31 Jul 2015

மூடர் உலகில் - சசி

“ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில ஜெயலலிதாவை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தார் காந்தியவாதி சசிபெருமாள்” இத கேட்டதும் யார்ரா இந்த ஆளு, விளம்பரம் விரும்பி, சரியான லூசா இருப்பாரு போலனு கடந்து போயாச்சு. அவரோட வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உண்ணாவிரதம் இருந்தப்ப வேலயத்த அளு உலகம் தெரியாம இருக்காருனு விட்டாச்சு, ஆனா தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் நிறைய முறை மதுவிலக்குக்காக நிறைய கவன ஈர்ப்பு போராட்டம் பன்னிருக்காரு, ஆனா நாம் உட்பட அரசும், ஊடகமும் அவ்வளவா கண்டுக்கல, காரணங்கள் பல, காந்தியம்ன்ற வார்த்தை பிடிக்காமல் இருக்கலாம். குடிக்கிறவங்க இருக்குறப்போ, விக்கிறவங்கள ஏன்யா நோண்டுறனு இருக்கலாம், வயசான காலத்தில ஏன்யா இந்த வேலைனு இருக்கலாம், எல்லாத்துக்கும் மேல விளம்பரம் விரும்பினு அலட்சியமா கூட இருக்கலாம்.

மூடர் உலகில் தெளிந்து நிற்பவன் மூடன். நல்ல வேலையாக இந்த மூடன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, போராட்டத்தில் இருக்கும் போதே மயங்கி இரத்தம் கசிந்து செத்து போயிட்டாரு, இப்பவும் இவரை விட மாட்டாங்க, இவரின் பெயரில் அரசியல் நடக்கும், அதன் மூலம் ஏதாவது ஒரு நல்லது நடந்தாலும் மகிழ்ச்சியே. இவர் போல மனிதர்கள் ஏன்யா இந்த மாதிரி வேலையெல்லாம் பன்னுறாங்கனு கேள்விகள் பல உண்டு, பதில்கள் ஏதும் இல்லை. இருக்குற வரைக்கும் போராடிகிட்டு தான் இருப்பங்க இவர் போன்ற ஆளுங்க, சாகுறவரைக்கும் ஏதும் நடக்காது, செத்ததுக்கு அப்புறமாவது எதாவது நடக்குமானும் தெறியாது, பொருத்திருந்து தான் பார்க்கனும். இந்த சாவுதான் அவருக்கு அவருடைய தெளிந்த நோக்கத்திலிருந்து நிம்மதியான உறக்கத்தை வழங்கியுள்ளதுனு தோனுது, வழக்கம் போல் நமது சீக்குவந்த சமூகத்தை அந்த சீக்குக்கு பழக்குவோமாக.


26 Jul 2015

பெயரற்று இருத்தலே மேல்


பெயரோடு இனிசியல் போடுவதில் ஒரு நிச்சயிக்கப்பட்ட வடிவம் இருக்கிறதாம். பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வடிவிலும், தமிழில் எழுதும் போது ஒரு வடிவிலும் எழுத வேண்டும். அதாவது பெயரை தமிழில் எழுதும் போது பெயருக்கு முன் இனிசியல் இருக்க வேண்டும் (நா. நாகராஜ் – நாராயணனின் மகன் நாகராஜ்). ஆங்கிலத்தில் எழுதும் போது பெயருக்கு பின் இனிசியலை எழுத வேண்டும் (Nagaraj N – Nagaraj son of Narayanan). இது, எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் தெளிவுபடுத்தியது.


அப்படியே சரியான வடிவில் எழுதிக்கொண்டிருந்த போது, அது எப்படி சரி ஆகும், “நீ உன் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தானே பொறந்தே!. ஏன் அப்பாவின் பெயரை மட்டும் சேர்க்கனும். காலாகாலமா இனிசியல்ல தந்தைவழி பெயர்கள் மட்டுமே நினைவுல வச்சிருக்கோம். ஆக நீங்களாவது உங்க காலத்துல புள்ளைங்களுக்கு, அம்மா அப்பா ரெண்டு பேரு பெயரையும் சேர்த்து பதியுங்க”னு இன்னொரு ஆசிரியர் தெளிவு படுத்தினார்.

