31 Aug 2015

டிராக்ஸ் ரன்


இன்டெர்னெட்டே இல்லாத லேப்டாப்ல கூகுல்.காம் ட்ரை பன்னா ஓபன் ஆகுமா? ஆகாது. ஆனா ஒரு ‘சீக்ரெட் கேம்’ ஓபன் ஆகும்.



நேத்து, இன்டெர்னெட் கன்னெக்சன் இல்லாதப்ப ‘கூகுல் க்ரோம்’ல ஏதோ வெப்சைட் ஓபன் பன்ன ட்ரை பன்னப்போ ஆகல. நெட் கனெக்சன் இல்லாதப்போ ட்ரை பன்னுனா ஒரு எர்ரர் மெஸ்ஸேஜும் வரும் “Unable to connect to the Internet”னு அந்த மெஸ்ஸேஜ் மேல ஒரு டைனோசர் சோகமா நிக்கும், எல்லோரும் பார்த்திருப்போம். ஆனா உத்து பார்த்திருக்க மாட்டோம். எதார்த்தமா அத உத்து பாத்துற்றுக்கப்போ அது கண்ண சிமிட்டுச்சு, ஆச்சர்யமா மறுபடியும் பார்க்க மறுபடியும் சிமிட்டிச்சு.

ஏதோ ஒரு ஆர்வத்துல ஸ்பேஸ்பார தட்ட டைனோசர் நின்ன இடத்துலயே ஓட ஆரம்பிச்சுடுச்சு, அப்புறம்தான் தெறிஞ்சுச்சு அது ஒரு கேம்னு, ஒரு பாலை வனத்துல ஓடுற மாறி கேம் அது, செடிகளும், காக்காக்களும் தடைகளாக வரும், நாம டைனோசர எதுலயும் மோத விடாம தாவி குதிச்சு ஓட வைக்கனும!.

30 Aug 2015

காமெரொன் டியாஸ்


காமெரொன் டியாஸ் - சார்லி’ஸ் ஏஞ்சல்ஸ் மாதிரி சில படங்கள்ல நடிச்சிருப்பாங்க, ஒரே மாதிரியான நடிப்பு எல்லா படங்கள்லயும் இருக்கும், இவரின் ஒரு ஐந்தாறு படங்கள் பார்த்தது உண்டு. எந்த படங்களிலும் ஒரு ஈர்ப்பு இருந்தது இல்லை கடைசியாக இவரின் ஒரு படத்தை பார்க்கும் வரை.




அந்த படம் ‘My sister’s keeper(2009)’. கேன்சர் போன்ற ஒரு சிவியர் நோயால் ஒரு சகோதரி(15) இறக்க போகிறாள், அவளை காப்பாத்துவதற்க்காக இன்னொரு மகளை(11) பெற்று வளர்க்கிறார்கள்(savior sister-என்ற பதத்தை கூகுல் பன்னவும்). அதாவது நோயுற்ற மகளுக்கு தேவையான இரத்தத்திசு கொண்ட குழந்தையை பெற்றெடுப்பது, அது மட்டுமில்லாமல் இங்கு அக்காவிற்காக, தங்கையின் ஒரு சிறுநீரகத்தையும் கொடுக்க முன்னரே முடிவெடுத்து விடுகின்றனர். இந்த விசயம் தெரிந்ததும் அந்த பதினோரு வயது தங்கை தன் சிறுநீரகத்தை கொடுக்க மறுக்கிறாள். தன் உடல் தனக்கே சொந்தம் என் அனுமதி இல்லாமல் என் சிறுநீரகத்தை தன் சகோதரிக்கு தர முடியாது என்றும், அவ்வாரு நான் கொடுத்தால் தன்னால் விளையாட, டான்ஸ் ஆட, குழந்தை பெற்றுக்கொல்ல முடியாது என கூறி சிறுநீரகத்தை தானம் செய்ய மறுக்கிறாள். ஒரு வக்கீலையும் சந்தித்து தனக்காக தனது பெற்றோர்களை எதிர்த்து வாதாடும்படியும் கேட்டுக்கொள்கிறாள்.


ஒரு மகள் சாகக்கிடக்க, மற்றொரு மகள் அவளுக்கு சிறுநீரகம் கொடுக்க மறுக்க, செய்வதறியாது தவிக்கும் அம்மா ரோலில் காமெரொன் நல்லாவே நடிச்சிருப்பாங்க, தானும் ஒரு வக்கில் என்பதால் தன் இளைய மகளுக்கு எதிரா, அவளின் சிறுநீரக தான உதவி வேண்டி வழக்கை தொடருவார்.

படத்தின் முதல் பாதியில் தங்கை மேல் நமக்கு வெறுப்பு வந்தாலும், பிறகு அது வெயில் பட்ட பனியாய் மறந்துவிடும், ஏன் என்பதன் காரணத்தை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும், ஹாஸ்பிடல் பெட்ல மூத்த மகள் சாகும் முன்னால ஒரு கான்வர்சேஷன் முடிஞ்சதும் டியாஸ் தேமி அழுது மகள் கூடவே சேர்ந்து தூங்கிடுவாங்க, அது தான் மூத்த மகளின் மற்றும் மகளுடனான கடைசி இரவு அவருக்கும். எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாலும், எனக்கு பெருசா பட்டது டியாஸின் நடிப்பு தான். பழைய ‘தி மாஸ்க்’ மூவில செம அழகா வற்ற ஹீரோயினும் இவங்க தான், அதுதான் டியாஸின் முதல் படமும் கூட. உண்மையில் ஒரு ஒர்த்தான ஒரு ஃபீல் குட் மூவி.

