Posts

Image
அசோகமித்ரன்  |  Jagadisa Thyagarajan

பீச்சாங்கை

இரவு நேரங்களில் எவருக்கும் தன் பைக்கில் லிஃப்ட் கொடுத்து பழக்கமில்லை அவனுக்கு. நைட் ஷிஃப்டில் வேலைக்குச்செல்வதால், வழக்கம் போலவே இரவு இரண்டு பணியளவில் ஆஃபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். ஆஃபிசிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டில் ஒரு கிலோமீட்டர் கடக்கையில் பஸ் ஸ்டாப் ஓரம் ஒருவர் லிஃப்ட் கேட்டு கைகளை நீட்டிக்கொண்டிருந்தார். கவனித்தபோது அவரின் முகம் அவனுக்கு அவ்வளவு தெளிவாக தெரியவில்லை. 'சரி லிஃப்ட் கொடுப்போமே' என நினைத்து இடதுகை க்ளட்சை பிடித்து நிருத்த முற்படுகை யில், பைக் ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த நபரின் மூக்கும் கண்ணும் அவர் ஒரு நார்த் இந்தியன் என்பதை காட்டிக்கொடுக்க, அடுத்தகணம் வடதுகை ஆக்சிலேட்டரை முறுக்கிவிடுகிறது. எனினும் அடுத்த 4 கிலோமீட்டரில் ஒரு கண்ஸ்ட்ரக்சன் கிரவுண்ட் அருகில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடம் வந்துவிடம் ஆக அந்தநபரை நம்பலாம் என நினைத்து மறுபடியும் இடதுகை க்ளட்ச்சை பிடிக்க, மறுகணமே வட இந்தியர் ஒருவர் லிஃப்ட் கொடுத்த ஒருவரின் கழுத்தையே அறுத்து, பர்ஸையும் லேப்டாப்பையும் கொள்ளையடித்ததாய் எங்கோ படித்த செய்தி ஒன்று நியாபகம் வர, ஒர...

ஹோலி ஷிட்

Image
ஆஃபிஸ்ல சேர்ந்தப்போ எங்க பேட்ச்சுக்கு fluency இன்ஸ்ட்ரக்டர் ஒருத்தர் இருந்தார், அந்தாளு கொஞ்சம் வித்யாசமான தற்பெருமைவாதி. தன்னைப்பத்தி சொல்லிக்கொள்ளும்போது, "நானெல்லாம் படாத கஷ்டமில்ல, பார்க்காத வேலையில்ல எல்லாத்தையும் பாத்துட்டுதான் இப்போ இந்த நெலமைல இருக்கேன்!, எனக்கு தண்ணி தம்முனு எல்லா பழக்கமும் இருக்கு, ஆனாலும் என்ன ஒரு பொண்ணு வெரட்டி வெரட்டி லவ் பண்ணிகிட்டுதான் இருக்கா!" அப்டி இப்டின்னு இன்னும் என்னென்னவெல்லாமோ மேடைல பேசி கடைசியா, ஆஸ்கர் அவார்டு வாங்கின டி'காப்ரியோ கணக் கா "Yes i'm a shit... and I'm a Holy shit" அப்படின்னு சொல்லிட்டு பல்லிளிப்பார். எல்லா பயபுள்ளைங்களும் அப்டியே அவரு பேச்சுல மெய்மறந்து சில்லரையெல்லாம் விட்டெரிஞ்சாங்க. மேட்டர் ஒண்ணே ஒண்ணுதான் அந்தாளு என்ன பேசினாலும், என்ன பொய் சொன்னாலும் கடைசியா சொன்னாரு பாருங்க ஒரு லைன் "Yes i'm a shit... and I'm a Holy shit" அதுலதான் எல்லாரும் அவுட்டு, சேத்துல மலர்ந்த செந்தாமரையா காட்டிக்கிறாராம். சேறு ஓக்கே, ஷிட்டு எப்படி? அதுவும் ஹோலி ஷிட்? ஹோலி ஷிட்டுன்னா மட்டும் மணக்கவா...

பாஷா, மாணிக் பாஷா - காந்தி, மகாத்மா காந்தி

காந்தி ஒரு சிறையின் அறையில் பூட்டப்பட்டு கிடக்கிறார், ஒரு சமயம் பிரிட்டிஷ் காவலன் ஒருவனால் பூட்ஸ் காலாலேயே மிதிக்கப்பட்டு, "எலும்பும் தோலுமா இருந்துகிட்டு பிரிட்டிஷ் காரர்களையே எதிர்க்கிறாயா கிழவா! இங்கயே உன்ன கொன்னு போட்டாக்கூட கேக்க ஆள் கிடையாது!" அப்படினு மிரட்டப்படுகிறார். உடனே காந்தி, "கொஞ்சம் அப்டியே ஜன்னலுக்கு வெளியே பார்" என்று அவனிடம் சொல்கிறார், வெளியே பல லட்சம் பேர் காந்திக்காக காத்திருப்பதை கண்டு மிரண்டு போகிறான் அந்த பிரிட்டிஷ் காவலன். இது சின்ன வயசுல எங்க அம ்மாச்சி காந்தி பத்தி எனக்கு சொன்ன கதைகள்ல ஒன்னு. அதுசமயம்தான் பாஷா படம் ஊர்ல இருந்த பஞ்சாயத்து டிவி'ல பாத்திருந்ததால "கொஞ்சம் அப்டியே ஜன்னலுக்கு வெளியே பார்"னு காந்தி சொன்னதா எங்க அம்மாச்சி சொன்னப்போவெல்லாம், ரஜினி பாஷா படத்துல கூலர கழட்டிட்டு ரகுவரன்கிட்ட "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா"னு சொல்லிட்டு 'பாஷா, மாணிக் பாஷா'னு சொல்லுவார் இல்லையா அந்தமாதிரி காந்தியும் 'காந்தி, மகாத்மா காந்தி'னு சொல்லியிருப்பாரோன்னு கற்பனைஎல்லாம் பண்ணி வச்சிருந்தேன். கொஞ்சம் வ...
Image
A Girl with two elegant ornaments  Graphite pencils on papers Tools Used      Koh-i-noor(8b,6b)                        Steadtler(4b,2b,h)                        Brustro Paper(200gsm a3) Duration         10+ hours

