கேரளாவும் பிலிப்பைன்சும்
Modified Two-Whealers பத்தி ஆர்வமா தேடிக்கிட்டிருக்கிறப்போ, பஜாஜ் M80க்கே டியூக் என்ஜின ஃபிக்ஸ் பண்ணி அசால்ட்டு பண்ணுன கேரள பைக்ஸ் போட்டோஸ் கூகுள்ல வராம இருக்குமா!?. வண்டியவெல்லாம் தாறுமாறா ஆல்டர் பண்ணுறது அவனுங்கதான். ஆடெர்னா எதோ புல்லெட் ஒன்னுல ஹேண்டில் பாரும் பில்லியன் சீட்டும் ஆல்டர் பண்ணி ஓட்டுறதோ, இல்ல RX100க்கு கலர் பெயிண்ட் மாத்தி ஓட்டுறதோ இல்ல. ஸ்ப்லெண்டரையே ஸ்க்ரேம்புலறா மாத்துறது. என்ன பொறுத்தவரைக்கும், வீட்டுல எப்பவுமே இருக்குற ஒரு வண் டியவே பக்காவா மெயின்டெய்ன் பண்ணி, சில ஆல்ட்ரேசன்சோட ஒட்டுறதுதான் கெத்து. அதுக்கு நம்ம சென்னை ஒன்னும் கொறஞ்சது இல்லனாலும், இங்கயெல்லாம் போலீஸ் கிட்ட மாட்டுனா மினிமம் நூறு ரூபா இருந்தாலே போதும் தப்பிக்க. ஆனா நான் கேள்விப்பட்ட வரைக்கும் கேரளாவ்ல அப்டி இல்ல, ரூல்ஸ் எல்லாம் ரொம்போ ஸ்ட்ரிக்டு. ஆனாலும் பைக் கிறுக்கனுங்க பூராவும் ஏதாவது ஆல்ட்ரேசன் பண்ணிதான் ஓட்டுறானுங்க. இப்போல்லாம் கேரளால வர்ற பாதி படங்களோட போஸ்ட்டர்ஸ்லகூட டூ-வீலரோட ஹீரோ வர்றமாதிரி போட்டுத்தான் ப்ரோமோட்டே பண்ணுறாங்கனு ஒரு ஆர்டிகல் கூட பாத்தேன். அந்த அளவுக்கு பைக் கிரேஸ் அங்க!...