27 Sept 2015

கம்பெனி காசுகள்



என்னிடம் இருப்பதிலேயே ரொம்போ பழைய காசுகள் இவை இரண்டும் தான், ஒன்று டச்சு கிழக்கிந்திய கம்பெனியினுடையது(1790), இன்னொன்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினுடையது(1862). சில வருடங்கள் முன்னால பழைய காசுகள் சேகரிப்பதில் ரொம்ப ஆர்வமாக இருந்தபொழுது இந்த காசுகள் கிடைத்தன, அப்போவெல்லாம் பழைய காசுகளுக்காக நிறைய தெறிந்த நபர்களின் வீடுகளுக்கு செல்வதுண்டு, வீடுமுழுக்க தேடினாலும் அப்போது சமீபத்தில் செல்லாமல் போன ஐந்து, பத்து பைசாக்கல் தான் கிடைக்கும் வேறு உருப்படியான எந்த ஒரு காசும் கிடைக்காது. எனக்கு மட்டுமல்ல நாணயம் சேகரிக்கும் எவருக்குமே இந்த ஐந்து பத்து பைசாக்கள் சந்தோசத்தை கொடுப்பது இல்லை. 

அப்போது எனக்கு தேவையெல்லாம் சுதந்திரத்துக்கு முந்தய கால காசுகள்தான். என் சொந்தக்கார மாப்புள ஒருவனிடமிருந்துதான் இப்போது என்னிடமுள்ள முக்கால்வாசி காசுகள் கிடைத்தது தனி கதை, அவனின் வீட்டில் அந்த காசுகள் ஒரு தானிய பெட்டியில் இருந்தன. அவனுக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை என்பதாலும், நான் கேட்டுக்கொண்டதாலும் என்னிடம் கொடுத்தான், என் கணிப்புப்படி அந்த காசுகள் அவனின் தாத்தாவினுடையதாக இருக்கலாம், சைக்கிலுக்கு பஞ்சர் ஒட்டுமொரு இடம் அவனின் வீட்டிலிறுக்கும், பஞ்சருக்கு வாங்கிய காசுகளை அதே போன்றதொரு தானிய பெட்டியில் தான் சேர்த்துவைப்பார்கள், நெற்குறுதும் வீட்டிலிறுந்தது. உணவுக்காக பணம் செலவாகாததால் அந்த காசுகள் செலவாகாமலே இருந்திருக்கலாம் என்பதும் என் கணிப்பு.

சரி இந்த இரண்டு காசுக்கு வருவோம் இவை இரண்டில் பிரிட்டிஷ் இந்தியா விக்டோரியா ராணியின் ஒரு ரூபாய் காசு நண்பர் ஒருவரிடமிருந்து பெற்றது, மற்றுமொரு டச்சு கிழக்கிந்திய காசு, நாங்கள் இருந்த ஒரு பழைய காலத்து வீட்டின் கொள்ளையிலிருந்து கண்டெடுத்தது, ஆனால் கிடைக்கும் போது அது காசு என தெறியாது, அந்த அளவுக்கு அதில் துரு ஏறியிருந்தது. அது என்னவென்று தெறியாமல் விளைவாடுவதற்காக எடுத்து வைத்திருந்தேன். ரொம்ப நாட்களாக அது எங்க வீட்டு பாத்ரூமின் சிலாப்பிலேயே கிடந்தது. காசுகள் பற்றிய ஒரு பொசெஸ்ஸன் வந்ததும், எதார்த்தமாக பாத்ரூமிலிருந்த ஆசிட்டை ஒரு கிண்ணத்தில் நிரப்பி அதை மூழ்கச்செய்து பார்த்த பொழுதுதான் அது ஒரு காசு என்பதே தெறிந்தது, அந்த தருணத்தின் சந்தோசம் அற்புதமானது, என் ஊரிலேயே என்னிடம் தான் ரொம்போ பழையதொரு காசு இருக்கின்றது என்ற பெருமை கலந்த சந்தோசம்.

