Posts

Showing posts from 2017

மேற்க்கத்திய மக்களுக்கும் நமக்கும் இடையேயான பலஆயிரம் மைல் தொலைவு

'Have you ever noticed in western movies, people' carrying gloves when they took their dog for walk?' இது சமீபத்திய மீட்டிங்கின் போது ஒருவர் எங்களை நோக்கி கேட்ட கேள்வி. பலருக்கும் நினைவிலிருந்ததோ அல்லது சட்டென புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை அமைதியாக தலையசைத்தனர், எனக்கு ஒரு ஐந்து வினாடிகள் ஆனது ஏன் என புரிந்துகொள்ள. உங்களுக்கு எவ்வளவு நேரமானதென்று தெரியவில்லை!. தன் நாயை ஒரு நடைக்கு கூட்டிச்செல்லையில் அது பூங்காவிலோ, சாலையோரத்திலோ அல்லது வேறெங்கிலும் பொது இடத்திலோ அதன் கழிவை இட்டுவிட்டால் அதை எடுத்து அப்புறப்படுத்தவே அந்த க்ளவுஸ். எவ்வளவுதான் நாமலும் பிராணிகளிடத்தில் ப்ரியமாக இருந்தாலும் இதுபோன்ற பழக்கமெல்லாம் நமக்கு வரவே வராது, ஏனென்றால் நம் வளர்ப்பு அப்படி. நம்மை பொறுத்தவரை பிராணிகளின் மீதான ப்ரியம் மற்றும் சமூக நன்மதிப்புகள் என்பவைகளுக்கிடையில் பல மைல்கள் தொலைவு உண்டு. சொல்லவந்த விசயத்திற்க்கு வருகிறேன், கொஞ்சம் முன்னால் அலுவலகத்திலிருந்து திரும்பிவருகையில் ஒரு மாட்டின் மீது மோதி இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கவேண்டியது, கொஞ்சம் சுதாரித்துகொண்டதில் இருவரும...

Gutland - Beauty of not explaining much

Image
'Govinda Van Maele' இந்த பேருதான் முதல்ல GUTLAND படத்த பார்க்க ஈர்த்தது, நம்ம நாட்டுக்காரர் போல, ஜெர்மன்ல செட்ல் ஆகிருக்கணும், எப்படி படம் எடுத்துருக்காருன்னு பாக்கணும்னுதான் தேவிபாலா போனேன். முன்னாடியே நண்பர்கள் எச்சரித்ததுமாதிரியே தியேட்டராயா அது? எல்லா தியேட்டர்லயும் முன்னாடி நிக்கிறவன்/உட்காந்திருக்குறவன் தல தான் மறைக்கும் இதுல பின்னாடி போறவன் வர்றவன் தலைலாம் ஸ்கிரீன்ல தெரியுது, அதும் தேசிய கீதத்துக்கு எல்லாரும் எழுந்து நிக்கிறப்போ பாக்கணுமே தியேட்டர்ல இருக்குற பாதி பேரோட பாதி உடம்பு நிழல் ஸ்க்ரீன்ல பட்டு அப்டியே பேக்ட்ராப்பில நம்ம தேசியக்கொடி ஸ்க்ரீன்ல பறக்குறத பாக்க புல்லரிச்சுருச்சு. படத்துக்கு வர்றேன், Beauty of not explaining much'னு ஒன்னு சொல்லுவாங்க அதுக்கு நல்ல எக்ஸ்சாம்பில் இந்த படம், பாக்குறவங்கதான் தானே புரிஞ்சிக்கணும், ஆனா அதுக்காக ரொம்போ தட்டையாவெல்லாம் கதை சொல்லல, நல்ல அழகா கொண்டு போயிருக்கார். லக்ஸம்பர்க்ல ஒரு சின்ன கிராமத்துல நடக்குறமாதிரி கதை, படம் பாத்ததும்தான் தேடி பாத்தேன் லக்ஸம்பர்க்கின்றது ஒரு சின்ன யூரோப் கன்ட்ரியாம் சுற்றி பெல்ஜியம், ஃபி...

