31 Jul 2015

மூடர் உலகில் - சசி

“ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில ஜெயலலிதாவை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தார் காந்தியவாதி சசிபெருமாள்” இத கேட்டதும் யார்ரா இந்த ஆளு, விளம்பரம் விரும்பி, சரியான லூசா இருப்பாரு போலனு கடந்து போயாச்சு. அவரோட வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உண்ணாவிரதம் இருந்தப்ப வேலயத்த அளு உலகம் தெரியாம இருக்காருனு விட்டாச்சு, ஆனா தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் நிறைய முறை மதுவிலக்குக்காக நிறைய கவன ஈர்ப்பு போராட்டம் பன்னிருக்காரு, ஆனா நாம் உட்பட அரசும், ஊடகமும் அவ்வளவா கண்டுக்கல, காரணங்கள் பல, காந்தியம்ன்ற வார்த்தை பிடிக்காமல் இருக்கலாம். குடிக்கிறவங்க இருக்குறப்போ, விக்கிறவங்கள ஏன்யா நோண்டுறனு இருக்கலாம், வயசான காலத்தில ஏன்யா இந்த வேலைனு இருக்கலாம், எல்லாத்துக்கும் மேல விளம்பரம் விரும்பினு அலட்சியமா கூட இருக்கலாம்.

மூடர் உலகில் தெளிந்து நிற்பவன் மூடன். நல்ல வேலையாக இந்த மூடன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, போராட்டத்தில் இருக்கும் போதே மயங்கி இரத்தம் கசிந்து செத்து போயிட்டாரு, இப்பவும் இவரை விட மாட்டாங்க, இவரின் பெயரில் அரசியல் நடக்கும், அதன் மூலம் ஏதாவது ஒரு நல்லது நடந்தாலும் மகிழ்ச்சியே. இவர் போல மனிதர்கள் ஏன்யா இந்த மாதிரி வேலையெல்லாம் பன்னுறாங்கனு கேள்விகள் பல உண்டு, பதில்கள் ஏதும் இல்லை. இருக்குற வரைக்கும் போராடிகிட்டு தான் இருப்பங்க இவர் போன்ற ஆளுங்க, சாகுறவரைக்கும் ஏதும் நடக்காது, செத்ததுக்கு அப்புறமாவது எதாவது நடக்குமானும் தெறியாது, பொருத்திருந்து தான் பார்க்கனும். இந்த சாவுதான் அவருக்கு அவருடைய தெளிந்த நோக்கத்திலிருந்து நிம்மதியான உறக்கத்தை வழங்கியுள்ளதுனு தோனுது, வழக்கம் போல் நமது சீக்குவந்த சமூகத்தை அந்த சீக்குக்கு பழக்குவோமாக.


No comments:

Post a Comment