அதுமுதல் பெயரோடு இரண்டு இனிசியல்களையும் சேர்த்து எழுத பழகியாச்சு. இப்போ காலெஜ், இன்னுமொரு ஆசிரியர், “ஏண்டா! உனக்கு தானடா பேரு வச்சாங்க அதுல ஏண்டா உன் அப்பா, அம்மா, தாத்தா’னு குடும்பத்து பேரஎல்லாம் சேக்குறிங்க, உங்க அப்பா அம்மாவ பெருமைபடுத்தனும்னா உன் பேருக்கு பின்னால அவங்க பேர போடனும்னு அவசியம் இல்ல. உருப்படியா வாழ்ந்தா அதுவே போதும்”னு தெளிவு படுத்தினாரு.

சரினு நம்ம பெயரை மட்டும் எழுதிட்டு இருக்குறப்போ, “நமக்கான பெயரை ஏன் சின்ன வயசுலயே அம்மா அப்பா வைக்கனும், ஏன் நாமலே வச்சுக்க கூடாது. அம்மா அப்பா வைக்கிறதனால அவங்களோட நாடு, மத, இன, சாதி, குடும்ப பெயரா அடையாளப்படுத்தப்படுது, கவர்ன்மென்ட் கெஸட்’ல இனி நம்ம பெயர மாத்துறதுக்கு நெறைய பணமும், நேரமும் செலவாகும். சோ பெர்த் சர்ட்டிஃபிகெட்ல இருக்குறது இருக்கட்டும். வெளிவுலகத்துக்கு தன்ன அடையாளப்படுத்த நமக்கான பெயர நாமலே தேர்ந்தெடுத்துகலாம். பெயரு எதுவா வேணா இருக்கலாம், அர்த்தம் இல்லாம கூட வைக்கலாம், இதுக்கு முன்னால உலகத்துல யாருமே வைக்காத பெயரக்கூட வச்சிகலாம், ஒன்னு தப்பு இல்ல, பெயர் என்பது ஒரு அடையாளம் மட்டுமே”னு சமூகத்துல பல ஆசான்கள் தங்களின் புனைப்பெயர்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆயினும், நாமே தேர்வு செய்யும் எந்த பெயரும் நமக்கு திருப்தியை தர போவது இல்லை. தேடல் இருந்து கொண்டேதான் இருக்கும். சிலரின் பெயர்களில், நமக்கு இருக்கும் ஈர்ப்பு, அவர்களுக்கு அவ்வளவாக இருப்பதுமில்லை, ஆக பெயரென்பது ஒரு அடையாளம், பெயரென்பது ஒரு அழைத்தல் குறியீடு அவ்வளவே, அதனால் பெயரை பற்றி யோசிக்காமல் வேறு எதாவது உருப்படியா பன்னலாம்னு தனக்கு தானே கொஞ்சம் தெளிவுபடுத்திகிட்டப்போ, “இந்த ஏலியன்ஸ்லாம் இருக்காங்கலா? இருந்தா அவங்களுக்கு பேரு இருக்குமா!, பேரு இருந்தா எப்படி இருக்கும்”னு யோசிக்குது இந்த மூளை!!.

24 Jul 2015

அஞ்சு ரூபா காயின்



இந்த இலங்கையோட அஞ்சு ரூபா காயினும் நம்ம நாட்டு அஞ்சு ரூபா காயின் மாதிரியே தான் இருக்குது, சோ இத சில்லரையோட சில்லரையா கொடுத்து ஒரு குடிமகன் டாஸ்மாக்ல சரக்கு வாங்கி குடிச்சிருக்காப்ள போல, கணக்கு பாக்குறப்போ இது கிடைச்சிருக்கு. இது ரெண்டு விதத்துல கல்லாக்கு வந்திருக்கலாம். ஒன்னு, கொடுத்தவரு இலங்கை காயினுனே தெறியாம கொடுத்திருக்கலாம், இல்லனா தெரிஞ்சே காயின்ஸ் கூட மறச்சு வச்சு கொடுத்து குடிச்சிருக்கலாம்.

ஒரு வேலை மறச்சு கொடுத்திருந்தா, அந்த ஆளுக்கு இது எப்படி கிடைச்சிருக்கும்?. இங்க தான் நம்ம மூள வேள செய்யுது!. நம்ம கணிப்பு படி, அந்த இலங்கை அஞ்சு ரூபா காயின அந்த குடிமகன் வீட்டுல இருக்குற யாரோதான் கலெக்சன்ல வச்சிருந்திருப்பாங்க அத அவரு யாருக்கும் தெரியாம எடுத்து வந்திருப்பாருனு தோனுது. அந்த கலெக்சன பன்னது அவரு பையனா இருக்கும்’னு சொல்லுது நம்ம மூள.