15வது சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல்-மூன்றாம் நாளில் ஒரு ராமன் ராகவ்

நேற்று சாயங்காலம் 'ஹார்ட்ஸ்டோன்' படம் பார்ப்பதற்க்காக கேசினோவில் அமர்ந்திருந்தேன். படம் ஆரம்பிக்க பத்து நிமிடமிருந்தது 'ஹாய் அயம் ராமன்..' என்றவாறே ஒரு கேரக்டர் அறிமுகமாகிக்கொண்டு பக்கத்தில் வந்து அமர்ந்தது, வயது 65 முதல் 70ற்க்குள் இருக்கும். 'நீங்க ஃபில்ம் இண்டஸ்ட்ரீல இருக்கிங்களா?' என்றார் 'இல்ல சார் நான் ஒரு ஐடி கம்பினில வொர்க் பண்றேன்' என்றேன். 'ஓ வெரி நைஸ் நான் கூட பேங்க்ல வொர்க் பண்ணினேன் எனக்கும் சினிமாலாம் ஒன்னும் தெரியாது அயம் ஜஸ்ட ஃபேன். அய்ம எக்ஸ்-பேங்கர், வி.ஆர்.எஸ் வாங்கிட்டேன், கொல்கத்தா பூனேன்னு அலையவிட்டா, இது நமக்கு சரிபட்டு வராதுன்னு வேலைய விட்டுட்டேன். இப்போ வீட்டுல சும்மாதான் இருக்கேன், வீட்டுல தண்ணிதெளிச்சு விட்டுட்டா அதான் டெய்லி ஃபெஸ்டிவல்க்கு வந்து படம் பாத்துண்டு போறேன்' என்றார். பதிலுக்கு 'நல்லதுங்க சார்' என்றேன். ஒரு இரண்டு மூன்று செகண்ட் கேப் விட்டு மீண்டும், 'இதுவரைக்கும் பார்த்ததுலயே எந்த படம் பெஸ்டுனு நீங்க ஃபீல் பண்றேள்' என்றார், 'நேத்திபாத்த நோ டேட் நோ சைன் அப்புறம் இன்னைக்கு பாத்த லைஃ...

15வது சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல்-முதல் நாள்

போன மாசம் உபெர்ல மிஸ் பண்ணின tripod'அ வாங்க கார் ட்ரைவர் வீட்டுக்கு போக வேண்டி இருந்தது, மேடவாக்கம்ல இருந்து ஆவடிக்கு முன்ன இருக்கிற காடுவெட்டிக்கு மொத்தம் 35 கிலோ மீட்டர், அப்புறம் அங்கிருந்து அண்ணா தியேட்டர் ஒரு 25 கிலோமீட்டர் அங்க ஃபர்ஸ்டு ஷோ முடிச்சு, அப்புறமா பக்கத்துல தேவி தியேட்டர்ல அடுத்த ஷோ, அப்புறமா அங்க இருந்து ஆஃபிசுக்கு ஒரு 25 கிலோமீட்டர், மொத்தமா இன்னைக்கு மட்டும் 85 கிலோமீட்டர். இப்படியாக ஆரம்பிச்சிருக்கேன் இந்த வருட சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல. இன்னைக்கு கீழ இருக்குற இரண்டு படங்கள பார்க்க முடிஞ்சது 1. The President (El Presi) 2017/70”/Spanish . கொஞ்சம் லேட்டா போனதால முதல் 10 நிமிசத்த தவற விட்டுட்டேன். பார்த்த மிச்ச படத்தோட கதை சொல்லும் விதம் கொஞ்சம் ஓல்டு ஸ்கூலா இருந்தாலும் சூப்பரா இருந்தது. படம் முழுக்க ஒரு கார்லயே நடக்குற மாதிரி இருந்தது. எனக்கு தெரிஞ்சு கேமிராவை காரவிட்டு வெளிலயே கொண்டு வரலன்னு நினைக்கிறேன். ஒரு ப்ரெசிடெண்டா தேர்வாகிட்ட மனுசனோட உண்மையான கேரக்ட்டரையும், அதை எப்படி அவன் ஒரே நாள் இரவுல மறைக்க ட்ரை பண்ணுறான்றதையும், அவனோட ஊர்ல, ஒரு கார்லயே சொ...