பை த வே இன்னைக்கு காமெரொன் டியாஸின் பிறந்தநாளாம், My sister’s keeper மூவியோட ஃபேஸ்புக் பேஜ்ல இப்போ தான் பார்த்தேன். ஏற்கனவே இந்த படத்தை பத்தியும், டியாஸ் பத்தியும் எழுதலாம்னு இருந்தேன். இன்னைக்கு எழுதினா நல்லா இருக்கும்னு அவசரமா எழுதியது. நிறைய நல்ல விசயங்களை எழுத வில்லை, படம் பார்த்து உணர்ந்துகொள்ளுங்கள்.

29 Aug 2015

அந்தோனி தாத்தா - பேய் கதை


“ஏன்டா மாமா இந்த பேயிலாம் இருக்குனு நம்புறியா?”
“ஏன்டா இப்டி திடுதிப்புனு கேக்குற!”
“நேத்து, ‘எக்ஸார்சிஸ்ட்’னு ஒரு படம் பாத்தேன் மச்சி சும்மா மிரட்டிடானுங்க”
“சேரி அதனால இந்த திடீர் குவெஸ்டினா?, படம் தானே மச்சி, படத்துல எல்லாம் அப்டிதான் காட்டுவானுங்க, படம் ஓடனும்ல”
“அதுக்கு இல்ல மச்சி, நேத்து நயிட்டு, ஒன்னுக்கடிக்கலாம்னு கொல்லை பக்கம் போனேன், ஏதோ ஒன்னு பின்னால சட்டுனு வந்து போன மாதிரி இருந்ததுச்சி”
“பின்னால வந்துச்சா!, இல்லையே ஒன்னுக்கு முன்னால தானே வரும்!”
“மூடுடா!, அப்புடியே உடம்பெல்லாம் நடுங்கிடிச்சுன்றேன், காமெடி பன்ற”
“அப்டி இல்லடா, இருட்டுநாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயமாதான் இருக்கும், இதுல நீ பேயி படம் வேற பாத்துட்டு கொல்லைல ஒன்னுகடிக்க போனா பயம் வராம எப்புடி”
“அதான் மச்சி டவுட்டு, பேயே இல்லனா நாம ஏண்டா பயப்படனும், எனக்கு ஏன் உடம்பெல்லாம் நடுங்கனும்”
“மயிரு, சாமியே இல்லாம அவனவன் சாமி வந்தமாறி நடிக்கிறான், அது மாதிரி தான் இதுவும் மூடு”
“நீ என்ன வேனா சொல்லு, ஆனா பேயி இருக்கு நா நம்புறேன்”
“எப்புடிடா சொல்லுற?”
“அதெல்லாம் எனக்கு தெறியாது சாமியுமிருக்கு பேயுமிருக்கு!”
“பயமும், பக்தியுமமிருக்குனு ஒத்துக்கிறேன் ஆனா, பேயுமில்ல சாமியுமில்ல இத உனக்கெல்லாம் பேசி புரிய வைக்க முடியாது, நா கிளம்புறேன் ஆள விடு”
“இரு மச்சி, வேனா ஒன்னு பன்னலாம், வா இன்னைக்கு நைட்டு சர்ச் பக்கத்துல இருக்க கல்லரைக்கு போலாம்”
“போயி?”
“ப்ரேம் சொல்லுவான் தெறியுமா, அங்க டெய்லி நைட்டு செத்து போன அந்தோனி தாத்தா வருவாருனு. வா, போயி பாக்கலாம் எதுவுமே இல்லனா ஒத்துக்குறேன்”
“டேய்!, அவனே ஒரு புளுவுனி அவன் சொன்னதையெல்லாமா நம்புற! அதும் நாம பத்தாவது படிக்கிறப்போ அவன் சொன்னது அது!”
“சரி அவன விடு, சூசை போன மாசம் சொன்னான்ல, மீன் பிடிக்க கல்ற வாய்க்காலுக்கு போனப்போ பாத்தேனு, அதும் இல்லாம புடிச்சு வச்ச மீனையெல்லாம் எதோ தின்னு மீனுமுல்லு மட்டும் தான் மீதி இருந்ததுனு சொன்னான்”
“உனக்கெல்லாம் சொன்னா புரியாது, பேயி இருக்குனு நம்பிகிட்டே நைட்டு கல்றைக்கு கூப்பிடுற பாத்தியா, அந்த தைரியத்துக்கே வர்ரேன் போலாம்”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, அதான் கூட நீ வர்ர இல்ல அந்த தைரியத்துல தான் சொல்லுறேன் வா போலாம். நைட்டு பன்னண்டு மணிக்கு கரெக்டா வந்துரு. வர்ரப்போ மூங்கில்ல ஒரு சிலுவை ரெடி பன்னி கொண்டு வா, அந்தோனி தாத்தா சமாதில அடிக்க போறேன்!”
“இது வேறையா!, சரி கொண்டுவாறேன்”
.
.
(பன்னிரண்டு மணி - கல்லறை)
“மாப்ள வா ரெண்டு பேரும் ஒன்னா போலாம், சிலுவைய கொடு நா அடிக்கறேன்”
“இந்தா”
“மெதுவா போ மாப்ள, எதாவது தெரியுதா?”
“ஒரு மயிரும் இல்லடா இப்பவாது நம்புறியா”
“இல்லடா, நீ அந்தோனி தாத்தா இடத்துகிட்ட போ”
“நா போயிட்டேன் வா!”
“மாப்ள கைலி அவுந்திருச்சுடா, எதோ அவுத்துவுட்ட மாறி இருந்ததுடா!”
“என்ன அந்தோனி தாத்தாதான் அவுத்துவுட்டாறா?. மூடிட்டு வாடா!”
“எனக்கென்னமோ இங்க என்னமோ இருக்குறமாறி தான் இருக்கு, இரு சிலுவைய அடிக்கிறேன், அடிச்சதும் போயிடலாம்”
“சேரி அடி”
.
.
சுற்றுமுற்றும் பார்த்தபடியே சிலுவைய அடிச்சுட்டு மேல எழும்பி, “போலாம்”னு ஒரு அடி எடுத்து வைத்தான். அந்தோனி தாத்தா அவன் கைலியை பிடித்து இழுத்தார். பயத்தில் அவர் சமாதி மேலேயே மயங்கி விழுந்தான்.
.
.
.
.
.
தெளிந்து எழும்பியவன் தன் வீட்டுக்கட்டிலில் கிடந்தான், நண்பனும் உடனிருந்தான். சிலுவை அடித்து அவன் கைலி கிழிந்திருந்தது.

