Posts

ஆதார் அட்ராசிட்டி

இன்னும் ரெண்டு நாள்ல, ஒரு கம்பெனில ட்ரெய்னீயா ஜாய்ன் பன்ன போறேன், ஒரு பத்து நாள்க்கு முன்னால கம்பனில இருந்து ஒரு மெஸ்ஸேஜ் ஃபோனுக்கு, ஆதார் கார்டையும் Reporting date அப்போ கொண்டு வாங்க, அப்படி ஆதார் கார்டு இல்லைனா தயவு செஞ்சு வேற ஒரு Reporting Dateக்கு Request பன்னுங்கனு சொல்லி சொன்னாங்க, ‘இலவு காத்த கிளி’ மாதிறி காத்திருந்து இப்போ தான் ஒரு வழியா Reporting date கிடைச்சது, ஆதார் இல்லைனா அதுவும் காலி. இதே போல ஒரு வாரம் முன்னால பாஸ்போர்ட் அப்ளை பன்ன போனேன், அங்கையும் அதே கதை தா ன், கையில இருக்குற எல்லா Documentsம் கேக்க போறானுங்க, Address வேற எல்லா documents லயும் ஒவ்வொரு டைப்பா இருக்கு, கண்டிப்பா அலைய விடப்போறாங்கனு நினைச்சேன், ஆனா அங்க, எனக்கான பெயருக்கும் Addressக்கும் அவங்க கேட்ட ஒரே Document ஆதார் மட்டும் தான். ரொம்போ ஈசியாவே பாஸ்போர்ட் அப்ளிகேஷன் Granted ஆச்சு, அங்கயும் ஆதார் இல்லைனா கதை கந்தர். போன காங்ரஸ் பீரியட்ல இந்த ஆதார் கார்டு எடுக்க போறாங்கனு சொன்னப்போ, பேப்பர்ல அத பத்தி நிறைய ஆர்டிகள்ஸ் படிச்சு, “இந்த கைரேகை எடுக்குறது, கருவிழி பதிவு பன்னுறதெல்லாம் தப்பு, கவர்...

மூடர் உலகில் - சசி

Image
“ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில ஜெயலலிதாவை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தார் காந்தியவாதி சசிபெருமாள்” இத கேட்டதும் யார்ரா இந்த ஆளு, விளம்பரம் விரும்பி, சரியான லூசா இருப்பாரு போலனு கடந்து போயாச்சு. அவரோட வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உண்ணாவிரதம் இருந்தப்ப வேலயத்த அளு உலகம் தெரியாம இருக்காருனு விட்டாச்சு, ஆனா தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் நிறைய முறை மதுவிலக்குக்காக நிறைய கவன ஈர்ப்பு போராட்டம் பன்னிருக்காரு, ஆனா நாம் உட்பட அரசும், ஊடகமும் அவ்வளவா கண்டுக்கல, காரணங்கள் பல, காந்தி யம்ன்ற வார்த்தை பிடிக்காமல் இருக்கலாம். குடிக்கிறவங்க இருக்குறப்போ, விக்கிறவங்கள ஏன்யா நோண்டுறனு இருக்கலாம், வயசான காலத்தில ஏன்யா இந்த வேலைனு இருக்கலாம், எல்லாத்துக்கும் மேல விளம்பரம் விரும்பினு அலட்சியமா கூட இருக்கலாம். மூடர் உலகில் தெளிந்து நிற்பவன் மூடன். நல்ல வேலையாக இந்த மூடன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, போராட்டத்தில் இருக்கும் போதே மயங்கி இரத்தம் கசிந்து செத்து போயிட்டாரு, இப்பவும் இவரை விட மாட்டாங்க, இவரின் பெயரில் அரசியல் நடக்கும், அதன் மூலம் ஏதாவது ஒரு நல்லது நடந்தாலும் மகிழ்ச்சியே. இவர் போல மனிதர்கள் ஏன...

