16 Feb 2016

முழுமை


அவனுக்கென சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் இருக்கிறது, அது ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட ஒரு ஆம்னிவேன். தினமும் விடியற்காலையிலேயே எழுந்து குளித்துமுடித்து தன் துணையாள் எழும்பும் வரைக்கும் காத்திருப்பான், அவள் எழும்பியபின் காப்பி போடுவதுமுதல், மகனை ஸ்கூலுக்கு கிளப்புவதுவரை எல்லாவேலையையுமே இருவருமாக சேர்ந்து செய்வதுதான் வழக்கம். தினமும் இது வழக்கமென்றாலும் எல்லாமுமே ஒரு எமெர்ஜென்சி ஃபோன்கால் வரும்வரைதான் நீடித்திருக்கும். எப்பவுமே இருவரும் மனதளவில் கொஞ்சம் தயாராகத்தான் இருப்பார்கள். ஃபோன்கால் வந்ததும், அவனுக்கு சட்டை மற்றும் சாவி எடுத்துகொடுத்து அனுப்பிவைப்பது அவளுக்கு வழக்கம். தினமும் சாமி கும்பிட்டாலும் ஒவ்வொருமுறை எமெர்ஜென்சிக்கு கிளம்பும்போதும் தன் நெற்றியில் இருக்கும் திருநீரை அழித்துவிட்டு கிளம்புவது அவனுக்கு வழக்கம், ஒவ்வொருமுறை கிளம்பும்போதும் மகன் வீட்டிலிருந்தால் முதலில் மகனை, அப்புறம் மனைவியை, கடைசியாக வீட்டிலிருக்கும் கடிகாரத்தை ஒரு கணம் பார்த்துவிட்டுதான் அவனது ஓட்டம் ஆரம்பிக்கும்.


அவன் இலக்கு இல்லாமல் வேகமாக பயணிப்பதில்லை, அவனுக்கென இரண்டு இலக்குகள். ஒன்று எமெர்ஜென்சி ஸ்பாட், இன்னொன்று ஹாஸ்பிட்டல். வேகத்தால் அவனுக்கு ஏதும் ஆக்ஸிடென்ட் ஆகிடாது என்ற நம்பிக்கை, அவன் ஆம்புலன்சஸில் ஏறி சைரனை ஆன் பண்ணினதும், மெயின்ரோட்டின் சப்தம் குறைவதிலேயும், வாகனங்கள் வழிவிட்டு நகருவதிலேயுமே இருவருக்கும் கிடைத்துவிடும். தவிற, தினசரி வழக்கமாகிப்போன இந்த வாழ்க்கை ஒருபோதும் சலிப்பை தந்ததில்லை. காரணம் இருவருக்குமான எதிர்பார்ப்புகள் குறைவு. அவளுக்கான அதிகபட்ச அன்பு காலையில் எழும்பி ஒரு ஃபோன்கால் வரும் வரைக்குமான அந்த இடைவெளியில் நிரம்பவே கிடைத்துவிடுகிறது. அவனுக்கான அன்பு இன்னும் குறைவு, கிளம்பும்போது அவள் கைகள் மூலம் சட்டையும், சாவியுமாகவே கிடைத்துவிடும். கூலிக்காகத்தான் எல்லா தொழிலுமே என்றாலும், இங்கு தினமும் வீடு திரும்பினதும் “என்ன ஆச்சு?” என்பதுதான் முதல்கேள்வியாக இருக்குமே தவிற “எவ்வளவு கிடைச்சது?” என்பதுவல்ல. எதிர்பார்ப்புகளையும், அன்பையும் முழுமைபடுத்தி வாழ்கின்றனர் அவளும் அவனும்.

11 Feb 2016

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு


கொஞ்ச வருஷம் முன்னால எதோ ஒரு டிவி நிகழ்ச்சில ஒரு ஃபாரின்காரர் ரொம்ப அழகா தமிழ் பேசினத பார்த்திருந்தேன். அமெரிக்கால இருக்குற யேல் யுனிவர்சிட்டில அவர் ஒரு தமிழ் ப்ரொபெசர், அவர் பேரு 'பெர்னார்ட் பேட்-Bernard Bate'ன்றது மட்டும்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது, அதுக்குள்ளே அந்த நிகழ்ச்சி முடிஞ்சுபோச்சு. திடீர்னு அவர் நியாபகம் வர, அவர் தமிழ்ல பேசின வீடியோ ஏதாவது கிடைக்குமான்னு யூடியூப்ல தேடிக்கிட்டிருந்தேன்.

முதல்ல, எதோ ஒரு தமிழ் மொழித்திருவிழாக்காக அவர் தமிழில் பேசிய ஒரு சின்ன க்ளிப்-வீடியோ கிடைச்சது, தமிழ் மொழியப்பத்தி அழகாவும் செம்மையாவும் பேசியிருப்பாரு, என் கணிப்பு சரியா இருந்தா அது செம்மொழி மாநாட்டுக்காகவா இருந்திருக்கும். அடுத்து அவர் கொஞ்ச நிமிடம் பேசிய இன்னுமொரு வீடியோ கிடைத்தது, அவ்வளவுதான் அதுக்கப்புறம் என் தேடல் முழுமையா வேற திசைல போக ஆரம்பிச்சது, தமிழ்ல பேசியதா பல வெளிநாட்டு காரவங்களோட வீடியோக்கள் யூடியூப்ல வரிசைல நிக்க சுவாரஸ்யமா ஒவ்வொன்னா பாக்க ஆரமிச்சேன்!