17 Aug 2015

நாற்பதுகளில் சாகும் ஓர் ஆண் சமூகம்




நாற்பது வயதில் இறந்து போன பல ஆளுமைகளை நாம் கடந்து வந்திருப்போம். சமூகத்துக்கும் ஏதேனும் செய்துவிட்டு செத்தவர்கள் அவர்கள். சே, மீசைகவி, மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், இப்படி பட்டியலை நீட்டலாம். ஆனால் இவர்கள் இறந்துவிட்டவர்கள், இன்று ஆளுமைகளே காணக்கிடைத்தல் அரிது என்பதால் நாற்பதுகளின் ஆளுமைகளின் மரணம் நாம் அவ்வளவாக சந்திக்காத ஒன்று, சந்திக்க விரும்பாத ஒன்று.



மாறாக கிராமங்களில் ஒரு சமூகம் நாற்பதுகளில் ஆண்களை இழந்துகொண்டு இருக்கிறது, பறை இசை காதலர்கள், பறையை தன் மூச்சாக என்னி சாகுறவரைக்கும் பறைகொட்ட ஆசை கொண்டவர்கள் தன் சாவை விரைவில் எடுத்துகொள்கின்றனர். பறையையும், பறையர்களையும் தீட்டா பார்க்கின்ற சமூகம் நம்மளுடையது, பூர்வகுடிகளை, புதுகுடிகள் ஏறி மிதிப்பது, புதிதல்லவே!. “பறைனா என்னா தெறியுமா!, சும்மா உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் அதிரும், அடிவயிறே கலங்கும்”னு பேசுற பலரும் பறையை கத்துக்க முயலுவதில்லை, ஆனா ஆசைனு மட்டும் சொல்லுவோம். கத்துகனும்ன்றது சட்டம் இல்லனாலும் கொஞ்சம் வாசிக்கிறவங்கள மறியாதையா பாக்கலாம். வாழ வாய்ப்பளிக்கலாம் அது போதும.

பறை வாசிப்பவர்களின் வாழ்வு எப்படி போகிறதென்று பார்த்தால் கொடுமையிலும் கொடுமை. அப்பா சேர்த்த சொத்து கிடையாது, தாத்தாவின் நிலம் கிடையாது, அம்மா, பாட்டியிடம் நகை கிடையாது, எதுவுமே கிடையாது, காலாகாலமா வாழ்வியலில் அவர்கள் இருக்க பிடித்து கொண்டது பறையை மட்டுமே, வேறு தொழில்கள் செய்ய அவர்கள் முன்வருவது கிடையாது, வந்தாலும் நாம் ஜெயிக்க விட்டதும் கிடையாது. இருபத்தைந்து வயதில் அவர்களுக்கு திருமணம் நடக்கும், நாற்பதாவது வயதில் அவர்களுக்கு பத்து பதினைந்து வயதில் பிள்ளைகள் இருக்கும், கூடவே சாவை அவசரமாய் அழைக்கும் எல்லா பழக்கங்களும் இருக்கும். வாழ்வு ஒருவகையான அழுத்தத்திலே நகரும், தினமும் குடும்ப சண்டைகள் குழந்தைகளுக்கு நிம்மதியான, உணவையும், உறக்கத்தையும் கூட தராது. எப்படியோ பிள்ளைகள் பள்ளியில் படித்து வருவர், மிதிக்கும் சமூகத்தை கல்வி கொண்டு நகர்த்த முயலும் பருவம், குடும்பம் தரும் பிரச்சனைகளில் சத்தில்லாமல் இருக்கும், பறையடிச்சு சம்பாதிக்கிறதுல பாதிபணம் குடிக்கே போகும், நாற்பது நாற்பத்தைந்தில் அந்த இளைஞன் குடிக்கு பலியாவான், அப்புறம் அப்பா இல்லாத வீடு. அம்மாவின் உழைப்பில்தான் காலத்தை ஓட்டனும், அங்கு சில பிள்ளைகள் மட்டுமே படிப்பை தொடர்கின்றன, பல பிள்ளைகள் மீண்டும் பறை கொட்டவே வருகின்றனர். பதினைந்து வயதில் பறை, இருபது வயதில் எல்லா பழக்கமும், இருபத்தைந்தில் திருமணம், நாற்பத்தைந்தில் மரணம்.

