Posts

Showing posts from 2015

Speed drawing video - The Mysterious look

Image
இந்த வருடத்தில் நிறைவு செய்த கடைசி ஓவியம் "The Mysterious Look"ன் Full Process Video'வ Fast Motion செஞ்சு Speed Drawing video'வா பகிர்ந்திருக்கிறேன், கிட்டத்தட்ட மொத்தம் நான்கு மணிநேர வீடியோ, ஸ்பீடு ரன் செய்து 12 நிமிடத்திற்கு மாத்தியிருக்கிறேன், வாய்ப்பிருக்குறவங்க பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க! First attempt on filming my sketching process The Mysterious Look – Charcoal Sketch 12.21 mins
Image
The Mysterious Look | பூடகப்பார்வை Charcoal Pencils on Paper Faber-Castell Pitt Charcoal Pencils A3 130gsm Paper Photograph credits: Unknown

கட்டம் போட்டு வரைபவர்களுக்காக RollingRuler

Image
அரை செண்டிமீட்டர் கணக்கே 35க்கு 45 என, தோராயமா 1500 கட்டங்கள் போட்டு Grid Drawing Methodல வரைய ஆரம்பிச்சோம், இப்போ எப்படியோ 3செண்டிமீட்டர் கட்டங்களிலயே அவுட்லைன் accuracy ஆக வரைய இயல்கிறது ஆக 200 இல்லனா 300 கட்டங்கள் தான் இப்போது, ஆனா இப்போ தான் பெறிய சைஸ்ல வரைய ஆரம்பிச்சிருக்கேன். ஆக கட்டங்களின் எண்ணிக்கையைஎல்லாம் விட்டுடுவோம் பொதுவா பேப்பர்ல கட்டம் போடுறதுன்றது ஒரு தலைவலியான வேலை, எனக்கெல்லாம் அரைமணிநேரமாவது ஆகும் சாதாரணமாக கட்டம் போட, அப்போ அப்போ Free Hand'ல் வரைய ஆரம்பித்ததுக்கு இதுவும் ஒரு காரணம். எனினும் Realistic Pencil Sketches'ஸ்க்கு கட்டம் போட்டு வரைந்தால் ஈசியாக டீடெய்ல்ஸை கொடுக்க முடியும் Measurements'ம் கரெக்டாக இருக்கும். சோ தலைவலிக்காம ஈசியா பேப்பரில் கட்டம் போட ஏதாவது வழி இருக்குமான்னு நிறைய தேடிக்கொண்டிருந்தேன், நாமளா ஏதாவது செய்யலாம்னும் நிறைய வெட்டிவேலைகளை செய்துகொண்டிருந்தேன், எதுவுமே கை கொடுக்கல, அப்போதான் இந்த "Rolling Ruler" அப்டின்ற ஸ்கேல பத்தி தெரியவந்தது, செம்மையா இருக்கு. ஆர்கிடெக்ட் நண்பர்களுக்கு பிரசித்தமாக இருக்கலாம். ச...
Image
Smile | புன்னகை Charcoal Pencils on Paper Pencil            Faber-Castell Pitt Charcoal Paper           Brustro (200gsm A4) Based on a Photograph by Shirren Lim

சைக்கோக்கள் எங்கும் இருக்கிறார்கள்

வட இந்தியர்களுக்கென்று பல மொழிகளிருந்தாலும், இந்தியை தூக்கி பிடித்து, இங்கிருந்து அங்கு செல்லும் ஹிந்தி தெறியாத தென்னிந்தியர்களை, அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஏன்? பலரும் அங்கு இவ்வாறு சைக்கோக்கள் போல் நடந்துகொள்கிறார்களென்று பல முறை யோசித்தது உண்டு. சில நாட்களுக்கு முன் பதில் கிடைத்தது, அது யாதெனின், அங்கு மட்டுமல்ல சைக்கோக்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதே!. எங்கள் அலுவலகம் இ ருக்குமிடங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டியவாறே இருக்கின்றனர், அங்கெல்லாம் வேலை செய்வது வட இந்தியர்கள் மட்டுமே, அவர்கள் பேசுவது ஹிந்தியா இல்லை வேறெதும் மொழியா என தெறியவில்லை. சிலர் அவர்கள் வேலை செய்யும் கட்டிடத்திலேயே தங்கியும், சிலர் வேறெங்கிருந்தோ தினமும் பஸ்சில் வந்தும் வேலை செய்கின்றனர். தினமும் பஸ்ஸில் வரும்போதும், போகும்போதும் அவர்கள் படும் அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒருமுறை இரண்டு வட இந்தியர்கள் 22ரூபாய் டிக்கெட்டுக்கு முப்பது ரூபாய் கொடுத்தனர், வழக்கம்போலவே சலித்துக்கொண்டே "ரெண்டு ரூவா சில்லற கொடு" என அந்த கண்டக்டர் ...