இந்த காயின அந்த பையன் இனி ஒரு வாரம் தேடுவான். பால்யம் தொலைக்கிற வரைக்கும், தொலைஞ்ச இந்த காயின அவன் மறக்க மாட்டான். சின்ன வயசுல நானும் ஃப்ரான்ஸ், பிலிப்பைன்ஸ்னு ரெண்டு நாட்டோட காயின தொலைச்சிருக்கேன். சொல்லப்போனா என் மூள, அத வச்சு விளையாடுறப்போ என் ஃப்ரன்ட்ஸ் தான் எடுத்திருப்பாங்கனு சொல்லுச்சு.

எது எப்படியோ காயின்ஸ் தொலைச்சவனுக்கு தான் தெரியும் அதோட வேலியூ.
frown emoticon

22 Jul 2015

ஒன்னுமில்லை சாமி

ஐம்பதில் பயணித்த ஒரு பேருந்தில் தடதடவென ஒரே சத்தம், யாரோ கற்களை எறிகிறார்கள் என பயந்த சிறுமி, என்னப்பா இது?னு அப்பாவிடம் கேட்க, ஒன்னுமில்லை சாமி, புது தார் ரோடு போடுறாங்க கல்லெல்லாம் டயரோட ஒட்டி வண்டில பட்டு தெறிக்குது வேற ஒன்னும் இல்ல என்ற பதில் கிட்டியது.
சப்தங்கள் தனிய புது தார் ரோடு முடிந்ததை உணர்ந்தாள்.

இதே போல், வளந்த பின் வரும் பயங்களின் மீதும், ஒன்னுமில்லை சாமினு தெளிவு படுத்தும் அப்பாக்கள் அமையப்பெற்றால் சுகமே!

19 Jul 2015

இலவச கிரைண்டர்


நாலுரோட்டுல இருந்து பிரிஞ்சு வர்ர ஒரு ஊர்ல தமிழக அரசோட இலவச அல்லது விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் எல்லாம் கொடுக்குறாங்கலாம். குடும்பத்துக்கு ஒரு டோக்கன் கொடுத்து, விழா நாள்ல மீட்டிங் போட்டு குடிம்பத்தலைவி கிட்டதான் பொருட்கள எல்லாம் கொடுப்பாங்கலாம், குடும்பத்தலைவன் கிட்ட கொடுக்க மாட்டாங்களாம். காரணம் குடும்பத்தலைவரு ஃபிரியா கொடுக்குற பொருள வித்து குடிச்சிடுவாராம்.

இத கேள்வி பட்ட ஒரு குடும்ப தலைவரு, விரக்தியில, நாலுரோட்டு டாஸ்மாக்கு கடைக்கு போயி சம்பளக்காசு முழுக்க வழுவா குடிச்சி, மீட்டிங்ல வந்து “ஓட்டு கேக்குறப்போ மட்டும் எங்கல கண்டா இனிச்சுச்சு, இப்போ எங்கல கண்டா கசக்குதா”னு கூப்பாடு போட்டு கத்த. ஓடிவந்த அவரு வீட்டுக்கார அம்மா “சும்மா கொடுக்குறதையும் கெடுத்துறாதய்யா! இந்தா”னு ஒரு அம்பது ரூவா கொடுத்து அனுப்பிவச்சு நிம்மதியானாங்க.

அடுத்த வாரத்துல, நாலுரோட்டுல இருந்து பிரியுற மத்த மூனு ஊருக்கும் மிக்சி, கிரைண்டர் கொடுக்க போறாங்கலாம்.

அடுத்த வாரத்துலயும் அதே நாலுரோட்டுல தான் டாஸ்மாக் இருக்கும்.