choker என்றொரு வஸ்து

Choker என்ற ஒரு வஸ்து இருக்கிறது, இதுவரை அதோட பெயர்தான் நமக்கு தெரியாமல் இருந்திருக்கும். அது பெண்கள் கழுத்த சுத்தி போட்டுக்குற ஒரு நெக்லெஸ் டைப், சில படங்களில் பார்த்திருக்கலாம். இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு பொண்ணுங்கள மட்டும்தான் இந்த choker போட்டிருந்து பாத்திருக்கிறேன். ரெண்டு பேரும் அவ்வளவு அழகு!. Matter is simple, இந்த நோஸ் ரிங் போட்டிருக்கும் பெண்களை நமக்கு பாத்ததும் பிடிச்சிரும் இல்லையா அதேமாதிரிதான் இதுவும். ஆனா பார்க்குற சிலருக்கு பிடிக்காமாவும் போகவும் வாய்ப்பிருக்க ு, அதுக்காக அவங்களோட ரசனையை நாம கேள்விகேக்கணும்னு அவசியம் இல்ல. ஆக்சுவலா அவங்களே அவங்கள நல்லா கேள்வி கேட்டுக்கணும். இன்னொரு விஷயம், பார்த்ததுமே பிடிச்சிரும்னு சொன்னேன் இல்லையா? நிச்சயமா பிடிக்கும்! ஆனா அவ்ளோ சிக்கிரம் அவங்ககிட்ட நம்மளால நெருங்கி பேசிரமுடியாது, ஏன்னா நம்மளோட டிசைன் அப்புடி! விஷயம் என்னன்னா "choker வந்து மேற்கத்திய நாடுகள்ல ஒரு காலத்துல prostitutes'ங்கதான் போட்டுட்ருந்தாங்க, அது அவர்களுக்கான அடையாளம், ஆக அத போட்டுக்குற பொண்ணுங்களா! கொஞ்சம் அத தெரிஞ்சுக்கிட்டு போடுங்க!"ண்றதுபோல கொஞ்ச...
Image
Face | முகம்

லெனோவோவின் மெடுலாம்லெங்கெட்டா

Image
சரியா பத்து மணிக்கு ரூமில் பவர் கட் ஆனது, அவசரத்துக்கு ஃபிளாஷ் லைட் ஆண் பண்ணலாமேன்னு ஃபோனில் தேடினேன் அதை காணவில்லை. அப்புறம் தாம்பரம் வந்ததும்தான் கவணித்தேன் ஃபோனில் கேமெராவே வேலை செய்யவில்லை. 'Kindly notice, camera not working' என்று எர்ரர் வந்தது. உடனே ஃபேஸ்புக் லைவ் போயி கேமெரா வேலை செய்கிறதான்னு செக் பண்ணினேன், இன்ஸ்டா & வாட்ஸ்ஆப் போயி செக் பண்ணினேன், இன்னும் பிற வகையறாக்களிலும் செக் பண்ணினேன். ஆப் செட்டிங்ஸ்ல போயி கேமமெராவை force stopம் செய்தேன் ஒன்றும் நடக்கவில்லை. பிற கு கூகுளில் இறங்கியும் தேடினேன் பதில் மட்டும் கிடைத்தபாடில்லை. தேடியதில், lenovo ஃபோன்கலில் இது அதிகம் வருவது போல் ரிவ்யூக்கல்தான் கண்ணில் பட்டன, மறுகணம் நான் lenovo-k6-power'ஐ சூப்பர் பட்ஜட் ஃபோன் என சஜ்ஜஸ்ட் செய்திருந்த அந்த ரெண்டுபேரின் முகங்கள்வேறு நியாபகத்திற்கு வந்தது. 'Kindly notice, camera not working-solved' என்பதுபோல் கூகுளின் முதல் பேஜிலேயே ஒரு லிங்க் இருந்தது, பொதுவாக solved என்று வரும் எல்லா லிங்க்குகளும் குப்பையாத்தான் இருக்குமென்பதால் உள்ளே போகவில்லை, சரி போய்தான் ...

