29 Apr 2016

சனியாகும் வெள்ளி



இந்த வெள்ளிக்கிழமை இருக்கே, சனியன்!!.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நைட்டே ட்ரெஸ்சயெல்லாம் ஊரவச்சு, துவச்சி போட்டுட்டா சனி, ஞாயிறு ரெண்டுநாளும் நிம்மதியா நெனச்சத பண்ணலாம்னு யோசிச்சு ட்ரெஸ்ச ஊர வைக்கிறது உண்டு. ஆனா அன்னைக்கு மட்டும் நியாபகமறதி உச்சத்துக்கு போயிடும். அதும் எப்டினா சனிக்கிழமை நைட்டுதான் ட்ரெஸ்ச ஊர வச்சதே நியாபகத்துக்கு வரும்.

அட அப்போவாவது துவைச்சி முடிச்சு ஞாயித்துக்கிழமையாவது நிம்மதியா இருக்கலாம்னு நெனைச்சா... அங்கதான் இன்னும் அடி விழும், பின்ன 24 மணிநேரம் நல்லா தண்ணில ஊரிப்போன ட்ரெஸ்ச துவைச்சு காயவச்சு எடுத்தா மணக்கவா செய்யும். அழுக்கா இருக்றப்போ வர்ற ஸ்மெல்லவிட பலமடங்கு அதிகமா நமத்துப்போன ஸ்மெல் வரும். அப்புறம் வேற என்ன, மருக்கா ஒரு டைம் ஞாயுத்துக்கிழமையும் கவனமா அலசி போடனும், அப்பவும் அந்த ஸ்மெல் முழுசா போக ரெண்டு தடவைக்குமேல துவைக்கனும்.

படிக்கிறப்போ ஹாஸ்டல்ல இருந்ததவிட, இப்போ அந்த மறதி குறஞ்சிடுச்சி. ஆனாலுமே சென்னை வந்தப்புறம் ஒரு மூனுமுறை இப்டி மறந்து, அந்த வீக்கென்டல நல்லா வாங்கிகட்டிகிட்டாச்சு. இன்னைக்கு இந்த வெள்ளி, சனியனாக மாறாதுன்ற நம்பிக்கைல ட்ரெஸ்சயெல்லாம் ஊரவைக்கப்போறேன், பார்க்கலாம்!

19 Apr 2016

கூந்தல் மாதிரி



பொதுவா பொண்ணுக்கும் பையனுக்கும் ஒத்துப்போகுதோ இல்லையோ, பொண்ணுக்கும் பொண்ணுக்கும் ஒத்துபோகுறதே இல்ல. எனக்கு தெரிஞ்ச அக்கா ஒருத்தங்க திருச்சில காலெஜ் ஜாயின் பண்ணினஅப்போ அவங்க ஹாஸ்டல் சீனியர்ஸ் அவங்க கைல ஒரு குண்டூசிய கொடுத்து அதால அவங்க இருந்த ரூம அளந்து எத்தனை குண்டூசி வரும்னு சொல்ல சொன்னாங்களாம், இவங்களும் எதோ விஜயகாந்த் மாதிரி தோராயமா மனக்கணக்கு போட்டு ஒரு நம்பர சொல்லி தப்பிச்சிடலாம்னு ஒரு நம்பர சொல்லியிருக்காங்க. அங்கதான் ட்விஸ்டு, அந்த சீனியர் ஆல்ரெடி அவங்க ஜாயின் பண்ணினப்போ இதேமாதிரி அவங்க சீனியர்கிட்ட மாட்டி அப்புறம் கடைசியா அளந்து சொன்னப்புறம்தான் விட்டிருக்காங்க, சோ அவங்களுக்கு சரியான நம்பர் தெரியும். இந்த அக்கா தப்பான நம்பர் சொன்ன அப்புறம் என்னையவே நீ எமாத்துரியான்னு சொல்லி கடைசியா அந்த குண்டூசியால ரூம அளக்க வச்சு, அளந்தஅப்புறமும் நம்பர் தப்புன்னு சொல்லி அழவச்சு, நோகடிச்சு அப்புறமாதான் விட்டிருக்காங்க.