17 Jul 2015

ஆடி வெள்ளி



இத விட நல்ல நாள் வேணுமா கோயிலுக்கு போக, “கும்பல் அவ்வளவா இருக்காது நீயும் வா போகலாம்”னு கோயிலுக்கு கூட்டிட்டு போனாங்க அம்மா. கோயில்ல போயி அர்ச்சனை சாமான் வாங்குனா ஒரு தேங்கா இருபது ரூபா இருக்கும்னு வீட்டுலயே தேங்கா அப்புறம் இன்ன பிற பொருள் எல்லாம் ரெடி பன்னி கோவிலுக்கு பஸ் ஏறுனதுமே தெறிஞ்சிடுச்சு அங்க எவ்ளோ கும்பல் இருக்கும்னு. சாதாரண நாள்ல, இருக்குற சீட்ட மட்டும் ஃபில் பன்னி போற பஸ்ல இன்னைக்கு ஃபுட் போர்டு வரைக்கும் ஃபுல். பஸ்ல கசங்கி நசுங்கி கோயிலுக்கு போனா, மடிச்சு மடிச்சு ஒரு அரை கிலோமீட்டருக்கு கியூ.

அங்க வந்ததுல பாதி, புதுசா கல்யாணம் பண்ணுனவங்க, புது மாப்புல பவுசுனு ஒன்னு இருக்கும்ல அத அங்கதான் நிரம்ப பாத்தேன். ஒரு கால் கிலோமீட்டர் போற வரைக்கும் கியூல யாரும் உள்ள பூரல, என்னாடா இதுனு ஆச்சர்யத்தோட நூரு அடிகிட்ட நெருங்குனதும், ஒரு அம்மா, பிபி இருக்குங்க நிக்க முடியலனு வந்தாங்க பாவம்னு விட்டாச்சு. ரெண்டு ஸ்டெப் நகந்ததும், கைல அர்ச்சனை தட்டோட கியூவ தாண்டி அந்த பக்கம் போறமாறி ஒரு வயசான அம்மா வந்து நின்னாங்க. செரி, போகட்டுமேனு வழிவிட்டு நின்னா, அந்த கேப்ல அவங்க வந்து நின்னுகிட்டாங்க, ஏங்கம்மா இப்படி வந்து கியூல பூருரிங்கனு, அம்மா கேட்டதுக்கு, “எல்லாம் சாமியதானே பாக்க போறோம், சாமி பாக்க கியூவா?”னு சண்டைக்கு வந்துட்டாங்க, சரிதான்னு அவங்க வயச மதிச்சு உள்ள விட்டாச்சு. இன்னும் கொஞ்சம் நகர்ந்ததும் ஒரு ஃபேமிலி மூனு பேரு சைடுல நிக்கிரமாறி நின்னு உள்ள பூந்தாங்க, ஏங்கனு கேட்டா இங்கதான் நின்னோம் அர்ச்சனை சீட்டு வாங்க போனோம்னு சமாளிச்சாங்க. இன்னொரு வயசான ஆள் சிரிச்சிகிட்டே கியூல வந்து பூந்தாரு மொரச்சு பாத்ததும் எங்க பின்னால போயி நின்னுட்டு, அதான் பின்னால வந்துட்டேன்ல நீங்க முன்னால தான் இருக்கிங்க போங்க போங்கனு மருபடியும் சிரிச்சாரு.

ஒரு வழியா கருவறை கிட்ட போயாச்சு, அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது கருவறை முன்னால லெஃப்ட் ரைட்டு ரெண்டு சைடும் வழி இருக்குனு, ரெண்டும் சிறப்பு தரிசனம், அது சின்ன கோயில்னால காசு கொடுத்து போற சிறப்பு தரிசனம் இல்ல. பந்தா காட்டி உள்ள போற தரிசனம். ஒரு முப்பது பேரு இருப்பாங்க, திபுதிபுனு உள்ள பூந்து சாமி கும்புட்டு போயிடாங்க, ஒருத்தர் அவங்களுக்கு கதவ திறந்து விட்டாரு. இன்னொருத்தர் வெளி சைடுல நின்னு கைகொழந்த வச்சிருக்காங்க, லேடீஸ மட்டும் விட்டு அனுப்புங்கனு கதவுகிட்ட நின்னுகிட்டு இருந்தவர்ட்ட கேட்க, எல்லாரும் தான் கொழந்தைய வச்சுட்டு கியூல நிக்குறாங்க போயி நில்லுங்கனு கத்த, அதுக்கு அவரு இப்போ தானே முப்பது பேர விட்டிங்கனு கேக்க, ‘இது என்னாயா வம்பா போச்சு, ஊர் தலைவரு தம்பிய கூட உள்ள விட கூடாத, வாதம் பன்னாம கியூல நில்லுனு கதவ சாத்திட்டாரு.