Hugo- Hugo

Image
போனமுறை ஊருக்கு சென்றிருந்தபோது லோக்கல் சேனலில் புரூஸ்-லி என்கிற காவிய தமிழ்படத்திலிருந்து ஒரு காமெடி(?) சீன் பார்க்க நேர்ந்தது, 'ஜோக்கர் சீன் இன் புரூஸ் லீ' என்று யூ-டியூப்ல் தேடினால் அது கிடைக்கும். அந்த சீனில் ஜோக்கர் வேடத்தில் முனீஸ்காந்த் காரிலிருந்து இரங்கியதும் ஒரு இங்க்லிஷ் ஆல்பம் மியூசிக் வரும், கேட்ட முதல் தடவையே சில பாடல்கள் ஈர்த்துவிடுமல்லவா அதுபோன்றதொரு பாடல் அது. கொஞ்சம் pharrell williams'ன் happy பாடலை நினைவுபடுத்தியது. பின்னர் அதைப்பற்றி தேடியதில்  அது Old tyme relegion என்கிற ஆல்பத்தில் வரும் 99 problems என்கிற பாடல், Hugo என்பவர்தான் அந்த ஆல்பத்தின் ஆர்டிஸ்ட். ஏற்கனவே 'Hugo' என்கிற ஹாலிவுட் படம் ஒன்று பார்த்திருக்கிறேன், எனக்கு சிறுவயதில் கண்டிருந்த பல கனவுகளின் கோர்வை போன்ற அனுபவத்தை தந்த லவ்லி படம் அது. கனவுகளை விளக்கிச்சொல்வது கஷ்டம் அல்லவா ஆக படத்தை இறக்கி பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது விக்கி அல்லது ஐ.எம்.டி.பி-யில் தேடிப்படித்துகொள்ளுங்கள். இப்போ இந்த 'Hugo' விற்கு வருகிறேன், இவரைப்பற்றி தேடியதில் இவர் இங்கிலாந்தில் பிறந்து த...

How to put grid on paper for drawing

Image

Koh-i-noor hardtmuth toison d'or 1900

Image
Koh-i-noor hardtmuth toison d'or 1900, இதுதான் நான் யூஸ் பண்ணுற பென்சில், அப்புறம் என்கிட்ட சஜ்ஜசன் கேக்குறவங்களுக்கு நான் சொல்லுறதும் இதுதான். கூடவே நான் சேத்து சொல்லுற இன்னொரு பிட்டு, 'அதாவது டார்க் ஷேட்லாம் அப்டி இருக்கும், சூப்பர் பென்சில்தான், ஆனா சீவ சீவ முக்குதான் உடஞ்சிட்டே இருக்கும்'னு சொல்லுவேன். இப்டியே சொல்லிட்டே இருந்தா வேலைக்கு ஆகாதுனு அந்த கம்பெனிக்கு கடுதாசி ஒன்னு எழுதுயிருந்தேன், ரெண்டுநாள்க்கு முன்ன பதில் வந்தது. 'உங்களோட அப்சர்வேஷனுக்கு நன்றி, நாங்க நல்லா  செக் பண்ணிட்டோம் அந்த மாதிரி ப்ரச்சனையெல்லாம் இந்த பென்சில்ல இல்ல, எதுக்கும் நல்லா யோசிச்சு பாருங்க, நீங்க டேபில்ல இருந்து அல்லது அதுபோல கொஞ்சம் ஒசரத்துல இருந்து கீழ போட்டிருக்கலாம், அதுனால பென்சில் disrupted ஆகிருக்கலாம். However, we thank you for the information, we will keep an eye on the quality of graphite pencils.'னு சொல்லி சுபம் போட்டுருக்காங்க. நானும் உக்காந்து நல்லா யோசிச்சு பாத்ததுல, நாந்தான் பல முறை கீழபோட்ருக்கேன்னு நியாபகம் வந்திருக்கு. அனாலும் ஒரு டெஸ்ட் எஞ்சினியறா உட்காந்து...

நண்பேன்

பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்த சமயம், நீ வாங்கின மார்க்குக்கு கூடவெல்லாம் வந்து காலேஜ்ல சீட்டு கேக்க முடியாது நீங்களே எதாவது ஒரு காலேஜ்ல போயி ஃபார்மெல்லாம் வாங்கி போட்டுகோங்க, சீட்டு கெடச்சுதுன்னா வந்து சொல்லுங்க ஃபீசு பணம் மட்டும் கொடுக்குறோம் என்று வீட்டில் சொல்லிருந்தார்கள். . நானும் என் நன்பனொருவனும் திருச்சியில் ஜோசப், ஜமால், பிஷப் அப்புறம் நேஷனல் என்று ஒவ்வொரு காலேஜாக போகலாமென்று முடிவு பண்ணியிருந்தோம். முதலாவதாக நாங்கள் ஃபார்ம் வாங்கச்சென்ற காலெஜ் ஜோசப், மெயின் கேட ்டிலிருந்து ஒரு நூறு இருநூறு மீட்டர் தாண்டியதும் நாங்கள் முதலில் பார்த்தது அந்த காலேஜின் டாய்லெட். பார்த்துவிட்டு பக்கத்திலிருந்தவனை பார்த்தால் ஆளை காணவில்லை, வினாடி நேரத்திலேயே அந்த டாய்லெட்டின் வாசல்வரை சென்றிருந்தான். . உள்ளே சென்று ஓரிரண்டு நிமிடம் கடந்து வெளியே வந்தவனிடம் ஏண்டா அவ்ளோ அர்ஜெண்டா? என கேட்கலாமென்றிருந்தேன். ஆனால் அதற்கு முன்னமாக, வந்த மறுகணமே 'அப்பாடா அப்துல் கலாம் ஒன்னுக்கு போன டாய்லெட்ல நானும் ஒன்னுக்கு போயிட்டேண்டா!!' என்றான், ஒருநிமிடம் புல்லரித்துவிட்டது. இன்று அவன் போன்ற ...
Image
Jennifer Pugh | ஜெனிஃபர் புஃக்

