8 Jun 2015

தியோ – வான் கா



தம்பிக்காக ஓடா ஒழைச்சு தேஞ்சி போன அண்ணன்’களை ஹிரோவா காட்டிகிட்டு இருக்கு நம்ம தமிழ் சினிமா இன்னமும், இங்க அண்ணனுக்காக எல்லாமும் செஞ்சு ஒரு நண்பனா இருந்த தம்பிய பத்தின பதிவு இது. ஆனா தம்பியா, அண்ணனா ன்றது இங்க விசயம் இல்ல, இரண்டு பேருக்கும் இடைல இருந்த அன்பு தான் விசயம்.

“There is nothing more truly artistic than to love people.”

- Vincent Willem Van Gogh.


இன்னைக்கு, இத ‘வான் கா’ சொன்னதா கூகுல் சொல்லுச்சு, அவர் இத சொன்னாரா இல்லையானு தெரியாது, ஒரு வேலை சொல்லியிருந்தா என்ன மன நிலைல இத சொல்லியிருப்பார்.

வான் கா – தன் வாழ் நாள்’ல 2000+ பெயிண்டிங்ஸ் வரைஞ்சு, ஒன்னத்தையும் விக்கத்தெறியாத மிகச்சிறந்த ஓவியர். இன்னைக்கு இவரது ஓவியங்களுக்கு விலை பல கோடிகள். அவர் வாழ்ந்த சமூகம் அவரை புறக்கனித்தது’னு சொல்லுவாங்க. முதல்ல அவரை புறக்கனித்தது அவரின் காதல்’கள், பின்னால் அவர் தான் சமூகத்தை விடுத்து தனிமையை எடுத்தார். வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று காதல் இருந்தது அவருக்கு. மூன்றும் தோல்வி. அந்த நிராகரிப்பு தான் அவரை தனிமையில் சிக்க வைத்தது, வயல்களையும், வீதிகளையும், தனது அறையையும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இருக்கும் வானையும் கண்டு களித்து, பின் அந்த காட்சிகளை தூரிகையில் சிறைபிடித்தார்.


பொழுதனிக்கும் ஒரு மனுஷன் தனிமையிலையும், விரக்தியிலுமே இருந்தா எவ்ளோ நாள் வாழ முடியும் 39 வயதில் மரணம். அத்தனை நாட்கள் அவரை வாழ வச்சது ஒரே ஆள் தான். அது அவரின் தம்பி “தியோ வான் கா”. தான் கண்ட காட்சிகளையும், தன் மனப்பிரச்சனைகளையும் தம்பிக்கு கடிதங்களாய் எழுதி தீர்த்தார் வான் கா. அண்ணனால பண ரீதியான உதவி குடும்பத்துக்கு கிடைக்காது என உணர்ந்த போது பொருப்புகளை எடுத்து கொண்டார் தியோ. வான் கா தனிமையில் வாழ்வை ஓட்டவும், வண்ணங்கள் வாங்கவும் பணம் கொடுத்தது தியோ தான். பணம், இருப்பவர்களால் கொடுக்க முடியும். மேலாக தியோ அண்ணனுக்கு கொடுத்தது அரவணைப்பு. வான் கா வின் மன கசடுகளாய் வடிகட்டியவர் தியோ. அண்ணனின் புலம்பல்களை கேட்டார், அத்தனை கடிதங்களுக்கும் பதில் கொடுத்தார், அந்த பதிலகள் தான் வான் கா வை அத்தனை காலம் வாழ வத்தது, ஒரு ஓவியனாக்கியது. இன்று எத்தனை பேர் இதை செய்கிறோம். வான் கா-வையேனும் சமூகம் தாமதமாக கண்டுகொண்டது, இன்னும் அவ்வளவாக தியோ வை அல்ல. நமக்கு தேவை வான் கா க்கள் அல்ல, “தியோ”க்கள் தான். தியோ வாக இருக்க முயற்சிப்போம்.


No comments:

Post a Comment