29 Jun 2015

சாய்ந்த சுவர்கள்

வீட்டில் சாய்ந்த சுவர்கள் இருக்க ஆசை,
கொஞ்சமேனும் சாய்ந்திருந்தால் போதும்,
இருஆயிரம் ஆண்டு கட்டிட உக்திகள் இன்னுமா

சாய்ந்த சுவர்களுக்கு மாறவில்லை.

நிமிர்ந்த சுவர்கள் கண்களையும், மனதையும்
சோர்ந்து போகச் செய்துவிட்டன.
கொஞ்சம் உள்ளாகவோ அல்லது வெளியாகவோ,
சன்னல்களும் சாய்ந்திருக்கும்.
நின்ற இடத்திலிருந்து,
உள் சாய்ந்திருந்தால் வானை பார்க்கலாம்,
வெளி சாய்ந்திருந்தால் மண்ணை பார்க்கலாம்,
ஒட்டி நிற்காமல், சாய்ந்து நிற்கலாம்,
சுவர்களின் மீது.
கண்ணம் பதித்து, கட்டிலை உணரலாம்
சுவர்களின் மீது.
படிகளை போல, கால்களை பதிக்கலாம்
சுவர்களின் மீது.
முக்கோண வீடுகட்டி சிக்கி வாழ ஆசையில்லை,
சாய்சதுர வீடுகட்டி சாய்ந்து வாழ ஆசை.

27 Jun 2015

நான் - இந்தியனும் அல்ல


அமெரிக்க பூர்வக்குடி மக்களை இந்த ஹாலிவுட்ல மூவீஸ்ல ‘இந்தியன்ஸ்’ னு சொல்லுறதால, பெருமை பட்டுட்டு இருந்தேன். அவங்க முகத்த பாக்க கொஞ்சம் நம்ம ஆளுங்க மாதிரி தான் இருப்பாங்க. ஒரு டவுட் வரவே, கூகுல் பன்னி பாத்தப்புறம் தான் விவரம் நியாபகம் வந்துச்சு.

இந்த கொலம்பஸ், இந்தியாவ கண்டு பிடிக்குறேன்னு அமெரிக்காவுக்கு போயி அங்க வாழ்ந்தவங்கள இந்தியர்கள்-னு நினச்சது தான் இந்த வரலாற்று பிழைக்கு காரணம். இது மட்டும் இல்லாம போற வழில இருந்த தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா முழுக்க இந்தியாஸ் இல்லனா இந்தீஸ்-னு நோட் பன்னி வச்சாராம், இது தான் ‘இந்திய பெருங்கடல்’, ‘மேற்கு இந்திய தீவுகள்’க்கும் பெயர் காரணம்.

முன்னமே சொன்ன மாதிரி பூர்வகுடி அமெரிக்க மனிதர்களின் முகம் நம்ம ஆளுங்க மாதிரி இருக்றதால இந்தியன்ஸ்-னு ஏன்டா நினச்சோம்னு கொஞ்சம் காஷ்மிர்ல ஆரம்பிச்சு அஸ்ஸாம் வந்து ஒடிஸா வழியா தமிழ்நாடு வந்து அப்டியே மஹாரஷ்ட்ரா போயி ராஜஸ்தான் போனா இந்தியன்ஸ்-னு நான் கற்பனைல வச்சிருந்த முகமெல்லாம் கரைஞ்சு போச்சு. நமக்கு தனியா ஒரு முகம்னு ஏதும் கிடையாது, இன்னும் சொல்லப்போனா மனுசங்களுக்கே தனியா முகம் ஏதும் இல்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம்.

இதெல்லாம் கொஞ்சம் தெளிவாக்கிகிட்டு, பேருக்கு வந்தா, எப்படி நாம நம்மளுக்குள்ளயே வந்தேறினு சொல்லி காயபடுத்திக்கறோமோ, வடக்க நம்மள மதராஸினு சொல்லி காயபடுத்திறாங்களோ, அதே மாதிரி அமெரிக்காவுல குடியேறுன ஐரோப்பியர்கள், அந்நாட்டு பூர்வகுடிமக்களை ‘இந்தியன்ஸ்’னு சொல்லி ஏளனமா பாத்திருக்கான் (offensive word). இதனால தான் நான் ஏலியன்ஸ நம்புறேன். அவங்க வந்து “You Bloody Humans!” னு நம்மள அடிச்சா தான் ‘ஓ நமக்கெல்லாம் ஒரே ரத்தம் தான்’னு யோசிச்சு சேர்ந்து திரும்ப அடிப்போம்.

