18 Dec 2016

கலகக்காரன்

2010ல எங்க ஊர் லால்குடில உள்ள பொது நூலகத்துக்கு வாராவாரம் நானும் என் ப்ரெண்ட்ஸ் மூனுபேரும் வெறித்தனமா போகிட்ருந்தப்போ, எஸ்ரா'வ படி சாருவயெல்லாம் படிக்காதன்னு லைப்ரரில யாரோ சொன்னதா நியாபகம். ஏதோ நியூஸ் பேப்பர்ல வந்த ஆர்டிகள்லகூட போட்ருந்தாங்கனு நினைக்கிறேன் சாரு ஒரு க்ரிடிக் ஊரே நல்லா இருக்குனு சொல்ற விசயங்கள கழுவி ஊத்துவாரு அப்டி இப்டினு. ஆனா உண்மையா இப்போவரைக்கும் சாரு, எஸ்ரா ரெண்டு பேரோட எந்த நாவலையும் உருப்படியா படிச்சது இல்ல.

எஸ்ராஓட, ஓவியங்கள் பத்தின ஒரு புக்க முழுசா படிச்சிருக்கேன் ஆனா பேரு நியாபகம் இல்ல, அதேபோல சாருவோட 'சினிமா-அலைந்து திரிபவனின் அழகியல்' புக்கையும் படிச்சிருக்கேன், இளையராஜா மேலயும் கமல் மேலயும் இந்த ஆளுக்கு ஏன் இவ்ளோ காண்டு, ஏன் இப்டி கழுவி ஊத்திருக்காருன்னு நினச்சேன். அப்போ நான் படிச்சு ரசிச்ச புக்குன்னா அது ஆசான் இறையன்பு ஐ.எ.எஸ் எழுதுன 'அவ்வுலகம்' நாவல்தான் :p.

 



அதுக்கப்புறம் சாருவை சுத்தமா படிக்கல, ஆனா சாருவபத்தி நிறைய படிச்சேன் ஆனா அதெல்லாமும் நெகட்டிவ்தான், அவரு வலது காதுல அவரு கடுக்கன் போட்டுருக்கிறதுல ஆரமிச்சு, பர்சனல், சினிமா, அரசியல், ஆன்மீகம், எலக்கிய சண்டைனு அவர்மேல வைக்கப்பட்ட எல்லா க்ரிடிக்ஸையும் படுச்சுட்டேன், இனி அந்த மனுஷனபத்தி படிக்க ஒண்ணுமில்ல. இனியாவது அவரின் எழுத்துக்களை படிக்கணும். சாரு எழுத்துக்களை படிச்சு அவரு கண்ணு வழியா நிச்சயமா இந்த ஒலகத்த ஒருதடவையாவது பாக்கணும்னு தோணினது, இங்க அவர் எழுத்த நம்மாளுங்க கொண்டாடுறத பாத்ததுக்கப்புறம்தான்.

ஹாப்பி பர்த்டே சாரு :), சிக்கிறமே உங்க புத்தகங்களை காசு கொடுத்து வாங்கி படிக்கப்போறேன் ;).
ஓவியம், போன வருஷம் இதேநாள்ல வரைஞ்சது!.


19 Nov 2016

மூணு-வீல் அவெஞ்சர்


தினமும் ஆஃபிஸ்ல இருந்து வெளியே வந்ததும், கழுத்துல இருக்குற அந்தப்பாசக்கயிற கழட்டி வண்டியோட டேங்க் கவர்ல வைக்கறது வழக்கம். இன்னைக்கும் சில மணிநேரத்துக்கு முன்ன ஆஃபிஸ்ல இருந்து கிளம்பி வெளிய வந்ததும் அத கழட்டி வைக்க வண்டிய ஓரமா நிப்பாட்டினேன். அப்போதான் எதிர்ல இருக்குற இன்னொரு கம்பெனியோட கேட்டு'கிட்ட புது பஜாஜ் vvvவண்டி ஒன்னு நிக்கிறது கண்ணுல பட்டது. பாத்தமாத்திரமே கண்ண வேற எங்கவும் திருப்ப முடியல!. பொதுவா எனக்கு அவெஞ்சர் வண்டி பிடிக்காது, அத பாத்தாலே சின்ன கொழந்தைங்க பெடல் இல்லாம காலால தள்ளி ஓட்டி வெளாடுர பொம்ம சைக்கிள் நியாபகம்தான் வந்துபோகும்.