அதுபோன்றதொரு தருணமேதும் அதன் பின் நடக்கவில்லை. அதன் பின பழங்கால பொருட்களை தேடுவதும், அவற்றை மியூசியம்களில் பார்ப்பதும் பிடித்ததாக இருந்தது. இப்போதெல்லாம் அவை எதுவுமே இல்லை எல்லா பழைய பொருட்களையும், காசுகளையும் இண்டெர்நெட்டில் பார்ப்பதோடு சரி. காரணம் அதன் பின் இயங்கும் பெரிய போலிச்சந்தை. என்னிடமிருக்கும் காசுகளை பற்றி படிக்க கூகுள் செய்யும் போது பலவற்றை படித்தேன், இந்த பழம்பொருள்/காசுகள் சேகரிப்பின் மீது இருக்கும் மோகத்தின் காரணமாக மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், எவ்வளவு செலவு செய்கிறார்கள், எவ்வளவு ஏமாறுகிறார்கள் எவ்வளவு ஏமாற்றுகிறார்கள் என்பன போன்றவை அவை. சில சைட்டுகளும், சில தகவல்களும், சிலவற்றின் மதிப்புகளும் பெருத்த தலைவலியை கொடுத்தன அத்தோடு சேகரிப்பின் மீதிருந்த ஆசையை விட்டுவிட்டேன், பின்னர் தரவுகளை படிப்பதோடு மட்டும் சரி. இன்றுவரை தானாக கிடைக்கும் சில பழங்கால பொருட்களை வைத்துக்கொண்டு அவற்றை பற்றி தேடிப்படிப்பதோடு நிறுத்திக்கொண்டேன். காசுகளையும் பொருட்களையும் தேடுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன இந்த ரெண்டு கம்பெனிகளும், அவற்றின் காசுகளும் இங்கு வராமலிருந்தாலே நன்றாக இருந்திருக்கும். இந்த கம்பெனிகள் நம்மை அடிமையாக்கின, நம் வளங்களை சுரண்டின, நம்மை பாழ் படுத்தின, இந்த காசுகளை பார்த்தாய் மனக்கண்ணில் நான் பார்க்காத கஷ்டகாலங்கள் தான் பிம்பங்களாக வருகிறது, மாறாக பழைய ஐந்து, பத்து, இருபது பைசாக்கள் பார்க்கும் போது, நான் உணர்ந்த மிட்டாயும், பெட்டிக்கடையும், ஸ்கூலும் தான் பிம்பங்களாக மலர்கிறது.

17 Sept 2015

மக்பூல் ஃபிதா ஹுசைன்



இன்று மக்பூல் ஃபிதா ஹுசைனின் நூறாவது பிறந்தநாள். கூகுளின் டூடுல் இன்று அருமையாக வடிவமைக்கப்பட்டிறுந்தது. கையில் எப்போதும் ஒரு தூரிகையை, ஊன்றுகோலாய் வைத்திருப்பார் அதனையும் இணைத்து அழகாக வரைந்திருந்தனர். PAG - Progressive Artist Group அப்படினு 1947ல் பிரிவினைக்கு பின் ஒரு அமைப்பு ஆரம்பித்து இந்திய ஓவியக்கலையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டு சென்றார். திரைப்படங்களுக்கு பிரிண்ட் மற்றும் போஸ்டர்களும் வடிவைத்து வந்தவர், சில படங்களை இயக்கியும் உள்ளார். “Through the eyes of a painter”ன்ற 1967 அவர் எடுத்த 17 நிமிட குறும்படம் அதில் குறிப்பிடத்தக்கது, இந்தியாவின் பிகாஸ்ஸோ என அழைக்கப்பட்டவர், இந்தியாவின் மூன்று பத்ம விருதுகளையும் பெற்றவர். தன்னுடைய 80வது வயதுக்குபின் பல சர்ச்சைகளில் சிக்கினார், இந்து கடவுள்கள், பாரத மாதா இவர்களின் திருவுருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் பல இந்துத்துவ அமைப்புகள் அவர் மீது வழக்குகள் தொடுத்தன, ஒருமுறை அவரின் வீடும் தாக்கப்பட்டது, நாடு கடத்துமாறும் பிரச்சனைகள் செய்தனர். இதனால் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்து அங்கேயே வசித்து அங்கேயே இறந்தும் போனார். கடைசி காலத்தில் அவரால் இந்தியாவில் வாழமுடியவில்லை, சர்ச்சை காலங்களில் இந்திய ஊடகங்கள் “MF Hussain – Painter or Butcher”, “Art for Mission Kashmir” என்று அவரை தேசவிரோத ஆளாக காட்டினர்.

