Posts

Showing posts from February, 2016

முழுமை

Image
அவனுக்கென சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் இருக்கிறது, அது ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட ஒரு ஆம்னிவேன். தினமும் விடியற்காலையிலேயே எழுந்து குளித்துமுடித்து தன் துணையாள் எழும்பும் வரைக்கும் காத்திருப்பான், அவள் எழும்பியபின் காப்பி போடுவதுமுதல், மகனை ஸ்கூலுக்கு கிளப்புவதுவரை எல்லாவேலையையுமே இருவருமாக சேர்ந்து செய்வதுதான் வழக்கம். தினமும் இது வழக்கமென்றாலும் எல்லாமுமே ஒரு எமெர்ஜென்சி ஃபோன்கால் வரும்வரைதான் நீடித்திருக்கும். எப்பவுமே இருவரும் மனதளவில் கொஞ்சம் தயாராகத்தான் இருப்பார்கள். ஃபோன்கால்  வந்ததும், அவனுக்கு சட்டை மற்றும் சாவி எடுத்துகொடுத்து அனுப்பிவைப்பது அவளுக்கு வழக்கம். தினமும் சாமி கும்பிட்டாலும் ஒவ்வொருமுறை எமெர்ஜென்சிக்கு கிளம்பும்போதும் தன் நெற்றியில் இருக்கும் திருநீரை அழித்துவிட்டு கிளம்புவது அவனுக்கு வழக்கம், ஒவ்வொருமுறை கிளம்பும்போதும் மகன் வீட்டிலிருந்தால் முதலில் மகனை, அப்புறம் மனைவியை, கடைசியாக வீட்டிலிருக்கும் கடிகாரத்தை ஒரு கணம் பார்த்துவிட்டுதான் அவனது ஓட்டம் ஆரம்பிக்கும். அவன் இலக்கு இல்லாமல் வேகமாக பயணிப்பதில்லை, அவனுக்கென இரண்டு இலக்குகள். ஒன்று எமெர்ஜென்சி ஸ்பா...

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு

கொஞ்ச வருஷம் முன்னால எதோ ஒரு டிவி நிகழ்ச்சில ஒரு ஃபாரின்காரர் ரொம்ப அழகா தமிழ் பேசினத பார்த்திருந்தேன். அமெரிக்கால இருக்குற யேல் யுனிவர்சிட்டில அவர் ஒரு தமிழ் ப்ரொபெசர், அவர் பேரு 'பெர்னார்ட் பேட்-Bernard Bate'ன்றது மட்டும்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது, அதுக்குள்ளே அந்த நிகழ்ச்சி முடிஞ்சுபோச்சு. திடீர்னு அவர் நியாபகம் வர, அவர் தமிழ்ல பேசின வீடியோ ஏதாவது கிடைக்குமான்னு யூடியூப்ல தேடிக்கிட்டிருந்தேன். முதல்ல, எதோ ஒரு தமிழ் மொழித்திருவிழாக்காக அவர் தமிழில் பேசிய ஒரு சின்ன க்ளிப்-வீடியோ கிடைச்சது, தமிழ் மொழியப்பத்தி அழகாவும் செம்மையாவும் பேசியிருப்பாரு, என் கணிப்பு சரியா இருந்தா அது செம்மொழி மாநாட்டுக்காகவா இருந்திருக்கும். அடுத்து அவர் கொஞ்ச நிமிடம் பேசிய இன்னுமொரு வீடியோ கிடைத்தது, அவ்வளவுதான் அதுக்கப்புறம் என் தேடல் முழுமையா வேற திசைல போக ஆரம்பிச்சது, தமிழ்ல பேசியதா பல வெளிநாட்டு காரவங்களோட வீடியோக்கள் யூடியூப்ல வரிசைல நிக்க சுவாரஸ்யமா ஒவ்வொன்னா பாக்க ஆரமிச்சேன்! அடுத்து ஒரு ஜெர்மன் லேடி ரொம்ப அருமையா தமிழ்ல பேசியிருந்தாங்க, உண்மையா அது எல்லோரும் பாக்க வேண்டிய ஒன்னு, அவங...