ஆனா இன்னைக்கு, அந்தநியாபகம் வந்துபோற கேப்புக்கு முன்னமே சட்டுன்னு அந்த வண்டியில இருந்த ஏதோஒரு வித்தியாசம் அந்த வண்டிய ரொம்போ அழகா, கொஞ்சம் பிரமாண்டமா காட்டுச்சு. அது அந்த வண்டியில எக்ஸ்டராவா இருந்த அந்த ரெண்டு வீல். அது மாற்றுத்திறனாளி ஒருத்தரோட வண்டி, மொதோமுறையா கியர் வண்டி ஒன்ன எக்ஸ்டரா வீலோட பாக்குறேன். அந்த வண்டியோட கருப்பு கலரும், ரெண்டு எக்ஸ்டரா வீலும், அதோட ஷாக்-அப்சர்வரும், அந்தவண்டிக்கே உரிய அந்த விண்ட்-ஷீல்டும் அதோட கெத்த அதிகப்படுத்தினாலும் எல்லாத்துக்கும் மேல, அந்த வண்டில உட்காந்துருந்த அந்த மனுஷன்தான் கெத்து. அவரோட முகத்த பாத்ததும்தான் அந்த வண்டியோட விளம்பரத்துல வர்ற அந்த வாக்கியம் நியாபகத்துக்கு வந்தது, "Feel like God". :)

22 Oct 2016

செல்வம் இல்லை


சொற்களையும் வாக்கியங்களையும் பார்த்ததுமே டக்குன்னு சரியா படிச்சு ரியாக்ட் பண்ணுறது நமக்கு கொஞ்சம் கஷ்டம்தான். Kawasaki பைக்ஸ் இருக்கு இல்லையா! அத இத்தனை வருஷமா 'கவாஸ்கி' கவாஸ்கி'னே படிச்சிட்டிருந்திருக்குறேன், அது கவாஸ்கி இல்ல 'கவாஸாகி'ன்றத இன்னைக்குத்தான் கவனிச்சேன். எப்படியும் காலெஜ் படிக்கிறப்போ இருந்து அந்த கம்பெனி பைக்குங்களையும் பேரையும் பார்த்துட்டுதான் இருக்கேன், ஆனா ஒரு தடவ கூட கவனமா பார்த்து படிக்கல போல!.

எதோ இப்போ மட்டும்தான் இப்படினு இல்ல, படிக்கிறப்போ ஸ்கூல் போற வழியில ஒரு வீட்டோட முன்சுவர்ல 'செல்வம் இல்லை'னு எழுதியிருந்தாங்க. அவிங்க வீட்டுல 'செல்வம்' ஏன் இல்ல? செல்வம் யாரா இருக்கும்? செவத்த இல்லைனு மார்பல் கல்லுல எதுக்கு எழுதி பதிச்சு வச்சிருக்கானுங்கன்னு, டெய்லி அந்த வழியா போறவர்றப்போலாம் ஒரே யோசனையா இருக்கும்!. அத பார்த்ததுல இருந்து சரியா மூணு வருஷம் கழிச்சு எட்டாவது பாஸ் பண்ணினப்புறம்தான் அந்த வீட்ல எழுதியிருந்தது 'செல்வம் இல்லை' இல்ல, அது 'செல்வம் இல்லம்'னு தெரிஞ்சது. இப்படியா இன்னும் எத்தனை எத்தனை விளங்கிக்காத வார்த்தையெல்லாம் என் டிக்சனரில மயங்கிக்கிடக்கோ தெரியல 

24 Sept 2016

கேரளாவும் பிலிப்பைன்சும்


Modified Two-Whealers பத்தி ஆர்வமா தேடிக்கிட்டிருக்கிறப்போ, பஜாஜ் M80க்கே டியூக் என்ஜின ஃபிக்ஸ் பண்ணி அசால்ட்டு பண்ணுன கேரள பைக்ஸ் போட்டோஸ் கூகுள்ல வராம இருக்குமா!?. வண்டியவெல்லாம் தாறுமாறா ஆல்டர் பண்ணுறது அவனுங்கதான். ஆடெர்னா எதோ புல்லெட் ஒன்னுல ஹேண்டில் பாரும் பில்லியன் சீட்டும் ஆல்டர் பண்ணி ஓட்டுறதோ, இல்ல RX100க்கு கலர் பெயிண்ட் மாத்தி ஓட்டுறதோ இல்ல. ஸ்ப்லெண்டரையே ஸ்க்ரேம்புலறா மாத்துறது.

என்ன பொறுத்தவரைக்கும், வீட்டுல எப்பவுமே இருக்குற ஒரு வண்டியவே பக்காவா மெயின்டெய்ன் பண்ணி, சில ஆல்ட்ரேசன்சோட ஒட்டுறதுதான் கெத்து. அதுக்கு நம்ம சென்னை ஒன்னும் கொறஞ்சது இல்லனாலும், இங்கயெல்லாம் போலீஸ் கிட்ட மாட்டுனா மினிமம் நூறு ரூபா இருந்தாலே போதும் தப்பிக்க. ஆனா நான் கேள்விப்பட்ட வரைக்கும் கேரளாவ்ல அப்டி இல்ல, ரூல்ஸ் எல்லாம் ரொம்போ ஸ்ட்ரிக்டு. ஆனாலும் பைக் கிறுக்கனுங்க பூராவும் ஏதாவது ஆல்ட்ரேசன் பண்ணிதான் ஓட்டுறானுங்க. இப்போல்லாம் கேரளால வர்ற பாதி படங்களோட போஸ்ட்டர்ஸ்லகூட டூ-வீலரோட ஹீரோ வர்றமாதிரி போட்டுத்தான் ப்ரோமோட்டே பண்ணுறாங்கனு ஒரு ஆர்டிகல் கூட பாத்தேன். அந்த அளவுக்கு பைக் கிரேஸ் அங்க!