இது ஒரு சைக்கிளாகவே நடந்து வருகிறது, இதற்கு என்ன காரணம்?, டாஸ்மாக்கா?, தனிமனித கட்டுப்பாடின்மையா? சமூகமா? அல்லது அரசா? என பலமுறை யோசித்ததுண்டு. ஒருவேலை பறை மேல் இவர்கள் கொண்ட காதலே காரணமாக இருக்கலாம். ஒரு கலையை மறக்காமல் சந்ததிகள் பல கடந்து கொண்டு வரும் ஒரு சமூகத்துக்கு கிடைக்கிற பரிசு தான் இது. பறையை விடுத்தல் என்பது இவர்களுக்கு சாகுற மாதிரி, உண்மையில் சாகுறதுக்குபதில் இவர்கள் இந்த கலையை விடுத்தலே நன்று. சொல்வது எளிது, செய்வது மிகமிகக்கடினம். பொது சனங்களுக்கு சென்றடையும் கலைகளே மக்களோடு சேர்ந்து நீண்ட நாள் வாழும், மாறாக குறிப்பிட்ட சமூகத்திற்குள்ளிருக்கும் அல்லது குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் ஒதுக்கபட்ட கலைகள் தாம் அழிவது மட்டுமின்றி, மக்களையும் சேர்த்து ஆழிக்கும்.

15 Aug 2015

கொடி தின வாழ்த்துகள்

சட்டைல கொடி குத்திகிட்டு திரியிர எல்லா குழந்தைகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர தினமெல்லாம் அவர்களுக்கு தான்யா. சிவப்பு கலரு மேல வருமா? கீழ வருமா?னு பலருக்கு தெறியாது, தப்பா குத்திட்டு வந்தா காதுல செமயா ஒரு திருகு கிடைக்கும், கூடவே கிடைக்குற அந்த அம்பது பைசா மிட்டாய்க்கு, அம்பது பைசாக்கு கொடி வாங்கி குத்திட்டு போவாங்க. அவங்களுக்கு புக்குல படிச்ச எல்லாருமே சுதந்திர போராட்ட தியாகிகள் தான், நமக்கு அப்படியல்ல நாம யாரயெல்லாம் சுதந்திர போராட்ட தியாகி லிஸ்ட்ல வச்சு இருந்தோமோ அவங்களையெல்லாம் சிலர் விமர்சனம் பன்னுனா, நாமலும் கொஞ்சம் இறங்கி அந்த குரூப் தியாகினு சொல்லுறவங்களையெல்லாம் விமர்சனம் பன்னுவோம்.




தேசப்பற்றுனா அது ஸ்கூல்ல படிக்கிறப்போ தான், உண்மையில் இந்தியானா ஒன்னுதான்னு, எல்லோரும் நம் சகோதர சகோதரிகள்னு நினைக்கிற ஒரு தேசப்பற்று. அது ஒரு உற்சாகமான ஒரு சுதந்திர விடுமுறை தினம். இன்னைக்கு ஃபேஸ்புக், வாட்ஸப்ல “சுதந்திர தின வாழ்த்துகள்” ஃபார்வர்டு பன்னுனாலும் விமர்சனம், பண்ணுலனாலும் விமர்சனம். கூடவே நேத்து ரிலீஸ் ஆன படத்துக்கும் விமர்சனம்.

சுதந்திர தின சிறப்பு திரைப்படம் வேற, ஆனா பசங்க ஜெய்ஹிந்த் படத்த பார்த்த கையோட, காந்தி, பாரதி படம் போட்டா அதையும் பாப்பாங்க, நாம அப்படி இல்ல. சிலருக்கு சுதந்திர தினம் இன்று விடுமுறையில், சிலருக்கு தூக்கத்தில், சிலருக்கு நேத்து ரிலீஸ் ஆன படத்தில், சிலருக்கு சுதந்திர தின சிறப்பு சலுகையில், சிலருக்கு டிவியில், சிலருக்கு குடும்பத்தில், சிலருக்கு கேக்கில், ஆனா ஸ்கூல் பசங்களுக்கு தான் உண்மையில் சட்டைல குத்தின கொடியில சுதந்திர தினம்.

எனிவே, சட்டைல கொடி குத்திகிட்டு திரிஞ்ச, திரியுர எல்லா குழந்தைகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

12 Aug 2015

ஹிந்துஸ்தான்லயா இருக்கோம்!


“நாம ஏன் இங்லிஷ் பேசனும்?”, கார்ப்ரெட்ல இந்த கேள்விக்கெல்லாம் வேலையே கிடையாது. கார்பொரெட் ஒரு குளோபல் கல்ச்சர், அங்க கஸ்டமர் தான் எல்லாம். கஸ்டமர் பொதுவா யூஸ் பன்னுறது ஆங்கிலம், சோ இங்லிஷ்ல தான் எல்லாமும் இருக்கனும். அது குளோபல் மொழியாக ஆக்கப்பட்டுவிட்டது, இத விட்டுவிடுவோம் எப்படியோ சொதப்பி சொதப்பி தங்க்லிஷ்ல ஆரமிச்சு, உடைஞ்ச இங்லிஷ் வழியா, தாய்மொழில யோசிச்சு, கணநேரத்துல இங்லிஷ்க்கு கன்வர்ட் பன்னி பேசி, தாய்மொழி ஸ்லாங்ல இங்லிசஸ் பேசி ஒருவழியா அந்த கல்ச்சருக்கு செட் ஆகிடுவோம். இன்னும் சில பேர் பிரிட்டிஷ் ஸ்டைல்ல, யோசனையே இங்லிஷ்ல வச்சுக்குற அளவுக்கு மாறிடுவாங்க. இதெல்லாம் பெருமை இல்ல கடமை.

