Posts

க்ளட்ச் பென்சில்

Image
சின்ன வயசுல என்கிட்டே ஒரு பென்சில் இருந்தது, அது பேரு 'Mechanical Clutch pencil', கிட்டத்தட்ட அப்படியே முதல் ஃபோட்டோல இருக்குறமாதிறியேதான் இருக்கும். அது எங்க ஸ்கூல் ப்ரேயர் க்ரவுண்ட்ல பரப்பியிறுந்த மணல்ல கிடச்சதா நியாபகம். ஆனா அத எங்க எப்போ தொலைச்சேன்னு நியாபகம் இல்ல. அது என்கிட்டே இருந்தப்போ அது ஒரு ஏலியன் வஸ்துவா தான் எனக்கு தெரிஞ்சது. மொதோமுறையா பார்த்ததும் பென்சில்தான்னு மட்டும் தெரிஞ்சிடுச்சு. ஆனா அது எதோ எங்கயும் கிடைக்காத பென்சில்னும், முன்னால எப்பவாது யாராவது யூஸ் ப ண் ணிருப்பாங்க, இப்போ எங்கயும் கிடைக்காதுன்னும் நினைச்சு ரொம்போ பத்திரமா வச்சிருந்தேன். அந்த பென்சில்க்கான லெட்டும் தனியா கிடைக்கும்னெல்லாம் அப்போ தெரியாது, பென்சில சீவுறப்போ உடையுற பென்சில் மொக்கத்தான் அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன், அப்புறமா ஒரு நட்ராஜ் பென்சில் வாங்கி காம்பஸ வச்சு ரெண்டா பொளந்து அதுல இருக்குற பென்சில் லெட்ட தனியா எடுத்து அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன். கொஞ்சநாள்ல அதுல உள்ள அந்த ப்ளாஸ்டிக் ஹோல்டர் உடஞ்சிருச்சு, அப்புறமா எதோ ஒரு பேனாவோட ஹோல்டெர்லர்ல ஃபிக்ஸ் பண்ணி யூ...

ஆயிஷா

Image
நாம ஹிந்தில பார்த்ததே பத்து பதினஞ்சு படம்தான் இருக்கும்னாலும் இன்னைக்கு வரைக்கும் மனசுல நெறஞ்சு இருக்குற படம்னா அது 'Wakeup Sid' மட்டும் தான். நல்ல படம், நல்ல மியூசிக், நல்ல ஸ்க்ரீன்ப்ளே, நல்ல ஆர்ட் டிரக்சன் ப்லா ப்லா ப்லா எல்லாம் இருக்கட்டும் எல்லாத்துக்கும் மேல அது Aesthetics of Love, Life & Work'க பத்தி சொல்லுற படம், அதையும் விட படத்துல அழகா பட்டது கொங்கொனா சென் ஷர்மா தான், கரெக்டா சொல்லனும்னா அது கொங்கொனா இல்ல அது 'ஆயிஷா' :) . ஆயிஷா தான் படத்துல கொள்ளை அழகு!, அவ உடல்மொழி அழகு, well organised'ன்னா அது அவதான் அது அழகு, இண்டிபெண்டெண்டா தனக்கு பிடிச்சத செய்யுறது அழகு, தனக்கான ஸ்பேச எடுத்துக்றது அழகு, அவகிட்ட இருக்கும் அந்த டேட்டூ அழகு, 'ஆயிஷா'ன்ற கேரெக்டர் பேரு மனசுல பதிஞ்சிருச்சுனா பாத்துகோங்க அவ்வளவு அழகு~. அவள தவிர்த்து பார்த்தா, மும்பை, போடோக்ராப்ஃபி, ஜெர்னலிசம், காதல், நட்பு, அன்பு, அப்பா, அம்மா, கடைசியா லிவிங்-டுகெதர்'னு அதுல இருக்குற அழகான விசயங்கள அடுக்கிகிட்டே போகலாம், ஒரு நல்ல கதையோ அல்லது நாவலோ படிக்கிற ஃபீல் கண்டிப்பா இந்த படத்...
Image
Old Man | முதியவர் Graphite pencils on paper Pencils         Steadtler (2B, B, H)                     Koh-i-noor (6B, 8B) Paper           Brustro Paper (200gsm A4) Duration       20+ Hours Based on a Photograph by Prabhu Kalidas