அங்கெல்லாம் எல்லாருமே வெளி உலகத்துக்கு நல்லாவே எக்ஸ்போஸ்டா இருக்காங்க. அங்க பைக் க்ரேஸ்ன்றதைவிட, படிச்சவன்லாம் அதிகமா சொந்த ஊர்லயே ஏதாவது வேலையோ தொழிலோ பண்ணுறான்றத சொல்லலாம். ஏன்னா இங்கயெல்லாம் சிட்டிக்குள்ளதான் அதிகமா பைக் கிறுக்கனுங்கள பாக்க முடியும், அங்கெல்லாம் கிராமத்துக்கு கிராமம், தெருவுக்கு தெருவு இருக்கானுங்க. எப்போவுமே சிட்டில இருக்கிற கெடுபுடி கிராமத்துல இருக்காதுன்றதால தைரியமா தன் பைக்க ஆல்டர் பண்ணிகிட்டு சுத்துறாங்க! 

இங்க சம்பந்தமே இல்லாம, மொதல் வரிய்ல பிலிப்பைன்ஸ ஏன் இணைச்சேன்னு யோசிக்கிறீங்களா? இந்தியாவுக்கு ஒரு கேரளான்னா, ஆசியாவுக்கு ஒரு பிலிப்பைன்ஸ்!!. ரெண்டாவது, மூணாவது பேரா அப்டியே பிலிப்பைன்ஸுக்கும் பொருந்தும். காஸ்ட்லீ பைக் ஒன்னு வாங்கி ஒட்டுறவன் விட, மைலேஜ் வண்டி ஒன்ன தனக்கு புடிச்சமாதிரி டிசைன் பண்ணி ஒட்டுறவன்தான் அங்க அதிகம் போல, அதுல ஸ்கூட்டரும், 3-வீலரும்கூட அடங்கும். கொஞ்ச மாசம் முன்னால பஜாஜ் பாக்ஸர் ஒன்ன, அவங்க ஊர்ல ஒருத்தன் ஆல்டர் பண்ணியிருந்த விதத்த பாத்தப்போ அப்டியே கண்ணுல ஒத்திக்கலாம்போல இருந்துச்சு, அவ்ளோ ரசனை தெரிஞ்சது அதுல.

இந்தமாதிரியான விசயங்கள்தான், கொஞ்சம் கொஞ்சமா அந்த ஊர்களின் மேல் காதலை நிரப்புது. 

17 Sept 2016

கலர்



ஸ்கூல் படிக்றப்போ சிக்னல் லைட்டுனா அதுல மூணு கலரு இருக்கும்னு மட்டும் சொல்லி கொடுத்ததால, பெரியவனாகி நாம எப்படி வண்டி ஓட்டுறதுனு ரொம்போ பயந்தேன். ஏன்னா எனக்கு கலரு அவ்வளவா தெரியாது! அதுவும் புக்ல எல்லாம் மூணு கலரையும் ஒண்ணா போட்டு ஒரு எக்ஸ்சாம்புல்க்கு காட்டுவாங்க, அப்பாடான்னு இருக்கும் ஏன்னா அந்த மூணு கலரும் ஒண்ணா இருந்தா எனக்கு கண்டுபிடிக்கிறது ஈஸி. அப்புறம்தான் தெரிஞ்சது ஒரு சமயத்துல ஒரு கலருதான் எரியும்னு.

அப்புறமா காலேஜ் படிக்கிறப்போதான் டிராஃபிக் சிக்னல் லைட்ஸ் பத்தி புரிஞ்சது. மொதல்ல ரெட்டு, ரெண்டாவது எல்லோ, மூணாவது கிரீனு, இதுவே போதுமானதா இருந்தது சிக்னல கண்டுபிடிக்க. அதுவும் க்ரீனுன்னா ஏதாவது ஒரு சைடு ஏரோ மார்க்லதான் எரியும், எல்லோ ட்ராப்பிக்கே இல்லாதப்போதான் எரியும் அதுவும் பிலிங்க் ஆகிட்டே எரியும், சிகப்பு சொல்லவே தேவையில்ல மொதல்ல இருக்கிறது அதான் கூடவே எப்படியும் நமக்கு முன்ன ஒருத்தன் நிப்பான் அதனால தெரிஞ்சிடும்.

ஆனா உண்மை என்னன்னா எனக்கு டிராஃபிக் சிக்னல்ல கலரு கண்டுபிக்கிறது பிரச்சனையே இல்லனு வண்டி வாங்கினப்புறம் தான் தெரிஞ்சது. ஏன்னா எனக்கு இருக்கிறது total colour blindness இல்ல colour vision difficiency. அதுக்காக எனக்கு கலர்ல எந்த பிரச்சனையும் இல்லனு அர்த்தம் இல்ல, ஆனா எனக்கு என்ன பிரச்சனைன்னு மத்தவங்களுக்கு சொன்னா புரியாது. அதனாலதான் இந்த ஃபோட்டோவையும் போட்ருக்கேன்.