பெயரற்று இருத்தலே மேல்

பெயரோடு இனிசியல் போடுவதில் ஒரு நிச்சயிக்கப்பட்ட வடிவம் இருக்கிறதாம். பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வடிவிலும், தமிழில் எழுதும் போது ஒரு வடிவிலும் எழுத வேண்டும். அதாவது பெயரை தமிழில் எழுதும் போது பெயருக்கு முன் இனிசியல் இருக்க வேண்டும் (நா. நாகராஜ் – நாராயணனின் மகன் நாகராஜ்). ஆங்கிலத்தில் எழுதும் போது பெயருக்கு பின் இனிசியலை எழுத வேண்டும் (Nagaraj N – Nagaraj son of Narayanan). இது, எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் தெளிவுபடுத்தியது. அப்படியே சரியான  வடிவில் எழுதிக்கொண்டிருந்த போது, அது எப்படி சரி ஆகும், “நீ உன் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தானே பொறந்தே!. ஏன் அப்பாவின் பெயரை மட்டும் சேர்க்கனும். காலாகாலமா இனிசியல்ல தந்தைவழி பெயர்கள் மட்டுமே நினைவுல வச்சிருக்கோம். ஆக நீங்களாவது உங்க காலத்துல புள்ளைங்களுக்கு, அம்மா அப்பா ரெண்டு பேரு பெயரையும் சேர்த்து பதியுங்க”னு இன்னொரு ஆசிரியர் தெளிவு படுத்தினார். அதுமுதல் பெயரோடு இரண்டு இனிசியல்களையும் சேர்த்து எழுத பழகியாச்சு. இப்போ காலெஜ், இன்னுமொரு ஆசிரியர், “ஏண்டா! உனக்கு தானடா பேரு வச்சாங்க அதுல ஏண்டா உன் அப்பா, அம்மா, தாத்தா’னு...

அஞ்சு ரூபா காயின்

Image
இந்த இலங்கையோட அஞ்சு ரூபா காயினும் நம்ம நாட்டு அஞ்சு ரூபா காயின் மாதிரியே தான் இருக்குது, சோ இத சில்லரையோட சில்லரையா கொடுத்து ஒரு குடிமகன் டாஸ்மாக்ல சரக்கு வாங்கி குடிச்சிருக்காப்ள போல, கணக்கு பாக்குறப்போ இது கிடைச்சிருக்கு. இது ரெண்டு விதத்துல கல்லாக்கு வந்திருக்கலாம். ஒன்னு, கொடுத்தவரு இலங்கை காயினுனே தெறியாம கொடுத்திருக்கலாம், இல்லனா தெரிஞ்சே காயின்ஸ் கூட மறச்சு வச்சு கொடுத்து குடிச்சிருக்கலாம். ஒரு வேலை மறச்சு கொடுத்திருந்தா, அந்த ஆளுக்கு இது எப்படி கிடைச்சிருக்கும்?. இ ங்க தான் நம்ம மூள வேள செய்யுது!. நம்ம கணிப்பு படி, அந்த இலங்கை அஞ்சு ரூபா காயின அந்த குடிமகன் வீட்டுல இருக்குற யாரோதான் கலெக்சன்ல வச்சிருந்திருப்பாங்க அத அவரு யாருக்கும் தெரியாம எடுத்து வந்திருப்பாருனு தோனுது. அந்த கலெக்சன பன்னது அவரு பையனா இருக்கும்’னு சொல்லுது நம்ம மூள. இந்த காயின அந்த பையன் இனி ஒரு வாரம் தேடுவான். பால்யம் தொலைக்கிற வரைக்கும், தொலைஞ்ச இந்த காயின அவன் மறக்க மாட்டான். சின்ன வயசுல நானும் ஃப்ரான்ஸ், பிலிப்பைன்ஸ்னு ரெண்டு நாட்டோட காயின தொலைச்சிருக்கேன். சொல்லப்போனா என் மூள, அத வச்சு விளையாடுறப்ப...

ஒன்னுமில்லை சாமி

ஐம்பதில் பயணித்த ஒரு பேருந்தில் தடதடவென ஒரே சத்தம், யாரோ கற்களை எறிகிறார்கள் என பயந்த சிறுமி, என்னப்பா இது?னு அப்பாவிடம் கேட்க, ஒன்னுமில்லை சாமி, புது தார் ரோடு போடுறாங்க கல்லெல்லாம் டயரோட ஒட்டி வண்டில பட்டு தெறிக்குது வேற ஒன்னும் இல்ல என்ற பதில் கிட்டியது. சப்தங்கள் தனிய புது தார் ரோடு முடிந்ததை உணர்ந்தாள். இதே போல், வளந்த பின் வரும் பயங்களின் மீதும், ஒன்னுமில்லை சாமினு தெளிவு படுத்தும் அப்பாக்கள் அமையப்பெற்றால் சுகமே!

