Posts

பாஷா, மாணிக் பாஷா - காந்தி, மகாத்மா காந்தி

காந்தி ஒரு சிறையின் அறையில் பூட்டப்பட்டு கிடக்கிறார், ஒரு சமயம் பிரிட்டிஷ் காவலன் ஒருவனால் பூட்ஸ் காலாலேயே மிதிக்கப்பட்டு, "எலும்பும் தோலுமா இருந்துகிட்டு பிரிட்டிஷ் காரர்களையே எதிர்க்கிறாயா கிழவா! இங்கயே உன்ன கொன்னு போட்டாக்கூட கேக்க ஆள் கிடையாது!" அப்படினு மிரட்டப்படுகிறார். உடனே காந்தி, "கொஞ்சம் அப்டியே ஜன்னலுக்கு வெளியே பார்" என்று அவனிடம் சொல்கிறார், வெளியே பல லட்சம் பேர் காந்திக்காக காத்திருப்பதை கண்டு மிரண்டு போகிறான் அந்த பிரிட்டிஷ் காவலன். இது சின்ன வயசுல எங்க அம ்மாச்சி காந்தி பத்தி எனக்கு சொன்ன கதைகள்ல ஒன்னு. அதுசமயம்தான் பாஷா படம் ஊர்ல இருந்த பஞ்சாயத்து டிவி'ல பாத்திருந்ததால "கொஞ்சம் அப்டியே ஜன்னலுக்கு வெளியே பார்"னு காந்தி சொன்னதா எங்க அம்மாச்சி சொன்னப்போவெல்லாம், ரஜினி பாஷா படத்துல கூலர கழட்டிட்டு ரகுவரன்கிட்ட "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா"னு சொல்லிட்டு 'பாஷா, மாணிக் பாஷா'னு சொல்லுவார் இல்லையா அந்தமாதிரி காந்தியும் 'காந்தி, மகாத்மா காந்தி'னு சொல்லியிருப்பாரோன்னு கற்பனைஎல்லாம் பண்ணி வச்சிருந்தேன். கொஞ்சம் வ...
Image
A Girl with two elegant ornaments  Graphite pencils on papers Tools Used      Koh-i-noor(8b,6b)                        Steadtler(4b,2b,h)                        Brustro Paper(200gsm a3) Duration         10+ hours

போஹா லைஃப்-ஸ்டைல்/ஃபேஷன்

Image
போஹோமியன் லைஃப்-ஸ்டைல்/ஃபேஷன் பத்தி பார்க்கும் முன்னால, ஹிப்பி எந்த இடத்துல போஹாவிடமிருந்து வித்தியாசப்படுதுனு பார்த்தோம்னா அது அழகியல். முன்னமே ஒரு பதிவுல சொன்னதுபோல, 'பிடிச்சா ட்ரெஸ்ஸ போட்டுக்குறதும், பிடிச்ச ட்ரெஸ்ஸ போட்டுக்குறதும்' ஹிப்பி ஃபேஷனுக்கு எளிமையான விளக்கம் (இப்படித்தான் இருக்கணும்ன்ற பொது மனப்பான்மையை உடைக்குமிடமிது). இதன் வாழ்வியலும் முழுக்க முழுக்க பொதுமனப்பான்மைக்கு எதிரானது, பாலினத்தை கடந்தது, போருக்கு எதிரானது, இயற்க்கைக்கு ஆதரவா னது, அரசியல் கருத்துக்களால் வளர்ந்தது, ஆக அழகியலின் வீச்சு முழுமையாக இருக்காது. இப்போ போஹோக்கு வருவோம், போஹோமியன் ஃபேஷனும் பொதுமனப்பான்மைக்கு ஆப்போசிட்டானதுதான். ஆனால் இதன் வாழ்வியலும், உடைகளும் அழகியல் சார்ந்தது. கொஞ்சம் சில்க், கொஞ்சம் மெட்டல், கொஞ்சம் மினிமலிசம், கொஞ்சம் கிரியேட்டிவ், கொஞ்சம் வின்டேஜ், கொஞ்சம் மாடர்ன் என கலந்துகட்டிய ஏஸ்த்தட்டிகள் லைஃப்ஸ்டைல் அது. ஒரு வருஷம் முன்னால வந்த மலையாள மூவி சார்லி'யின் முதன்மை கேரக்ட்டர்களின் காஸ்டியூம்களுக்கான ரெஃபிரன்சும் நிச்சயம் போஹா ஃபேஷனாகத்தான் இருக்கனும். காரணம் வழக்...