Carpenter Ant vs. Fur Worm - Macro Video

Image
மேக்ரோ வீடியோ | Macro Video  Carpenter Ant vs. Fur Worm 

அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு?

Image
கொஞ்ச நாளுக்கு முன்னால் "நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?" அப்படின்னு சமஸ் எழுதின ஒரு கட்டுரையில், சிறுதெய்வ வழிபாடுகளை அழித்து பெருதெய்வ கோயில்களும், புதுபுது கோயில் கட்டிட பாணிகளும், தமிழக கடைகோடி ஊர்களில் முளைத்து வரும் இந்த புதிய கலாச்சாரத்தை கால மாற்றத்தின் தொடர்ச்சியாக பார்ப்பதா? இல்லை சங் பரிவார அமைப்புகளின் சல்லிவேர்கள் பரவுவதாக பார்ப்பதா? என ஐயம் வெளியிட்டிருந்தார். அதற்கு முன ் காய்ன் கலெக்சன் குறித்தும் அதிலுள்ள போலி சந்தை மற்றும் பழம்பொருள் சேகரிப்பு மோகம் குறித்து நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். இவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்பது இந்த படங்களை பார்த்தால் சிறிது விளங்கும், நான் இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன்,   ‘அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு' என்ற ஒன்றை பேஸ்புக்கில் ஒரு நியூமிஸ்மேட்டிக் குழுவில் பார்த்தேன், விலை ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று இருந்தது. அந்த அரியவகை காசுக்கு இந்த விலை கம்மிதான். கிழக்கிந்திய கம்பெனி காசுகள் குறித்து ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்ததால் சந்தேகமாக இருக்க தேடிப்பார...

ஆடோ ஆஃப் - அமானுஷ்யம்

இரவு ஏழு மணி, அம்மா அருகிலிருக்கும் அம்மாச்சி வீட்டிற்கு போயிருந்தார்கள், வீட்டில் அந்த சிறுவன் மட்டும் தனியே இருக்கிறான். புது கலர் டிவி வாங்கி ஓரிரண்டு நாட்கள் தான் ஆகிறது. அவனுக்கு கதவு வைத்த அந்த பழைய டிவி தான் பிடிக்கும் என்றாலும், இந்த புது டிவியின் கலரும், ரிமோட்டும் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது, ரொம்ப நேரம் டிவி ரிமோட்டின் மெனுக்களை ஆராய்ந்தவாரே இருந்தவனுக்கு 'கார்ட்டூன் பார்க்கணும், அம்மா வந்தா அப்புறம் ஒரே சீரியல் தான்' என ஞானோதையம் வர கார்ட்டூன் சேனல் மாத்தி பார் க் க ஆரம்பித்தான்.  மெத்தை கட்டிலில் அமர்ந்து கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான், அவன் முன்னே கட்டிலில் ரிமோட் இருந்தது, டிவி சத்தத்தை தவிற வீட்டில் வேறெந்த சப்தமும் இல்லை. ஆர்வமாய் பார்த்து கொண்டிருக்கையில் திடீரென டிவி ஆஃப் ஆனது, ஃபேனும், லைட்டும் ஆனிலேயே இருக்கின்றன, கரண்டும் போகவில்லை, ரிமோட்டும் கையிலில்லை, ஆக தவறுதலாக ஆஃப் ஆகவும் வழியில்லை. இப்போது ஃபேன் சத்தத்தை தவிற தெருவிலேவையே வேறெந்த சத்தமும் கேட்கவில்லை. ஒருகணம் திகைத்து போனான். ஃபேனின் சப்தமும், தெருவின் நிசப்தமும், அவனுக்கு பயத்...