இதுல எனக்கு எதுமே தெரியல, ஆனா எல்லாரும் நம்பர் 2 தெரியுறதா சொல்லுறாங்க. இதுல அவங்களுக்கு தெரியுற அந்த நம்பர் 2 ஓட கலருக்கும் இதோட பேக்கிரவுண்ட் கலர்ஸ்க்கும் இடைல உள்ள அந்த hue difference தான் எனக்கு தெரியாது!. யாருக்குனா என்னமாதிரியே இதுல எதுமே தெரியலைனா கைய உயர்த்துங்க மக்களே, நாமெல்லாம் ஒரே சாதிய்ல இணைவோம்!!

10 Sept 2016

ஏழைக்கேத்த எள்ளுருண்டை - OLX


ரெண்டுமாசத்துக்கு முன்னால Bajaj V பைக்க டெஸ்ட் ட்ரைவ் பண்ணிட்டு, இத வாங்க முடியுமா முடியாதானு தெரியலன்னு அதோட ஃபோட்டோவ ஸ்டேடசா போட்டதுதான் கடைசி போஸ்ட். அதுக்கப்புறம் அந்த பைக்கை வாங்க முடியாதுனு தெரிஞ்சது, அப்புறம் ஏழைக்கேத்த எள்ளுருண்டைனு TVS Star City வண்டி ஒன்னு Secound Hand'ல வாங்கியாச்சு. OLX லதான் தேடி வாங்கினோம், ஒரு பத்து பைக்குக்கிட்ட பாத்து வச்சு அதுல அமைஞ்சதுதான் இந்த பைக்.

OLX 'ல வண்டி வண்டி வாங்குறதுன்றது மதில்மேல் பூனை நிலமைதான், டெசிஷனே எடுக்க முடியாது. அங்க விளம்பரத்துல வர்ற பாதி வண்டி ஏதாவது ஒரு பிரச்சனைனாலதான் வருது. இல்லனா ஓனர் ஏதாவது ஏமாத்துவாங்க, வண்டியோட சரியான விலைய கெஸ் பண்ணவே முடியாது, இப்படி பல பிரச்சனைய இருக்கும். எனக்கு கிடைச்ச அனுபவத்துல எப்படி வண்டி வாங்குறதுனு லிஸ்ட் பண்ணுறேன்.


கீழ நான் சொல்லப்போறது நம்ம சென்னைக்கு நல்லா பொருந்தும், சென்னைன்னு போட்டு OLX ல வண்டி சேர்ச் பண்ணி பாருங்க தினந்தினம் எப்படியும் ஒரு நூரு வண்டிவரைக்கும் ஆட் ஆகுது. ஆட் ஆகுறது மட்டுமில்ல, நல்ல பைக்னா உடனே ஒன்னுரெண்டு நாள்ல சேல்'லும் ஆகிடும். ஆனா மத்த டிஸ்ட்ரிக்ட் அப்டி இல்ல தினமும் ஒரு 10க்கு மேல ஆட் ஆகாது, ரெண்டுமாச பழைய விளம்பரத்துக்கு கூட நம்பி ஃபோன் பண்ணிகேக்கலாம் விக்காம இருக்கும். ஆனா இங்க அப்டி இல்ல இன்னைக்கு போட்டா மேக்சிமம் ரெண்டுநாள்ல பைக் வித்துடுது.

1. சிங்கிள் ஓனர் வண்டியா பாக்குறது நல்லது, ரெண்டாவது அல்லது மூணாவது ஓனர் வண்டியா இருக்கும் பட்சத்துல, வண்டிமேல எந்த நம்பகத்தன்மையும் இருக்காது.

2. ரெண்டாவது, 5 வருஷத்துல இருந்து 8 வருஷத்துக்குள்ள இருக்கிற வண்டியா பாக்குறது நல்லது. டூ வீலர்க்கும் FC பண்ணணும்ன்றதே நம்மள்ல பல பேருக்கு தெரியாது. வண்டி வாங்கி 15 வருசத்துக்கு அப்புறம் FC பண்ணணும், அதுக்கப்புறம் ஒவ்வொரு 5 வருஷத்துக்கு ஒரு முறையும் FC பண்ணனும். சோ maximum 8 வருஷத்துக்குள்ள பழைய வண்டியா பாத்து வாங்கினா அப்புறம் ஒரு 7-8 வருசத்துக்கு எந்த பிரச்சனையும் இல்ல.

3. மூணாவதா பாக்க வேண்டியது வண்டியோட 'Total km'. இதுல என்ன பிரச்சனைனா ஈஸியா ஸ்பீடோமீட்டரா ரீசெட் பண்ணமுடியும்ன்றதால எது உண்மையான கிலோமீட்டர்ன்னு நம்பவே முடியாது. சோ வாங்க போற வண்டியோட லுக், டயர் அப்புறம் எஞ்சின் சவுண்ட் இத வச்சுதான் அது கரெக்ட்டான்னு ஒரு முடிவுக்கு வர முடியும். அப்புறம் வருசத்துக்கு 8000km மேக்சிமம் ஓடியிருந்தா அந்த வண்டி ஓகே(2010 மாடல்னா மேக்சிமம் ஒரு 50,000km ஓடியிருந்தா ஓக்கே), அப்டி இல்லாம அதிகமா ஓடியிருந்தா அத தவிர்க்கிறது நல்லது.