கலகக்காரன்

Image
2010ல எங்க ஊர் லால்குடில உள்ள பொது நூலகத்துக்கு வாராவாரம் நானும் என் ப்ரெண்ட்ஸ் மூனுபேரும் வெறித்தனமா போகிட்ருந்தப்போ, எஸ்ரா'வ படி சாருவயெல்லாம் படிக்காதன்னு லைப்ரரில யாரோ சொன்னதா நியாபகம். ஏதோ நியூஸ் பேப்பர்ல வந்த ஆர்டிகள்லகூட போட்ருந்தாங்கனு நினைக்கிறேன் சாரு ஒரு க்ரிடிக் ஊரே நல்லா இருக்குனு சொல்ற விசயங்கள கழுவி ஊத்துவாரு அப்டி இப்டினு. ஆனா உண்மையா இப்போவரைக்கும் சாரு, எஸ்ரா ரெண்டு பேரோட எந்த நாவலையும் உருப்படியா படிச்சது இல்ல. எஸ்ராஓட, ஓவியங்கள் பத்தின ஒரு புக்க முழுசா ப டிச்சிருக்கேன் ஆனா பேரு நியாபகம் இல்ல, அதேபோல சாருவோட 'சினிமா-அலைந்து திரிபவனின் அழகியல்' புக்கையும் படிச்சிருக்கேன், இளையராஜா மேலயும் கமல் மேலயும் இந்த ஆளுக்கு ஏன் இவ்ளோ காண்டு, ஏன் இப்டி கழுவி ஊத்திருக்காருன்னு நினச்சேன். அப்போ நான் படிச்சு ரசிச்ச புக்குன்னா அது ஆசான் இறையன்பு ஐ.எ.எஸ் எழுதுன 'அவ்வுலகம்' நாவல்தான்  :p .   அதுக்கப்புறம் சாருவை சுத்தமா படிக்கல, ஆனா சாருவபத்தி நிறைய படிச்சேன் ஆனா அதெல்லாமும் நெகட்டிவ்தான், அவரு வலது காதுல அவரு கடுக்கன் போட்டுருக்கிறதுல ஆரமிச்சு,...

மூணு-வீல் அவெஞ்சர்

Image
தினமும் ஆஃபிஸ்ல இருந்து வெளியே வந்ததும், கழுத்துல இருக்குற அந்தப்பாசக்கயிற கழட்டி வண்டியோட டேங்க் கவர்ல வைக்கறது வழக்கம். இன்னைக்கும் சில மணிநேரத்துக்கு முன்ன ஆஃபிஸ்ல இருந்து கிளம்பி வெளிய வந்ததும் அத கழட்டி வைக்க வண்டிய ஓரமா நிப்பாட்டினேன். அப்போதான் எதிர்ல இருக்குற இன்னொரு கம்பெனியோட கேட்டு'கிட்ட புது பஜாஜ் vvvவண்டி ஒன்னு நிக்கிறது கண்ணுல பட்டது. பாத்தமாத்திரமே கண்ண வேற எங்கவும் திருப்ப முடியல!. பொதுவா எனக்கு அவெஞ்சர் வண்டி பிடிக்காது, அத பாத்தாலே சின்ன கொழந்தைங்க பெடல் இல்லாம காலால தள்ளி ஓட்டி வெளாடுர பொம்ம சைக்கிள் நியாபகம்தான் வந்துபோகும். ஆனா இன்னைக்கு, அந்தநியாபகம் வந்துபோற கேப்புக்கு முன்னமே சட்டுன்னு அந்த வண்டியில இருந்த ஏதோஒரு வித்தியாசம் அந்த வண்டிய ரொம்போ அழகா, கொஞ்சம் பிரமாண்டமா காட்டுச்சு. அது அந்த வண்டியில எக்ஸ்டராவா இருந்த அந்த ரெண்டு வீல். அது மாற்றுத்திறனாளி ஒருத்தரோட வண்டி, மொதோமுறையா கியர் வண்டி ஒன்ன எக்ஸ்டரா வீலோட பாக்குறேன். அந்த வண்டியோட கருப்பு கலரும், ரெண்டு எக்ஸ்டரா வீலும், அதோட ஷாக்-அப்சர்வரும், அந்தவண்டிக்கே உரிய அந்த விண்ட்-ஷீல்டும் அதோட கெத்த ...

