Posts

செல்வம் இல்லை

Image
சொற்களையும் வாக்கியங்களையும் பார்த்ததுமே டக்குன்னு சரியா படிச்சு ரியாக்ட் பண்ணுறது நமக்கு கொஞ்சம் கஷ்டம்தான். Kawasaki பைக்ஸ் இருக்கு இல்லையா! அத இத்தனை வருஷமா 'கவாஸ்கி' கவாஸ்கி'னே படிச்சிட்டிருந்திருக்குறேன், அது கவாஸ்கி இல்ல 'கவாஸாகி'ன்றத இன்னைக்குத்தான் கவனிச்சேன். எப்படியும் காலெஜ் படிக்கிறப்போ இருந்து அந்த கம்பெனி பைக்குங்களையும் பேரையும் பார்த்துட்டுதான் இருக்கேன், ஆனா ஒரு தடவ கூட கவனமா பார்த்து படிக்கல போல!. எதோ இப்போ மட்டும்தான் இப்படினு இல்ல, படிக்கிறப்போ ஸ்கூல் போ ற வழியில ஒரு வீட்டோட முன்சுவர்ல 'செல்வம் இல்லை'னு எழுதியிருந்தாங்க. அவிங்க வீட்டுல 'செல்வம்' ஏன் இல்ல? செல்வம் யாரா இருக்கும்? செவத்த இல்லைனு மார்பல் கல்லுல எதுக்கு எழுதி பதிச்சு வச்சிருக்கானுங்கன்னு, டெய்லி அந்த வழியா போறவர்றப்போலாம் ஒரே யோசனையா இருக்கும்!. அத பார்த்ததுல இருந்து சரியா மூணு வருஷம் கழிச்சு எட்டாவது பாஸ் பண்ணினப்புறம்தான் அந்த வீட்ல எழுதியிருந்தது 'செல்வம் இல்லை' இல்ல, அது 'செல்வம் இல்லம்'னு தெரிஞ்சது. இப்படியா இன்னும் எத்தனை எத்தனை விளங்கிக்க...

கேரளாவும் பிலிப்பைன்சும்

Image
Modified Two-Whealers பத்தி ஆர்வமா தேடிக்கிட்டிருக்கிறப்போ, பஜாஜ் M80க்கே டியூக் என்ஜின ஃபிக்ஸ் பண்ணி அசால்ட்டு பண்ணுன கேரள பைக்ஸ் போட்டோஸ் கூகுள்ல வராம இருக்குமா!?. வண்டியவெல்லாம் தாறுமாறா ஆல்டர் பண்ணுறது அவனுங்கதான். ஆடெர்னா எதோ புல்லெட் ஒன்னுல ஹேண்டில் பாரும் பில்லியன் சீட்டும் ஆல்டர் பண்ணி ஓட்டுறதோ, இல்ல RX100க்கு கலர் பெயிண்ட் மாத்தி ஓட்டுறதோ இல்ல. ஸ்ப்லெண்டரையே ஸ்க்ரேம்புலறா மாத்துறது. என்ன பொறுத்தவரைக்கும், வீட்டுல எப்பவுமே இருக்குற ஒரு வண் டியவே பக்காவா மெயின்டெய்ன் பண்ணி, சில ஆல்ட்ரேசன்சோட ஒட்டுறதுதான் கெத்து. அதுக்கு நம்ம சென்னை ஒன்னும் கொறஞ்சது இல்லனாலும், இங்கயெல்லாம் போலீஸ் கிட்ட மாட்டுனா மினிமம் நூறு ரூபா இருந்தாலே போதும் தப்பிக்க. ஆனா நான் கேள்விப்பட்ட வரைக்கும் கேரளாவ்ல அப்டி இல்ல, ரூல்ஸ் எல்லாம் ரொம்போ ஸ்ட்ரிக்டு. ஆனாலும் பைக் கிறுக்கனுங்க பூராவும் ஏதாவது ஆல்ட்ரேசன் பண்ணிதான் ஓட்டுறானுங்க. இப்போல்லாம் கேரளால வர்ற பாதி படங்களோட போஸ்ட்டர்ஸ்லகூட டூ-வீலரோட ஹீரோ வர்றமாதிரி போட்டுத்தான் ப்ரோமோட்டே பண்ணுறாங்கனு ஒரு ஆர்டிகல் கூட பாத்தேன். அந்த அளவுக்கு பைக் கிரேஸ் அங்க!...