3. நாலாவது வண்டியோட ரேட்டு. வண்டியோட மாடல், வருஷம் கூடவே வண்டியையும் ஒரு மெக்கானிக் கிட்ட காட்டினா அதோட விலைய கரெக்ட்டா சொல்லிடுவாரு. மெக்கானிக் யாரும் தெரியாதுன்னா bikes4sale.inல ச்செக் பண்ணலாம் ஓரளவுக்கு கரெக்ட்டா இருக்கும்.

4. வண்டியோட ரேட்டை ச்செக் பண்ணின அடுத்து பண்ண வேண்டியது வண்டியோட தேய்மானச்செலவ அதோட ஒரிஜினல் ரேட்ல இருந்து கழிச்சு பாக்குறது. அதுக்கு Depreciation Calculator னு நெட்ல சேர்ச் பண்ணி ஈஸியா கணக்கு பண்ணலாம். அதாவது இப்போ மெக்கானிக் 20000 சொல்றாருனு வச்சுக்குவோம், ஆனா தேய்மானச்செலவு போக வண்டியோட ரேட்டு 18000 வருதுன்னா, 18000 தான் வண்டியோட தற்போதைய விலை 20000 இல்ல.(டு-வீலர்க்கு வருஷத்துக்கு 15% Depreciation Amount போட்டு கால்குலேட் பண்ணனும்)

5. எல்லாமே கரெக்ட்டா அமைஞ்சு, கூடவே பேட்டரியும் நல்லா இருந்து, இன்சூரன்சும் கர்ரெண்ட்ல இருந்தா அதுக்கப்புறம் ஓனர்கிட்ட பேசி ஒரு நல்ல ரோட்டுக்கு வாங்குறது உங்க திறமை!.

30 May 2016

என் நல்லூர்கள்

எனக்கு நல்லூர்கள் ரெண்டு உண்டு. ஒன்னு சிங்காநல்லூர், இன்னொன்னு சோழிங்கநல்லூர். நாலு வருஷம் முன்னால கோவைல காலேஜ் ஜாயின் பண்ணினதுக்கப்புறம், திருச்சியிலருந்து கிளம்புனா அடுத்து கோயம்புத்தூர்ல கால் வைக்குற இடம் சிங்காநல்லூர்தான், பிறகு அங்க இருந்து பஸ் புடிச்சாதான் காலேஜ். அப்புறம் வீக்கெண்டுல கொறஞ்ச காசுல, செம்ம திருப்தியா சாப்புட போற இடமான 'சாந்தி கியர்ஸ் கேண்டீன்' இருக்றதும் சிங்காநல்லூர்தான். ஆக அப்போவெல்லாம் பஸ்ஸுல ஏறி வாயத்தொறந்தா மொதல்ல வர்ற பேரு சிங்காநல்லூராதான் இருந்தது.
அதுபோலவே இங்க சென்னை வந்தப்புறம் ட்ரெயினிங்க்கு ஜாயின் பண்ணின இடம் சோழிங்கநல்லூர். சோ இங்க வந்தப்புறம் முதல் ஒரு மாசம் டெய்லி ஆஃபிஸ் போக பஸ் ஏறி 'சிங்காநல்லூர் டிக்கெட் ஒன்னு கொடுங்க'ன்னு பல முறை கேட்டு பிறகு திருத்திக்கேட்டது உண்டு. பலமுறை சிங்காநல்லூர்க்கே டிக்கெட் கேட்டிருந்தாலும் சோழிங்கநல்லூர்க்கு சரியா டிக்கெட் வந்துடும் ;) காரணம் ரெண்டும் நல்லூர்தானே! :)
இப்போ வேறமாதிரியான நிலைமை, போன வெள்ளிக்கிழமை நண்பன் ஒருத்தன் ஃபோண் போட்டு கோயம்புத்தூர்ல ஒரு இடத்துக்கு போக வழி கேக்க, சிங்காநல்லூர்ன்னு சொல்ல வேண்டிவந்த அத்தனை இடத்துலயும் சோழிங்கநல்லூர் சோழிங்கநல்லூர்ன்னே சொல்லி பிறகு ஒவ்வொரு முறையும் திருத்திச்சொன்னேன். ஆனா இன்னமுமே இரண்டு நல்லூர்களும் குழப்பும். ரெண்டு பெயரையுமே மாத்திமாத்தி சொல்லுறதுண்டு, அதுல ஒரு மறவாத்தன்மை இருக்றதா எனக்கு நம்பிக்கை.
ஆனா ட்ரெயினிங் முடிஞ்சப்புறம் சோழிங்கநல்லூர்ல இருந்து அப்டியே தூக்கி செங்கல்பட்ல போட்டுட்டாங்க, கிட்டதட்ட ரெண்டுமாசம் ரெண்டு நல்லூரயும் குழப்பிக்காம இருந்தது தொயரம். திடீர் நல்லசேதியா இப்போ தெரியவந்த விசயம் என்னன்னா அடுத்தமாத இறுதிய்ல மறுபடியும் அப்டியே மொத்தமா எல்லாரும் சோழிங்கநல்லூர்க்கே நகரப்போறம். இனி நல்லூர்களை மறக்காமல், மீண்டும் குழப்பிக்கொள்ள தயாராகனும். :)