அடுத்த மேட்டருக்கு வருவோம் “நாம ஏன் இந்தி பேசனும்?”, இந்த கேள்விக்கெல்லாம் பதிலே கிடையாது. இன்ஸ்டன்ட்டா சில பதில்கேள்விகள் தான் வரும். இந்தியாவுல இந்தி பேசாம எப்புடி?, ஆட்சி மொழியே அதுதானே?, தமிழ்நாட்ட தாண்டுனா எல்லா பக்கமும் இந்தி தானே?, ஹமா ஹிந்துஸ்தான் மெம் ரஹ ரஹெ ஹைம் யார்?. எல்லாத்தையும் விட்டுடுவோம் இதுக்கு பின்னாடி இருக்குற அரசியல் எல்லாம் வேண்டாம், ஒரு காலத்துலயும் தேசியக்கட்சி எதுவும் தமிழ்நாட்டுக்குல்ல இனி வரமுடியாது, வாழ்ந்தாழும், செத்தாலும் அது மாநில கட்சிகள் கூட தான். ஆனாலும் கூட இந்திய திணிக்க அயராது பாடுபடுறவனுங்க இருக்குறப்போ, எந்த பலனும் இல்லாம இந்திய உள்வாங்கி பலிகடாவா ஆகிட்டது ஹைதராபாத்தும், பெங்களூரும் தான். ஆனாலும் கூட சென்னை இன்னமும் சிதையாம இருக்குறது கொஞ்சம் கெத்தாதான் இருக்கு.

ட்ரெயினிங்க் செஷன்ல, பாதி சதவிகிதம் வடஇந்திய ஆட்கள்தான் ட்ரெயினிங் தராங்க, குளோபல் மொழியா ஆங்கிலம் இருக்க, இந்திய திணிக்க அவங்க படுறபாட பாக்க கொஞ்சம் காமெடியாதான் இருக்கு. ஃபுல் ஸ்பீட்ல இங்லிஷ்ல செஷன் போறப்போ இடையிடையே, இந்தி டயலாக்குகளை அள்ளி விடுவாங்க, ஆன எதுக்காக அது பன்னுறாங்கனு தான் புறியல, என் பேட்ஜ்ல பாதி பேருக்கு இந்தி தெறியும், சோ அவங்கள இம்ப்ரஸ் பன்னுறதுக்காக இருந்தா பிரச்சன இல்ல, ஒரு வேளை ட்ரெயினரோட தாய்மொழி ஹிந்தின்றதால, ஒரு ஃப்லோல வந்திருந்தாலும் பிரச்சன இல்ல. இதுதான் காரணமா இருக்கும்னு நினைச்சு இருந்தேன், ஆனா பொறவு தான் விசயம் தெரிய வந்தது,

இந்தி டயலாக் அள்ளி விடுறப்போ நாம மட்டும் தேமேனு இருக்க, இந்தி காரங்க எல்லாம் ஏதோ புரிஞ்சுகிட்டு சிரிப்பாங்க, கூடவே ட்ரெயினரும் சேர்ந்து சிரிப்பாரு ஆனா நாம சலனமே இல்லாம இருப்போம். இது போல இன்னைக்கு ஒரு சம்பவம் நடக்க நாம சவுத் இந்தியர்கள் மட்டும் சலனமே இல்லாம இருக்க, “என்னப்பா இந்தி புறியாம இந்த ஜோக்குக்கு கூட சிரிக்காம இருக்கிங்களேன்ற மாறி அந்த ட்ரெயினி எங்க எல்லாரயும் பாத்தாரு, பாத்தது மட்டும் இல்லாம “தேங்க்ஸ் டு தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஃபார் நாட் அலோவிங்க் யூ ஆல் டு லேர்ன் ஹிந்தி” அப்படின்னாரு. அவரு சொன்னதுல இருக்குற உள்குத்த புறிஞ்சுகிட்டு எல்லாருமே தான் சிரிச்சோம். இப்படி இங்லிஷ்லயே காமெடி பன்னலாம் எல்லோரும் சிரிப்போம். அவரு சொன்னது எங்கல நக்கள் பன்னதான்னாலும், இன்னும் ஹிந்திய உள்ள விடலன்ற கெத்துல தான் அந்த மொக்க டயலாக்குக்கு சிரிச்சோம்.

மொதோ சொன்ன மாதிரி இங்லிஷ்ல பேசுறப்போ ஒரு ஃப்லோல தாய்மொழில பேசியிருந்தா வருத்தம் ஏதும் இல்ல. கூடுதல் விசயம், தமிழ் ட்ரெயினர்களும் இருக்காங்க, எங்க பேட்ஜ்ல கனிசமா தமிழர்களும் இருக்கோம், கூடவே தமிழ்நாட்டுல தான் இருக்கோம், ஆனாலும் ஒரு தமிழ் ட்ரெயினர் கூட செஷன்ல ஃப்லோல கூட தமிழ் யூஸ் பன்னவே இல்லை!.