கலர்

Image
ஸ்கூல் படிக்றப்போ சிக்னல் லைட்டுனா அதுல மூணு கலரு இருக்கும்னு மட்டும் சொல்லி கொடுத்ததால, பெரியவனாகி நாம எப்படி வண்டி ஓட்டுறதுனு ரொம்போ பயந்தேன். ஏன்னா எனக்கு கலரு அவ்வளவா தெரியாது! அதுவும் புக்ல எல்லாம் மூணு கலரையும் ஒண்ணா போட்டு ஒரு எக்ஸ்சாம்புல்க்கு காட்டுவாங்க, அப்பாடான்னு இருக்கும் ஏன்னா அந்த மூணு கலரும் ஒண்ணா இருந்தா எனக்கு கண்டுபிடிக்கிறது ஈஸி. அப்புறம்தான் தெரிஞ்சது ஒரு சமயத்துல ஒரு கலருதான் எரியும்னு. அப்புறமா காலேஜ் படிக்கிறப்போதான் டிராஃபிக் சிக்னல் லைட்ஸ் பத்தி புரிஞ்சது. மொதல்ல ரெட்டு, ரெண்டாவது எல்லோ, மூணாவது கிரீனு, இதுவே போதுமானதா இருந்தது சிக்னல கண்டுபிடிக்க. அதுவும் க்ரீனுன்னா ஏதாவது ஒரு சைடு ஏரோ மார்க்லதான் எரியும், எல்லோ ட்ராப்பிக்கே இல்லாதப்போதான் எரியும் அதுவும் பிலிங்க் ஆகிட்டே எரியும், சிகப்பு சொல்லவே தேவையில்ல மொதல்ல இருக்கிறது அதான் கூடவே எப்படியும் நமக்கு முன்ன ஒருத்தன் நிப்பான் அதனால தெரிஞ்சிடும். ஆனா உண்மை என்னன்னா எனக்கு டிராஃபிக் சிக்னல்ல கலரு கண்டுபிக்கிறது பிரச்சனையே இல்லனு வண்டி வாங்கினப்புறம் தான் தெரிஞ்சது. ஏன்னா எனக்கு இருக்கி...

ஏழைக்கேத்த எள்ளுருண்டை - OLX

Image
ரெண்டுமாசத்துக்கு முன்னால Bajaj V பைக்க டெஸ்ட் ட்ரைவ் பண்ணிட்டு, இத வாங்க முடியுமா முடியாதானு தெரியலன்னு அதோட ஃபோட்டோவ ஸ்டேடசா போட்டதுதான் கடைசி போஸ்ட். அதுக்கப்புறம் அந்த பைக்கை வாங்க முடியாதுனு தெரிஞ்சது, அப்புறம் ஏழைக்கேத்த எள்ளுருண்டைனு TVS Star City வண்டி ஒன்னு Secound Hand'ல வாங்கியாச்சு. OLX லதான் தேடி வாங்கினோம், ஒரு பத்து பைக்குக்கிட்ட பாத்து வச்சு அதுல அமைஞ்சதுதான் இந்த பைக். OLX 'ல வண்டி வண்டி வாங்குறதுன்றது மதில்மேல் பூனை நிலமைதான், டெசிஷனே எடுக்க முடியாது. அங்க விளம்பரத்துல வர்ற பாதி வண்டி ஏதாவது ஒரு பிரச்சனைனாலதான் வருது. இல்லனா ஓனர் ஏதாவது ஏமாத்துவாங்க, வண்டியோட சரியான விலைய கெஸ் பண்ணவே முடியாது, இப்படி பல பிரச்சனைய இருக்கும். எனக்கு கிடைச்ச அனுபவத்துல எப்படி வண்டி வாங்குறதுனு லிஸ்ட் பண்ணுறேன். கீழ நான் சொல்லப்போறது நம்ம சென்னைக்கு நல்லா பொருந்தும், சென்னைன்னு போட்டு OLX ல வண்டி சேர்ச் பண்ணி பாருங்க தினந்தினம் எப்படியும் ஒரு நூரு வண்டிவரைக்கும் ஆட் ஆகுது. ஆட் ஆகுறது மட்டுமில்ல, நல்ல பைக்னா உடனே ஒன்னுரெண்டு நாள்ல சேல்'லும் ஆகிடும். ஆனா மத்த டி...