.

.

.

.
.
இப்படியெல்லாம் எழுதுனா ரொம்போ ஃபார்மலா இருக்கும், ஆனா மனுஷன் செம 2011ல தன்னோட 95வது வயதுல ஹார்ட் அட்டாக்ல இறந்தாரு, இவர் வரைந்ததுக்கு இந்து அமைப்புகள் ஒன்னும் பன்னலனா தான் ஆச்சர்யம், அதும் 1970ல வரைஞ்ச ஒரு ஓவியத்துக்கு 96ல பிரச்சன பன்னுனாங்க. 2010ல கத்தார் அவருக்கு சிறப்பு குடியுறிமை கொடுத்தது, உடனே தனது இந்திய பாஸ்போர்ட்டையும் சரண்டர் செய்துவிட்டார். நாடெல்லாம் மனுசனுக்குத்தான் கலைஞனுக்கு இல்லைனு நிரூபித்தவர், அவரின் சில பேட்டிகளை பார்த்திருக்கிறேன் செம ஷ்டைலாக இருக்கும், அவருக்கு ஃபெர்ராரி கார் மிகவும் பிடிக்குமாம், அதும் சிகப்பு கலரில். உருவங்களை அல்லாவை தவிர வேரு யாரும் படைக்கமுடியாது, ஓவியம் வரைதல் பாவம் என இஸ்லாமிய நண்பர்கள் சிலர் சொல்லவும் கேட்டிருக்கிறேன். ஆச்சர்யமாக இஸ்லாத்திலிருந்து ஒரு ஓவியர் அதும் தனது பதின்ம வயதிலிருந்து வரைந்து வந்திருக்கிறார், அந்த ‘through the eyes of a painter’ படம் ஒன்னும் அவ்வளவு பெரிய படம் அல்ல, சாதாரண படம் தான் அவரின் சோதனை முயற்சி, ஒரு கலைஞனின் பார்வையில் ஒரு கிராமத்தின் நிகழ்வுகளை படமாக்கியிருப்பார். கலைஞன் எல்லாவற்றிலும் எப்படி பெண்மையை பார்க்கிறான் என்பது அந்த படம் முழுதும் பார்த்தால் புரியும். கிட்டதட்ட 90வருடங்கள் தூரிகையை பிடித்தவர். அந்த PAG குரூப்பை பற்றி படித்து பாருங்கள் அதில் இவருடன் சேர்ந்து இந்து, முஸ்லிம், கிருஷ்டியன் என எல்லாருமே இருப்பார்கள், அவர்கள் இல்லைனா இன்னைக்கு மாடர்ன் ஆர்ட் இந்தியாவிற்குள்ளேயே வந்திருக்காது, குறிப்பாக, கியூபிச வகை ஓவியங்கள்.

நூறு அகவைக்கு பின் அவர் இறந்திருக்கலாம் என்பது மட்டுமே, அவரின் வாழ்வில் ஒரே ஒரு குறை, மற்றபடி, அவர் தன் சிறு வயதில் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் சேர்த்து, செம்மையாகவே வாழ்ந்து இறந்தார்.