The Art of Handshaking

Image
ஒரு கலாச்சாரத்தில் புனிதமாவோ, சடங்காவோ, வீரமாவோ, அன்பாவோ பார்க்கப்படுற சில பழக்கவழக்கங்கள், வேறு ஒரு கலாச்சார மக்களிடையே தவறாவும், அசிங்கமாவும் ஏன் அறுவருப்பாகவும்கூட பார்க்கப்படும் என்பது அறிந்ததே, இந்த ஸ்கூல்ல, காலெஜ்ல, அப்புறம் வேலை பாக்குற இடத்தில் என எல்லா இடத்திலும், இன்னொருத்தர்கிட்ட எப்படி கைகுழுக்குவது என க்ளாஸ் மேல க்ளாஸ் எடுத்துவிட்டனர். அதிலும் கை கொடுத்தலில் இருக்கும் “Body Language” மற்றும் “The Art of Handshaking” என உளவியல் சார்ந்த தியரிகள் வேறு, தியரிகளின் உண ்மை தன்மையில் அய்யமேதுமில்லை, ஆனாலும் கை கொடுத்தல் பல நேரங்களில் அசௌகர்யத்தையே கொடுக்கும். உண்மையில் அந்த உளவியல் தியரிகள் கூட காரணமாக இருக்கலாம். ஆக பல சமயங்களில் நண்பர்களிடையே விளையாட்டாய் சிரித்து கொண்டே அரசியல்வாதி போல் கும்பிடு போடுவதும் உண்டு, பதிலுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் சிரிப்போடு கும்பிடு வரும், அதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்யும். நாம கும்புடு போடுவது, கை குழுக்கும் சமூகத்துக்கு காமெடியாக தெறியலாம், ஆனால் நமக்கு கை குழுக்குவது காமெடியாக தெறியாது, அதிலொரு ப்ரொஃபசனிலிஸ்ம் தான் நமக்கு...
Image
'C O U R T' Movie Poster  |  'கோர்ட்' திரைப்பட சுவரொட்டி Ballpoint Pen on papers Pen              Nataraj Gelix(0.5mm) Paper           Brustro (200gsm A4) Duration       1.5 hours
Image
Manorama   |   மனோரமா Ballpoint Pen on papers Pen              Nataraj Gelix(0.5mm) Paper           Brustro (200gsm A4) Duration       0.5 hour

தூக்கம் பறித்த வார்த்தைகள்

அவனுக்கு எட்டு மணிக்குதான் தினமும் பஸ். ஆஃபீஸ் முடிந்து ஏழு நாற்பதுக்கு அருகிலிருக்கும் பேருந்துநிருத்தத்திற்கு சென்று காத்திருப்பது வழக்கம். காத்திருப்பது என்றால் பேருந்துநிருத்தத்தின் நீண்ட இருக்கைகளில் அமர்ந்திருப்பது அல்ல, தினமும் நிற்கவே செய்வான். அது ஒரு நீளமான பேருந்துநிருத்தம், நான்கைந்து நீண்ட இருக்கைகள் இருக்கும் என்றாலும் யாராவது ஒருவராவது அவைகளில் அமர்ந்திருப்பர். அவனுக்கு தனியே அமர்வதுதான் இஷ்டம் என்பதால், ஒருநாளும் அவற்றில் அமர்ந்தது இல்லை. அன்று ஏனோ சீக்கிரம்  வேலைகள் முடிய ஏழு இருபதிற்கே வந்துவிட்டான், ஒரு நீண்ட இருக்கை மட்டும் ஆளின்றியிருக்க, மீதமணைத்திலும் ஓரிருவர் அமர்ந்திருந்தனர். பேருந்திற்கு வெகுநேர காத்திருக்க வேண்டுமென்பதால் சென்று அமர்ந்தான். பேருந்து நிருத்தத்திற்கே உண்டான அழுக்கு துணி உடுத்திய தாடி மழிக்காத உருவம் கொண்ட ஒருவர் அவனருகே வந்து நிற்பதை கவணித்துகொண்டு கையிலிருந்த ஃபோனை நோண்ட ஆரம்பித்தான். கண நேரத்தில், மெலிந்த குரலில் “கொஞ்சம் அங்க போயி வுட்க்காருப்பா!” என்றார் அவர். அவன் கவணிக்காததுபோல் இருந்தான். அப்படி அவன் கவணிக்காதபடி அமர்ந்திருந்தது...

கம்பெனி காசுகள்

Image
என்னிடம் இருப்பதிலேயே ரொம்போ பழைய காசுகள் இவை இரண்டும் தான், ஒன்று டச்சு கிழக்கிந்திய கம்பெனியினுடையது(1790), இன்னொன்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினுடையது(1862). சில வருடங்கள் முன்னால பழைய காசுகள் சேகரிப்பதில் ரொம்ப ஆர்வமாக இருந்தபொழுது இந்த காசுகள் கிடைத்தன, அப்போவெல்லாம் பழைய காசுகளுக்காக நிறைய தெறிந்த நபர்களின் வீடுகளுக்கு செல்வதுண்டு, வீடுமுழுக்க தேடினாலும் அப்போது சமீபத்தில் செல்லாமல் போன ஐந்து, பத்து பைசாக்கல் தான் கிடைக்கும் வேறு உருப்படியான எந்த ஒரு காசும் கிடைக்காது. எனக்கு மட்டுமல்ல நாணயம் சேகரிக்கும் எவருக்குமே இந்த ஐந்து பத்து பைசாக்கள் சந்தோசத்தை கொடுப்பது இல்லை.  அப்போது எனக்கு தேவையெல்லாம் சுதந்திரத்துக்கு முந்தய கால காசுகள்தான். என் சொந்தக்கார மாப்புள ஒருவனிடமிருந்துதான் இப்போது என்னிடமுள்ள முக்கால்வாசி காசுகள் கிடைத்தது தனி கதை, அவனின் வீட்டில் அந்த காசுகள் ஒரு தானிய பெட்டியில் இருந்தன. அவனுக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை என்பதாலும், நான் கேட்டுக்கொண்டதாலும் என்னிடம் கொடுத்தான், என் கணிப்புப்படி அந்த காசுகள் அவனின் தாத்தாவினுடையதாக இருக்கலாம், சைக்...