செல்வம் இல்லை

Image
சொற்களையும் வாக்கியங்களையும் பார்த்ததுமே டக்குன்னு சரியா படிச்சு ரியாக்ட் பண்ணுறது நமக்கு கொஞ்சம் கஷ்டம்தான். Kawasaki பைக்ஸ் இருக்கு இல்லையா! அத இத்தனை வருஷமா 'கவாஸ்கி' கவாஸ்கி'னே படிச்சிட்டிருந்திருக்குறேன், அது கவாஸ்கி இல்ல 'கவாஸாகி'ன்றத இன்னைக்குத்தான் கவனிச்சேன். எப்படியும் காலெஜ் படிக்கிறப்போ இருந்து அந்த கம்பெனி பைக்குங்களையும் பேரையும் பார்த்துட்டுதான் இருக்கேன், ஆனா ஒரு தடவ கூட கவனமா பார்த்து படிக்கல போல!. எதோ இப்போ மட்டும்தான் இப்படினு இல்ல, படிக்கிறப்போ ஸ்கூல் போ ற வழியில ஒரு வீட்டோட முன்சுவர்ல 'செல்வம் இல்லை'னு எழுதியிருந்தாங்க. அவிங்க வீட்டுல 'செல்வம்' ஏன் இல்ல? செல்வம் யாரா இருக்கும்? செவத்த இல்லைனு மார்பல் கல்லுல எதுக்கு எழுதி பதிச்சு வச்சிருக்கானுங்கன்னு, டெய்லி அந்த வழியா போறவர்றப்போலாம் ஒரே யோசனையா இருக்கும்!. அத பார்த்ததுல இருந்து சரியா மூணு வருஷம் கழிச்சு எட்டாவது பாஸ் பண்ணினப்புறம்தான் அந்த வீட்ல எழுதியிருந்தது 'செல்வம் இல்லை' இல்ல, அது 'செல்வம் இல்லம்'னு தெரிஞ்சது. இப்படியா இன்னும் எத்தனை எத்தனை விளங்கிக்க...

கேரளாவும் பிலிப்பைன்சும்

Image
Modified Two-Whealers பத்தி ஆர்வமா தேடிக்கிட்டிருக்கிறப்போ, பஜாஜ் M80க்கே டியூக் என்ஜின ஃபிக்ஸ் பண்ணி அசால்ட்டு பண்ணுன கேரள பைக்ஸ் போட்டோஸ் கூகுள்ல வராம இருக்குமா!?. வண்டியவெல்லாம் தாறுமாறா ஆல்டர் பண்ணுறது அவனுங்கதான். ஆடெர்னா எதோ புல்லெட் ஒன்னுல ஹேண்டில் பாரும் பில்லியன் சீட்டும் ஆல்டர் பண்ணி ஓட்டுறதோ, இல்ல RX100க்கு கலர் பெயிண்ட் மாத்தி ஓட்டுறதோ இல்ல. ஸ்ப்லெண்டரையே ஸ்க்ரேம்புலறா மாத்துறது. என்ன பொறுத்தவரைக்கும், வீட்டுல எப்பவுமே இருக்குற ஒரு வண் டியவே பக்காவா மெயின்டெய்ன் பண்ணி, சில ஆல்ட்ரேசன்சோட ஒட்டுறதுதான் கெத்து. அதுக்கு நம்ம சென்னை ஒன்னும் கொறஞ்சது இல்லனாலும், இங்கயெல்லாம் போலீஸ் கிட்ட மாட்டுனா மினிமம் நூறு ரூபா இருந்தாலே போதும் தப்பிக்க. ஆனா நான் கேள்விப்பட்ட வரைக்கும் கேரளாவ்ல அப்டி இல்ல, ரூல்ஸ் எல்லாம் ரொம்போ ஸ்ட்ரிக்டு. ஆனாலும் பைக் கிறுக்கனுங்க பூராவும் ஏதாவது ஆல்ட்ரேசன் பண்ணிதான் ஓட்டுறானுங்க. இப்போல்லாம் கேரளால வர்ற பாதி படங்களோட போஸ்ட்டர்ஸ்லகூட டூ-வீலரோட ஹீரோ வர்றமாதிரி போட்டுத்தான் ப்ரோமோட்டே பண்ணுறாங்கனு ஒரு ஆர்டிகல் கூட பாத்தேன். அந்த அளவுக்கு பைக் கிரேஸ் அங்க!...