அடுத்து ஒரு ஜெர்மன் லேடி ரொம்ப அருமையா தமிழ்ல பேசியிருந்தாங்க, உண்மையா அது எல்லோரும் பாக்க வேண்டிய ஒன்னு, அவங்க பேசினதுல இருந்துதான் ஐரோப்பல பெரும்பாண்மையா தமிழுக்கான அடையாளமா இலங்கையத்தான் பாக்குறாங்க, தமிழ்நாட்ட இல்லன்னு தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் ஒரு சைனா காரர் மலேசியால தமிழ், மலாய், மாண்டரின் சைனீஸ்ல பேசி பழங்கல விக்கிறதா பாத்தேன், அது பெருசா ஆச்சர்யபடுத்தல, ஏன்னா மலேசியால ஒரு ஏசியன் தமிழ் பேசுறது ஒன்னும் புதுசு இல்லயே.

பிறகு இன்னுமொரு சைனா லேடி, 'சைனாவில் ஒரு இன்ப உலா' அப்படின்னு ஒரு புக் எழுதியிருப்பாங்கபோல அதபத்தி ஒரு வீடியோ வந்தது, அப்புறம் இங்கிருந்து ரஜினியோட முத்து படம் ஜப்பானுக்கு எப்படி 'ஒடுரு மகாராஜா'வா பயனமாச்சுனும் தெரியவந்தது, அப்புறம் ஆஸ்திரேலியால ஒருத்தன் பைபிள் படிக்கத்தான் நான் முதன்முதலில் தமிழ் கத்துக்க ஆரமிச்சேன் அப்படின்னு சொல்லி அடுத்த வீடியோல பேசினான், தேவையில்லாத லைன்ல போகுதேன்னு ஸ்கிப் பண்ணியாச்சு. அப்புறம் தமிழ்ல பாட்டு பாடுற சில ஃபாரின் காரங்க வீடியோவா வந்துச்சு, அதையும் ஸ்கிப் பண்ணியாச்சு.

அதுக்கப்புறம் எல்லாம் மொக்கையா வர மறுபடியும் ஒரு விடியோல ஒரு கொரியாக்காரரு கொரிய மொழில பல தமிழ் சொற்கள் கலந்து இருப்பதாவும், கிட்டத்தட்ட 500 சொற்களுக்கு மேல இணையா இருக்குறதாவும் சொல்லி, செம்மொழி மாநாட்டுக்கு ரெடி பண்ணுன கட்டுரைய எக்ஸ்ப்லேயின் பண்ணுனாரு, அப்புறம் ஒரு தமிழ் ஆளு ஆப்பிரிக்கால சில இனத்து மக்கள் பேசும் மொழி நம்ம தமிழ்மொழியோட ஒத்துபோகுதுன்னு அவரு சைடுக்கு சில வார்த்தைகள காட்டி விளக்குனாரு, கிட்டத்தட்ட எல்லாம் சரியாத்தான் இருந்தது, ஆனாலும் நம்ம ஆளுங்கதான் மாடு 'ம்ஆ'னு கத்தினாலும் அது தமிழ்னு சொல்லுவாங்களே அதனால அதையும் ஸ்கிப் பண்ணி அடுத்த வீடியோக்கு போயாச்சு.

அப்புறம் தான் நம்ம ஹீரோ வந்தாரு, அதுதான் நம்ம மோடி, 'மலேசியாவில் தமிழில் பேசிய மோடி' அப்படின்னு டைட்டில் போட்டு இருந்துச்சு க்ளிக் பண்ணினதும், "உங்ளில் பலர் தமில்னட்டு சேரம்தவர்கள உங்களனைவருக்கும் வணக்கம் இண்டியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பகு முக்கியம்" அப்படின்னு பேசினாரு. மலேசியால போயி இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியம்னு டமிழ்ல என்டா பேசினாருனு யோசிச்சுபாத்து, சரி பொதுவா தமிழ் தெரியாத ஒருத்தன் தமிழ்ல என்ன பேசினாலும் நம்ம ஆளுங்க கைதட்டுவானுங்கனு புரிஞ்சிருக்குற நம்மல்ல ஒருத்தன்தான் டயலாக் எழுதி கொடுத்திருப்பன்னு விட்டாச்சு.

அடுத்தது ஒரு ஹான்காங் ஹீரோயின், சில தமிழ் வார்த்தைகளோட ஒரு கெட்டவார்த்தையையும் பேசியிருந்தது. அந்த கெட்டவார்த்தைய சொல்லி கொடுத்தவன்தான் அந்த வீடியோவையும் ரெக்கார்டு பண்ணியிருந்தான். என்ன கருமம்டா இது, இதுக்கு நம்ம மோடிக்கு தமிழ் சொல்லி கொடுத்தவனே தேவலாம்னு யோசிச்சு ப்ரௌசரையே க்ளோஸ் பண்ணிட்டேன், கடைசியா ஒன்னுதான் புரிஞ்சது. கழுத, தமிழ்ல எந்தநாட்டுக்காரன் என்ன பேசுனாலும் சுவாரசியமா வாயப்பொலந்து நம்மஆளுங்க பாப்பானுங்கன்றதுக்கு நானும் ஒரு எக்சாம்பிள் ஆகிட்டேன்! 
unsure emoticon