“ப்ரவுட் டு பீ அ தமிழியன்😉 ”

8 Aug 2015

Abdul Kalam  |  அப்துல் கலாம்




Graphite pencils on papers

Pencils          Steadtler (2B, 4B, 8B) Koh-i-noor(6B, 8B)
Paper            Brustro (200gsm A4)
Duration         4 hours

5 Aug 2015

பென்சிலோடு ஒரு பயணம்




பென்சிலில் கிறுக்காமல் யாராவது பள்ளி பருவத்தை கடந்து வந்திருப்போமாநிச்சயமாக இல்லை. மாங்காகாக்காயானை இப்படி எதையாவது கோடுகளால் வரைவதாய் எண்ணி கிறுக்கி இருப்போம்,இன்று நுன்னிய கிறுக்கல்களால் வரைவது தான் உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள் (Hyper-Realistic Pencil Drawings). அது என்ன உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள்இதை பத்தின புரிதல்இதை கலையாகபொழுதாக்கமாகதொழிலாக எடுத்து கொண்டவர்களுக்கு எப்படி தெறியவந்ததுஎல்லாம் ஒரு தேடலில் தான் துவங்கியது.
பொதுவாக சிலர் சொல்லுவதுண்டுஸ்கூல் படிக்கிறப்போ வரைஞ்சதுஅப்புறம் டச்சு விட்டுப்போச்சு,அங்கேதான் நாம் வரைதலை தொலைக்கிறோம். மீண்டும் எப்படி தொலைத்த அந்த வரைதலுடனான அந்த டச்சை மீட்டெடுப்பதுஅதற்குதான் இருக்கிறது கூகுல். கூகுலிடம்Pencil Drawingsஎன்று தேடினால் போதும்அனைத்து தகவல்களையும் கொடுக்கும்அது பத்தவில்லை என்றால் அதுற்குதானே இருக்கிறது ஃபேஸ்புக்கும்மேற்குறிப்பிட்ட அதே வார்த்தையால் ஃபேஸ்புக்கிலும் தேடிப்பாருங்கள்நிறைய பேஜுகளும்குரூப்புகளும் உள்ளனஅவற்றில் பென்சில் ஓவியங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்தும்வரையும் முறை குறித்தும் ஏகப்பட்ட தகவல்கள் உள்ளன. அட அதுவும் பத்தவில்லையாபராவாயில்லை இருக்கவே இருக்கிறது யூடியூப். மற்றும் இனையத்தில் தேடபென்சில் ஓவியங்களுக்கு தேவையான பொருட்களின் பெயர் பின்னால் பகிரப்பட்டுள்ளது. 
தேடிப் பாருங்கள்அனைத்தையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு புரிதலை பெற்ற பின்,அதற்கான மாற்று பொருட்களையும் தாமாகவே சோதித்து பார்க்கவும் முடியும்.
பென்சில் ஓவியங்களை ஒரு காடுன்னு வச்சுக்குவோம். பென்சில்கள் காட்டிலிருக்கும் மரங்கள். வீட்டில் நட்ராஜ் மரம் வளர்க்கும் நம்மில் பலர் காடுகளுக்கு செல்வதில்லை. காட்டினுல் சென்று பார்த்தால் தான் தெறியும் எத்தனை வகையான பென்சில்கள் உள்ளன என்று. பொதுவாக பென்சில் ஓவியத்தை ஒரு ரசிகனா இருந்து பார்த்தாஇரண்டு விமர்சனங்கள் வரலாம்ஒன்றுசூப்பர்இன்னொன்று சான்ஸே இல்லஇத பென்சில்ல பன்னுனதா நம்பவே முடியலஇவை தான் பென்சில் ஓவியத்துக்கும்உயர்-யதார்த்த பென்சில் ஓவியத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி. ஒரு புகைப்படத்தை பிரதி எடுத்தாற்போல் வரைவது தான் உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள்அதுதான் முன்சொன்ன தேடலில்வெகுதூரம் சென்றவர்களின் இலக்கு. அந்த இலக்கை அடையும் வரை ஒவ்வொரு ஓவியத்தையுமே அவர்கள் Experimental Success ஆகவே பார்க்க முடியும்.
அடுத்துமுக்கியமான ஒன்றுவரையும் முறை இங்குதான் சில விசயங்கள் இடிக்கின்றன. பொதுவாக பென்சில் ஓவியங்கள் வரைவதை இரண்டு முறைகளாக பிரிக்கலாம் ஒன்று Freehand drawingமற்றொன்று Grid guidelines drawing. இந்த இரண்டு முறைமைகளையும் தனித்தனியே உபயோகப்படுத்துபவர்கள் உண்டு. முதலாவதுபுகைபடத்தை புறக்கண்ணில் பார்த்துஅகக்கண்ணில் அளவெடுத்து வரைதல். இரண்டாமவதுகட்டம் கட்டி அளவெடுத்துஒவ்வொரு கட்டங்களாக ஓவியத்தை நிறைவு செய்தல். இதில் இரண்டாவது முறைமை பல ஓவியர்களால் கலை வடிவமாக பார்க்கப்படவில்லை மாறாக ஒரு நுனுக்க ஓவியமாகவே பார்க்கப்படுகிறது.அதில் சில நியாயங்கள் உண்டு என்பதால் ஒவ்வொரு பென்சில் ஓவியனும் ஒரு நுன்கலை வல்லுனறாகவே முயற்சிக்கிறான் என வைத்து கொள்ளலாம்.
ஒரு ஓவியத்தை நிறைவு செய்ய பல shades-களில் உள்ள பென்சில்களை உபயோகப்படுத்துவது அவசியம். அவை தான் ஓவியத்தின் யதார்த்தத்தை உறுதிசெய்கின்றன.