மக்பூல் ஃபிதா ஹுசைன்

Image
இன்று மக்பூல் ஃபிதா ஹுசைனின் நூறாவது பிறந்தநாள். கூகுளின் டூடுல் இன்று அருமையாக வடிவமைக்கப்பட்டிறுந்தது. கையில் எப்போதும் ஒரு தூரிகையை, ஊன்றுகோலாய் வைத்திருப்பார் அதனையும் இணைத்து அழகாக வரைந்திருந்தனர். PAG - Progressive Artist Group அப்படினு 1947ல் பிரிவினைக்கு பின் ஒரு அமைப்பு ஆரம்பித்து இந்திய ஓவியக்கலையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டு சென்றார். திரைப்படங்களுக்கு பிரிண்ட் மற்றும் போஸ்டர்களும் வடிவைத்து வந்தவர், சில படங்களை இயக்கியும் உள்ளார். “Through the eyes of a painte r” ன்ற 1967 அவர் எடுத்த 17 நிமிட குறும்படம் அதில் குறிப்பிடத்தக்கது, இந்தியாவின் பிகாஸ்ஸோ என அழைக்கப்பட்டவர், இந்தியாவின் மூன்று பத்ம விருதுகளையும் பெற்றவர். தன்னுடைய 80வது வயதுக்குபின் பல சர்ச்சைகளில் சிக்கினார், இந்து கடவுள்கள், பாரத மாதா இவர்களின் திருவுருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் பல இந்துத்துவ அமைப்புகள் அவர் மீது வழக்குகள் தொடுத்தன, ஒருமுறை அவரின் வீடும் தாக்கப்பட்டது, நாடு கடத்துமாறும் பிரச்சனைகள் செய்தனர். இதனால் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்து அங்கேயே வசித்து அங்கேயே இறந்தும் போனார். கடைசி காலத்த...

றிசா - லொஇ

இப்பொழுதெல்லாம் எந்த பெயர்ச்செற்களை பார்த்தாலும் அந்த பெயர்களின் எழுத்துகளினூடே சில மாற்றங்கள் செய்து வித்தியாசமாக எழுதிப்பார்க்க மனம் எத்தனிக்கிறது. காரணம் ஒரு ஃபேஸ்புக் நண்பர், அவர் பெயர் ‘றிசா’. இஸ்லாமியக்கல்லூரியில் படித்து வந்தமையால் ரிசுவான், ரியாஸ் போன்ற பெயர் கொண்ட நண்பர்கள் உண்டு, ஒரு கணம் கூட அவர்களின் பெயர்களை ‘றிசுவான்’, ‘றியாஸ்’ என்றும் கூட எழுதலாமே என்று நினைத்தது இல்லை. இவ்வாறு எழுதலாமா என்றெல்லாம் தெறியவில்லை ஆனால் ‘றிசா’ என்பது மிகவும் பிடித்திருந்தது, அதில்  ஒரு ஈர்ப்பும் இருப்பதாகவே தோன்றுகின்றது. பேஸ்புக் வெரிஃபிகேஷன் தொல்லையால் நண்பரின் பெயர் 'Riza Hassen' என மாறியதில் அவருக்கு இணையாக எனக்கும் வருத்தம் இருந்தது.  சென்ஐ வந்த பிறகு, சில வெஸ்டர்ன் ஸ்டைல் ஹோட்டல்கள் மற்றும் கடைகள் லோகலைசேஷனுக்காக ஆங்கிலப்பெயர்களின் கூடவே தமிழிழும் அவற்றின் பெயர்களை முகப்பு பேனர்களில் உபயோகப்படுத்தியிருப்பதை காணமுடிந்தது, அதிலும் சிலவற்றின் பெயர்கள் சற்று ஈர்ப்பாக இருக்கும். ‘LOIEE’ எனும் கடைக்கு, ‘லொஇ’ என தமிழில் எழுதியிறுந்தனர். இவற்றையெல்லாம் தினமும் பார்த்து வர...
Image
Al Pacino  |  அல் பச்சினொ Ballpoint Pen on papers Pen              Riton Ballpen(0.5mm) Paper           Brustro (200gsm A4) Duration       2.5 hours

