அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு?
கொஞ்ச நாளுக்கு முன்னால் "நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?" அப்படின்னு சமஸ் எழுதின ஒரு கட்டுரையில், சிறுதெய்வ வழிபாடுகளை அழித்து பெருதெய்வ கோயில்களும், புதுபுது கோயில் கட்டிட பாணிகளும், தமிழக கடைகோடி ஊர்களில் முளைத்து வரும் இந்த புதிய கலாச்சாரத்தை கால மாற்றத்தின் தொடர்ச்சியாக பார்ப்பதா? இல்லை சங் பரிவார அமைப்புகளின் சல்லிவேர்கள் பரவுவதாக பார்ப்பதா? என ஐயம் வெளியிட்டிருந்தார். அதற்கு முன ் காய்ன் கலெக்சன் குறித்தும் அதிலுள்ள போலி சந்தை மற்றும் பழம்பொருள் சேகரிப்பு மோகம் குறித்து நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். இவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்பது இந்த படங்களை பார்த்தால் சிறிது விளங்கும், நான் இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன், ‘அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு' என்ற ஒன்றை பேஸ்புக்கில் ஒரு நியூமிஸ்மேட்டிக் குழுவில் பார்த்தேன், விலை ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று இருந்தது. அந்த அரியவகை காசுக்கு இந்த விலை கம்மிதான். கிழக்கிந்திய கம்பெனி காசுகள் குறித்து ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்ததால் சந்தேகமாக இருக்க தேடிப்பார...