இத எல்லாம் நான் மட்டும் கவனிக்க, அம்மாவ பாத்தா அர்ச்சனை சீட்ட கொடுத்து ‘கண்ண மூடி’ சாமிய பாத்துட்டு இருந்தாங்க. அப்புறம் நானும் கண்ண மூடி சாமிய பாத்து, “உங்க கருவறைகிட்ட நடக்குற பாலிடிக்ஸ விட வெளியில நடந்த பாலிடிக்ஸ் எவ்வளவோ தேவலாம்”னு சொல்லிட்டு வந்துட்டேன்.

14 Jul 2015

கிரகக்காதல்‬


ஒன்பது வருசத்துக்கு முன்னால ஒன்பதாவது கிரகமா இருந்த புளூட்டோக்கு நாசா அனுப்புன வின்கலன், இன்னைக்கு புளூட்டோக்கு அருகிலிருந்து எடுக்கப்பட்ட முதல் போட்டோவ பூமிக்கு(நாசா’க்கு) அனுப்பியிருக்கு இதுல என்ன விசேசம்னா புளூட்டோல ஒரு லவ் ஹார்ட்(Love Heart) சிம்பல் இருக்குற மாதிரி தெரியுது.

அதே ஒன்பது வருசத்துக்கு முன்னால தான் “கிரக அந்தஸ்த இழந்தது புளூட்டோ” அப்புடினு ஃப்ளாஷ் நியூஸ் போட்டோம். இப்போ புளூட்டோல இருந்து வந்திருக்குற ஹார்ட் சிம்பல் எதன் குறியீடா இருக்கும்.

“போங்கடா நீங்களும் உங்க அந்தஸ்தும்,
எனிவே அய் லவ் யூ எர்த்”
இந்தமாறி எதாவது இருக்குமோ!.

எம்.எஸ்.வி


எம்.எஸ்.வி, நமக்கு ஒரு விதமாவும், வயசானவங்களுக்கு ஒரு விதமாவும் தெரியுவாரு. அவரு கம்போஸ் பன்ன பழைய பாட்டெல்லாம் நாம கண்டிப்பா கேட்டிருப்போம், நிச்சயமா ரசிச்சிருப்போம் ஆனா அது அவரு கம்போஸ் பன்னுனதுன்ற விவரம் அவ்வளவா நமக்கு தெறியாது. அவரு போட்ட பாட்டெல்லம் அவர் காலத்து ரசிகர்கள் சிலாகிப்பார்கள்.


நமக்கு எம்.எஸ்.வி’னா ஹார்மோனியப் பெட்டி, காதல் மன்னன்ல விவேக்கு கூட மெஸ் விஸ்வநாதன், ரஹ்மான் மியூசிக்ல சங்கமம் படத்துல அவரோட “மகனே வா!!” இவை போதும். அந்த மகனே(ஏ) வா!!ன்றத வேற குறல்ல கற்பனை செய்ய முடியுமா, தமிழ் தெறிஞ்ச எந்த ஒரு உசுறுக்கும் அந்த குறல கேக்குறப்போ சிலிர்க்காமத்தான் இருக்குமா!


13 Jul 2015

கேணியத்தான் அழிக்கிறோம்!

கேணில கல்ல போட்டா, அந்த கல்ல எடுக்குற வரைக்கும் கல்யாணம் நடக்காதுனு ஊர்பக்கம் சொல்லுவாங்க. இது ஒரு மூடநம்பிக்கைனே வச்சுக்குவோம், இத நாம இன்னைக்கு எப்படி உடைக்கிறோம், கிணத்து மேல பத்து கல்ல போட்டு கல்யாணம் பன்னி காட்டி அந்த மூடநம்பிக்கைய உடைக்கிறோம்.
.
என்னதான் சொல்லவரானுங்க ஊர் காரங்க, “டேய், சனியனே! போரவர்றவனெல்லாம் கேணிமேல ஆளுக்கொரு கல்ல போட்டா கேணி கேணியா இருக்காதுடா ஒருநாள் அது மூடிடும்” இதத்தான் சொல்ல வராங்க. இத தெளிவா சொன்னா நம்ம ஆளு கேப்பானா? இல்ல!. கல்யாணம் மேட்டர வச்சு சொன்னதால ஓரளவு கேட்டானுங்க. இன்னைக்கு மூடநம்பிக்கைய அழிக்கிறோம்னு கேணி மேல பத்து கல்ல போட்டு கேணியத்தான் அழிக்கிறோம் மூடநம்பிக்கையை அல்ல.

