26 Mar 2016

க்ளட்ச் பென்சில்








சின்ன வயசுல என்கிட்டே ஒரு பென்சில் இருந்தது, அது பேரு 'Mechanical Clutch pencil', கிட்டத்தட்ட அப்படியே முதல் ஃபோட்டோல இருக்குறமாதிறியேதான் இருக்கும். அது எங்க ஸ்கூல் ப்ரேயர் க்ரவுண்ட்ல பரப்பியிறுந்த மணல்ல கிடச்சதா நியாபகம். ஆனா அத எங்க எப்போ தொலைச்சேன்னு நியாபகம் இல்ல. அது என்கிட்டே இருந்தப்போ அது ஒரு ஏலியன் வஸ்துவா தான் எனக்கு தெரிஞ்சது. மொதோமுறையா பார்த்ததும் பென்சில்தான்னு மட்டும் தெரிஞ்சிடுச்சு. ஆனா அது எதோ எங்கயும் கிடைக்காத பென்சில்னும், முன்னால எப்பவாது யாராவது யூஸ் பண்ணிருப்பாங்க, இப்போ எங்கயும் கிடைக்காதுன்னும் நினைச்சு ரொம்போ பத்திரமா வச்சிருந்தேன். அந்த பென்சில்க்கான லெட்டும் தனியா கிடைக்கும்னெல்லாம் அப்போ தெரியாது, பென்சில சீவுறப்போ உடையுற பென்சில் மொக்கத்தான் அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன், அப்புறமா ஒரு நட்ராஜ் பென்சில் வாங்கி காம்பஸ வச்சு ரெண்டா பொளந்து அதுல இருக்குற பென்சில் லெட்ட தனியா எடுத்து அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன். கொஞ்சநாள்ல அதுல உள்ள அந்த ப்ளாஸ்டிக் ஹோல்டர் உடஞ்சிருச்சு, அப்புறமா எதோ ஒரு பேனாவோட ஹோல்டெர்லர்ல ஃபிக்ஸ் பண்ணி யூஸ் பண்ணுனேன், அதுமாறி ரெண்டுமூனு ஹோல்டர் ஒடஞ்சு, புதுசு புதுசா மாத்தி மாத்தி யூஸ் பண்ணிகிட்டிருந்தேன், அப்புறமாதான் அது தொலைஞ்சது. ரொம்போ ரேரான ஒரு பென்சில தொலச்சிடோமேனு நிறையநாள் நினச்சது உண்டு.


எங்க ஊர்ல இப்போவரைக்கும் பாலாஜி ஸ்டோர்ன்ற ஒரு கடைதான் ஸ்டேஷனரிக்கு ஃபேமஸ், அங்க போயி இந்த பென்சில கேக்கலாமா, பேரு தெரியாததால என்னனு சொல்லி கேக்குறதுனு தெரியல, 'பின்னால ப்ரஸ் பண்ணுனா நாலு பல்லு விரியும் அதுல பென்சில் லெட்ட போட்டு யூஸ் பண்ணலாம்' இப்படி சொன்னா கடைகாரருக்கு புரியுமா புரியாதா? இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சே அத வாங்க முயற்சிபண்ணாம விட்டுட்டேன். கடைசியா மூனு வருஷம் முன்னாலதான் இதோட பேரே தெரிஞ்சது, இது இன்னமும் கிடைக்குதுன்னும் அப்போதான் தெரிஞ்சது, ஆனா நான் தேடின எந்த கடைலயும் கிடைக்கல, அதுக்கு பதிலா லேட்டஸ்ட் மாடல்ல மைக்ரோடிக் பென்சில் மாதிரி மெக்கானிசம்ல தான் சில பென்சில்ஸ் கிடைச்சது. ஒரு வழியா இங்க சென்னைல ஹிந்துஸ்தான் ட்ரேடிங் கம்பனிலதான் இந்த க்ளட்ச் பென்சில் கிடைச்சது, விலை 150 ரூபாய்னாலும் ஓர்த்து. பென்சில் லெட் வாங்கி போட்டு யூஸ் பண்ணுறது மட்டும் இல்லாம, உடைஞ்ச லெட்டயும் போட்டு யூஸ் பண்ணிக்கலாம், ஃரன்ட்ல மெட்டல் கேஸ் இருக்கு, சோ பேலன்சிங் பாய்ண்ட் ஃரண்ட்ல இருக்றதால வரையுறப்போவும், எழுதுறப்போவும் சலிக்கவே சலிக்காது. படத்துல ரெண்டாவதா இருக்கிறது இப்போ என்கிட்டே இருக்குற மாடல், இப்போ என்கிட்டே இருக்குற பென்சில்ல ரொம்போ பிடிச்ச விஷயம் அதுக்கு பின்னால இருக்குற லெட் ஷார்ப்னர் தான். 
smile emoticon

No comments:

Post a Comment