Posts

Showing posts from April, 2016

சனியாகும் வெள்ளி

இந்த வெள்ளிக்கிழமை இருக்கே, சனியன்!!. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நைட்டே ட்ரெஸ்சயெல்லாம் ஊரவச்சு, துவச்சி போட்டுட்டா சனி, ஞாயிறு ரெண்டுநாளும் நிம்மதியா நெனச்சத பண்ணலாம்னு யோசிச்சு ட்ரெஸ்ச ஊர வைக்கிறது உண்டு. ஆனா அன்னைக்கு மட்டும் நியாபகமறதி உச்சத்துக்கு போயிடும். அதும் எப்டினா சனிக்கிழமை நைட்டுதான் ட்ரெஸ்ச ஊர வச்சதே நியாபகத்துக்கு வரும். அட அப்போவாவது துவைச்சி முடிச்சு ஞாயித்துக்கிழமையாவது நிம்மதியா இருக்கலாம்னு நெனைச்சா... அங்கதான் இன்னும் அடி விழும், பின்ன 24 மணிநேரம் நல்ல ா தண்ணில ஊரிப்போன ட்ரெஸ்ச துவைச்சு காயவச்சு எடுத்தா மணக்கவா செய்யும். அழுக்கா இருக்றப்போ வர்ற ஸ்மெல்லவிட பலமடங்கு அதிகமா நமத்துப்போன ஸ்மெல் வரும். அப்புறம் வேற என்ன, மருக்கா ஒரு டைம் ஞாயுத்துக்கிழமையும் கவனமா அலசி போடனும், அப்பவும் அந்த ஸ்மெல் முழுசா போக ரெண்டு தடவைக்குமேல துவைக்கனும். படிக்கிறப்போ ஹாஸ்டல்ல இருந்ததவிட, இப்போ அந்த மறதி குறஞ்சிடுச்சி. ஆனாலுமே சென்னை வந்தப்புறம் ஒரு மூனுமுறை இப்டி மறந்து, அந்த வீக்கென்டல நல்லா வாங்கிகட்டிகிட்டாச்சு. இன்னைக்கு இந்த வெள்ளி, சனியனாக மாறாதுன்ற நம்பிக்கைல ட்ரெ...

கூந்தல் மாதிரி

பொதுவா பொண்ணுக்கும் பையனுக்கும் ஒத்துப்போகுதோ இல்லையோ, பொண்ணுக்கும் பொண்ணுக்கும் ஒத்துபோகுறதே இல்ல. எனக்கு தெரிஞ்ச அக்கா ஒருத்தங்க திருச்சில காலெஜ் ஜாயின் பண்ணினஅப்போ அவங்க ஹாஸ்டல் சீனியர்ஸ் அவங்க கைல ஒரு குண்டூசிய கொடுத்து அதால அவங்க இருந்த ரூம அளந்து எத்தனை குண்டூசி வரும்னு சொல்ல சொன்னாங்களாம், இவங்களும் எதோ விஜயகாந்த் மாதிரி தோராயமா மனக்கணக்கு போட்டு ஒரு நம்பர சொல்லி தப்பிச்சிடலாம்னு ஒரு நம்பர சொல்லியிருக்காங்க. அங்கதான் ட்விஸ்டு, அந்த சீனியர் ஆல்ரெடி அவங்க ஜாயின் பண்ணினப் போ இதேமாதிரி அவங்க சீனியர்கிட்ட மாட்டி அப்புறம் கடைசியா அளந்து சொன்னப்புறம்தான் விட்டிருக்காங்க, சோ அவங்களுக்கு சரியான நம்பர் தெரியும். இந்த அக்கா தப்பான நம்பர் சொன்ன அப்புறம் என்னையவே நீ எமாத்துரியான்னு சொல்லி கடைசியா அந்த குண்டூசியால ரூம அளக்க வச்சு, அளந்தஅப்புறமும் நம்பர் தப்புன்னு சொல்லி அழவச்சு, நோகடிச்சு அப்புறமாதான் விட்டிருக்காங்க. இந்தமாதிரி எல்லா பக்கமும் நடக்கறது இல்லன்னாலும், அங்க அங்க நடந்துகிட்டுதான் இருக்கு. பையனுங்கதான் மயிரு மாதிரி பிஹேவ் பன்னுறானுன்கன்னா, சில பொண்ணுங்களும் கூந்தல் மாதிரி...