இந்தமாதிரி எல்லா பக்கமும் நடக்கறது இல்லன்னாலும், அங்க அங்க நடந்துகிட்டுதான் இருக்கு. பையனுங்கதான் மயிரு மாதிரி பிஹேவ் பன்னுறானுன்கன்னா, சில பொண்ணுங்களும் கூந்தல் மாதிரிதான் பிஹேவ் பண்ணுறாங்க. கடந்த ரெண்டுமூனு நாட்கள்ல ஒரு பொண்ண பத்தி இன்னொரு பொண்ணு குறை சொல்லுறது, பழிவாங்குறது, ட்ரெஸ்சிங்க கிண்டல் பண்ணுறது, பார்வைலையே அவமானப்படுத்துறது என சகலமும் பார்த்தாச்சு. உச்சகட்டம் என்னன்னா, ட்ரெயின்ல ஒரு லேடி டீச்சர் இன்னொருத்தவங்ககிட்ட ஒரு டீச்சர ரொம்போ அழகா பாராட்டிகிட்டிருந்தாங்க, அவங்க கிட்டயெல்லாம் படிக்கிற பசங்கதான் ரொம்போ பாவம், எந்த ஒரு நல்ல வேலியூவும் அவங்க மூலமா கிடைக்க ச்சான்சே இல்ல. ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாத்துறதெல்லாம் இருக்கட்டும், பெண்களிடமிருந்து பெண்களை காப்பாத்தவே இங்க நிறைய மாதர்சங்கங்கள் தேவை. கொடூரமான மனநிலையில் சிலர் திரிகிறார்கள்!

4 Apr 2016

எ.டி.எம் திருவிளையாடல்




எ.டி.எம்'ல பணம் எடுக்குறப்போ 400, 900, 1900 இப்படி எடுத்துதான் எனக்கு பழக்கம். ஏன்னா 500, 1000, 2000 இப்படி எடுத்தா நூரு ரூபாய் நோட்டு வர்றதே இல்ல, நிறைய எ.டி.எம்'ல டினாமினேசன் மிக்ஸ் ஆகி வந்தாலும், எனக்குன்னு எடுக்க போனா மட்டும் வரவே வராது, டிசைன் அப்புடி. அதனாலதான் எப்பவுமே ஒரு நூரு ரூபா நோட்டாவது வர்றமாறி டினாமிநேசன்ல எடுப்பேன். பொதுவா பணம் எடுக்குறப்போ பல எ.டி.எம்'ல "டு யூ வாண்ட் ரெசிப்ட்" அப்படின்னு கேக்கும், அதுக்கு கீழ "எஸ்" & "நோ" இந்த ரெண்டு பட்டனும் இருக்கும், என்னோட பேங்க் எ.டி.எம்'ல கூடவெ ஒரு வசனமும் இருக்கும் அதாவது "ப்ரெஸ் நோ டு சேவ் ட்ரீஸ்" அதாவது ரெசிப்ட் பிரிண்ட் பண்ணுறதால நெறைய மரம் அழியுதாம், சரி அதுதான் பணம் எடுத்த உடனேயே பேலன்ஸ் எவ்ளோ இருக்குனு டக்குனு ஃபோனுக்கு மெசேஜ் வந்துடுமே அப்புறம் எதுக்கு மரத்த வெட்டனும்னு நா எப்பவும் ரெசிப்ட் பிரிண்ட் பண்ணுறதில்ல.

போன டைம் எ.டி.எம் போனப்பவும் இதேபோலத்தான் 900 ரூபா எடுத்தேன், மொத்தமா சேவிங்ஸ்ல இருந்த அமவுண்ட் மூவாயிரத்திசில்லரை ரூவா, 900 எடுத்தது போக 2100 ரூபாய் கிட்ட இருக்கணும், ஆனா ரெசிப்ட்ல 2000 எடுத்தது போக மிச்சம் ஆயிரத்திசில்லரை ரூபாய்தான் இருந்தது. 900 தானே எடுத்தோம், எப்படி 2000 ரூபா டெபிட் ஆச்சுன்னு ஒரே யோசனை, செம்ம டென்சனும்கூட, வாட்ச்மேன்ட கேட்கலாம்னா அந்த எ.டி.எம்'க்கு வாட்ச்மேன்னும் இல்ல, பயங்கர குழப்பத்தோட வீட்டுக்கு வந்து ஃபோன எடுத்து பார்த்தா கரெக்டா 900 தான் டெபிட் ஆகிருக்கு, மிச்சம் 2100ம் கரெக்டா இருந்தது.