20 Jun 2015

யோகா – சேற்றில் முளைத்தது

                          



பொதுவா இங்க எல்லாருக்குமே ‘யோகா’ மேல ஒரு மதிப்பு இருக்கு. ஆனா அது ஒரு மதம் சார்ந்த தனி மனித உடல், உள்ள அடிப்படையிளான சித்தாந்த பழக்க முறை என்றாலும் கூட, மதம் சார்ந்த/சாராத பல மனிதர்கள் பின்பற்றித்தான் வருகிறார்கள். இப்போ நாரதர் மோடியும் அவரு கவர்ன்மென்ட்-ம் இத வச்சு பன்னுற கலகங்களை வெளிக்கொனறவே இந்த பதிவு.




பொதுவில் பல மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட/காவி சாராத தத்துவாந்தங்கள் மீதும், மனிதர்கள் மீதும் காவி பூசுவதையும், காவி சார்ந்த விசயங்களை, இவை மனித குளத்திற்கு இன்றியமையாதது, மதம் சாராதது என்று திணிப்பதுமே இவர்களின் சீக்கு வந்த மூளை. திருவள்ளுவரையும், புத்தரையும் ஏன், அம்பேத்கர் மேலையுமே காவி சானி அடிக்க முயற்சி செய்தவர்கள் இவர்கள், இப்போது யோகாவின் மீது கும்புடு போட்டு ஒரு நாள் கூத்து பன்ன போகிறார்கள்.

தினமும் யோகா ப்ராக்டிஸ் பன்னுற மற்றும் சொல்லித்தர மதம் சாராத பல வெகுசன மக்கள் இருக்குறப்போ, யோகா வியாபாரம் பன்னி காசு பார்க்கிறவர்கள் யார் “ஸ்ரீ ஸ்ரீ, சத்குரு, யோகா குரு” இந்த பாதி பெயர்களே போதும் இன்று யோகா யார் கைகளில் இருக்கிறதென்பதற்கு.

“International Day of Yoga” இந்த கூத்துக்கு தேதி தேர்வு பன்னினதுல ஆரம்பிக்குது இவங்க திருவிளையாடல், “JUNE-21”. இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் நோன்பு இருக்கும் நாட்களில் ஒன்று. இதுல இவங்க சொல்லுர விளக்கம், 177 நாடுகள் யோகா டே-க்கு ஒத்துழைக்குறாங்களாம், அதுல 47 இஸ்லாமிய நாடுகளாம். 177 நாடுகள் ஏத்துக்குறது எல்லாம் அவங்க யோகா க்கும், யோகா பயிற்சி செய்றவங்க உணர்வுக்கும், கொடுக்குற மதிப்பு. ஆனா நம்ம நாட்டு கவர்ன்மென்ட் பன்றது காமெடி மாதிரி தான் இருக்கு, நிறைய அரசு பணியாளர்களை யோகா பன்ன வச்சு ‘கின்னஸ்’ ரெக்கார்டு பன்ன போறாங்களாம். டெல்லி & மும்பை-ல டெய்லி ட்ரெயின்-ல போறவங்கள கணக்கு காட்டினாலே கின்னஸ் கிடைக்கும், இன்னும் பல கின்னஸ் கொட்டி கிடக்கு நம்ம நாட்டுல. ‘சூர்ய நமோஸ்கார்’அ யோகா கூட லிங்க் பன்ன ட்ரை பன்னது ரெண்டாவது காமெடி. யோகா ஸ்லோகன்களுக்கு பதிலா அல்லா பெயரை சொல்லலாம்-னு சொன்னது மூனாவது காமெடி.

எதாவது ஒன்னுக்கு இந்த அரசுகள் தனியா ஒரு நாள் ஒதுக்கலைனா தூக்கம் வராது போல, “Environmental day”-க்கு “Happy Environmental day” னு சொல்லி செடிய நட்டு அடுத்த நாட்கள்ல மறக்குறது போல தான் இதுவும். மதத்துக்கு எப்படி தனி ஒரு நாள் தேவை இல்லையோ அது போல யோகா வுக்கும் தேவை இல்லை. பிடித்தவர்கள் தொடர்வார்கள், இப்படி ஒரு நாள் கூத்து பன்னுறதால புதியதாக யாரும் அனுதினமும் யோகா செய்ய போவது இல்லை. பிடிகாதவர்கள் அடுத்தவர்களை டிஸ்டர்ப் செய்ய போவதும் இல்லை. மாறாக மதம் சாராமல் யோகா பயிற்சி செய்றவங்களுக்கும்/செய்யாதவர்களுக்கும் ஒரு விதமான பயத்தையும் வெறுப்பையும் தான் கொடுக்க போகிறீர்கள்.