எ.டி.எம் திருவிளையாடல்

எ.டி.எம்'ல பணம் எடுக்குறப்போ 400, 900, 1900 இப்படி எடுத்துதான் எனக்கு பழக்கம். ஏன்னா 500, 1000, 2000 இப்படி எடுத்தா நூரு ரூபாய் நோட்டு வர்றதே இல்ல, நிறைய எ.டி.எம்'ல டினாமினேசன் மிக்ஸ் ஆகி வந்தாலும், எனக்குன்னு எடுக்க போனா மட்டும் வரவே வராது, டிசைன் அப்புடி. அதனாலதான் எப்பவுமே ஒரு நூரு ரூபா நோட்டாவது வர்றமாறி டினாமிநேசன்ல எடுப்பேன். பொதுவா பணம் எடுக்குறப்போ பல எ.டி.எம்'ல "டு யூ வாண்ட் ரெசிப்ட்" அப்படின்னு கேக்கும், அதுக்கு கீழ "எஸ்" & "நோ" இந்த ரெண்டு பட்டனும் இருக்கும், என்னோ ட பேங்க் எ.டி.எம்'ல கூடவெ ஒரு வசனமும் இருக்கும் அதாவது "ப்ரெஸ் நோ டு சேவ் ட்ரீஸ்" அதாவது ரெசிப்ட் பிரிண்ட் பண்ணுறதால நெறைய மரம் அழியுதாம், சரி அதுதான் பணம் எடுத்த உடனேயே பேலன்ஸ் எவ்ளோ இருக்குனு டக்குனு ஃபோனுக்கு மெசேஜ் வந்துடுமே அப்புறம் எதுக்கு மரத்த வெட்டனும்னு நா எப்பவும் ரெசிப்ட் பிரிண்ட் பண்ணுறதில்ல. போன டைம் எ.டி.எம் போனப்பவும் இதேபோலத்தான் 900 ரூபா எடுத்தேன், மொத்தமா சேவிங்ஸ்ல இருந்த அமவுண்ட் மூவாயிரத்திசில்லரை ரூவா, 900 எடுத்தது போக 210...

ரவீந்தர்'ஸ் மாம்ஸ் ரெசிப்பி

போனவருஷக்கடைசில வந்த வெள்ளத்துக்கு நிறைய கார்பொரேட் கம்பெனிகள்ல லோன் கொடுக்கப்பட்டது, எங்க கம்பெனிலயும் ஒரு லட்சம் வரைக்கும் வட்டியில்லாத லோன் இருந்தது, இருபது மாசம் நாலாயிரம் நாலாயிறமா கட்டினா சீக்கிரம் அடைச்சிடலாம். கிட்டத்தட்ட எங்க பேட்ச்ல இருந்த பாதி பேர் அந்த லோன எடுத்துகிட்டோம். நம்ம ஊரு பசங்க, பொண்ணுங்களுக்கு அவங்கவங்க தேவைய பொருத்து, education லோன அடைக்க, நகை எடுக்க, ஃபிக்ஸ்டு டெப்பாசிட்ல போட, வேறு சில கடன்கல அடைக்க என இப்படி அந்த பணத்த எடுத்து செலவு பண்ணத்தான் முடிஞ்சது, ஒரு காலத்துலயும் இப்படியான ஒரு லட்சம் பணத்த எடுத்து எதுலயாவது இன்வெஸ்ட் பண்ணவோ, இல்ல சைடுல ஒரு தொழில் தொடங்கவோ நமக்கும் சரி, நம்மள சுத்தியிருக்கிரவங்களுக்கும் சரி தைரியம் வரவே வராது, நாம வளர்க்கப்பட்ட விதம் அப்படி, இதுதான் இங்கு பெரும்பான்மை. இது நம்மள சுத்தி இருக்கிற நிலம, அப்படியே அடுத்த பக்கம் போவோம், நார்த்-இந்தியன்ஸ். அவங்களுக்கும் நமக்கும் இருக்கிற வித்தியாசத்திற்கு ஒரு காரணம் உண்டு, அதாவது காலனி ஆதிக்க காலங்கள்ல வடஇந்திய மக்கள் பல போர்களை சந்திச்சது உண்டு, அவங்க அனுபவிச்ச அளவு போர்களின் நிதர்சன...