அப்புறம்தான் நியாபகம் வந்தது, நாமதான் ரேசிப்டே பிரிண்ட் பண்ணலையேன்னு. யாரோ ஒருத்தவங்க பிரிண்ட் பண்ணின ரெசிப்ட் அது, அந்த லூசு அத எடுக்காம போயிட்டான்/ள், இந்த லூசு ரெசிப்ட் பிரிண்டே பண்ணாம மெஷின்ல இருந்த ரெசிப்ட எடுத்து கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன். எல்லாத்தையும் விட கொடுமை என்னன்னா ரெண்டு பேருக்கும் சேவிங்ஸ்ல கிட்டத்தட்ட ஒரே அமவுண்ட் இருந்தது பாருங்க அதுக்கு பேருதான் 'திருவிளையாடல்'.

1 Apr 2016

ரவீந்தர்'ஸ் மாம்ஸ் ரெசிப்பி



போனவருஷக்கடைசில வந்த வெள்ளத்துக்கு நிறைய கார்பொரேட் கம்பெனிகள்ல லோன் கொடுக்கப்பட்டது, எங்க கம்பெனிலயும் ஒரு லட்சம் வரைக்கும் வட்டியில்லாத லோன் இருந்தது, இருபது மாசம் நாலாயிரம் நாலாயிறமா கட்டினா சீக்கிரம் அடைச்சிடலாம். கிட்டத்தட்ட எங்க பேட்ச்ல இருந்த பாதி பேர் அந்த லோன எடுத்துகிட்டோம். நம்ம ஊரு பசங்க, பொண்ணுங்களுக்கு அவங்கவங்க தேவைய பொருத்து, education லோன அடைக்க, நகை எடுக்க, ஃபிக்ஸ்டு டெப்பாசிட்ல போட, வேறு சில கடன்கல அடைக்க என இப்படி அந்த பணத்த எடுத்து செலவு பண்ணத்தான் முடிஞ்சது, ஒரு காலத்துலயும் இப்படியான ஒரு லட்சம் பணத்த எடுத்து எதுலயாவது இன்வெஸ்ட் பண்ணவோ, இல்ல சைடுல ஒரு தொழில் தொடங்கவோ நமக்கும் சரி, நம்மள சுத்தியிருக்கிரவங்களுக்கும் சரி தைரியம் வரவே வராது, நாம வளர்க்கப்பட்ட விதம் அப்படி, இதுதான் இங்கு பெரும்பான்மை.

இது நம்மள சுத்தி இருக்கிற நிலம, அப்படியே அடுத்த பக்கம் போவோம், நார்த்-இந்தியன்ஸ். அவங்களுக்கும் நமக்கும் இருக்கிற வித்தியாசத்திற்கு ஒரு காரணம் உண்டு, அதாவது காலனி ஆதிக்க காலங்கள்ல வடஇந்திய மக்கள் பல போர்களை சந்திச்சது உண்டு, அவங்க அனுபவிச்ச அளவு போர்களின் நிதர்சனத்த நாம பார்த்தது இல்ல, இதுதான் நமக்கும் அவங்களுக்கும் இடையில இருக்கிற வித்தியாசத்துக்கு காரணமென பலரும் சொல்லிகேட்டிருக்கிறேன். ஆக அவர்களிடம் பணம், பொருள், நகை இதுக்கெல்லாம் வேலியூ அவ்வளவாக இருக்காது, தோல்விகள கூட ஈசிய எடுத்துகிற பக்குவம் இருக்கும், இப்படியாக வந்தா மலை போனா மசுருன்னு முடிவு பண்ணி இந்த ஒரு இலட்சத்த எடுத்து எங்க நார்த்-இந்திய நண்பன் ஒருத்தன் அவங்க ஊர் நண்பர்களோட சேர்ந்து இன்னும் கொஞ்சம் பணம் போட்டு, ஒரு கடைய வாடகைக்கு எடுத்து, லைசென்ஸெல்லாம் வாங்கி 'மாம்ஸ் ரெசிப்பி' அப்படின்னு ஒரு நார்த்-இந்தியன் ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் ஆரம்பிச்சான், எங்களையும் கூப்பிட்டிருந்தான், முதல் வாரம் நல்ல வருமானம் வந்திருந்தது. மொழி தெரியாத ஒரு இடத்துல போயி செட்டில் ஆன சில மாசத்துலயே கொஞ்சம் பணம் போட்டு தொழில் பண்ணுற தைரியமெல்லாம் நமக்கு வரவே வராதுன்னு அவன வாழ்த்திகிட்டிருந்தோம். 