எண்ணச்சிதைவு

இருபது நிமிடம் விடாது பேசிய அவளின் வார்த்தைகள், அவன் காது வழியே பயணித்து மூளையில் பரவி பல யோசனைகளை தந்துகொண்டிருந்தது. என்ன பேசுகிறாள் என்றெல்லாம் யோசிக்க மனம் ஒத்துழைக்கவில்லை, எதோ ஒருநாள் இருநாள் என்றால் வார்த்தைகளின் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள முயற்சித்திருப்பான், தினமும் மணிக்கணக்காக தொடரும் அவளின் பேச்சு, அவனுக்கு தீராத்தலைவலியையும், எண்ணச்சிதைவையும் தந்துகொண்டிருந்தது. வாசலில் நீர் தெளிப்பதுபோல இடைவெளியற்று அடுத்தடுத்து பல விசயங்களை சொல்லிவிட்டு 'இப்போ நா என்ன சொன்னேன் சொல்லு?' என கேட்பாள் , அவன் சரியாகவே சொன்னாலும் 'அது இப்போ சொன்னது அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன் சொல்லு?' என கேள்விகளை அடுக்கிகொண்டே போவாள். அவள் தெளித்தவையெல்லாம் அவனிடத்தேதான் இருக்கின்றன, ஆனால் தொடக்கமும், முடிவும், இடையும் தெறியாது அவனுக்கு. 'நேத்து கனவுல உன்ன வேற பொண்ணுகூட பாத்தேன்!, ஏண்டா நீ என்ன எமாத்திடுவியா?' என கேட்டாள். அவனுக்கு அடிக்கடி வரும் ஒரு கனவு நியாபகம் வந்தது, ட்ரவுசர் போடாமலேயே ஸ்கூலுக்கு போவதுமாதிரியான ஒரு கனவு அது. சட்டென நினைவு மீள இப்போது அவளின் பேச்சு புதியத...

ஷூ

ஆஃபீஸ்ல டெய்லி ஷூ போடணும் அப்படின்னு ஒரு ரூல் இருக்கு, அதாவது கிளிஞ்சதோ கிழியாததோ, ஃபார்மலோ கேஷுவலோ, எதோ ஒன்னு போடணும், ஆக மொத்தம் ஷூ போட்டாகனும். செருப்பு போட்டுபோனாலும் ஒன்னும் பிரச்சன இல்ல போகலாம், ஆனா கேட்ல என்ன ரீசன்னு ரேக்கார்டுல எழுதிட்டு போனும், காலு வலி, ஷூ பின்சிருச்சு, ஷூ லாக்கர்ல இருக்கு இப்படி ஏதாவது ஒன்ன எழுதிட்டுதான் உள்ள போக முடியும். நின்னு எழுதிட்டு போறதுக்கு சங்கடப்பட்டே கழுத ஏதாவது ஒரு ஷூவ போட்டுகிட்டு போறது வழக்கம். அதுவும் நா வச்சிருக்குறது ஒரு வருஷம் முன்னால இண்டெர்வியூக்காக வாங்கினது, 300 ரூவா ஃபார்மல் ஷூதான், செம அடி வாங்கியிருந்தாலும், சூப்பர் க்லூ போட்டு ஒட்டி, டெய்லி லைட்டா துடைச்சுட்டு யூஸ் பண்ணுறதால ஒன்னும் தெரியாது, ஆனாலும், பிராண்டட் ஷூ போடுற ஒரு கம்ஃபர்ட்னஸ் கொடுக்கவே கொடுக்காது. ஆஃபீஸ் ஜாய்ன் பண்ணுனப்போ ஒன்னு சொன்னாங்க 'Invest in your shoes'னு, அது கொஞ்சம் உண்மை தான், அதாவது முன்னூரு ரூபாய்க்கு மூனு ஷூ வாங்குறதவிட ஆயிரம் ரூபாய்க்கு நல்ல ஷூவா ஒன்னு வாங்குறதுதான் பெட்டர்னு சொல்லுவாங்க, ஆனா நமக்குதான் மண்டைல வேற தோணுமே!, ஆயிரம் ரூபாய்க்கு ஒரே ...