புது நூரு ரூபாய்

Image
ரெண்டு நாள் முன்னால எடிஎம்’ல இருந்து எடுத்த ஒரு நூரு ரூபாய் நோட்ட பாத்து பயந்துடேன், ஒரு வேலை இது கள்ள நோட்டா இருக்குமோன்னு. இந்த ஃபோட்டோவ பாத்தா உங்களுக்கே புரியும். ரூபாய் நோட்டுல இருக்குற நம்பர் அப்டியே சின்னதுல இருந்து பெருசாகிட்டே போகிருக்கு. அப்புறம் கூகுல் பன்னுனப்புறம் தான் தெரிஞ்சது, போன ஜூலைலயே ஆர்.பி.ஐ இந்த மாதிறி புது விதமான பேட்டர்ன்’ல நூரு ரூபாய் நோட்டு இருக்கும்னு அனவுன்ஸ் பன்னி ரிலீஸும் பன்னிடாங்களாம். இந்த நியூஸ அப்பவே படிச்ச நியாபகம், ஆனா ஒழுங்கா கவனிக்காம  நான் என்ன புரிஞ்சிகிட்டேனா, இனி நூரு ரூபாய் நோட்டெல்லாம் சின்ன நம்பர்ல இருந்து பெரிய நம்பர்ல முடியும்னு. ‘RBI issues new 100Rs notes with numbering pattern in ascending size’ . இந்த Ascending size’ன்றத தான் நான் Ascending numbers’னு நினச்சுட்டு விட்டுடேன். ஒழுங்கா கவனிச்சிருந்தா இப்போ இந்த ஷாக் வந்திருக்காது. அதுவும் அந்த கடைசி நம்பர பாத்ததும் தான் ரொம்போ ஷாக் ஆகிட்டேன், எவ்ளோ பெரிய சைஸ்!

கீழத்தெரு

புதியதலைமுறை’ல ஒரு முறை கோணங்கி சொன்னார் “இன்னமும் கீழத்தெருவும் மேலத்தெருவுமே ஒன்னு சேரல, இதுல எங்கடே சாதியற்ற சமூகம் அமைப்பிங்க”னு. அன்றுதான் எனக்கு விளங்கியது எவ்வளவு வேறுபாடுகள் கொண்ட கிராமத்தில் வாழ்கிறோம் என்று. இரண்டையும் இணைக்குமிடம் பள்ளிகூடம்தான் அதுலயும் தான் எத்துனை வேறுபாடு. இருந்தாலும் கோயிலயும், சுடிகாட்டையும் ஒப்பிட்டு பார்த்தா, பள்ளிகூடம் எவ்வளவோ தேவலாம். எல்லா ஊருலயுமே அசால்டா இறுக்குது இந்த கீழத்தெரு மேலத்தெரு சாதிய சம்பரதாய அடக்குமுறை. மேலத்தெருவில் காலியா கும் வீடுகளில் சமீபமாக கீழத்தெருவினர் குடியேறுகின்றனர். ஆனால் அதுபோல கீழத்தெரு வீடுகளில் மேலத்தெருவினர் மாறுவதில்லை. வீடே இருப்பதில்லை என்பதும் ஒருபுறம் இருக்க, வீடிருந்தாலும் குடியேறுவதுமில்லை, மேலத்தெருவின் வீடுகள், கீழத்தெருவின் இடங்களை தின்று மேலத்தெருக்கலாக மாற்றுகின்றன, வாய்ப்பிருக்கும் சிலர் மேலத்தெருவில் குடியேறிக்கொள்ளலாம். சமீப காலமாக கிராமங்களில் கீழத்தெருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனவே தவிற, இரண்டும் ஒன்னு சேரவில்லை. இதையெல்லாம் யோசிக்கறப்போ, நாங்க இப்போ குடியிருக்குற அக்ரகாரம் நியாபகம் வந்தது...

