Posts

Showing posts from September, 2015

கம்பெனி காசுகள்

Image
என்னிடம் இருப்பதிலேயே ரொம்போ பழைய காசுகள் இவை இரண்டும் தான், ஒன்று டச்சு கிழக்கிந்திய கம்பெனியினுடையது(1790), இன்னொன்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினுடையது(1862). சில வருடங்கள் முன்னால பழைய காசுகள் சேகரிப்பதில் ரொம்ப ஆர்வமாக இருந்தபொழுது இந்த காசுகள் கிடைத்தன, அப்போவெல்லாம் பழைய காசுகளுக்காக நிறைய தெறிந்த நபர்களின் வீடுகளுக்கு செல்வதுண்டு, வீடுமுழுக்க தேடினாலும் அப்போது சமீபத்தில் செல்லாமல் போன ஐந்து, பத்து பைசாக்கல் தான் கிடைக்கும் வேறு உருப்படியான எந்த ஒரு காசும் கிடைக்காது. எனக்கு மட்டுமல்ல நாணயம் சேகரிக்கும் எவருக்குமே இந்த ஐந்து பத்து பைசாக்கள் சந்தோசத்தை கொடுப்பது இல்லை.  அப்போது எனக்கு தேவையெல்லாம் சுதந்திரத்துக்கு முந்தய கால காசுகள்தான். என் சொந்தக்கார மாப்புள ஒருவனிடமிருந்துதான் இப்போது என்னிடமுள்ள முக்கால்வாசி காசுகள் கிடைத்தது தனி கதை, அவனின் வீட்டில் அந்த காசுகள் ஒரு தானிய பெட்டியில் இருந்தன. அவனுக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை என்பதாலும், நான் கேட்டுக்கொண்டதாலும் என்னிடம் கொடுத்தான், என் கணிப்புப்படி அந்த காசுகள் அவனின் தாத்தாவினுடையதாக இருக்கலாம், சைக்...

மக்பூல் ஃபிதா ஹுசைன்

Image
இன்று மக்பூல் ஃபிதா ஹுசைனின் நூறாவது பிறந்தநாள். கூகுளின் டூடுல் இன்று அருமையாக வடிவமைக்கப்பட்டிறுந்தது. கையில் எப்போதும் ஒரு தூரிகையை, ஊன்றுகோலாய் வைத்திருப்பார் அதனையும் இணைத்து அழகாக வரைந்திருந்தனர். PAG - Progressive Artist Group அப்படினு 1947ல் பிரிவினைக்கு பின் ஒரு அமைப்பு ஆரம்பித்து இந்திய ஓவியக்கலையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டு சென்றார். திரைப்படங்களுக்கு பிரிண்ட் மற்றும் போஸ்டர்களும் வடிவைத்து வந்தவர், சில படங்களை இயக்கியும் உள்ளார். “Through the eyes of a painte r” ன்ற 1967 அவர் எடுத்த 17 நிமிட குறும்படம் அதில் குறிப்பிடத்தக்கது, இந்தியாவின் பிகாஸ்ஸோ என அழைக்கப்பட்டவர், இந்தியாவின் மூன்று பத்ம விருதுகளையும் பெற்றவர். தன்னுடைய 80வது வயதுக்குபின் பல சர்ச்சைகளில் சிக்கினார், இந்து கடவுள்கள், பாரத மாதா இவர்களின் திருவுருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் பல இந்துத்துவ அமைப்புகள் அவர் மீது வழக்குகள் தொடுத்தன, ஒருமுறை அவரின் வீடும் தாக்கப்பட்டது, நாடு கடத்துமாறும் பிரச்சனைகள் செய்தனர். இதனால் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்து அங்கேயே வசித்து அங்கேயே இறந்தும் போனார். கடைசி காலத்த...

றிசா - லொஇ

இப்பொழுதெல்லாம் எந்த பெயர்ச்செற்களை பார்த்தாலும் அந்த பெயர்களின் எழுத்துகளினூடே சில மாற்றங்கள் செய்து வித்தியாசமாக எழுதிப்பார்க்க மனம் எத்தனிக்கிறது. காரணம் ஒரு ஃபேஸ்புக் நண்பர், அவர் பெயர் ‘றிசா’. இஸ்லாமியக்கல்லூரியில் படித்து வந்தமையால் ரிசுவான், ரியாஸ் போன்ற பெயர் கொண்ட நண்பர்கள் உண்டு, ஒரு கணம் கூட அவர்களின் பெயர்களை ‘றிசுவான்’, ‘றியாஸ்’ என்றும் கூட எழுதலாமே என்று நினைத்தது இல்லை. இவ்வாறு எழுதலாமா என்றெல்லாம் தெறியவில்லை ஆனால் ‘றிசா’ என்பது மிகவும் பிடித்திருந்தது, அதில்  ஒரு ஈர்ப்பும் இருப்பதாகவே தோன்றுகின்றது. பேஸ்புக் வெரிஃபிகேஷன் தொல்லையால் நண்பரின் பெயர் 'Riza Hassen' என மாறியதில் அவருக்கு இணையாக எனக்கும் வருத்தம் இருந்தது.  சென்ஐ வந்த பிறகு, சில வெஸ்டர்ன் ஸ்டைல் ஹோட்டல்கள் மற்றும் கடைகள் லோகலைசேஷனுக்காக ஆங்கிலப்பெயர்களின் கூடவே தமிழிழும் அவற்றின் பெயர்களை முகப்பு பேனர்களில் உபயோகப்படுத்தியிருப்பதை காணமுடிந்தது, அதிலும் சிலவற்றின் பெயர்கள் சற்று ஈர்ப்பாக இருக்கும். ‘LOIEE’ எனும் கடைக்கு, ‘லொஇ’ என தமிழில் எழுதியிறுந்தனர். இவற்றையெல்லாம் தினமும் பார்த்து வர...
Image
Al Pacino  |  அல் பச்சினொ Ballpoint Pen on papers Pen              Riton Ballpen(0.5mm) Paper           Brustro (200gsm A4) Duration       2.5 hours