பல்சர் 220

அது ஒரு பல்சர் 220, ஒரு 60கிமி வேகமிருக்கும் அன்றும் என்னை கடந்துசென்றது, ஏற்கனவே ஒருமுறை ஓ.எம்.ஆரிலும், ஒருமுறை பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் ரோட்டிலும் பார்த்திருக்கிறேன். பேக் ச்சேஸிலிருக்கும் ஃபெண்டர் நீக்கப்பட்டிருக்கும். ஒரிஜினலாகவே அந்த வண்டிக்கு தனியாக மட் குவார்ட் இல்லாததாலும், கூடவே இந்த ஃபெண்டர் நீக்கப்பட்டிருப்பதாலும் எப்போது பார்த்தாலும் சட்டென கவனத்தை ஈர்த்துவிடும். கூடவே அந்த பல்சருக்கே உரித்தான அந்த தடித்த சைலன்சரும் அதன் பின்புறத்தை இன்னும் பிரமாண்டமாக காட்டும ். வெறும் பெயருக்காக சின்னதொரு நம்பர் பிளேட் மாட்டப்பட்டிருக்கும். அந்த வண்டியில் செல்பவனை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அடுத்தடுத்து வண்டிகளை கட் செய்து போகையில் பார்க்க ஒரு விதமாய் அம்சமாய் இருக்கும். எனக்கும்தான் அதுபோல சின்னதொரு மோட் செய்து ஓட்டவேண்டுமென்றுதான் ஆசை. ஆனால் இந்த மழைக்காலத்தை பார்த்துதான் பயம், வண்டிக்கு பின் வருபவரின் முகத்தில் சேற்றை வாரியடிக்க விருப்பமில்லை. உண்மையாக இதுபோன்ற சின்ன சின்ன மோடிஃபிகேஷன்களை செய்ய நினைக்கையில்தான் நம்மூரின் சாலைகளை எண்ணி கோபம் வரும். மட் குவார்டை நீக்குவ...

ஜி

கொஞ்சம் வருசம் முன்னால எம்.எல்.எம் மார்கெட்டிங் பயங்கரமா இருந்தப்போ 'யூ கேன் வின்' போன்ற புத்தகங்கள வாங்கி வச்சுகிட்டு, எப்டியாச்சும் வாழ்க்கைல பெருசா சம்பாரிக்கனும்னு எதாவது ஒரு எம்.எல்.எம் கம்பெனில பொருளவாங்கிட்டு இல்லனா பணத்தகட்டிட்டு, நமக்குகீழ யாரயாவது சேத்து விட்டுடனும்னு சில அன்பர்கள் பித்து பிடித்தது போல் திரிந்துகொண்டிருந்தார்கள். மதியம் ரெண்டு மணியானாலும் சரி, சாயங்காலம் ஆறு மணியானாலும் சரி, ராத்திரி ஒன்பது மணியானாலும் சரி இன்னும் எந்த நேரமானாலும் ஃபோன் செய்து "ஜி  குட்மார்னிங் ஜி.." என ஆரம்பிப்பார்கள். இப்போ என்ன டைம் ஆகுது, ஏங்க இப்டி குட்மார்னிங் சொல்லுறிங்கனு கேட்டா குட்மார்னிங்'ன்ற வார்த்தைல ஒரு எனர்ஜி இருக்கு ஜி என்பார்கள், கூடவே ஜி எப்பொ ஜி செஸ்ஷன் வர்ரீங்க? என்பார்கள். கெட்டவார்த்தைகள் பேசக்கூடாது என்பதால் மூடிக்கொண்டிருந்த காலம் அது. இந்த 'ஜி'ன்ற வார்த்தையை என்னோட கெட்டவார்த்தை அகராதியில் சேர்த்ததற்க்கு ஆர்.எஸ்.எஸ் சங்கிக்கள் தவிர்த்து, இந்த எம்.எல்.எம் மங்கிக்களும் ஒரு காரணம்! # WhyIHateTheWordJi
Image
Yersath | ஏர்சத்