டிராக்ஸ் ரன்

Image
இன்டெர்னெட்டே இல்லாத லேப்டாப்ல கூகுல்.காம் ட்ரை பன்னா ஓபன் ஆகுமா? ஆகாது. ஆனா ஒரு ‘சீக்ரெட் கேம்’ ஓபன் ஆகும். நேத்து, இன்டெர்னெட் கன்னெக்சன் இல்லாதப்ப ‘கூகுல் க்ரோம்’ல ஏதோ வெப்சைட் ஓபன் பன்ன ட்ரை பன்னப்போ ஆகல. நெட் கனெக்சன் இல்லாதப்போ ட்ரை பன்னுனா ஒரு எர்ரர் மெஸ்ஸேஜும் வரும் “Unable to connect to the Internet” னு அந்த மெஸ்ஸேஜ் மேல ஒரு டைனோசர் சோகமா நிக்கும், எல்லோரும் பார்த்திருப்போம். ஆனா உத்து பார்த்திருக்க மாட்டோம். எதார்த்தமா அத உத்து பாத்துற்றுக்கப்போ அது கண்ண சிமிட்டுச்சு , ஆச்சர்யமா மறுபடியும் பார்க்க மறுபடியும் சிமிட்டிச்சு. ஏதோ ஒரு ஆர்வத்துல ஸ்பேஸ்பார தட்ட டைனோசர் நின்ன இடத்துலயே ஓட ஆரம்பிச்சுடுச்சு, அப்புறம்தான் தெறிஞ்சுச்சு அது ஒரு கேம்னு, ஒரு பாலை வனத்துல ஓடுற மாறி கேம் அது, செடிகளும், காக்காக்களும் தடைகளாக வரும், நாம டைனோசர எதுலயும் மோத விடாம தாவி குதிச்சு ஓட வைக்கனும!.

காமெரொன் டியாஸ்

Image
காமெரொன் டியாஸ் - சார்லி’ஸ் ஏஞ்சல்ஸ் மாதிரி சில படங்கள்ல நடிச்சிருப்பாங்க, ஒரே மாதிரியான நடிப்பு எல்லா படங்கள்லயும் இருக்கும், இவரின் ஒரு ஐந்தாறு படங்கள் பார்த்தது உண்டு. எந்த படங்களிலும் ஒரு ஈர்ப்பு இருந்தது இல்லை கடைசியாக இவரின் ஒரு படத்தை பார்க்கும் வரை. அந்த படம் ‘My sister’s keeper(2009)’ . கேன்சர் போன்ற ஒரு சிவியர் நோயால் ஒரு சகோதரி(15) இறக்க போகிறாள், அவளை காப்பாத்துவதற்க்காக இன்னொரு மகளை(11) பெற்று வளர்க்கிறார்கள்(savior sister-என்ற பதத்தை கூகுல் பன்னவும்). அதாவது ந ோயுற்ற மகளுக்கு தேவையான இரத்தத்திசு கொண்ட குழந்தையை பெற்றெடுப்பது, அது மட்டுமில்லாமல் இங்கு அக்காவிற்காக, தங்கையின் ஒரு சிறுநீரகத்தையும் கொடுக்க முன்னரே முடிவெடுத்து விடுகின்றனர். இந்த விசயம் தெரிந்ததும் அந்த பதினோரு வயது தங்கை தன் சிறுநீரகத்தை கொடுக்க மறுக்கிறாள். தன் உடல் தனக்கே சொந்தம் என் அனுமதி இல்லாமல் என் சிறுநீரகத்தை தன் சகோதரிக்கு தர முடியாது என்றும், அவ்வாரு நான் கொடுத்தால் தன்னால் விளையாட, டான்ஸ் ஆட, குழந்தை பெற்றுக்கொல்ல முடியாது என கூறி சிறுநீரகத்தை தானம் செய்ய மறுக்கிறாள். ஒரு வக்கீலையும்...

அந்தோனி தாத்தா - பேய் கதை

“ஏன்டா மாமா இந்த பேயிலாம் இருக்குனு நம்புறியா?” “ஏன்டா இப்டி திடுதிப்புனு கேக்குற!” “நேத்து, ‘எக்ஸார்சிஸ்ட்’னு ஒரு படம் பாத்தேன் மச்சி சும்மா மிரட்டிடானுங்க” “சேரி அதனால இந்த திடீர் குவெஸ்டினா?, படம் தானே மச்சி, படத்துல எல்லாம் அப்டிதான் காட்டுவானுங்க, படம் ஓடனும்ல” “அதுக்கு இல்ல மச்சி, நேத்து நயிட்டு, ஒன்னுக்கடிக்கலாம்னு கொல்லை பக்கம் போனேன், ஏதோ ஒன்னு பின்னால சட்டுனு வந்து போன மாதிரி இருந்ததுச்சி” “பின்னால வந்துச்சா!, இல்லையே ஒன்னுக்கு முன்னால தானே வரும்!” “மூடுடா!, அப்புடியே உடம்பெல்லாம் நடுங்கிடிச்சுன்றேன், காமெடி பன்ற” “அப்டி இல்லடா, இருட்டுநாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயமாதான் இருக்கும், இதுல நீ பேயி படம் வேற பாத்துட்டு கொல்லைல ஒன்னுகடிக்க போனா பயம் வராம எப்புடி” “அதான் மச்சி டவுட்டு, பேயே இல்லனா நாம ஏண்டா பயப்படனும், எனக்கு ஏன் உடம்பெல்லாம் நடுங்கனும்” “மயிரு, சாமியே இல்லாம அவனவன் சாமி வந்தமாறி நடிக்கிறான், அது மாதிரி தான் இதுவும் மூடு” “நீ என்ன வேனா சொல்லு, ஆனா பேயி இருக்கு நா நம்புறேன்” “எப்புடிடா சொல்லுற?” “அதெல்லாம் எனக்கு தெறியாது சாமியுமிருக்கு பேயுமிருக்கு!” “பயமும், பக்தி...

