17 Sept 2015

மக்பூல் ஃபிதா ஹுசைன்



இன்று மக்பூல் ஃபிதா ஹுசைனின் நூறாவது பிறந்தநாள். கூகுளின் டூடுல் இன்று அருமையாக வடிவமைக்கப்பட்டிறுந்தது. கையில் எப்போதும் ஒரு தூரிகையை, ஊன்றுகோலாய் வைத்திருப்பார் அதனையும் இணைத்து அழகாக வரைந்திருந்தனர். PAG - Progressive Artist Group அப்படினு 1947ல் பிரிவினைக்கு பின் ஒரு அமைப்பு ஆரம்பித்து இந்திய ஓவியக்கலையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டு சென்றார். திரைப்படங்களுக்கு பிரிண்ட் மற்றும் போஸ்டர்களும் வடிவைத்து வந்தவர், சில படங்களை இயக்கியும் உள்ளார். “Through the eyes of a painter”ன்ற 1967 அவர் எடுத்த 17 நிமிட குறும்படம் அதில் குறிப்பிடத்தக்கது, இந்தியாவின் பிகாஸ்ஸோ என அழைக்கப்பட்டவர், இந்தியாவின் மூன்று பத்ம விருதுகளையும் பெற்றவர். தன்னுடைய 80வது வயதுக்குபின் பல சர்ச்சைகளில் சிக்கினார், இந்து கடவுள்கள், பாரத மாதா இவர்களின் திருவுருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் பல இந்துத்துவ அமைப்புகள் அவர் மீது வழக்குகள் தொடுத்தன, ஒருமுறை அவரின் வீடும் தாக்கப்பட்டது, நாடு கடத்துமாறும் பிரச்சனைகள் செய்தனர். இதனால் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்து அங்கேயே வசித்து அங்கேயே இறந்தும் போனார். கடைசி காலத்தில் அவரால் இந்தியாவில் வாழமுடியவில்லை, சர்ச்சை காலங்களில் இந்திய ஊடகங்கள் “MF Hussain – Painter or Butcher”, “Art for Mission Kashmir” என்று அவரை தேசவிரோத ஆளாக காட்டினர்.

.

.

.

.
.
இப்படியெல்லாம் எழுதுனா ரொம்போ ஃபார்மலா இருக்கும், ஆனா மனுஷன் செம 2011ல தன்னோட 95வது வயதுல ஹார்ட் அட்டாக்ல இறந்தாரு, இவர் வரைந்ததுக்கு இந்து அமைப்புகள் ஒன்னும் பன்னலனா தான் ஆச்சர்யம், அதும் 1970ல வரைஞ்ச ஒரு ஓவியத்துக்கு 96ல பிரச்சன பன்னுனாங்க. 2010ல கத்தார் அவருக்கு சிறப்பு குடியுறிமை கொடுத்தது, உடனே தனது இந்திய பாஸ்போர்ட்டையும் சரண்டர் செய்துவிட்டார். நாடெல்லாம் மனுசனுக்குத்தான் கலைஞனுக்கு இல்லைனு நிரூபித்தவர், அவரின் சில பேட்டிகளை பார்த்திருக்கிறேன் செம ஷ்டைலாக இருக்கும், அவருக்கு ஃபெர்ராரி கார் மிகவும் பிடிக்குமாம், அதும் சிகப்பு கலரில். உருவங்களை அல்லாவை தவிர வேரு யாரும் படைக்கமுடியாது, ஓவியம் வரைதல் பாவம் என இஸ்லாமிய நண்பர்கள் சிலர் சொல்லவும் கேட்டிருக்கிறேன். ஆச்சர்யமாக இஸ்லாத்திலிருந்து ஒரு ஓவியர் அதும் தனது பதின்ம வயதிலிருந்து வரைந்து வந்திருக்கிறார், அந்த ‘through the eyes of a painter’ படம் ஒன்னும் அவ்வளவு பெரிய படம் அல்ல, சாதாரண படம் தான் அவரின் சோதனை முயற்சி, ஒரு கலைஞனின் பார்வையில் ஒரு கிராமத்தின் நிகழ்வுகளை படமாக்கியிருப்பார். கலைஞன் எல்லாவற்றிலும் எப்படி பெண்மையை பார்க்கிறான் என்பது அந்த படம் முழுதும் பார்த்தால் புரியும். கிட்டதட்ட 90வருடங்கள் தூரிகையை பிடித்தவர். அந்த PAG குரூப்பை பற்றி படித்து பாருங்கள் அதில் இவருடன் சேர்ந்து இந்து, முஸ்லிம், கிருஷ்டியன் என எல்லாருமே இருப்பார்கள், அவர்கள் இல்லைனா இன்னைக்கு மாடர்ன் ஆர்ட் இந்தியாவிற்குள்ளேயே வந்திருக்காது, குறிப்பாக, கியூபிச வகை ஓவியங்கள்.

நூறு அகவைக்கு பின் அவர் இறந்திருக்கலாம் என்பது மட்டுமே, அவரின் வாழ்வில் ஒரே ஒரு குறை, மற்றபடி, அவர் தன் சிறு வயதில் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் சேர்த்து, செம்மையாகவே வாழ்ந்து இறந்தார்.

No comments:

Post a Comment