17 Aug 2015

நாற்பதுகளில் சாகும் ஓர் ஆண் சமூகம்




நாற்பது வயதில் இறந்து போன பல ஆளுமைகளை நாம் கடந்து வந்திருப்போம். சமூகத்துக்கும் ஏதேனும் செய்துவிட்டு செத்தவர்கள் அவர்கள். சே, மீசைகவி, மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், இப்படி பட்டியலை நீட்டலாம். ஆனால் இவர்கள் இறந்துவிட்டவர்கள், இன்று ஆளுமைகளே காணக்கிடைத்தல் அரிது என்பதால் நாற்பதுகளின் ஆளுமைகளின் மரணம் நாம் அவ்வளவாக சந்திக்காத ஒன்று, சந்திக்க விரும்பாத ஒன்று.



மாறாக கிராமங்களில் ஒரு சமூகம் நாற்பதுகளில் ஆண்களை இழந்துகொண்டு இருக்கிறது, பறை இசை காதலர்கள், பறையை தன் மூச்சாக என்னி சாகுறவரைக்கும் பறைகொட்ட ஆசை கொண்டவர்கள் தன் சாவை விரைவில் எடுத்துகொள்கின்றனர். பறையையும், பறையர்களையும் தீட்டா பார்க்கின்ற சமூகம் நம்மளுடையது, பூர்வகுடிகளை, புதுகுடிகள் ஏறி மிதிப்பது, புதிதல்லவே!. “பறைனா என்னா தெறியுமா!, சும்மா உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் அதிரும், அடிவயிறே கலங்கும்”னு பேசுற பலரும் பறையை கத்துக்க முயலுவதில்லை, ஆனா ஆசைனு மட்டும் சொல்லுவோம். கத்துகனும்ன்றது சட்டம் இல்லனாலும் கொஞ்சம் வாசிக்கிறவங்கள மறியாதையா பாக்கலாம். வாழ வாய்ப்பளிக்கலாம் அது போதும.

பறை வாசிப்பவர்களின் வாழ்வு எப்படி போகிறதென்று பார்த்தால் கொடுமையிலும் கொடுமை. அப்பா சேர்த்த சொத்து கிடையாது, தாத்தாவின் நிலம் கிடையாது, அம்மா, பாட்டியிடம் நகை கிடையாது, எதுவுமே கிடையாது, காலாகாலமா வாழ்வியலில் அவர்கள் இருக்க பிடித்து கொண்டது பறையை மட்டுமே, வேறு தொழில்கள் செய்ய அவர்கள் முன்வருவது கிடையாது, வந்தாலும் நாம் ஜெயிக்க விட்டதும் கிடையாது. இருபத்தைந்து வயதில் அவர்களுக்கு திருமணம் நடக்கும், நாற்பதாவது வயதில் அவர்களுக்கு பத்து பதினைந்து வயதில் பிள்ளைகள் இருக்கும், கூடவே சாவை அவசரமாய் அழைக்கும் எல்லா பழக்கங்களும் இருக்கும். வாழ்வு ஒருவகையான அழுத்தத்திலே நகரும், தினமும் குடும்ப சண்டைகள் குழந்தைகளுக்கு நிம்மதியான, உணவையும், உறக்கத்தையும் கூட தராது. எப்படியோ பிள்ளைகள் பள்ளியில் படித்து வருவர், மிதிக்கும் சமூகத்தை கல்வி கொண்டு நகர்த்த முயலும் பருவம், குடும்பம் தரும் பிரச்சனைகளில் சத்தில்லாமல் இருக்கும், பறையடிச்சு சம்பாதிக்கிறதுல பாதிபணம் குடிக்கே போகும், நாற்பது நாற்பத்தைந்தில் அந்த இளைஞன் குடிக்கு பலியாவான், அப்புறம் அப்பா இல்லாத வீடு. அம்மாவின் உழைப்பில்தான் காலத்தை ஓட்டனும், அங்கு சில பிள்ளைகள் மட்டுமே படிப்பை தொடர்கின்றன, பல பிள்ளைகள் மீண்டும் பறை கொட்டவே வருகின்றனர். பதினைந்து வயதில் பறை, இருபது வயதில் எல்லா பழக்கமும், இருபத்தைந்தில் திருமணம், நாற்பத்தைந்தில் மரணம்.

இது ஒரு சைக்கிளாகவே நடந்து வருகிறது, இதற்கு என்ன காரணம்?, டாஸ்மாக்கா?, தனிமனித கட்டுப்பாடின்மையா? சமூகமா? அல்லது அரசா? என பலமுறை யோசித்ததுண்டு. ஒருவேலை பறை மேல் இவர்கள் கொண்ட காதலே காரணமாக இருக்கலாம். ஒரு கலையை மறக்காமல் சந்ததிகள் பல கடந்து கொண்டு வரும் ஒரு சமூகத்துக்கு கிடைக்கிற பரிசு தான் இது. பறையை விடுத்தல் என்பது இவர்களுக்கு சாகுற மாதிரி, உண்மையில் சாகுறதுக்குபதில் இவர்கள் இந்த கலையை விடுத்தலே நன்று. சொல்வது எளிது, செய்வது மிகமிகக்கடினம். பொது சனங்களுக்கு சென்றடையும் கலைகளே மக்களோடு சேர்ந்து நீண்ட நாள் வாழும், மாறாக குறிப்பிட்ட சமூகத்திற்குள்ளிருக்கும் அல்லது குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் ஒதுக்கபட்ட கலைகள் தாம் அழிவது மட்டுமின்றி, மக்களையும் சேர்த்து ஆழிக்கும்.

No comments:

Post a Comment