10 Jul 2015

2Hands Image Editor


           ஒரு வழியா, பல சைட்-ல சோர்ஸ்கோடு திருடி நமக்குனு ஒரு ‘Image Editor Software’ செஞ்சாச்சு. பென்சில் ஸ்கெட்சஸ் பன்ன Reference Picture-ல பன்ன வேண்டிய சின்ன சின்ன Edit functions-அ நம்ம சாஃப்ட்வேர்ல பன்னிக்கலாம். மெயினா Grid Guidlines, இமேஜ் ஓட சாஃப்ட் காபில கருப்பு/வெள்ளைல கட்டம் கட்ட முடியும், எத்தனை கட்டம் வேணும்னு நம்மலாலயே ஃபிக்ஸ் பன்ன முடியும். டிரான்ஸ்பரன்ட் வாடர்மார்க் லோகோ(Transparent Watermark Logo) இன்ஸர்ட் பன்ன முடியும். இமேஜ Grayscale, Strengthen, Invert and Rotate பன்ன முடியும். அப்புறமா open and save-ம் பன்னிக்கலாம்.

இன்னும் சில ஃபங்ஷன்ஸ் அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன்.


                        

9 Jul 2015

அன்னதானம்

அன்னதானம், சில ஊர் கோவில் திருவிழாக்கள்ல ஒரு அஞ்சாறு டிராக்டர் இல்லனா வேன்ல வச்சு, சாப்பாட்ட பொட்டலம் கட்டி சாமி கும்புட வர்ர எல்லாருக்கும் கொடுப்பாங்க. சில திருவிழாக்கள்ல பந்தல் போட்டு, அந்த ஊர் காரங்க எல்லாம் பணம் போட்டு சமைச்சு போடுவாங்க. சோறு போடுறதுன்றது நேர்த்திக்கடனாவும், வேண்டுதலாவும் ஆகிடுச்சு. எல்லாம் அந்த திருவிழாக்காலங்கல்ல மட்டும் தான். மத்தபடி சாதாரண நாள்ல வேளை நிமித்தமா நகர சாலைகள்ல நடந்து போற நாம சோறுக்காக கையேந்துறவங்கல கண் உயர்த்திகூட பாக்குறது இல்ல, நகர்தலுக்கு நம்மிடம் பல காரணம் உண்டு. ஆனாலும் சிலபேர் நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து உணவு வாங்கிகொடுக்கதான் செய்கிறார்கள். வேண்டுதலுக்காக பல ஆயிரம் செலவு செஞ்சு ஒரு நாள்ல சமைச்சு போடுறது பெரும்பாலும் பசிச்சவனுக்கு கிடைக்குறது இல்ல.



ஒரு கதை உண்டு “பசியில இருக்குற ஒரு உயிருக்கு ஒவ்வொரு முறை நாம போடுற சோறும் இறைவனால, நமக்காக வானுக்கு ஒவ்வொரு செங்கற்கலாக மாற்றி அனுப்பப்படுமாம், செங்கற்கலின் எண்ணிக்கைய பொருத்து அங்க இறைவனால நமக்கு மாளிகை கட்டப்படுமாம்.” பலரும் மாளிகைக்காக வேண்டிதான் சோறு போடுறாங்க. ஒரு வேளை இறைவன்னு ஒருத்தன் இருந்தா மாளிகை யாருக்கு கிடைக்கும்?

6 Jul 2015

பிசின் உறவு

சோற்றுப்பசையை தாண்டி,
கிளிஞ்ச நோட்டுபுக் ஒட்ட
பிசினுக்காகவேனும்
முருங்கை மரத்திடமும்,
வேப்ப மரத்திடமும்,
தொன்னூறுகளின்
குழந்தைகளுக்கு
ஒரு உறவு இருந்தது.

3 Jul 2015

வெத்தலை காம்பு

‘அம்மா வெத்தலை வேணும்’னு
நீட்டிய குழந்தையின் கைகளுக்கு
‘வெத்தலை சாப்புட்டா
கோழி கண்ண கொத்தும், இந்தா’னு
வெத்தலை காம்பு கிடைத்தது.
நறுக்குனு கடிச்ச,
வெத்தலை காம்பின் சுவை

வெத்தலையையும் மறக்க வச்சது,
கோழியையும் மறக்க வச்சது,
அடுத்த முறை குழந்தையின் கைகள்
காம்பை கேட்கும், கேட்டது கிடைக்கும்.