9 Jul 2015

அன்னதானம்

அன்னதானம், சில ஊர் கோவில் திருவிழாக்கள்ல ஒரு அஞ்சாறு டிராக்டர் இல்லனா வேன்ல வச்சு, சாப்பாட்ட பொட்டலம் கட்டி சாமி கும்புட வர்ர எல்லாருக்கும் கொடுப்பாங்க. சில திருவிழாக்கள்ல பந்தல் போட்டு, அந்த ஊர் காரங்க எல்லாம் பணம் போட்டு சமைச்சு போடுவாங்க. சோறு போடுறதுன்றது நேர்த்திக்கடனாவும், வேண்டுதலாவும் ஆகிடுச்சு. எல்லாம் அந்த திருவிழாக்காலங்கல்ல மட்டும் தான். மத்தபடி சாதாரண நாள்ல வேளை நிமித்தமா நகர சாலைகள்ல நடந்து போற நாம சோறுக்காக கையேந்துறவங்கல கண் உயர்த்திகூட பாக்குறது இல்ல, நகர்தலுக்கு நம்மிடம் பல காரணம் உண்டு. ஆனாலும் சிலபேர் நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து உணவு வாங்கிகொடுக்கதான் செய்கிறார்கள். வேண்டுதலுக்காக பல ஆயிரம் செலவு செஞ்சு ஒரு நாள்ல சமைச்சு போடுறது பெரும்பாலும் பசிச்சவனுக்கு கிடைக்குறது இல்ல.



ஒரு கதை உண்டு “பசியில இருக்குற ஒரு உயிருக்கு ஒவ்வொரு முறை நாம போடுற சோறும் இறைவனால, நமக்காக வானுக்கு ஒவ்வொரு செங்கற்கலாக மாற்றி அனுப்பப்படுமாம், செங்கற்கலின் எண்ணிக்கைய பொருத்து அங்க இறைவனால நமக்கு மாளிகை கட்டப்படுமாம்.” பலரும் மாளிகைக்காக வேண்டிதான் சோறு போடுறாங்க. ஒரு வேளை இறைவன்னு ஒருத்தன் இருந்தா மாளிகை யாருக்கு கிடைக்கும்?

No comments:

Post a Comment