இலவச கிரைண்டர்

நாலுரோட்டுல இருந்து பிரிஞ்சு வர்ர ஒரு ஊர்ல தமிழக அரசோட இலவச அல்லது விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் எல்லாம் கொடுக்குறாங்கலாம். குடும்பத்துக்கு ஒரு டோக்கன் கொடுத்து, விழா நாள்ல மீட்டிங் போட்டு குடிம்பத்தலைவி கிட்டதான் பொருட்கள எல்லாம் கொடுப்பாங்கலாம், குடும்பத்தலைவன் கிட்ட கொடுக்க மாட்டாங்களாம். காரணம் குடும்பத்தலைவரு ஃபிரியா கொடுக்குற பொருள வித்து குடிச்சிடுவாராம். இத கேள்வி பட்ட ஒரு குடும்ப தலைவரு, விரக்தியில, நாலுரோட்டு டாஸ்மாக்கு கடைக்கு போயி சம்பளக்காசு முழுக்க வழுவா  குடிச்சி, மீட்டிங்ல வந்து “ஓட்டு கேக்குறப்போ மட்டும் எங்கல கண்டா இனிச்சுச்சு, இப்போ எங்கல கண்டா கசக்குதா”னு கூப்பாடு போட்டு கத்த. ஓடிவந்த அவரு வீட்டுக்கார அம்மா “சும்மா கொடுக்குறதையும் கெடுத்துறாதய்யா! இந்தா”னு ஒரு அம்பது ரூவா கொடுத்து அனுப்பிவச்சு நிம்மதியானாங்க. அடுத்த வாரத்துல, நாலுரோட்டுல இருந்து பிரியுற மத்த மூனு ஊருக்கும் மிக்சி, கிரைண்டர் கொடுக்க போறாங்கலாம். அடுத்த வாரத்துலயும் அதே நாலுரோட்டுல தான் டாஸ்மாக் இருக்கும்.

ஆடி வெள்ளி

இத விட நல்ல நாள் வேணுமா கோயிலுக்கு போக, “கும்பல் அவ்வளவா இருக்காது நீயும் வா போகலாம்”னு கோயிலுக்கு கூட்டிட்டு போனாங்க அம்மா. கோயில்ல போயி அர்ச்சனை சாமான் வாங்குனா ஒரு தேங்கா இருபது ரூபா இருக்கும்னு வீட்டுலயே தேங்கா அப்புறம் இன்ன பிற பொருள் எல்லாம் ரெடி பன்னி கோவிலுக்கு பஸ் ஏறுனதுமே தெறிஞ்சிடுச்சு அங்க எவ்ளோ கும்பல் இருக்கும்னு. சாதாரண நாள்ல, இருக்குற சீட்ட மட்டும் ஃபில் பன்னி போற பஸ்ல இன்னைக்கு ஃபுட் போர்டு வரைக்கும் ஃபுல். பஸ்ல கசங்கி நசுங்கி கோயிலுக்கு போனா,  மடிச்சு  மடிச்சு ஒரு அரை கிலோமீட்டருக்கு கியூ. அங்க வந்ததுல பாதி, புதுசா கல்யாணம் பண்ணுனவங்க, புது மாப்புல பவுசுனு ஒன்னு இருக்கும்ல அத அங்கதான் நிரம்ப பாத்தேன். ஒரு கால் கிலோமீட்டர் போற வரைக்கும் கியூல யாரும் உள்ள பூரல, என்னாடா இதுனு ஆச்சர்யத்தோட நூரு அடிகிட்ட நெருங்குனதும், ஒரு அம்மா, பிபி இருக்குங்க நிக்க முடியலனு வந்தாங்க பாவம்னு விட்டாச்சு. ரெண்டு ஸ்டெப் நகந்ததும், கைல அர்ச்சனை தட்டோட கியூவ தாண்டி அந்த பக்கம் போறமாறி ஒரு வயசான அம்மா வந்து நின்னாங்க. செரி, போகட்டுமேனு வழிவிட்டு நின்னா, அந்த கேப்ல அவங்க வந்து...