ஆர்.எஸ்.எஸ் ஜந்துக்கள்

பத்து வயது பையன் ஒருத்தன் அறுபது வயதுடைய பெட்டிக்கடை காரரிடம் இவ்வாறாக கேட்கிறான் "தாத்தா எனக்கு இது கொடுங்க!", அதுக்கு அவரிடமிருந்து இவ்வாறா பதில் வருவதா வச்சிக்குவோம் "ஏய், உங்கப்பன் எனக்கு பொறந்தானா? இல்ல உங்கம்மா எனக்கு பொறந்தாளா? ஒழுங்கா என்ன வேணுமோ அதமட்டும் கேளு!", இவை போதும் அந்தப்பையனின் எண்ணங்களை சிதைக்க. நான் காலேஜ் படிக்கும்போது, ஊரில் யோகா மற்றும் சிலம்பம் சொல்லித்தரும் மாஸ்டராக 'ஜி' என்கிற பெயரில் சில ஆர்.எஸ்.எஸ் ஜந்துக்கள் இருந்தன. சிலம்பம் & யோகா கற்க வரும் ச ிறுவர்களிடத்தில் 'இந்தியா நம் பாரதமாதா, நம் தாய் வழியில் பிறக்காத முஸ்லிம்கள் இங்கே வாழ்வதும் அவர்களோடு நாம் வாழ்வதும் அறுவருக்கத்தக்கது'ன்ற ரேஞ்சில் உளரல்களை அள்ளித்தெளித்து வந்தனர். என்னிடமே ஒருமுறை 'தம்பி எந்த காலேஜ்?' என ஒரு ஜந்து கேட்க நான் 'ஜமால்' என்றேன், 'ஏன் தம்பி போயும் போயும் அவிங்க காலேஜ் தானா கெடச்சுது'னு அடுத்த கேள்வி கேட்க 'ஆமா அல்கொய்தால சேரலாம்னு இருக்கேன் அதான் அங்க படிக்கிறேன்'னு சொல்ல நெனச்சும் சொல்ல முடியாம 'ஆமா அ...

Graphite drawing tools - my pouch

Image
என் காட்டிலிருக்கும் மரங்கள்  😉 ரொம்ப நாள் யோசனை, என்ன பென்சில் யூஸ் பண்ணுவிங்க, என்ன டூல்ஸ் யூஸ் பண்ணுவிங்கனு கேட்டவங்களுக்கு, விடியோவாவே எடுத்து போட்டுறுக்கேன் பாருங்க. என்கிட்ட இருக்ற மூனு பென்சில் பவுச்ல இருந்து ஒன்ன மட்டும் காட்டிருக்கேன் இதுதான் அடிக்கடி யூஸ் பண்றது. மீதி இருக்றதெல்லாம் கொஞ்சம் கேப் விட்டு ஷேர் பண்றேன் .

தேசியவியாதி+1

கதவை பூட்டினேனா இல்லையா என்ற சந்தேகம், வாரத்தில் ஒருநாளேனும் வரவில்லையானால் அதுதான் ஆச்சர்யம், அப்படி ஒரு தேசிய வியாதி அவனுக்கு. திருநாளாய் இல்லாத அந்த ஒருநாளும் அப்படித்தான் கதவை பூட்டியது நினைவில்லை. வீட்டைவிட்டு ஒரு கிலோமீட்டர் நடந்து கடந்துவிட்டான், திரும்பிச்சென்று பார்க்க வெயிலின் உக்கிரம் அனுமதிக்கவில்லை. மணிக்கொருமுறை இந்த யோசனை வருவதும் போவதுமாக அந்தநாள் கடந்தது. சாயங்காலம் அவசர அவசரமாய் வீடு திரும்புகையில்தான் பூட்டைபூட்டி சாவியை வெளிச்சுவரின் ஷெல்ஃபின் மேல் வைத ்தது நியாபகம் வந்தது. மறதி என்னும் வியாதியிலிருந்து விடுபட்டதாய் எண்ணி ஒரு நிம்மதிப்பெருமூச்சிற்குப்பின் சாவகாசமாய் இருந்தது அவன் நடை. பிறகு வீடுதிரும்பி ஷெல்ஃபிலிருந்து சாவியை எடுத்ததும்தான் கவனித்தான் தாழ்பாளிடாமலே வெறும் கொண்டியில் தொங்கிக்கொண்டிருந்தது அவன் பூட்டிய அந்த பூட்டு!. ஒரு தேசியவியாதியால் அனுதினம் அவதிப்பட்டவனுக்கு இனி இன்னுமொரு கூடுதல் வியாதி.
Image
அசோகமித்ரன்  |  Jagadisa Thyagarajan

