22 Oct 2016

செல்வம் இல்லை


சொற்களையும் வாக்கியங்களையும் பார்த்ததுமே டக்குன்னு சரியா படிச்சு ரியாக்ட் பண்ணுறது நமக்கு கொஞ்சம் கஷ்டம்தான். Kawasaki பைக்ஸ் இருக்கு இல்லையா! அத இத்தனை வருஷமா 'கவாஸ்கி' கவாஸ்கி'னே படிச்சிட்டிருந்திருக்குறேன், அது கவாஸ்கி இல்ல 'கவாஸாகி'ன்றத இன்னைக்குத்தான் கவனிச்சேன். எப்படியும் காலெஜ் படிக்கிறப்போ இருந்து அந்த கம்பெனி பைக்குங்களையும் பேரையும் பார்த்துட்டுதான் இருக்கேன், ஆனா ஒரு தடவ கூட கவனமா பார்த்து படிக்கல போல!.

எதோ இப்போ மட்டும்தான் இப்படினு இல்ல, படிக்கிறப்போ ஸ்கூல் போற வழியில ஒரு வீட்டோட முன்சுவர்ல 'செல்வம் இல்லை'னு எழுதியிருந்தாங்க. அவிங்க வீட்டுல 'செல்வம்' ஏன் இல்ல? செல்வம் யாரா இருக்கும்? செவத்த இல்லைனு மார்பல் கல்லுல எதுக்கு எழுதி பதிச்சு வச்சிருக்கானுங்கன்னு, டெய்லி அந்த வழியா போறவர்றப்போலாம் ஒரே யோசனையா இருக்கும்!. அத பார்த்ததுல இருந்து சரியா மூணு வருஷம் கழிச்சு எட்டாவது பாஸ் பண்ணினப்புறம்தான் அந்த வீட்ல எழுதியிருந்தது 'செல்வம் இல்லை' இல்ல, அது 'செல்வம் இல்லம்'னு தெரிஞ்சது. இப்படியா இன்னும் எத்தனை எத்தனை விளங்கிக்காத வார்த்தையெல்லாம் என் டிக்சனரில மயங்கிக்கிடக்கோ தெரியல