முன்னமே சொன்னாற்போல்சின்ன வயதில் செய்தாற்போல்மாங்காகாக்காயானை என எதை வேண்டுமானாலும் பென்சிலால் யதார்த்தமாக வரைய இயலும். பென்சிலில் வரைவதில் ஒரே ஒரு அளவீடு மட்டுமே உண்டு அது கருப்பு வெள்ளையில் மட்டுமே வரையமுடியும் என்பதே!. வண்ணத்தில் வரையவும் தனியே பலவகை பென்சில்கள் உள்ளன என்றாலும் இங்கு கருப்பு பென்சிலில் மட்டும் பயணிப்போம்.
வகை வகையான பென்சில்களை தவிறஓவியத்தின் யதார்த்த தன்மையை உறுதி செய்வதில் மேலும் பல பொருட்களுக்கும் பங்கு உண்டு அவைகளின் பெயர்கள் ஒரு பார்வைக்கு. மிச்ச விவரங்களுக்கு கூகுல் பன்னவும். Pencils with different shades(Graphite & Charcoal), Wax Pencil, Carpenter’s Flat Pencil, Mechanical Pencil, Woodless Pencils, White Gel Pen, Empty Pen, Paper Stump, Kneaded Eraser, Typewriter Eraser, Electrical Eraser, Battery Sharpeners, Sandpaper Blocks, Cotton, Chamois. இத்தனையும் இருந்தால் மட்டும் வரைஞ்சிட முடியுமா?. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அடுத்து மிக முக்கியமான பொருள் பேப்பர்பென்சில்களை போல பேப்பர்களும் பல வகைகளில் கிடைக்கின்றன அவற்றை தேட உபயோகப்படும் கூகுல் சொற்கள்Paper’s GSM(Grams Per Square Meter) & Paper’s Size. இவை அனைத்தும் ஒரு தகவலாகவே பகிறப்பட்டுள்ளன. உண்மையில்இவற்றின் தன்மைகளையும்எதனோடு எதை சேர்த்து வரைந்தால் எம்மதிறியான தன்மையில் ஓவியங்கள் வெளிவரும் என்பதையும் தெறிந்து கொள்ளசோதித்து தான் பார்க்க வேண்டும். பல பிராண்டுகளும்(Brands) உள்ளன அவற்றையும் சோதித்து பார்க்க வேண்டும். மேலும் அந்த சோதனைகளின் விளைவு அது அவரவர்களின் தனி பானியாக(Unique Style) மாறும்.
ஓவியத்தின் யதார்த்த தன்மைக்காகஒவ்வொரு ஓவியத்துக்கும் நீண்ட நேரம் செலவிட நேரலாம்,அப்படி செய்யும்போது சலிப்பும் ஏற்படலாம். இதனை போக்கஒவ்வொரு ஓவியரும் தனித்துவமான செயல்பாடுகளை செய்கின்றனர் அதாவது ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் வரைதல்ஒரு நேர அளவைக்குல் இவ்வளவு வரைதல்அல்லது தோணும்போது மட்டும் வரைதல்இம்மாதிரியான செயல்கள் தான் அவை.
இன்னொரு ஓவியனின் படைப்புகளோடு ஒப்பிடாமல்ஒரு படைப்பாக மட்டும் தனது ஓவியத்தை பார்த்துமன திருப்தியால் ஒரு இடைவெளியை அந்த ஓவியம்வரைந்தவனுக்கு கொடுக்குமேயாயின்,அதுதான் அந்த பயணத்தின் பாதி நிறைவுஅது முதற்கொண்டு ஓய்வெடுத்து ஓய்வெடுத்து முடிவில்லா பயணத்தை தொடரலாம்.
பொதுவாக பென்சில் ஓவியங்களை மட்டும் தனியாகதன் தொழிலாக யாரும் எடுப்பது இல்லை,மாறாகசிலர் நிறைய ஓவிய முறைகளோடு இதனையும் வரைபவர்களாக இருப்பார்கள்அல்லது,ஓவியத்திற்கு துளியும் சம்பந்தமில்லத துறையில் இருந்து கொண்டு இதை பொழுதாக்கமாக வரைபவர்களாக இருப்பார்கள். நாம வரையற ஓவியம் இன்னொருத்தரை ஈர்க்கும் போது தான்,நம்மிடம்வரைந்து தருமாறு கேட்பார்கள்அப்போதுதான் அது தொழிலாக மாறுகிறது. பொதுவாக வாய் வழி தான் (Word of Mouth) பென்சில் ஓவியங்களுக்கு சந்தை பரவியது. இப்போது ஃபேஸ்புக் பேஜுகள் வழியேவும் சந்தைகள் வளர்ந்துள்ளன.
எத்தனையோ ஓவிய முறைகள் இருந்தாலும்பென்சிலில் முகங்களை வரைந்து பரிசளிப்பது தான் இங்கு அதிகம் பரவி வருகிறது. காரணம் பண செலவு குறைவுஎளிதில் அனுகும் முறையில் பென்சில் ஓவியர்கள்/வல்லுனர்கள் இருப்பது. இவை இரண்டு மட்டுமல்லாமல் முழுமுதற்காரணமாய் இருப்பது மனித மனமும் தான். ஒரு அழகான இயற்கை காட்சி ஓவியம்மற்றொன்று அழகான(!) நம் முகத்தின் ஓவியம் இதில் எதை நம் மனம் விரும்பும்இதற்கான பதிலில் தான் உள்ளது பென்சில் ஓவியங்களுக்கு உண்டாகிவரும் சந்தை.
இறுதியாக ஒரு ஓவியத்துக்கு எவ்வளவு சன்மானம் வாங்குவது என்பதில் தான் ஓவியர்களுக்கு ஒரு பெரிய சங்கடமே உள்ளதுவிலை நிர்ணயத்தலில் பல அனுகுமுறைகள் உள்ளனயார் வரைந்தது?,என்ன அளவில் வரைந்தது?, எவ்வளவு நேரத்தில் வரைந்ததுஇப்படி பல காரணிகள் இருந்தாலும்அந்த ஓவியம் எவ்வளவு அழகாக’ உள்ளது என்பதனைக்கொண்டு விலையை கொடுக்க வரையச்சொல்லி கேட்டவர் முன்வருவாரேயாயின் அதுவே தக்க சன்மானமாக இருக்கு முடியும்.

