நாம ஹிந்தில பார்த்ததே பத்து பதினஞ்சு படம்தான் இருக்கும்னாலும் இன்னைக்கு வரைக்கும் மனசுல நெறஞ்சு இருக்குற படம்னா அது 'Wakeup Sid' மட்டும் தான். நல்ல படம், நல்ல மியூசிக், நல்ல ஸ்க்ரீன்ப்ளே, நல்ல ஆர்ட் டிரக்சன் ப்லா ப்லா ப்லா எல்லாம் இருக்கட்டும் எல்லாத்துக்கும் மேல அது Aesthetics of Love, Life & Work'க பத்தி சொல்லுற படம், அதையும் விட படத்துல அழகா பட்டது கொங்கொனா சென் ஷர்மா தான், கரெக்டா சொல்லனும்னா அது கொங்கொனா இல்ல அது 'ஆயிஷா' :) . ஆயிஷா தான் படத்துல கொள்ளை அழகு!, அவ உடல்மொழி அழகு, well organised'ன்னா அது அவதான் அது அழகு, இண்டிபெண்டெண்டா தனக்கு பிடிச்சத செய்யுறது அழகு, தனக்கான ஸ்பேச எடுத்துக்றது அழகு, அவகிட்ட இருக்கும் அந்த டேட்டூ அழகு, 'ஆயிஷா'ன்ற கேரெக்டர் பேரு மனசுல பதிஞ்சிருச்சுனா பாத்துகோங்க அவ்வளவு அழகு~. அவள தவிர்த்து பார்த்தா, மும்பை, போடோக்ராப்ஃபி, ஜெர்னலிசம், காதல், நட்பு, அன்பு, அப்பா, அம்மா, கடைசியா லிவிங்-டுகெதர்'னு அதுல இருக்குற அழகான விசயங்கள அடுக்கிகிட்டே போகலாம், ஒரு நல்ல கதையோ அல்லது நாவலோ படிக்கிற ஃபீல் கண்டிப்பா இந்த படத்...