அதுக்கப்புறம்தான் பிரச்சனையே, அவன் கடை ஆரம்பிக்கிறதுக்கு சில லோக்கல் தமிழ் ஆளுங்க, கடை பிடிச்சு தர்றது, ஃபர்னிச்சர் வாங்குறது, வேலைக்கு செப்ஃ, ஹெல்ப்பர் போடுறது என சில உதவிகள செஞ்சிருக்காங்க, இப்போ எல்லா பிரச்சனையும் அவங்ககிட்ட இருந்துதான். கடையோட முதல்நாள் வருமானம், முதல் வார வருமானம் இதயெல்லாம் பார்த்த அவங்க, ஒருநாள் கடை திறக்க வந்த செப்ஃ கிட்ட இருந்து சாவிய புடுங்கிகிட்டு இனி கடை எங்களோடது, இனி கடை நாங்கதான் நடத்துவோம்னு பல பிரச்சனைகள செஞ்சுட்டாங்க, சில நாட்கள் தொடர்ந்து பிரச்சனை பண்ணி கடைசியா அந்த கடை ஓனர், அவன் தங்கியிருக்கிற பிஜி ஓனர் என எல்லாரும் பேசி அந்த கடைய லோக்கல் ஆளுங்களுக்கே பேசி கொடுத்துட்டாங்க, கூடிய சீக்கிரமே பூரா பணத்தையும் இவன்கிட்ட செட்டில் பண்ண சொல்லியும் பேசிட்டாங்க. இப்போ, அவன் ஆசை ஆசையா ஆரமிச்ச அந்த ஃபாஸ்ட் ஃபுட் கடை கைமாரிடுச்சு. அதுக்காக செலவு பண்ணின பணமும் இன்னும் முழுசா கைக்கு வரல, எனக்கு தெரிஞ்சு அந்த கடைய ஆக்கிரமிச்சிருக்கிரவனுங்க, அதுல வருமானம் எடுத்துத்தான் இவனோட காச கொடுப்பானுங்க போல.

இதுஎல்லாம் நடந்து ஒரு மாசம்கிட்ட ஆச்சு, இப்போலாம் இதை பத்தி அவனிடம் யாரும் பேசுறது இல்ல, நம்ம ஊர்ல, நம்ம ஆளுங்களே இப்படி பண்ணினது எல்லாருக்குமே கொஞ்சம் அவமானமாதான் இருக்கு. ஆனா அவன் இப்பயும் நாங்க, நீங்க அப்படியெல்லாம் நினைச்சு பேசுறது இல்ல, இன்னைக்கும் முன்ன இருந்தது போலவேதான் இருக்கான், அப்படியேதான் பேசுறான், அப்படியேதான் சிரிக்கிறான். இன்னைக்கு அந்த கடையோட தினசரி வருமானம் கிட்டத்தட்ட பத்தாயிரம் இருக்குதாம், இந்நேரம் இவன் நடத்தியிருந்தா நல்லா இருந்திருக்கும், சீக்கிரமே நல்லா வந்திருக்கலாம் இப்படி சில விசயங்கள பத்தி பேசிட்டிருந்தப்போ, "இப்போ இல்லனா என்ன, கூடிய சீக்கிரமே மறுபடியும் முதலாளியா ஆகிடலாம்" அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுட்டு போறான். இப்பவும் சொல்லுறேன் இந்த தைரியமும், இந்த மனநிலையும் நமக்கெல்லாம் எக்காலத்துலயும் வரவே வராது, நாமெல்லாம் இங்கன அவங்கள பத்தி குறை சொல்லவும், அவங்கள ஏறி மிதிச்சு பெரியாள ஆகத்தான் லாயக்கு. லவ் யூ அண்ட் சாரி ரவீந்தர்!