1 Apr 2016

ரவீந்தர்'ஸ் மாம்ஸ் ரெசிப்பி



போனவருஷக்கடைசில வந்த வெள்ளத்துக்கு நிறைய கார்பொரேட் கம்பெனிகள்ல லோன் கொடுக்கப்பட்டது, எங்க கம்பெனிலயும் ஒரு லட்சம் வரைக்கும் வட்டியில்லாத லோன் இருந்தது, இருபது மாசம் நாலாயிரம் நாலாயிறமா கட்டினா சீக்கிரம் அடைச்சிடலாம். கிட்டத்தட்ட எங்க பேட்ச்ல இருந்த பாதி பேர் அந்த லோன எடுத்துகிட்டோம். நம்ம ஊரு பசங்க, பொண்ணுங்களுக்கு அவங்கவங்க தேவைய பொருத்து, education லோன அடைக்க, நகை எடுக்க, ஃபிக்ஸ்டு டெப்பாசிட்ல போட, வேறு சில கடன்கல அடைக்க என இப்படி அந்த பணத்த எடுத்து செலவு பண்ணத்தான் முடிஞ்சது, ஒரு காலத்துலயும் இப்படியான ஒரு லட்சம் பணத்த எடுத்து எதுலயாவது இன்வெஸ்ட் பண்ணவோ, இல்ல சைடுல ஒரு தொழில் தொடங்கவோ நமக்கும் சரி, நம்மள சுத்தியிருக்கிரவங்களுக்கும் சரி தைரியம் வரவே வராது, நாம வளர்க்கப்பட்ட விதம் அப்படி, இதுதான் இங்கு பெரும்பான்மை.

இது நம்மள சுத்தி இருக்கிற நிலம, அப்படியே அடுத்த பக்கம் போவோம், நார்த்-இந்தியன்ஸ். அவங்களுக்கும் நமக்கும் இருக்கிற வித்தியாசத்திற்கு ஒரு காரணம் உண்டு, அதாவது காலனி ஆதிக்க காலங்கள்ல வடஇந்திய மக்கள் பல போர்களை சந்திச்சது உண்டு, அவங்க அனுபவிச்ச அளவு போர்களின் நிதர்சனத்த நாம பார்த்தது இல்ல, இதுதான் நமக்கும் அவங்களுக்கும் இடையில இருக்கிற வித்தியாசத்துக்கு காரணமென பலரும் சொல்லிகேட்டிருக்கிறேன். ஆக அவர்களிடம் பணம், பொருள், நகை இதுக்கெல்லாம் வேலியூ அவ்வளவாக இருக்காது, தோல்விகள கூட ஈசிய எடுத்துகிற பக்குவம் இருக்கும், இப்படியாக வந்தா மலை போனா மசுருன்னு முடிவு பண்ணி இந்த ஒரு இலட்சத்த எடுத்து எங்க நார்த்-இந்திய நண்பன் ஒருத்தன் அவங்க ஊர் நண்பர்களோட சேர்ந்து இன்னும் கொஞ்சம் பணம் போட்டு, ஒரு கடைய வாடகைக்கு எடுத்து, லைசென்ஸெல்லாம் வாங்கி 'மாம்ஸ் ரெசிப்பி' அப்படின்னு ஒரு நார்த்-இந்தியன் ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் ஆரம்பிச்சான், எங்களையும் கூப்பிட்டிருந்தான், முதல் வாரம் நல்ல வருமானம் வந்திருந்தது. மொழி தெரியாத ஒரு இடத்துல போயி செட்டில் ஆன சில மாசத்துலயே கொஞ்சம் பணம் போட்டு தொழில் பண்ணுற தைரியமெல்லாம் நமக்கு வரவே வராதுன்னு அவன வாழ்த்திகிட்டிருந்தோம். 

அதுக்கப்புறம்தான் பிரச்சனையே, அவன் கடை ஆரம்பிக்கிறதுக்கு சில லோக்கல் தமிழ் ஆளுங்க, கடை பிடிச்சு தர்றது, ஃபர்னிச்சர் வாங்குறது, வேலைக்கு செப்ஃ, ஹெல்ப்பர் போடுறது என சில உதவிகள செஞ்சிருக்காங்க, இப்போ எல்லா பிரச்சனையும் அவங்ககிட்ட இருந்துதான். கடையோட முதல்நாள் வருமானம், முதல் வார வருமானம் இதயெல்லாம் பார்த்த அவங்க, ஒருநாள் கடை திறக்க வந்த செப்ஃ கிட்ட இருந்து சாவிய புடுங்கிகிட்டு இனி கடை எங்களோடது, இனி கடை நாங்கதான் நடத்துவோம்னு பல பிரச்சனைகள செஞ்சுட்டாங்க, சில நாட்கள் தொடர்ந்து பிரச்சனை பண்ணி கடைசியா அந்த கடை ஓனர், அவன் தங்கியிருக்கிற பிஜி ஓனர் என எல்லாரும் பேசி அந்த கடைய லோக்கல் ஆளுங்களுக்கே பேசி கொடுத்துட்டாங்க, கூடிய சீக்கிரமே பூரா பணத்தையும் இவன்கிட்ட செட்டில் பண்ண சொல்லியும் பேசிட்டாங்க. இப்போ, அவன் ஆசை ஆசையா ஆரமிச்ச அந்த ஃபாஸ்ட் ஃபுட் கடை கைமாரிடுச்சு. அதுக்காக செலவு பண்ணின பணமும் இன்னும் முழுசா கைக்கு வரல, எனக்கு தெரிஞ்சு அந்த கடைய ஆக்கிரமிச்சிருக்கிரவனுங்க, அதுல வருமானம் எடுத்துத்தான் இவனோட காச கொடுப்பானுங்க போல.

இதுஎல்லாம் நடந்து ஒரு மாசம்கிட்ட ஆச்சு, இப்போலாம் இதை பத்தி அவனிடம் யாரும் பேசுறது இல்ல, நம்ம ஊர்ல, நம்ம ஆளுங்களே இப்படி பண்ணினது எல்லாருக்குமே கொஞ்சம் அவமானமாதான் இருக்கு. ஆனா அவன் இப்பயும் நாங்க, நீங்க அப்படியெல்லாம் நினைச்சு பேசுறது இல்ல, இன்னைக்கும் முன்ன இருந்தது போலவேதான் இருக்கான், அப்படியேதான் பேசுறான், அப்படியேதான் சிரிக்கிறான். இன்னைக்கு அந்த கடையோட தினசரி வருமானம் கிட்டத்தட்ட பத்தாயிரம் இருக்குதாம், இந்நேரம் இவன் நடத்தியிருந்தா நல்லா இருந்திருக்கும், சீக்கிரமே நல்லா வந்திருக்கலாம் இப்படி சில விசயங்கள பத்தி பேசிட்டிருந்தப்போ, "இப்போ இல்லனா என்ன, கூடிய சீக்கிரமே மறுபடியும் முதலாளியா ஆகிடலாம்" அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுட்டு போறான். இப்பவும் சொல்லுறேன் இந்த தைரியமும், இந்த மனநிலையும் நமக்கெல்லாம் எக்காலத்துலயும் வரவே வராது, நாமெல்லாம் இங்கன அவங்கள பத்தி குறை சொல்லவும், அவங்கள ஏறி மிதிச்சு பெரியாள ஆகத்தான் லாயக்கு. லவ் யூ அண்ட் சாரி ரவீந்தர்!

No comments:

Post a Comment