15 Aug 2015

கொடி தின வாழ்த்துகள்

சட்டைல கொடி குத்திகிட்டு திரியிர எல்லா குழந்தைகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர தினமெல்லாம் அவர்களுக்கு தான்யா. சிவப்பு கலரு மேல வருமா? கீழ வருமா?னு பலருக்கு தெறியாது, தப்பா குத்திட்டு வந்தா காதுல செமயா ஒரு திருகு கிடைக்கும், கூடவே கிடைக்குற அந்த அம்பது பைசா மிட்டாய்க்கு, அம்பது பைசாக்கு கொடி வாங்கி குத்திட்டு போவாங்க. அவங்களுக்கு புக்குல படிச்ச எல்லாருமே சுதந்திர போராட்ட தியாகிகள் தான், நமக்கு அப்படியல்ல நாம யாரயெல்லாம் சுதந்திர போராட்ட தியாகி லிஸ்ட்ல வச்சு இருந்தோமோ அவங்களையெல்லாம் சிலர் விமர்சனம் பன்னுனா, நாமலும் கொஞ்சம் இறங்கி அந்த குரூப் தியாகினு சொல்லுறவங்களையெல்லாம் விமர்சனம் பன்னுவோம்.




தேசப்பற்றுனா அது ஸ்கூல்ல படிக்கிறப்போ தான், உண்மையில் இந்தியானா ஒன்னுதான்னு, எல்லோரும் நம் சகோதர சகோதரிகள்னு நினைக்கிற ஒரு தேசப்பற்று. அது ஒரு உற்சாகமான ஒரு சுதந்திர விடுமுறை தினம். இன்னைக்கு ஃபேஸ்புக், வாட்ஸப்ல “சுதந்திர தின வாழ்த்துகள்” ஃபார்வர்டு பன்னுனாலும் விமர்சனம், பண்ணுலனாலும் விமர்சனம். கூடவே நேத்து ரிலீஸ் ஆன படத்துக்கும் விமர்சனம்.

சுதந்திர தின சிறப்பு திரைப்படம் வேற, ஆனா பசங்க ஜெய்ஹிந்த் படத்த பார்த்த கையோட, காந்தி, பாரதி படம் போட்டா அதையும் பாப்பாங்க, நாம அப்படி இல்ல. சிலருக்கு சுதந்திர தினம் இன்று விடுமுறையில், சிலருக்கு தூக்கத்தில், சிலருக்கு நேத்து ரிலீஸ் ஆன படத்தில், சிலருக்கு சுதந்திர தின சிறப்பு சலுகையில், சிலருக்கு டிவியில், சிலருக்கு குடும்பத்தில், சிலருக்கு கேக்கில், ஆனா ஸ்கூல் பசங்களுக்கு தான் உண்மையில் சட்டைல குத்தின கொடியில சுதந்திர தினம்.

எனிவே, சட்டைல கொடி குத்திகிட்டு திரிஞ்ச, திரியுர எல்லா குழந்தைகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

No comments:

Post a Comment