27 May 2016

Flatland by Aydın büyüktaş



Surreal Photography'யாம். இந்த Inception, Elysium, Upside down படத்துங்கள்ல வர்ற சில சீன்ஸ எல்லாம் நியாபகப்படுத்திருச்சு, லவ்லி. 



informed by the satirical novel by edwin abbott titled ‘flatland: a romance of many dimensions’ — the story of a two-dimensional world occupied by geometric figures — turkish artist aydın büyüktaş sets his series ‘flatland’ in a surprising context that defies the laws of physical existence.

இது இஸ்தான்புல், ஏற்கனவே இஸ்தான்புல்ல பத்தி கேள்வி பட்டிருக்றதாலயும்,"Istanbul | Flow Through the City of Tales" அப்டின்ற இஸ்தான்புல் ஏர்லைன்சோட விளம்பர வீடியோ ஒன்னு பார்த்ததாலயும், ஃபாரிசுக்கப்புறம் காதல்வயப்பட்டிருக்றது இஸ்தான்புல்கிட்டதான். இப்போ அதுக்கு தீனி போட்டிருக்கு இந்த ஃபோடோக்ராஃபி சீரீஸ். 

29 Apr 2016

சனியாகும் வெள்ளி



இந்த வெள்ளிக்கிழமை இருக்கே, சனியன்!!.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நைட்டே ட்ரெஸ்சயெல்லாம் ஊரவச்சு, துவச்சி போட்டுட்டா சனி, ஞாயிறு ரெண்டுநாளும் நிம்மதியா நெனச்சத பண்ணலாம்னு யோசிச்சு ட்ரெஸ்ச ஊர வைக்கிறது உண்டு. ஆனா அன்னைக்கு மட்டும் நியாபகமறதி உச்சத்துக்கு போயிடும். அதும் எப்டினா சனிக்கிழமை நைட்டுதான் ட்ரெஸ்ச ஊர வச்சதே நியாபகத்துக்கு வரும்.

அட அப்போவாவது துவைச்சி முடிச்சு ஞாயித்துக்கிழமையாவது நிம்மதியா இருக்கலாம்னு நெனைச்சா... அங்கதான் இன்னும் அடி விழும், பின்ன 24 மணிநேரம் நல்லா தண்ணில ஊரிப்போன ட்ரெஸ்ச துவைச்சு காயவச்சு எடுத்தா மணக்கவா செய்யும். அழுக்கா இருக்றப்போ வர்ற ஸ்மெல்லவிட பலமடங்கு அதிகமா நமத்துப்போன ஸ்மெல் வரும். அப்புறம் வேற என்ன, மருக்கா ஒரு டைம் ஞாயுத்துக்கிழமையும் கவனமா அலசி போடனும், அப்பவும் அந்த ஸ்மெல் முழுசா போக ரெண்டு தடவைக்குமேல துவைக்கனும்.

படிக்கிறப்போ ஹாஸ்டல்ல இருந்ததவிட, இப்போ அந்த மறதி குறஞ்சிடுச்சி. ஆனாலுமே சென்னை வந்தப்புறம் ஒரு மூனுமுறை இப்டி மறந்து, அந்த வீக்கென்டல நல்லா வாங்கிகட்டிகிட்டாச்சு. இன்னைக்கு இந்த வெள்ளி, சனியனாக மாறாதுன்ற நம்பிக்கைல ட்ரெஸ்சயெல்லாம் ஊரவைக்கப்போறேன், பார்க்கலாம்!

19 Apr 2016

கூந்தல் மாதிரி



பொதுவா பொண்ணுக்கும் பையனுக்கும் ஒத்துப்போகுதோ இல்லையோ, பொண்ணுக்கும் பொண்ணுக்கும் ஒத்துபோகுறதே இல்ல. எனக்கு தெரிஞ்ச அக்கா ஒருத்தங்க திருச்சில காலெஜ் ஜாயின் பண்ணினஅப்போ அவங்க ஹாஸ்டல் சீனியர்ஸ் அவங்க கைல ஒரு குண்டூசிய கொடுத்து அதால அவங்க இருந்த ரூம அளந்து எத்தனை குண்டூசி வரும்னு சொல்ல சொன்னாங்களாம், இவங்களும் எதோ விஜயகாந்த் மாதிரி தோராயமா மனக்கணக்கு போட்டு ஒரு நம்பர சொல்லி தப்பிச்சிடலாம்னு ஒரு நம்பர சொல்லியிருக்காங்க. அங்கதான் ட்விஸ்டு, அந்த சீனியர் ஆல்ரெடி அவங்க ஜாயின் பண்ணினப்போ இதேமாதிரி அவங்க சீனியர்கிட்ட மாட்டி அப்புறம் கடைசியா அளந்து சொன்னப்புறம்தான் விட்டிருக்காங்க, சோ அவங்களுக்கு சரியான நம்பர் தெரியும். இந்த அக்கா தப்பான நம்பர் சொன்ன அப்புறம் என்னையவே நீ எமாத்துரியான்னு சொல்லி கடைசியா அந்த குண்டூசியால ரூம அளக்க வச்சு, அளந்தஅப்புறமும் நம்பர் தப்புன்னு சொல்லி அழவச்சு, நோகடிச்சு அப்புறமாதான் விட்டிருக்காங்க.