-நாகா via அகம் மின்னிதழ்

3 Aug 2015

ஆதார் அட்ராசிட்டி



இன்னும் ரெண்டு நாள்ல, ஒரு கம்பெனில ட்ரெய்னீயா ஜாய்ன் பன்ன போறேன், ஒரு பத்து நாள்க்கு முன்னால கம்பனில இருந்து ஒரு மெஸ்ஸேஜ் ஃபோனுக்கு, ஆதார் கார்டையும் Reporting date அப்போ கொண்டு வாங்க, அப்படி ஆதார் கார்டு இல்லைனா தயவு செஞ்சு வேற ஒரு Reporting Dateக்கு Request பன்னுங்கனு சொல்லி சொன்னாங்க, ‘இலவு காத்த கிளி’ மாதிறி காத்திருந்து இப்போ தான் ஒரு வழியா Reporting date கிடைச்சது, ஆதார் இல்லைனா அதுவும் காலி.


இதே போல ஒரு வாரம் முன்னால பாஸ்போர்ட் அப்ளை பன்ன போனேன், அங்கையும் அதே கதை தான், கையில இருக்குற எல்லா Documentsம் கேக்க போறானுங்க, Address வேற எல்லா documents லயும் ஒவ்வொரு டைப்பா இருக்கு, கண்டிப்பா அலைய விடப்போறாங்கனு நினைச்சேன், ஆனா அங்க, எனக்கான பெயருக்கும் Addressக்கும் அவங்க கேட்ட ஒரே Document ஆதார் மட்டும் தான். ரொம்போ ஈசியாவே பாஸ்போர்ட் அப்ளிகேஷன் Granted ஆச்சு, அங்கயும் ஆதார் இல்லைனா கதை கந்தர்.

போன காங்ரஸ் பீரியட்ல இந்த ஆதார் கார்டு எடுக்க போறாங்கனு சொன்னப்போ, பேப்பர்ல அத பத்தி நிறைய ஆர்டிகள்ஸ் படிச்சு, “இந்த கைரேகை எடுக்குறது, கருவிழி பதிவு பன்னுறதெல்லாம் தப்பு, கவர்ன்மென்ட் கிரிமினல்ஸ்க்கு மட்டும் தான் இதயெல்லாம் எடுக்கும், நாட்டுல எல்லா குடிமகனோட அடையாளத்தையும் இப்படி எடுக்குறது ஜனநாயக விரோதம்னு நினைச்சுட்ருந்தேன்” நினைச்சது மட்டும் இல்ல, ஆதார்க்கு போட்டோ எடுக்க போறப்போ “நான் வரலம்மா!, எனக்கு ஆதார் கார்டு வேணாம்”னு சொன்னேன், எங்க அம்மா ஒரே போடா போட்டு, “ஒழுங்கா வா, ஃபோட்டோ எடுக்க போகலாம் ஊரே போயி எடுக்குறாங்க, நீ மட்டும் வரலனா என்ன அர்த்தம், லூசு மாதிரி பேசாத”னு கூட்டிட்டு போணாங்க.

ஆதார் வந்த அப்புறம் கேஸுக்கு, பேங்க்குக்கு, எல்லாத்துலயும் கியூல நின்னு ஆதார் நம்பர இனைச்சாச்சு, என்ன கியூல நிக்கிறப்போ மட்டும் தான் காண்டாச்சு. சோ மக்கழே ஊரோட ஒத்து வாழுறது சில இடங்கள்ல ஓகே தான், இல்லைனா பொழப்பு போயிருக்கும், பத்தோட பதினொன்னா ஆதார் இருக்கும்னு நினைச்சேன், ஆனா நாளைக்கு ஆதார் மட்டும் இருந்தா போதும்ன்ற நிலைமை வந்துடும் போல, ஆகவே மக்கழே, ஆதார் இன்னும் எடுக்காதவங்க சீக்கிரம் எடுத்துடுங்க.