புது நூரு ரூபாய்

Image
ரெண்டு நாள் முன்னால எடிஎம்’ல இருந்து எடுத்த ஒரு நூரு ரூபாய் நோட்ட பாத்து பயந்துடேன், ஒரு வேலை இது கள்ள நோட்டா இருக்குமோன்னு. இந்த ஃபோட்டோவ பாத்தா உங்களுக்கே புரியும். ரூபாய் நோட்டுல இருக்குற நம்பர் அப்டியே சின்னதுல இருந்து பெருசாகிட்டே போகிருக்கு. அப்புறம் கூகுல் பன்னுனப்புறம் தான் தெரிஞ்சது, போன ஜூலைலயே ஆர்.பி.ஐ இந்த மாதிறி புது விதமான பேட்டர்ன்’ல நூரு ரூபாய் நோட்டு இருக்கும்னு அனவுன்ஸ் பன்னி ரிலீஸும் பன்னிடாங்களாம். இந்த நியூஸ அப்பவே படிச்ச நியாபகம், ஆனா ஒழுங்கா கவனிக்காம  நான் என்ன புரிஞ்சிகிட்டேனா, இனி நூரு ரூபாய் நோட்டெல்லாம் சின்ன நம்பர்ல இருந்து பெரிய நம்பர்ல முடியும்னு. ‘RBI issues new 100Rs notes with numbering pattern in ascending size’ . இந்த Ascending size’ன்றத தான் நான் Ascending numbers’னு நினச்சுட்டு விட்டுடேன். ஒழுங்கா கவனிச்சிருந்தா இப்போ இந்த ஷாக் வந்திருக்காது. அதுவும் அந்த கடைசி நம்பர பாத்ததும் தான் ரொம்போ ஷாக் ஆகிட்டேன், எவ்ளோ பெரிய சைஸ்!

கீழத்தெரு

புதியதலைமுறை’ல ஒரு முறை கோணங்கி சொன்னார் “இன்னமும் கீழத்தெருவும் மேலத்தெருவுமே ஒன்னு சேரல, இதுல எங்கடே சாதியற்ற சமூகம் அமைப்பிங்க”னு. அன்றுதான் எனக்கு விளங்கியது எவ்வளவு வேறுபாடுகள் கொண்ட கிராமத்தில் வாழ்கிறோம் என்று. இரண்டையும் இணைக்குமிடம் பள்ளிகூடம்தான் அதுலயும் தான் எத்துனை வேறுபாடு. இருந்தாலும் கோயிலயும், சுடிகாட்டையும் ஒப்பிட்டு பார்த்தா, பள்ளிகூடம் எவ்வளவோ தேவலாம். எல்லா ஊருலயுமே அசால்டா இறுக்குது இந்த கீழத்தெரு மேலத்தெரு சாதிய சம்பரதாய அடக்குமுறை. மேலத்தெருவில் காலியா கும் வீடுகளில் சமீபமாக கீழத்தெருவினர் குடியேறுகின்றனர். ஆனால் அதுபோல கீழத்தெரு வீடுகளில் மேலத்தெருவினர் மாறுவதில்லை. வீடே இருப்பதில்லை என்பதும் ஒருபுறம் இருக்க, வீடிருந்தாலும் குடியேறுவதுமில்லை, மேலத்தெருவின் வீடுகள், கீழத்தெருவின் இடங்களை தின்று மேலத்தெருக்கலாக மாற்றுகின்றன, வாய்ப்பிருக்கும் சிலர் மேலத்தெருவில் குடியேறிக்கொள்ளலாம். சமீப காலமாக கிராமங்களில் கீழத்தெருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனவே தவிற, இரண்டும் ஒன்னு சேரவில்லை. இதையெல்லாம் யோசிக்கறப்போ, நாங்க இப்போ குடியிருக்குற அக்ரகாரம் நியாபகம் வந்தது...