போஹா லைஃப்-ஸ்டைல்/ஃபேஷன்

Image
போஹோமியன் லைஃப்-ஸ்டைல்/ஃபேஷன் பத்தி பார்க்கும் முன்னால, ஹிப்பி எந்த இடத்துல போஹாவிடமிருந்து வித்தியாசப்படுதுனு பார்த்தோம்னா அது அழகியல். முன்னமே ஒரு பதிவுல சொன்னதுபோல, 'பிடிச்சா ட்ரெஸ்ஸ போட்டுக்குறதும், பிடிச்ச ட்ரெஸ்ஸ போட்டுக்குறதும்' ஹிப்பி ஃபேஷனுக்கு எளிமையான விளக்கம் (இப்படித்தான் இருக்கணும்ன்ற பொது மனப்பான்மையை உடைக்குமிடமிது). இதன் வாழ்வியலும் முழுக்க முழுக்க பொதுமனப்பான்மைக்கு எதிரானது, பாலினத்தை கடந்தது, போருக்கு எதிரானது, இயற்க்கைக்கு ஆதரவா னது, அரசியல் கருத்துக்களால் வளர்ந்தது, ஆக அழகியலின் வீச்சு முழுமையாக இருக்காது. இப்போ போஹோக்கு வருவோம், போஹோமியன் ஃபேஷனும் பொதுமனப்பான்மைக்கு ஆப்போசிட்டானதுதான். ஆனால் இதன் வாழ்வியலும், உடைகளும் அழகியல் சார்ந்தது. கொஞ்சம் சில்க், கொஞ்சம் மெட்டல், கொஞ்சம் மினிமலிசம், கொஞ்சம் கிரியேட்டிவ், கொஞ்சம் வின்டேஜ், கொஞ்சம் மாடர்ன் என கலந்துகட்டிய ஏஸ்த்தட்டிகள் லைஃப்ஸ்டைல் அது. ஒரு வருஷம் முன்னால வந்த மலையாள மூவி சார்லி'யின் முதன்மை கேரக்ட்டர்களின் காஸ்டியூம்களுக்கான ரெஃபிரன்சும் நிச்சயம் போஹா ஃபேஷனாகத்தான் இருக்கனும். காரணம் வழக்...

கலகக்காரன்

Image
2010ல எங்க ஊர் லால்குடில உள்ள பொது நூலகத்துக்கு வாராவாரம் நானும் என் ப்ரெண்ட்ஸ் மூனுபேரும் வெறித்தனமா போகிட்ருந்தப்போ, எஸ்ரா'வ படி சாருவயெல்லாம் படிக்காதன்னு லைப்ரரில யாரோ சொன்னதா நியாபகம். ஏதோ நியூஸ் பேப்பர்ல வந்த ஆர்டிகள்லகூட போட்ருந்தாங்கனு நினைக்கிறேன் சாரு ஒரு க்ரிடிக் ஊரே நல்லா இருக்குனு சொல்ற விசயங்கள கழுவி ஊத்துவாரு அப்டி இப்டினு. ஆனா உண்மையா இப்போவரைக்கும் சாரு, எஸ்ரா ரெண்டு பேரோட எந்த நாவலையும் உருப்படியா படிச்சது இல்ல. எஸ்ராஓட, ஓவியங்கள் பத்தின ஒரு புக்க முழுசா ப டிச்சிருக்கேன் ஆனா பேரு நியாபகம் இல்ல, அதேபோல சாருவோட 'சினிமா-அலைந்து திரிபவனின் அழகியல்' புக்கையும் படிச்சிருக்கேன், இளையராஜா மேலயும் கமல் மேலயும் இந்த ஆளுக்கு ஏன் இவ்ளோ காண்டு, ஏன் இப்டி கழுவி ஊத்திருக்காருன்னு நினச்சேன். அப்போ நான் படிச்சு ரசிச்ச புக்குன்னா அது ஆசான் இறையன்பு ஐ.எ.எஸ் எழுதுன 'அவ்வுலகம்' நாவல்தான்  :p .   அதுக்கப்புறம் சாருவை சுத்தமா படிக்கல, ஆனா சாருவபத்தி நிறைய படிச்சேன் ஆனா அதெல்லாமும் நெகட்டிவ்தான், அவரு வலது காதுல அவரு கடுக்கன் போட்டுருக்கிறதுல ஆரமிச்சு,...