என் நல்லூர்கள்

எனக்கு நல்லூர்கள் ரெண்டு உண்டு. ஒன்னு சிங்காநல்லூர், இன்னொன்னு சோழிங்கநல்லூர். நாலு வருஷம் முன்னால கோவைல காலேஜ் ஜாயின் பண்ணினதுக்கப்புறம், திருச்சியிலருந்து கிளம்புனா அடுத்து கோயம்புத்தூர்ல கால் வைக்குற இடம் சிங்காநல்லூர்தான், பிறகு அங்க இருந்து பஸ் புடிச்சாதான் காலேஜ். அப்புறம் வீக்கெண்டுல கொறஞ்ச காசுல, செம்ம திருப்தியா சாப்புட போற இடமான 'சாந்தி கியர்ஸ் கேண்டீன்' இருக்றதும் சிங்காநல்லூர்தான். ஆக அப்போவெல்லாம் பஸ்ஸுல ஏறி வாயத்தொறந்தா மொதல்ல வர்ற பேரு சிங்காநல்லூராதான் இருந்தது. அதுபோலவே இங்க சென்னை வந்தப்புறம் ட்ரெயினிங்க்கு ஜாயின் பண்ணின இடம் சோழிங்கநல்லூர். சோ இங்க வந்தப்புறம் முதல் ஒரு மாசம் டெய்லி ஆஃபிஸ் போக பஸ் ஏறி 'சிங்காநல்லூர் டிக்கெட் ஒன்னு கொடுங்க'ன்னு பல முறை கேட்டு பிறகு திருத்திக்கேட்டது உண்டு. பலமுறை சிங்காநல்லூர்க்கே டிக்கெட் கேட்டிருந்தாலும் சோழிங்கநல்லூர்க்கு சரியா டிக்கெட் வந்துடும் ;) காரணம் ரெண்டும் நல்லூர்தானே! :) இப்போ வேறமாதிரியான நிலைமை, போன வெள்ளிக்கிழமை நண்பன் ஒருத்தன் ஃபோண் போட்டு கோயம்புத்தூர்ல ஒரு இடத்துக்கு போக வழி கேக்க, சிங்காநல்லூர...

Flatland by Aydın büyüktaş

Image
Surreal Photography'யாம். இந்த Inception, Elysium, Upside down படத்துங்கள்ல வர்ற சில சீன்ஸ எல்லாம் நியாபகப்படுத்திருச்சு, லவ்லி.  <3 informed by the satirical novel by edwin abbott titled ‘flatland: a romance of many dimensions’ — the story of a two-dimensional world occupied by geometric figures — turkish artist aydın büyüktaş sets his series ‘flatland’ in a surprising context that defies the laws of physical existence. இது இஸ்தான்புல், ஏற்கனவே இஸ்தான்புல்ல பத்தி கேள்வி பட்டிருக்றதாலயும், " Istanbul | Flow Through the City of Tales " அப்டின்ற இஸ்தான்புல் ஏர்லைன்சோட விளம்பர வீடியோ ஒன்னு பார்த்ததாலயும், ஃபாரிசுக்கப்புறம் காதல்வயப்பட்டிருக்றது இஸ்தான்புல்கிட்டதான். இப்போ அதுக்கு தீனி போட்டிருக்கு இந்த ஃபோடோக்ராஃபி சீரீஸ்.   :)

சனியாகும் வெள்ளி

இந்த வெள்ளிக்கிழமை இருக்கே, சனியன்!!. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நைட்டே ட்ரெஸ்சயெல்லாம் ஊரவச்சு, துவச்சி போட்டுட்டா சனி, ஞாயிறு ரெண்டுநாளும் நிம்மதியா நெனச்சத பண்ணலாம்னு யோசிச்சு ட்ரெஸ்ச ஊர வைக்கிறது உண்டு. ஆனா அன்னைக்கு மட்டும் நியாபகமறதி உச்சத்துக்கு போயிடும். அதும் எப்டினா சனிக்கிழமை நைட்டுதான் ட்ரெஸ்ச ஊர வச்சதே நியாபகத்துக்கு வரும். அட அப்போவாவது துவைச்சி முடிச்சு ஞாயித்துக்கிழமையாவது நிம்மதியா இருக்கலாம்னு நெனைச்சா... அங்கதான் இன்னும் அடி விழும், பின்ன 24 மணிநேரம் நல்ல ா தண்ணில ஊரிப்போன ட்ரெஸ்ச துவைச்சு காயவச்சு எடுத்தா மணக்கவா செய்யும். அழுக்கா இருக்றப்போ வர்ற ஸ்மெல்லவிட பலமடங்கு அதிகமா நமத்துப்போன ஸ்மெல் வரும். அப்புறம் வேற என்ன, மருக்கா ஒரு டைம் ஞாயுத்துக்கிழமையும் கவனமா அலசி போடனும், அப்பவும் அந்த ஸ்மெல் முழுசா போக ரெண்டு தடவைக்குமேல துவைக்கனும். படிக்கிறப்போ ஹாஸ்டல்ல இருந்ததவிட, இப்போ அந்த மறதி குறஞ்சிடுச்சி. ஆனாலுமே சென்னை வந்தப்புறம் ஒரு மூனுமுறை இப்டி மறந்து, அந்த வீக்கென்டல நல்லா வாங்கிகட்டிகிட்டாச்சு. இன்னைக்கு இந்த வெள்ளி, சனியனாக மாறாதுன்ற நம்பிக்கைல ட்ரெ...