15 Jun 2015

B. R. Ambedkar  |  பீமாராவ் அம்பேத்கர்





Graphite pencils on papers

Pencils        Koh-i-noor(6B, 8B)
Paper          Bilt Matrix (130gsm A3)
Duration       4 hours

12 Jun 2015


Faces  |  முகங்கள்





Graphite pencils on papers

Pencils        Steadtler (2B, 4B, 6B) Koh-i-noor (6B, 8B)
Paper          Bilt Matrix (130gsm A3)
Duration       25+ hours

Based on a Photograph by Prabhu Kalidas





8 Jun 2015

தியோ – வான் கா



தம்பிக்காக ஓடா ஒழைச்சு தேஞ்சி போன அண்ணன்’களை ஹிரோவா காட்டிகிட்டு இருக்கு நம்ம தமிழ் சினிமா இன்னமும், இங்க அண்ணனுக்காக எல்லாமும் செஞ்சு ஒரு நண்பனா இருந்த தம்பிய பத்தின பதிவு இது. ஆனா தம்பியா, அண்ணனா ன்றது இங்க விசயம் இல்ல, இரண்டு பேருக்கும் இடைல இருந்த அன்பு தான் விசயம்.

“There is nothing more truly artistic than to love people.”

- Vincent Willem Van Gogh.


இன்னைக்கு, இத ‘வான் கா’ சொன்னதா கூகுல் சொல்லுச்சு, அவர் இத சொன்னாரா இல்லையானு தெரியாது, ஒரு வேலை சொல்லியிருந்தா என்ன மன நிலைல இத சொல்லியிருப்பார்.

வான் கா – தன் வாழ் நாள்’ல 2000+ பெயிண்டிங்ஸ் வரைஞ்சு, ஒன்னத்தையும் விக்கத்தெறியாத மிகச்சிறந்த ஓவியர். இன்னைக்கு இவரது ஓவியங்களுக்கு விலை பல கோடிகள். அவர் வாழ்ந்த சமூகம் அவரை புறக்கனித்தது’னு சொல்லுவாங்க. முதல்ல அவரை புறக்கனித்தது அவரின் காதல்’கள், பின்னால் அவர் தான் சமூகத்தை விடுத்து தனிமையை எடுத்தார். வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று காதல் இருந்தது அவருக்கு. மூன்றும் தோல்வி. அந்த நிராகரிப்பு தான் அவரை தனிமையில் சிக்க வைத்தது, வயல்களையும், வீதிகளையும், தனது அறையையும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இருக்கும் வானையும் கண்டு களித்து, பின் அந்த காட்சிகளை தூரிகையில் சிறைபிடித்தார்.


பொழுதனிக்கும் ஒரு மனுஷன் தனிமையிலையும், விரக்தியிலுமே இருந்தா எவ்ளோ நாள் வாழ முடியும் 39 வயதில் மரணம். அத்தனை நாட்கள் அவரை வாழ வச்சது ஒரே ஆள் தான். அது அவரின் தம்பி “தியோ வான் கா”. தான் கண்ட காட்சிகளையும், தன் மனப்பிரச்சனைகளையும் தம்பிக்கு கடிதங்களாய் எழுதி தீர்த்தார் வான் கா. அண்ணனால பண ரீதியான உதவி குடும்பத்துக்கு கிடைக்காது என உணர்ந்த போது பொருப்புகளை எடுத்து கொண்டார் தியோ. வான் கா தனிமையில் வாழ்வை ஓட்டவும், வண்ணங்கள் வாங்கவும் பணம் கொடுத்தது தியோ தான். பணம், இருப்பவர்களால் கொடுக்க முடியும். மேலாக தியோ அண்ணனுக்கு கொடுத்தது அரவணைப்பு. வான் கா வின் மன கசடுகளாய் வடிகட்டியவர் தியோ. அண்ணனின் புலம்பல்களை கேட்டார், அத்தனை கடிதங்களுக்கும் பதில் கொடுத்தார், அந்த பதிலகள் தான் வான் கா வை அத்தனை காலம் வாழ வத்தது, ஒரு ஓவியனாக்கியது. இன்று எத்தனை பேர் இதை செய்கிறோம். வான் கா-வையேனும் சமூகம் தாமதமாக கண்டுகொண்டது, இன்னும் அவ்வளவாக தியோ வை அல்ல. நமக்கு தேவை வான் கா க்கள் அல்ல, “தியோ”க்கள் தான். தியோ வாக இருக்க முயற்சிப்போம்.