Posts

சைக்கோக்கள் எங்கும் இருக்கிறார்கள்

வட இந்தியர்களுக்கென்று பல மொழிகளிருந்தாலும், இந்தியை தூக்கி பிடித்து, இங்கிருந்து அங்கு செல்லும் ஹிந்தி தெறியாத தென்னிந்தியர்களை, அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஏன்? பலரும் அங்கு இவ்வாறு சைக்கோக்கள் போல் நடந்துகொள்கிறார்களென்று பல முறை யோசித்தது உண்டு. சில நாட்களுக்கு முன் பதில் கிடைத்தது, அது யாதெனின், அங்கு மட்டுமல்ல சைக்கோக்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதே!. எங்கள் அலுவலகம் இ ருக்குமிடங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டியவாறே இருக்கின்றனர், அங்கெல்லாம் வேலை செய்வது வட இந்தியர்கள் மட்டுமே, அவர்கள் பேசுவது ஹிந்தியா இல்லை வேறெதும் மொழியா என தெறியவில்லை. சிலர் அவர்கள் வேலை செய்யும் கட்டிடத்திலேயே தங்கியும், சிலர் வேறெங்கிருந்தோ தினமும் பஸ்சில் வந்தும் வேலை செய்கின்றனர். தினமும் பஸ்ஸில் வரும்போதும், போகும்போதும் அவர்கள் படும் அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒருமுறை இரண்டு வட இந்தியர்கள் 22ரூபாய் டிக்கெட்டுக்கு முப்பது ரூபாய் கொடுத்தனர், வழக்கம்போலவே சலித்துக்கொண்டே "ரெண்டு ரூவா சில்லற கொடு" என அந்த கண்டக்டர் ...

Carpenter Ant vs. Fur Worm - Macro Video

Image
மேக்ரோ வீடியோ | Macro Video  Carpenter Ant vs. Fur Worm 

அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு?

Image
கொஞ்ச நாளுக்கு முன்னால் "நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?" அப்படின்னு சமஸ் எழுதின ஒரு கட்டுரையில், சிறுதெய்வ வழிபாடுகளை அழித்து பெருதெய்வ கோயில்களும், புதுபுது கோயில் கட்டிட பாணிகளும், தமிழக கடைகோடி ஊர்களில் முளைத்து வரும் இந்த புதிய கலாச்சாரத்தை கால மாற்றத்தின் தொடர்ச்சியாக பார்ப்பதா? இல்லை சங் பரிவார அமைப்புகளின் சல்லிவேர்கள் பரவுவதாக பார்ப்பதா? என ஐயம் வெளியிட்டிருந்தார். அதற்கு முன ் காய்ன் கலெக்சன் குறித்தும் அதிலுள்ள போலி சந்தை மற்றும் பழம்பொருள் சேகரிப்பு மோகம் குறித்து நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். இவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்பது இந்த படங்களை பார்த்தால் சிறிது விளங்கும், நான் இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன்,   ‘அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு' என்ற ஒன்றை பேஸ்புக்கில் ஒரு நியூமிஸ்மேட்டிக் குழுவில் பார்த்தேன், விலை ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று இருந்தது. அந்த அரியவகை காசுக்கு இந்த விலை கம்மிதான். கிழக்கிந்திய கம்பெனி காசுகள் குறித்து ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்ததால் சந்தேகமாக இருக்க தேடிப்பார...

ஆடோ ஆஃப் - அமானுஷ்யம்

இரவு ஏழு மணி, அம்மா அருகிலிருக்கும் அம்மாச்சி வீட்டிற்கு போயிருந்தார்கள், வீட்டில் அந்த சிறுவன் மட்டும் தனியே இருக்கிறான். புது கலர் டிவி வாங்கி ஓரிரண்டு நாட்கள் தான் ஆகிறது. அவனுக்கு கதவு வைத்த அந்த பழைய டிவி தான் பிடிக்கும் என்றாலும், இந்த புது டிவியின் கலரும், ரிமோட்டும் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது, ரொம்ப நேரம் டிவி ரிமோட்டின் மெனுக்களை ஆராய்ந்தவாரே இருந்தவனுக்கு 'கார்ட்டூன் பார்க்கணும், அம்மா வந்தா அப்புறம் ஒரே சீரியல் தான்' என ஞானோதையம் வர கார்ட்டூன் சேனல் மாத்தி பார் க் க ஆரம்பித்தான்.  மெத்தை கட்டிலில் அமர்ந்து கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான், அவன் முன்னே கட்டிலில் ரிமோட் இருந்தது, டிவி சத்தத்தை தவிற வீட்டில் வேறெந்த சப்தமும் இல்லை. ஆர்வமாய் பார்த்து கொண்டிருக்கையில் திடீரென டிவி ஆஃப் ஆனது, ஃபேனும், லைட்டும் ஆனிலேயே இருக்கின்றன, கரண்டும் போகவில்லை, ரிமோட்டும் கையிலில்லை, ஆக தவறுதலாக ஆஃப் ஆகவும் வழியில்லை. இப்போது ஃபேன் சத்தத்தை தவிற தெருவிலேவையே வேறெந்த சத்தமும் கேட்கவில்லை. ஒருகணம் திகைத்து போனான். ஃபேனின் சப்தமும், தெருவின் நிசப்தமும், அவனுக்கு பயத்...

The Art of Handshaking

Image
ஒரு கலாச்சாரத்தில் புனிதமாவோ, சடங்காவோ, வீரமாவோ, அன்பாவோ பார்க்கப்படுற சில பழக்கவழக்கங்கள், வேறு ஒரு கலாச்சார மக்களிடையே தவறாவும், அசிங்கமாவும் ஏன் அறுவருப்பாகவும்கூட பார்க்கப்படும் என்பது அறிந்ததே, இந்த ஸ்கூல்ல, காலெஜ்ல, அப்புறம் வேலை பாக்குற இடத்தில் என எல்லா இடத்திலும், இன்னொருத்தர்கிட்ட எப்படி கைகுழுக்குவது என க்ளாஸ் மேல க்ளாஸ் எடுத்துவிட்டனர். அதிலும் கை கொடுத்தலில் இருக்கும் “Body Language” மற்றும் “The Art of Handshaking” என உளவியல் சார்ந்த தியரிகள் வேறு, தியரிகளின் உண ்மை தன்மையில் அய்யமேதுமில்லை, ஆனாலும் கை கொடுத்தல் பல நேரங்களில் அசௌகர்யத்தையே கொடுக்கும். உண்மையில் அந்த உளவியல் தியரிகள் கூட காரணமாக இருக்கலாம். ஆக பல சமயங்களில் நண்பர்களிடையே விளையாட்டாய் சிரித்து கொண்டே அரசியல்வாதி போல் கும்பிடு போடுவதும் உண்டு, பதிலுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் சிரிப்போடு கும்பிடு வரும், அதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்யும். நாம கும்புடு போடுவது, கை குழுக்கும் சமூகத்துக்கு காமெடியாக தெறியலாம், ஆனால் நமக்கு கை குழுக்குவது காமெடியாக தெறியாது, அதிலொரு ப்ரொஃபசனிலிஸ்ம் தான் நமக்கு...
Image
'C O U R T' Movie Poster  |  'கோர்ட்' திரைப்பட சுவரொட்டி Ballpoint Pen on papers Pen              Nataraj Gelix(0.5mm) Paper           Brustro (200gsm A4) Duration       1.5 hours
Image
Manorama   |   மனோரமா Ballpoint Pen on papers Pen              Nataraj Gelix(0.5mm) Paper           Brustro (200gsm A4) Duration       0.5 hour