LEARN JAPANESE - தமிழில்
யாண்டு 2024, ஜப்பானிய மொழியைக் கற்க துவங்கிய போதே இணையத்தில் இந்தப் புத்தகங்களின் முகப்புப் படத்தை பார்த்ததுண்டு எனினும், இங்கே கொட்டிக்கிடக்கும் பல ஆங்கில-வழி ஜப்பானிய மொழி பயிற்றுவிக்கும் புத்தகங்களில் இதுவும் மற்றுமொன்று என கடந்துவிட்டேன். (அட்டை வடிவமைப்பை கவனிக்கவில்லை; அதில் ஜப்பானிய அகரமும் (あ), தமிழ் அகரமும் (அ ), ஆங்கில அகரமும் (a) கோர்க்கப்பட்டுள்ளன)
இந்த புத்தகமானது Cognitive Approach-ல், அதாவது வெறுமனே வார்த்தைகளையும் இலக்கணங்களையும் ஒரு மொழிபெயர்ப்பு போல் மட்டும் பயிற்றுவிக்காமல், மொழி மற்றும் பண்பாட்டு சாரத்தை சூழ்நிலை வழி புகுத்தி மொழிச் சிந்தனையை தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான Minna No Nihongo (அணைவருக்குமான ஜப்பானியமொழி ) புத்தகத்திலும் இந்த சாரம் உள்ளது எனினும் அது தமிழர்களுக்காக செய்யப்பட்டது அல்ல. மாறாக இந்த "Learn Japanese" புத்தகங்கள் தமிழர்களுக்காகவே செய்யப்பட்டது; தமிழிடம் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் மூலம் ஜப்பானிய மொழியை நமக்கு மிகவும் நெருக்கமாக கொண்டுவருகிறதன. இது வேறெந்த புத்தகத்திலும் இல்லை. மேலும், ஆங்கில விளக்கங்களையும் கொண்டுள்ளதால் தமிழ் இலக்கணங்களில்மேல் பிடிப்பற்ற தமிழர்களுக்கும் இது பயன்படும்.
மொத்தத்தில், ஜப்பானிய மொழியை கற்கத் துவங்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் இந்த புத்தகங்களை கண்டடைந்தேன். ஏற்கனவே மேற்சொன்ன Minna No Nihongo புத்தகத்தின் வழி பயின்றுள்ளதால், இந்தப் புத்தகத்தை உசாத்துணையாக உபயோகித்து வருகிறேன். ஆசியவியல் நிறுவனம் பதிப்பித்துள்ள இந்த புத்தகங்களை ஜப்பானிய மொழி பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடங்கள் பிரத்தியேகமாக தமிழ் மாணவர்களுக்குப் பயன்படுத்தலாம்; இது அவர்களின் கற்றலை வேகப்படுத்தும்.
Books can be bought from Panuval, CommonFolks & Institute of Asian Studies.
Books Content: https://www.instituteofasianstudies.com/japanese.html

Comments
Post a Comment