நாற்பதுகளில் சாகும் ஓர் ஆண் சமூகம்

நாற்பது வயதில் இறந்து போன பல ஆளுமைகளை நாம் கடந்து வந்திருப்போம். சமூகத்துக்கும் ஏதேனும் செய்துவிட்டு செத்தவர்கள் அவர்கள். சே, மீசைகவி, மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், இப்படி பட்டியலை நீட்டலாம். ஆனால் இவர்கள் இறந்துவிட்டவர்கள், இன்று ஆளுமைகளே காணக்கிடைத்தல் அரிது என்பதால் நாற்பதுகளின் ஆளுமைகளின் மரணம் நாம் அவ்வளவாக சந்திக்காத ஒன்று, சந்திக்க விரும்பாத ஒன்று. மாறாக கிராமங்களில் ஒரு சமூகம் நாற்பதுகளில் ஆண்களை இழந்துகொண்டு இருக்கிறது, பற ை இசை காதலர்கள், பறையை தன் மூச்சாக என்னி சாகுறவரைக்கும் பறைகொட்ட ஆசை கொண்டவர்கள் தன் சாவை விரைவில் எடுத்துகொள்கின்றனர். பறையையும், பறையர்களையும் தீட்டா பார்க்கின்ற சமூகம் நம்மளுடையது, பூர்வகுடிகளை, புதுகுடிகள் ஏறி மிதிப்பது, புதிதல்லவே!. “பறைனா என்னா தெறியுமா!, சும்மா உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் அதிரும், அடிவயிறே கலங்கும்”னு பேசுற பலரும் பறையை கத்துக்க முயலுவதில்லை, ஆனா ஆசைனு மட்டும் சொல்லுவோம். கத்துகனும்ன்றது சட்டம் இல்லனாலும் கொஞ்சம் வாசிக்கிறவங்கள மறியாதையா பாக்கலாம். வாழ வாய்ப்பளிக்கலாம் அது போதும. பறை வாசிப்பவர்களின்...

கொடி தின வாழ்த்துகள்

Image
சட்டைல கொடி குத்திகிட்டு திரியிர எல்லா குழந்தைகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர தினமெல்லாம் அவர்களுக்கு தான்யா. சிவப்பு கலரு மேல வருமா? கீழ வருமா?னு பலருக்கு தெறியாது, தப்பா குத்திட்டு வந்தா காதுல செமயா ஒரு திருகு கிடைக்கும், கூடவே கிடைக்குற அந்த அம்பது பைசா மிட்டாய்க்கு, அம்பது பைசாக்கு கொடி வாங்கி குத்திட்டு போவாங்க. அவங்களுக்கு புக்குல படிச்ச எல்லாருமே சுதந்திர போராட்ட தியாகிகள் தான், நமக்கு அப்படியல்ல நாம யாரயெல்லாம் சுதந்திர போராட்ட தியாகி லிஸ்ட்ல வச்சு இருந்தோ மோ அவங்களையெல்லாம் சிலர் விமர்சனம் பன்னுனா, நாமலும் கொஞ்சம் இறங்கி அந்த குரூப் தியாகினு சொல்லுறவங்களையெல்லாம் விமர்சனம் பன்னுவோம். தேசப்பற்றுனா அது ஸ்கூல்ல படிக்கிறப்போ தான், உண்மையில் இந்தியானா ஒன்னுதான்னு, எல்லோரும் நம் சகோதர சகோதரிகள்னு நினைக்கிற ஒரு தேசப்பற்று. அது ஒரு உற்சாகமான ஒரு சுதந்திர விடுமுறை தினம். இன்னைக்கு ஃபேஸ்புக், வாட்ஸப்ல “சுதந்திர தின வாழ்த்துகள்” ஃபார்வர்டு பன்னுனாலும் விமர்சனம், பண்ணுலனாலும் விமர்சனம். கூடவே நேத்து ரிலீஸ் ஆன படத்துக்கும் விமர்சனம். சுதந்திர தின சிறப்பு திரைப்படம் வேற, ...