இந்தமாதிரி எல்லா பக்கமும் நடக்கறது இல்லன்னாலும், அங்க அங்க நடந்துகிட்டுதான் இருக்கு. பையனுங்கதான் மயிரு மாதிரி பிஹேவ் பன்னுறானுன்கன்னா, சில பொண்ணுங்களும் கூந்தல் மாதிரிதான் பிஹேவ் பண்ணுறாங்க. கடந்த ரெண்டுமூனு நாட்கள்ல ஒரு பொண்ண பத்தி இன்னொரு பொண்ணு குறை சொல்லுறது, பழிவாங்குறது, ட்ரெஸ்சிங்க கிண்டல் பண்ணுறது, பார்வைலையே அவமானப்படுத்துறது என சகலமும் பார்த்தாச்சு. உச்சகட்டம் என்னன்னா, ட்ரெயின்ல ஒரு லேடி டீச்சர் இன்னொருத்தவங்ககிட்ட ஒரு டீச்சர ரொம்போ அழகா பாராட்டிகிட்டிருந்தாங்க, அவங்க கிட்டயெல்லாம் படிக்கிற பசங்கதான் ரொம்போ பாவம், எந்த ஒரு நல்ல வேலியூவும் அவங்க மூலமா கிடைக்க ச்சான்சே இல்ல. ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாத்துறதெல்லாம் இருக்கட்டும், பெண்களிடமிருந்து பெண்களை காப்பாத்தவே இங்க நிறைய மாதர்சங்கங்கள் தேவை. கொடூரமான மனநிலையில் சிலர் திரிகிறார்கள்!

4 Apr 2016

எ.டி.எம் திருவிளையாடல்




எ.டி.எம்'ல பணம் எடுக்குறப்போ 400, 900, 1900 இப்படி எடுத்துதான் எனக்கு பழக்கம். ஏன்னா 500, 1000, 2000 இப்படி எடுத்தா நூரு ரூபாய் நோட்டு வர்றதே இல்ல, நிறைய எ.டி.எம்'ல டினாமினேசன் மிக்ஸ் ஆகி வந்தாலும், எனக்குன்னு எடுக்க போனா மட்டும் வரவே வராது, டிசைன் அப்புடி. அதனாலதான் எப்பவுமே ஒரு நூரு ரூபா நோட்டாவது வர்றமாறி டினாமிநேசன்ல எடுப்பேன். பொதுவா பணம் எடுக்குறப்போ பல எ.டி.எம்'ல "டு யூ வாண்ட் ரெசிப்ட்" அப்படின்னு கேக்கும், அதுக்கு கீழ "எஸ்" & "நோ" இந்த ரெண்டு பட்டனும் இருக்கும், என்னோட பேங்க் எ.டி.எம்'ல கூடவெ ஒரு வசனமும் இருக்கும் அதாவது "ப்ரெஸ் நோ டு சேவ் ட்ரீஸ்" அதாவது ரெசிப்ட் பிரிண்ட் பண்ணுறதால நெறைய மரம் அழியுதாம், சரி அதுதான் பணம் எடுத்த உடனேயே பேலன்ஸ் எவ்ளோ இருக்குனு டக்குனு ஃபோனுக்கு மெசேஜ் வந்துடுமே அப்புறம் எதுக்கு மரத்த வெட்டனும்னு நா எப்பவும் ரெசிப்ட் பிரிண்ட் பண்ணுறதில்ல.

போன டைம் எ.டி.எம் போனப்பவும் இதேபோலத்தான் 900 ரூபா எடுத்தேன், மொத்தமா சேவிங்ஸ்ல இருந்த அமவுண்ட் மூவாயிரத்திசில்லரை ரூவா, 900 எடுத்தது போக 2100 ரூபாய் கிட்ட இருக்கணும், ஆனா ரெசிப்ட்ல 2000 எடுத்தது போக மிச்சம் ஆயிரத்திசில்லரை ரூபாய்தான் இருந்தது. 900 தானே எடுத்தோம், எப்படி 2000 ரூபா டெபிட் ஆச்சுன்னு ஒரே யோசனை, செம்ம டென்சனும்கூட, வாட்ச்மேன்ட கேட்கலாம்னா அந்த எ.டி.எம்'க்கு வாட்ச்மேன்னும் இல்ல, பயங்கர குழப்பத்தோட வீட்டுக்கு வந்து ஃபோன எடுத்து பார்த்தா கரெக்டா 900 தான் டெபிட் ஆகிருக்கு, மிச்சம் 2100ம் கரெக்டா இருந்தது.

