19 Nov 2016

மூணு-வீல் அவெஞ்சர்


தினமும் ஆஃபிஸ்ல இருந்து வெளியே வந்ததும், கழுத்துல இருக்குற அந்தப்பாசக்கயிற கழட்டி வண்டியோட டேங்க் கவர்ல வைக்கறது வழக்கம். இன்னைக்கும் சில மணிநேரத்துக்கு முன்ன ஆஃபிஸ்ல இருந்து கிளம்பி வெளிய வந்ததும் அத கழட்டி வைக்க வண்டிய ஓரமா நிப்பாட்டினேன். அப்போதான் எதிர்ல இருக்குற இன்னொரு கம்பெனியோட கேட்டு'கிட்ட புது பஜாஜ் vvvவண்டி ஒன்னு நிக்கிறது கண்ணுல பட்டது. பாத்தமாத்திரமே கண்ண வேற எங்கவும் திருப்ப முடியல!. பொதுவா எனக்கு அவெஞ்சர் வண்டி பிடிக்காது, அத பாத்தாலே சின்ன கொழந்தைங்க பெடல் இல்லாம காலால தள்ளி ஓட்டி வெளாடுர பொம்ம சைக்கிள் நியாபகம்தான் வந்துபோகும்.


ஆனா இன்னைக்கு, அந்தநியாபகம் வந்துபோற கேப்புக்கு முன்னமே சட்டுன்னு அந்த வண்டியில இருந்த ஏதோஒரு வித்தியாசம் அந்த வண்டிய ரொம்போ அழகா, கொஞ்சம் பிரமாண்டமா காட்டுச்சு. அது அந்த வண்டியில எக்ஸ்டராவா இருந்த அந்த ரெண்டு வீல். அது மாற்றுத்திறனாளி ஒருத்தரோட வண்டி, மொதோமுறையா கியர் வண்டி ஒன்ன எக்ஸ்டரா வீலோட பாக்குறேன். அந்த வண்டியோட கருப்பு கலரும், ரெண்டு எக்ஸ்டரா வீலும், அதோட ஷாக்-அப்சர்வரும், அந்தவண்டிக்கே உரிய அந்த விண்ட்-ஷீல்டும் அதோட கெத்த அதிகப்படுத்தினாலும் எல்லாத்துக்கும் மேல, அந்த வண்டில உட்காந்துருந்த அந்த மனுஷன்தான் கெத்து. அவரோட முகத்த பாத்ததும்தான் அந்த வண்டியோட விளம்பரத்துல வர்ற அந்த வாக்கியம் நியாபகத்துக்கு வந்தது, "Feel like God". :)