ஹிந்துஸ்தான்லயா இருக்கோம்!

“நாம ஏன் இங்லிஷ் பேசனும்?”, கார்ப்ரெட்ல இந்த கேள்விக்கெல்லாம் வேலையே கிடையாது. கார்பொரெட் ஒரு குளோபல் கல்ச்சர், அங்க கஸ்டமர் தான் எல்லாம். கஸ்டமர் பொதுவா யூஸ் பன்னுறது ஆங்கிலம், சோ இங்லிஷ்ல தான் எல்லாமும் இருக்கனும். அது குளோபல் மொழியாக ஆக்கப்பட்டுவிட்டது, இத விட்டுவிடுவோம் எப்படியோ சொதப்பி சொதப்பி தங்க்லிஷ்ல ஆரமிச்சு, உடைஞ்ச இங்லிஷ் வழியா, தாய்மொழில யோசிச்சு, கணநேரத்துல இங்லிஷ்க்கு கன்வர்ட் பன்னி பேசி, தாய்மொழி ஸ்லாங்ல இங்லிசஸ் பேசி ஒருவழியா அந்த கல்ச்சருக்கு செட் ஆகிடுவோம்.  இன்னும் சில பேர் பிரிட்டிஷ் ஸ்டைல்ல, யோசனையே இங்லிஷ்ல வச்சுக்குற அளவுக்கு மாறிடுவாங்க. இதெல்லாம் பெருமை இல்ல கடமை. அடுத்த மேட்டருக்கு வருவோம் “நாம ஏன் இந்தி பேசனும்?”, இந்த கேள்விக்கெல்லாம் பதிலே கிடையாது. இன்ஸ்டன்ட்டா சில பதில்கேள்விகள் தான் வரும். இந்தியாவுல இந்தி பேசாம எப்புடி?, ஆட்சி மொழியே அதுதானே?, தமிழ்நாட்ட தாண்டுனா எல்லா பக்கமும் இந்தி தானே?, ஹமா ஹிந்துஸ்தான் மெம் ரஹ ரஹெ ஹைம் யார்?. எல்லாத்தையும் விட்டுடுவோம் இதுக்கு பின்னாடி இருக்குற அரசியல் எல்லாம் வேண்டாம், ஒரு காலத்துலயும் தேசியக்கட்சி எதுவும்...
Image
Abdul Kalam  |  அப்துல் கலாம் Graphite pencils on papers Pencils          Steadtler (2B, 4B, 8B) Koh-i-noor(6B, 8B) Paper             Brustro (200gsm A4) Duration         4 hours

பென்சிலோடு ஒரு பயணம்

Image
பென்சிலில் கிறுக்காமல் யாராவது பள்ளி பருவத்தை கட ந்து வந்திருப்போமா ?  நிச்சயமாக இல்லை. மாங்கா ,  காக்கா ,  யானை இப்படி எதையாவது கோடுகளால் வரைவதாய் எண்ணி கிறுக்கி இருப்போம் , இன்று நுன்னிய கிறுக்கல்களால் வரைவது தான்  “ உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள் ”  (Hyper-Realistic Pencil Drawings).  அது என்ன உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள் ?  இதை பத்தின புரிதல் ,  இதை கலையாக ,  பொழுதாக்கமாக ,  தொழிலாக எடுத்து கொண்டவர்களுக்கு எப்படி தெறியவந்தது ?  எல்லாம் ஒரு தேடலில் தான் துவங்கியது. பொதுவாக சிலர் சொல்லுவதுண்டு ,  “ ஸ்கூல் படிக்கிறப்போ வரைஞ்சது ,  அப்புறம் டச்சு விட்டுப்போச்சு ” , அங்கேதான் நாம் வரைதலை தொலைக்கிறோம். மீண்டும் எப்படி தொலைத்த அந்த வரைதலுடனான அந்த டச் ’ சை மீட்டெடுப்பது ,  அதற்குதான் இருக்கிறது கூகுல். கூகுலிடம் ,  “ Pencil Drawings ” என்று தேடினால் போதும் ,  அனைத்து தகவல்களையும் கொடுக்கும் ,  அது பத்தவில்லை என்றால் அதுற்குதானே இருக்கிறது ஃபேஸ்புக்கும் ,  மேற்குறிப்பிட்ட அதே வார்த்...