17 Jul 2015

ஆடி வெள்ளி



இத விட நல்ல நாள் வேணுமா கோயிலுக்கு போக, “கும்பல் அவ்வளவா இருக்காது நீயும் வா போகலாம்”னு கோயிலுக்கு கூட்டிட்டு போனாங்க அம்மா. கோயில்ல போயி அர்ச்சனை சாமான் வாங்குனா ஒரு தேங்கா இருபது ரூபா இருக்கும்னு வீட்டுலயே தேங்கா அப்புறம் இன்ன பிற பொருள் எல்லாம் ரெடி பன்னி கோவிலுக்கு பஸ் ஏறுனதுமே தெறிஞ்சிடுச்சு அங்க எவ்ளோ கும்பல் இருக்கும்னு. சாதாரண நாள்ல, இருக்குற சீட்ட மட்டும் ஃபில் பன்னி போற பஸ்ல இன்னைக்கு ஃபுட் போர்டு வரைக்கும் ஃபுல். பஸ்ல கசங்கி நசுங்கி கோயிலுக்கு போனா, மடிச்சு மடிச்சு ஒரு அரை கிலோமீட்டருக்கு கியூ.

அங்க வந்ததுல பாதி, புதுசா கல்யாணம் பண்ணுனவங்க, புது மாப்புல பவுசுனு ஒன்னு இருக்கும்ல அத அங்கதான் நிரம்ப பாத்தேன். ஒரு கால் கிலோமீட்டர் போற வரைக்கும் கியூல யாரும் உள்ள பூரல, என்னாடா இதுனு ஆச்சர்யத்தோட நூரு அடிகிட்ட நெருங்குனதும், ஒரு அம்மா, பிபி இருக்குங்க நிக்க முடியலனு வந்தாங்க பாவம்னு விட்டாச்சு. ரெண்டு ஸ்டெப் நகந்ததும், கைல அர்ச்சனை தட்டோட கியூவ தாண்டி அந்த பக்கம் போறமாறி ஒரு வயசான அம்மா வந்து நின்னாங்க. செரி, போகட்டுமேனு வழிவிட்டு நின்னா, அந்த கேப்ல அவங்க வந்து நின்னுகிட்டாங்க, ஏங்கம்மா இப்படி வந்து கியூல பூருரிங்கனு, அம்மா கேட்டதுக்கு, “எல்லாம் சாமியதானே பாக்க போறோம், சாமி பாக்க கியூவா?”னு சண்டைக்கு வந்துட்டாங்க, சரிதான்னு அவங்க வயச மதிச்சு உள்ள விட்டாச்சு. இன்னும் கொஞ்சம் நகர்ந்ததும் ஒரு ஃபேமிலி மூனு பேரு சைடுல நிக்கிரமாறி நின்னு உள்ள பூந்தாங்க, ஏங்கனு கேட்டா இங்கதான் நின்னோம் அர்ச்சனை சீட்டு வாங்க போனோம்னு சமாளிச்சாங்க. இன்னொரு வயசான ஆள் சிரிச்சிகிட்டே கியூல வந்து பூந்தாரு மொரச்சு பாத்ததும் எங்க பின்னால போயி நின்னுட்டு, அதான் பின்னால வந்துட்டேன்ல நீங்க முன்னால தான் இருக்கிங்க போங்க போங்கனு மருபடியும் சிரிச்சாரு.

ஒரு வழியா கருவறை கிட்ட போயாச்சு, அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது கருவறை முன்னால லெஃப்ட் ரைட்டு ரெண்டு சைடும் வழி இருக்குனு, ரெண்டும் சிறப்பு தரிசனம், அது சின்ன கோயில்னால காசு கொடுத்து போற சிறப்பு தரிசனம் இல்ல. பந்தா காட்டி உள்ள போற தரிசனம். ஒரு முப்பது பேரு இருப்பாங்க, திபுதிபுனு உள்ள பூந்து சாமி கும்புட்டு போயிடாங்க, ஒருத்தர் அவங்களுக்கு கதவ திறந்து விட்டாரு. இன்னொருத்தர் வெளி சைடுல நின்னு கைகொழந்த வச்சிருக்காங்க, லேடீஸ மட்டும் விட்டு அனுப்புங்கனு கதவுகிட்ட நின்னுகிட்டு இருந்தவர்ட்ட கேட்க, எல்லாரும் தான் கொழந்தைய வச்சுட்டு கியூல நிக்குறாங்க போயி நில்லுங்கனு கத்த, அதுக்கு அவரு இப்போ தானே முப்பது பேர விட்டிங்கனு கேக்க, ‘இது என்னாயா வம்பா போச்சு, ஊர் தலைவரு தம்பிய கூட உள்ள விட கூடாத, வாதம் பன்னாம கியூல நில்லுனு கதவ சாத்திட்டாரு.

இத எல்லாம் நான் மட்டும் கவனிக்க, அம்மாவ பாத்தா அர்ச்சனை சீட்ட கொடுத்து ‘கண்ண மூடி’ சாமிய பாத்துட்டு இருந்தாங்க. அப்புறம் நானும் கண்ண மூடி சாமிய பாத்து, “உங்க கருவறைகிட்ட நடக்குற பாலிடிக்ஸ விட வெளியில நடந்த பாலிடிக்ஸ் எவ்வளவோ தேவலாம்”னு சொல்லிட்டு வந்துட்டேன்.

No comments:

Post a Comment