முழுமை

Image
அவனுக்கென சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் இருக்கிறது, அது ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட ஒரு ஆம்னிவேன். தினமும் விடியற்காலையிலேயே எழுந்து குளித்துமுடித்து தன் துணையாள் எழும்பும் வரைக்கும் காத்திருப்பான், அவள் எழும்பியபின் காப்பி போடுவதுமுதல், மகனை ஸ்கூலுக்கு கிளப்புவதுவரை எல்லாவேலையையுமே இருவருமாக சேர்ந்து செய்வதுதான் வழக்கம். தினமும் இது வழக்கமென்றாலும் எல்லாமுமே ஒரு எமெர்ஜென்சி ஃபோன்கால் வரும்வரைதான் நீடித்திருக்கும். எப்பவுமே இருவரும் மனதளவில் கொஞ்சம் தயாராகத்தான் இருப்பார்கள். ஃபோன்கால்  வந்ததும், அவனுக்கு சட்டை மற்றும் சாவி எடுத்துகொடுத்து அனுப்பிவைப்பது அவளுக்கு வழக்கம். தினமும் சாமி கும்பிட்டாலும் ஒவ்வொருமுறை எமெர்ஜென்சிக்கு கிளம்பும்போதும் தன் நெற்றியில் இருக்கும் திருநீரை அழித்துவிட்டு கிளம்புவது அவனுக்கு வழக்கம், ஒவ்வொருமுறை கிளம்பும்போதும் மகன் வீட்டிலிருந்தால் முதலில் மகனை, அப்புறம் மனைவியை, கடைசியாக வீட்டிலிருக்கும் கடிகாரத்தை ஒரு கணம் பார்த்துவிட்டுதான் அவனது ஓட்டம் ஆரம்பிக்கும். அவன் இலக்கு இல்லாமல் வேகமாக பயணிப்பதில்லை, அவனுக்கென இரண்டு இலக்குகள். ஒன்று எமெர்ஜென்சி ஸ்பா...

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு

கொஞ்ச வருஷம் முன்னால எதோ ஒரு டிவி நிகழ்ச்சில ஒரு ஃபாரின்காரர் ரொம்ப அழகா தமிழ் பேசினத பார்த்திருந்தேன். அமெரிக்கால இருக்குற யேல் யுனிவர்சிட்டில அவர் ஒரு தமிழ் ப்ரொபெசர், அவர் பேரு 'பெர்னார்ட் பேட்-Bernard Bate'ன்றது மட்டும்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது, அதுக்குள்ளே அந்த நிகழ்ச்சி முடிஞ்சுபோச்சு. திடீர்னு அவர் நியாபகம் வர, அவர் தமிழ்ல பேசின வீடியோ ஏதாவது கிடைக்குமான்னு யூடியூப்ல தேடிக்கிட்டிருந்தேன். முதல்ல, எதோ ஒரு தமிழ் மொழித்திருவிழாக்காக அவர் தமிழில் பேசிய ஒரு சின்ன க்ளிப்-வீடியோ கிடைச்சது, தமிழ் மொழியப்பத்தி அழகாவும் செம்மையாவும் பேசியிருப்பாரு, என் கணிப்பு சரியா இருந்தா அது செம்மொழி மாநாட்டுக்காகவா இருந்திருக்கும். அடுத்து அவர் கொஞ்ச நிமிடம் பேசிய இன்னுமொரு வீடியோ கிடைத்தது, அவ்வளவுதான் அதுக்கப்புறம் என் தேடல் முழுமையா வேற திசைல போக ஆரம்பிச்சது, தமிழ்ல பேசியதா பல வெளிநாட்டு காரவங்களோட வீடியோக்கள் யூடியூப்ல வரிசைல நிக்க சுவாரஸ்யமா ஒவ்வொன்னா பாக்க ஆரமிச்சேன்! அடுத்து ஒரு ஜெர்மன் லேடி ரொம்ப அருமையா தமிழ்ல பேசியிருந்தாங்க, உண்மையா அது எல்லோரும் பாக்க வேண்டிய ஒன்னு, அவங...