு நிம்மதியானாங்க. அடுத்த வாரத்துல, நாலுரோட்டுல இருந்து பிரியுற மத்த மூனு ஊருக்கும் மிக்சி, கிரைண்டர் கொடுக்க போறாங்கலாம். அடுத்த வாரத்துலயும் அதே நாலுரோட்டுல தான் டாஸ்மாக் இருக்கும்.