2 Mar 2016

ஷூ

ஆஃபீஸ்ல டெய்லி ஷூ போடணும் அப்படின்னு ஒரு ரூல் இருக்கு, அதாவது கிளிஞ்சதோ கிழியாததோ, ஃபார்மலோ கேஷுவலோ, எதோ ஒன்னு போடணும், ஆக மொத்தம் ஷூ போட்டாகனும். செருப்பு போட்டுபோனாலும் ஒன்னும் பிரச்சன இல்ல போகலாம், ஆனா கேட்ல என்ன ரீசன்னு ரேக்கார்டுல எழுதிட்டு போனும், காலு வலி, ஷூ பின்சிருச்சு, ஷூ லாக்கர்ல இருக்கு இப்படி ஏதாவது ஒன்ன எழுதிட்டுதான் உள்ள போக முடியும். நின்னு எழுதிட்டு போறதுக்கு சங்கடப்பட்டே கழுத ஏதாவது ஒரு ஷூவ போட்டுகிட்டு போறது வழக்கம். அதுவும் நா வச்சிருக்குறது ஒரு வருஷம் முன்னால இண்டெர்வியூக்காக வாங்கினது, 300 ரூவா ஃபார்மல் ஷூதான், செம அடி வாங்கியிருந்தாலும், சூப்பர் க்லூ போட்டு ஒட்டி, டெய்லி லைட்டா துடைச்சுட்டு யூஸ் பண்ணுறதால ஒன்னும் தெரியாது, ஆனாலும், பிராண்டட் ஷூ போடுற ஒரு கம்ஃபர்ட்னஸ் கொடுக்கவே கொடுக்காது. ஆஃபீஸ் ஜாய்ன் பண்ணுனப்போ ஒன்னு சொன்னாங்க 'Invest in your shoes'னு, அது கொஞ்சம் உண்மை தான், அதாவது முன்னூரு ரூபாய்க்கு மூனு ஷூ வாங்குறதவிட ஆயிரம் ரூபாய்க்கு நல்ல ஷூவா ஒன்னு வாங்குறதுதான் பெட்டர்னு சொல்லுவாங்க, ஆனா நமக்குதான் மண்டைல வேற தோணுமே!, ஆயிரம் ரூபாய்க்கு ஒரே ஒரு ஷூ வாங்குறதுக்கு பதிலா பஜார்ல மூனு கலர்ல மூனு ஷூ வாங்கலாம்னு யோசிச்சு அப்புறம் அதுக்கும் மனசு வராம ஒரே ஒரு ஷூ வாங்கி சமாளிப்போம்.

ஒருவழியா இப்போதான் கொஞ்சம் நல்ல ஷூவா வாங்கலாமேன்னு யோசிச்சு, நெட்ல அப்புறம் ஃபிரன்ட்ஸ் கிட்டவெல்லாம் விசாரிச்சு லீ கூப்பர்ல ஒரு ஷூ வாங்கலாம்னு பிக்ஸ் ஆகியாச்சு. அப்புறம்தான் இன்னொரு யோசனை, எப்படியோ ஷூ வாங்கபோறோம், அப்டியே வாட்ச்சும் ஒன்னு வாங்குவோம், ஒரு நாள் கூட வாட்சே கட்னது இல்லையே, எப்படித்தான் இருக்குனு போட்டு பாத்துடலாம்னு ஒருத்தங்கிட்ட விசாரிச்சா, அவன் போட்ருக்க வாட்ச் 'டாமி ஹில்ஃபிங்கராம்' விலை பத்தாயிரம் ரூபாய்ங்க்றான், அதோட கண்ணாடிவேற உடைஞ்சு இருந்துச்சு, ஏன் ப்ரோ சரி பண்ணலையா?ன்னு கேட்டத்துக்கு கண்ணாடி மாத்த ரெண்டாயிரம் ஆகும் ப்ரோ அதான் மாத்தலங்கறான்!. அந்தோ பாவம்னு நினைச்சு, சரி என்னென்ன பிராண்ட்லதான் வாட்ச்செல்லாம் போடுறாங்கன்னு பாக்கலாமேன்னு கூட பேசுற எல்லாரு வாட்சையும் நோட் பண்ணுனதுல, ஒரு நாலு பேரு கைல ஓடாத வாட்ச், ஏங்க ஓடாத வாட்ச கட்டிருக்கீங்கன்னு கேட்டா, தெரியும்ங்க சரி பண்ணவெல்லாம் நேரமில்லங்க, வாட்ச் கட்டலன்னா ஒருமாறி இருக்கு, வாட்ச் கற்றது இங்க ஒரு ஸ்டேடஸ் அதான், இப்படி ஓடாத வாட்சுக்கு டிசைன் டிசைனா பதில் வந்துச்சு. நல்ல வேலையா வாட்ச் கட்டனும்ன்றது ஆஃபீஸ்ல ரூல் கிடையாது.

No comments:

Post a Comment