பீச்சாங்கை

இரவு நேரங்களில் எவருக்கும் தன் பைக்கில் லிஃப்ட் கொடுத்து பழக்கமில்லை அவனுக்கு. நைட் ஷிஃப்டில் வேலைக்குச்செல்வதால், வழக்கம் போலவே இரவு இரண்டு பணியளவில் ஆஃபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். ஆஃபிசிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டில் ஒரு கிலோமீட்டர் கடக்கையில் பஸ் ஸ்டாப் ஓரம் ஒருவர் லிஃப்ட் கேட்டு கைகளை நீட்டிக்கொண்டிருந்தார். கவனித்தபோது அவரின் முகம் அவனுக்கு அவ்வளவு தெளிவாக தெரியவில்லை. 'சரி லிஃப்ட் கொடுப்போமே' என நினைத்து இடதுகை க்ளட்சை பிடித்து நிருத்த முற்படுகை யில், பைக் ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த நபரின் மூக்கும் கண்ணும் அவர் ஒரு நார்த் இந்தியன் என்பதை காட்டிக்கொடுக்க, அடுத்தகணம் வடதுகை ஆக்சிலேட்டரை முறுக்கிவிடுகிறது. எனினும் அடுத்த 4 கிலோமீட்டரில் ஒரு கண்ஸ்ட்ரக்சன் கிரவுண்ட் அருகில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடம் வந்துவிடம் ஆக அந்தநபரை நம்பலாம் என நினைத்து மறுபடியும் இடதுகை க்ளட்ச்சை பிடிக்க, மறுகணமே வட இந்தியர் ஒருவர் லிஃப்ட் கொடுத்த ஒருவரின் கழுத்தையே அறுத்து, பர்ஸையும் லேப்டாப்பையும் கொள்ளையடித்ததாய் எங்கோ படித்த செய்தி ஒன்று நியாபகம் வர, ஒர...

ஹோலி ஷிட்

Image
ஆஃபிஸ்ல சேர்ந்தப்போ எங்க பேட்ச்சுக்கு fluency இன்ஸ்ட்ரக்டர் ஒருத்தர் இருந்தார், அந்தாளு கொஞ்சம் வித்யாசமான தற்பெருமைவாதி. தன்னைப்பத்தி சொல்லிக்கொள்ளும்போது, "நானெல்லாம் படாத கஷ்டமில்ல, பார்க்காத வேலையில்ல எல்லாத்தையும் பாத்துட்டுதான் இப்போ இந்த நெலமைல இருக்கேன்!, எனக்கு தண்ணி தம்முனு எல்லா பழக்கமும் இருக்கு, ஆனாலும் என்ன ஒரு பொண்ணு வெரட்டி வெரட்டி லவ் பண்ணிகிட்டுதான் இருக்கா!" அப்டி இப்டின்னு இன்னும் என்னென்னவெல்லாமோ மேடைல பேசி கடைசியா, ஆஸ்கர் அவார்டு வாங்கின டி'காப்ரியோ கணக் கா "Yes i'm a shit... and I'm a Holy shit" அப்படின்னு சொல்லிட்டு பல்லிளிப்பார். எல்லா பயபுள்ளைங்களும் அப்டியே அவரு பேச்சுல மெய்மறந்து சில்லரையெல்லாம் விட்டெரிஞ்சாங்க. மேட்டர் ஒண்ணே ஒண்ணுதான் அந்தாளு என்ன பேசினாலும், என்ன பொய் சொன்னாலும் கடைசியா சொன்னாரு பாருங்க ஒரு லைன் "Yes i'm a shit... and I'm a Holy shit" அதுலதான் எல்லாரும் அவுட்டு, சேத்துல மலர்ந்த செந்தாமரையா காட்டிக்கிறாராம். சேறு ஓக்கே, ஷிட்டு எப்படி? அதுவும் ஹோலி ஷிட்? ஹோலி ஷிட்டுன்னா மட்டும் மணக்கவா...