14 Sept 2015

றிசா - லொஇ


இப்பொழுதெல்லாம் எந்த பெயர்ச்செற்களை பார்த்தாலும் அந்த பெயர்களின் எழுத்துகளினூடே சில மாற்றங்கள் செய்து வித்தியாசமாக எழுதிப்பார்க்க மனம் எத்தனிக்கிறது.


காரணம் ஒரு ஃபேஸ்புக் நண்பர், அவர் பெயர் ‘றிசா’. இஸ்லாமியக்கல்லூரியில் படித்து வந்தமையால் ரிசுவான், ரியாஸ் போன்ற பெயர் கொண்ட நண்பர்கள் உண்டு, ஒரு கணம் கூட அவர்களின் பெயர்களை ‘றிசுவான்’, ‘றியாஸ்’ என்றும் கூட எழுதலாமே என்று நினைத்தது இல்லை. இவ்வாறு எழுதலாமா என்றெல்லாம் தெறியவில்லை ஆனால் ‘றிசா’ என்பது மிகவும் பிடித்திருந்தது, அதில் ஒரு ஈர்ப்பும் இருப்பதாகவே தோன்றுகின்றது. பேஸ்புக் வெரிஃபிகேஷன் தொல்லையால் நண்பரின் பெயர் 'Riza Hassen' என மாறியதில் அவருக்கு இணையாக எனக்கும் வருத்தம் இருந்தது. 

சென்ஐ வந்த பிறகு, சில வெஸ்டர்ன் ஸ்டைல் ஹோட்டல்கள் மற்றும் கடைகள் லோகலைசேஷனுக்காக ஆங்கிலப்பெயர்களின் கூடவே தமிழிழும் அவற்றின் பெயர்களை முகப்பு பேனர்களில் உபயோகப்படுத்தியிருப்பதை காணமுடிந்தது, அதிலும் சிலவற்றின் பெயர்கள் சற்று ஈர்ப்பாக இருக்கும். ‘LOIEE’ எனும் கடைக்கு, ‘லொஇ’ என தமிழில் எழுதியிறுந்தனர். இவற்றையெல்லாம் தினமும் பார்த்து வருவதால் தினமும் நண்பர்களின் பெயர்களையும் அவ்வாறு எதாவது மாற்றம் செய்து எழுதிப்பார்க்க தோன்றுகின்றது.

பள்ளியில் படிக்கும் போது கடிதம் எழுதும் பயிற்சிகளில் “மதிப்பிற்குறிய ஐயா,” என்று எழுத வேண்டாம் “மதிப்பிற்குறிய அய்யா,” என்றே எழுதுமாறு தமிழாசிரியர் தெளிவுபடுத்தியிருந்தார், அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெறியவில்லை. இவற்றை நீங்களும் உபயோகித்து பார்க்க போகிறீர்கள் என்றால், பெயர்ச்சொற்களை மற்றும் முயற்சி செய்து பார்க்கவும், மற்ற சொற்களினிடத்தே வேண்டாம். அதாவது வாழ்க்கை, நண்பன் போன்றவற்றை வாழ்க்ஐ, னண்பன் என்றெல்லாம் எழுதி பார்க்க வேண்டாம் அது நாராசமாக இருக்கும். 

7 Sept 2015

Al Pacino  |  அல் பச்சினொ




Ballpoint Pen on papers


Pen              Riton Ballpen(0.5mm)
Paper           Brustro (200gsm A4)
Duration       2.5 hours

6 Sept 2015

புது நூரு ரூபாய்


ரெண்டு நாள் முன்னால எடிஎம்’ல இருந்து எடுத்த ஒரு நூரு ரூபாய் நோட்ட பாத்து பயந்துடேன், ஒரு வேலை இது கள்ள நோட்டா இருக்குமோன்னு. இந்த ஃபோட்டோவ பாத்தா உங்களுக்கே புரியும். ரூபாய் நோட்டுல இருக்குற நம்பர் அப்டியே சின்னதுல இருந்து பெருசாகிட்டே போகிருக்கு.


அப்புறம் கூகுல் பன்னுனப்புறம் தான் தெரிஞ்சது, போன ஜூலைலயே ஆர்.பி.ஐ இந்த மாதிறி புது விதமான பேட்டர்ன்’ல நூரு ரூபாய் நோட்டு இருக்கும்னு அனவுன்ஸ் பன்னி ரிலீஸும் பன்னிடாங்களாம். இந்த நியூஸ அப்பவே படிச்ச நியாபகம், ஆனா ஒழுங்கா கவனிக்காம நான் என்ன புரிஞ்சிகிட்டேனா, இனி நூரு ரூபாய் நோட்டெல்லாம் சின்ன நம்பர்ல இருந்து பெரிய நம்பர்ல முடியும்னு. ‘RBI issues new 100Rs notes with numbering pattern in ascending size’. இந்த Ascending size’ன்றத தான் நான் Ascending numbers’னு நினச்சுட்டு விட்டுடேன். ஒழுங்கா கவனிச்சிருந்தா இப்போ இந்த ஷாக் வந்திருக்காது. அதுவும் அந்த கடைசி நம்பர பாத்ததும் தான் ரொம்போ ஷாக் ஆகிட்டேன், எவ்ளோ பெரிய சைஸ்!

2 Sept 2015

கீழத்தெரு


புதியதலைமுறை’ல ஒரு முறை கோணங்கி சொன்னார் “இன்னமும் கீழத்தெருவும் மேலத்தெருவுமே ஒன்னு சேரல, இதுல எங்கடே சாதியற்ற சமூகம் அமைப்பிங்க”னு. அன்றுதான் எனக்கு விளங்கியது எவ்வளவு வேறுபாடுகள் கொண்ட கிராமத்தில் வாழ்கிறோம் என்று. இரண்டையும் இணைக்குமிடம் பள்ளிகூடம்தான் அதுலயும் தான் எத்துனை வேறுபாடு. இருந்தாலும் கோயிலயும், சுடிகாட்டையும் ஒப்பிட்டு பார்த்தா, பள்ளிகூடம் எவ்வளவோ தேவலாம். எல்லா ஊருலயுமே அசால்டா இறுக்குது இந்த கீழத்தெரு மேலத்தெரு சாதிய சம்பரதாய அடக்குமுறை. மேலத்தெருவில் காலியாகும் வீடுகளில் சமீபமாக கீழத்தெருவினர் குடியேறுகின்றனர். ஆனால் அதுபோல கீழத்தெரு வீடுகளில் மேலத்தெருவினர் மாறுவதில்லை. வீடே இருப்பதில்லை என்பதும் ஒருபுறம் இருக்க, வீடிருந்தாலும் குடியேறுவதுமில்லை, மேலத்தெருவின் வீடுகள், கீழத்தெருவின் இடங்களை தின்று மேலத்தெருக்கலாக மாற்றுகின்றன, வாய்ப்பிருக்கும் சிலர் மேலத்தெருவில் குடியேறிக்கொள்ளலாம். சமீப காலமாக கிராமங்களில் கீழத்தெருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனவே தவிற, இரண்டும் ஒன்னு சேரவில்லை.


இதையெல்லாம் யோசிக்கறப்போ, நாங்க இப்போ குடியிருக்குற அக்ரகாரம் நியாபகம் வந்தது, அது பரவாயில்ல இப்போ எல்லோரும் குடியேறிவற்றாங்க, அக்ரகார ஆட்கள் டவுன் பக்கம் போறதால, இன்னைக்கு எங்க அக்ரகாரத்துல சரிசமமா எல்லாரும் இருக்கோம், இங்க சரிசமம்னு சொன்னது குடியிருக்குற அளவுல.

பி.கு: எங்க அக்ரஹாரத்துல சிவன் கோயில் கீழஅக்ரஹாரத்துலயும், பெருமாள் கோயில் மேல அக்ரஹாரத்துலயும் இருக்கு, ஆக மொத்தம் இங்கயும் சாதிமாதிரி என்னமோ இருக்கு போல.