பாஷா, மாணிக் பாஷா - காந்தி, மகாத்மா காந்தி

காந்தி ஒரு சிறையின் அறையில் பூட்டப்பட்டு கிடக்கிறார், ஒரு சமயம் பிரிட்டிஷ் காவலன் ஒருவனால் பூட்ஸ் காலாலேயே மிதிக்கப்பட்டு, "எலும்பும் தோலுமா இருந்துகிட்டு பிரிட்டிஷ் காரர்களையே எதிர்க்கிறாயா கிழவா! இங்கயே உன்ன கொன்னு போட்டாக்கூட கேக்க ஆள் கிடையாது!" அப்படினு மிரட்டப்படுகிறார். உடனே காந்தி, "கொஞ்சம் அப்டியே ஜன்னலுக்கு வெளியே பார்" என்று அவனிடம் சொல்கிறார், வெளியே பல லட்சம் பேர் காந்திக்காக காத்திருப்பதை கண்டு மிரண்டு போகிறான் அந்த பிரிட்டிஷ் காவலன். இது சின்ன வயசுல எங்க அம ்மாச்சி காந்தி பத்தி எனக்கு சொன்ன கதைகள்ல ஒன்னு. அதுசமயம்தான் பாஷா படம் ஊர்ல இருந்த பஞ்சாயத்து டிவி'ல பாத்திருந்ததால "கொஞ்சம் அப்டியே ஜன்னலுக்கு வெளியே பார்"னு காந்தி சொன்னதா எங்க அம்மாச்சி சொன்னப்போவெல்லாம், ரஜினி பாஷா படத்துல கூலர கழட்டிட்டு ரகுவரன்கிட்ட "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா"னு சொல்லிட்டு 'பாஷா, மாணிக் பாஷா'னு சொல்லுவார் இல்லையா அந்தமாதிரி காந்தியும் 'காந்தி, மகாத்மா காந்தி'னு சொல்லியிருப்பாரோன்னு கற்பனைஎல்லாம் பண்ணி வச்சிருந்தேன். கொஞ்சம் வ...
Image
A Girl with two elegant ornaments  Graphite pencils on papers Tools Used      Koh-i-noor(8b,6b)                        Steadtler(4b,2b,h)                        Brustro Paper(200gsm a3) Duration         10+ hours

போஹா லைஃப்-ஸ்டைல்/ஃபேஷன்

Image
போஹோமியன் லைஃப்-ஸ்டைல்/ஃபேஷன் பத்தி பார்க்கும் முன்னால, ஹிப்பி எந்த இடத்துல போஹாவிடமிருந்து வித்தியாசப்படுதுனு பார்த்தோம்னா அது அழகியல். முன்னமே ஒரு பதிவுல சொன்னதுபோல, 'பிடிச்சா ட்ரெஸ்ஸ போட்டுக்குறதும், பிடிச்ச ட்ரெஸ்ஸ போட்டுக்குறதும்' ஹிப்பி ஃபேஷனுக்கு எளிமையான விளக்கம் (இப்படித்தான் இருக்கணும்ன்ற பொது மனப்பான்மையை உடைக்குமிடமிது). இதன் வாழ்வியலும் முழுக்க முழுக்க பொதுமனப்பான்மைக்கு எதிரானது, பாலினத்தை கடந்தது, போருக்கு எதிரானது, இயற்க்கைக்கு ஆதரவா னது, அரசியல் கருத்துக்களால் வளர்ந்தது, ஆக அழகியலின் வீச்சு முழுமையாக இருக்காது. இப்போ போஹோக்கு வருவோம், போஹோமியன் ஃபேஷனும் பொதுமனப்பான்மைக்கு ஆப்போசிட்டானதுதான். ஆனால் இதன் வாழ்வியலும், உடைகளும் அழகியல் சார்ந்தது. கொஞ்சம் சில்க், கொஞ்சம் மெட்டல், கொஞ்சம் மினிமலிசம், கொஞ்சம் கிரியேட்டிவ், கொஞ்சம் வின்டேஜ், கொஞ்சம் மாடர்ன் என கலந்துகட்டிய ஏஸ்த்தட்டிகள் லைஃப்ஸ்டைல் அது. ஒரு வருஷம் முன்னால வந்த மலையாள மூவி சார்லி'யின் முதன்மை கேரக்ட்டர்களின் காஸ்டியூம்களுக்கான ரெஃபிரன்சும் நிச்சயம் போஹா ஃபேஷனாகத்தான் இருக்கனும். காரணம் வழக்...