அப்புறம்தான் நியாபகம் வந்தது, நாமதான் ரேசிப்டே பிரிண்ட் பண்ணலையேன்னு. யாரோ ஒருத்தவங்க பிரிண்ட் பண்ணின ரெசிப்ட் அது, அந்த லூசு அத எடுக்காம போயிட்டான்/ள், இந்த லூசு ரெசிப்ட் பிரிண்டே பண்ணாம மெஷின்ல இருந்த ரெசிப்ட எடுத்து கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன். எல்லாத்தையும் விட கொடுமை என்னன்னா ரெண்டு பேருக்கும் சேவிங்ஸ்ல கிட்டத்தட்ட ஒரே அமவுண்ட் இருந்தது பாருங்க அதுக்கு பேருதான் 'திருவிளையாடல்'.

1 Apr 2016

ரவீந்தர்'ஸ் மாம்ஸ் ரெசிப்பி



போனவருஷக்கடைசில வந்த வெள்ளத்துக்கு நிறைய கார்பொரேட் கம்பெனிகள்ல லோன் கொடுக்கப்பட்டது, எங்க கம்பெனிலயும் ஒரு லட்சம் வரைக்கும் வட்டியில்லாத லோன் இருந்தது, இருபது மாசம் நாலாயிரம் நாலாயிறமா கட்டினா சீக்கிரம் அடைச்சிடலாம். கிட்டத்தட்ட எங்க பேட்ச்ல இருந்த பாதி பேர் அந்த லோன எடுத்துகிட்டோம். நம்ம ஊரு பசங்க, பொண்ணுங்களுக்கு அவங்கவங்க தேவைய பொருத்து, education லோன அடைக்க, நகை எடுக்க, ஃபிக்ஸ்டு டெப்பாசிட்ல போட, வேறு சில கடன்கல அடைக்க என இப்படி அந்த பணத்த எடுத்து செலவு பண்ணத்தான் முடிஞ்சது, ஒரு காலத்துலயும் இப்படியான ஒரு லட்சம் பணத்த எடுத்து எதுலயாவது இன்வெஸ்ட் பண்ணவோ, இல்ல சைடுல ஒரு தொழில் தொடங்கவோ நமக்கும் சரி, நம்மள சுத்தியிருக்கிரவங்களுக்கும் சரி தைரியம் வரவே வராது, நாம வளர்க்கப்பட்ட விதம் அப்படி, இதுதான் இங்கு பெரும்பான்மை.

இது நம்மள சுத்தி இருக்கிற நிலம, அப்படியே அடுத்த பக்கம் போவோம், நார்த்-இந்தியன்ஸ். அவங்களுக்கும் நமக்கும் இருக்கிற வித்தியாசத்திற்கு ஒரு காரணம் உண்டு, அதாவது காலனி ஆதிக்க காலங்கள்ல வடஇந்திய மக்கள் பல போர்களை சந்திச்சது உண்டு, அவங்க அனுபவிச்ச அளவு போர்களின் நிதர்சனத்த நாம பார்த்தது இல்ல, இதுதான் நமக்கும் அவங்களுக்கும் இடையில இருக்கிற வித்தியாசத்துக்கு காரணமென பலரும் சொல்லிகேட்டிருக்கிறேன். ஆக அவர்களிடம் பணம், பொருள், நகை இதுக்கெல்லாம் வேலியூ அவ்வளவாக இருக்காது, தோல்விகள கூட ஈசிய எடுத்துகிற பக்குவம் இருக்கும், இப்படியாக வந்தா மலை போனா மசுருன்னு முடிவு பண்ணி இந்த ஒரு இலட்சத்த எடுத்து எங்க நார்த்-இந்திய நண்பன் ஒருத்தன் அவங்க ஊர் நண்பர்களோட சேர்ந்து இன்னும் கொஞ்சம் பணம் போட்டு, ஒரு கடைய வாடகைக்கு எடுத்து, லைசென்ஸெல்லாம் வாங்கி 'மாம்ஸ் ரெசிப்பி' அப்படின்னு ஒரு நார்த்-இந்தியன் ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் ஆரம்பிச்சான், எங்களையும் கூப்பிட்டிருந்தான், முதல் வாரம் நல்ல வருமானம் வந்திருந்தது. மொழி தெரியாத ஒரு இடத்துல போயி செட்டில் ஆன சில மாசத்துலயே கொஞ்சம் பணம் போட்டு தொழில் பண்ணுற தைரியமெல்லாம் நமக்கு வரவே வராதுன்னு அவன வாழ்த்திகிட்டிருந்தோம். 

அதுக்கப்புறம்தான் பிரச்சனையே, அவன் கடை ஆரம்பிக்கிறதுக்கு சில லோக்கல் தமிழ் ஆளுங்க, கடை பிடிச்சு தர்றது, ஃபர்னிச்சர் வாங்குறது, வேலைக்கு செப்ஃ, ஹெல்ப்பர் போடுறது என சில உதவிகள செஞ்சிருக்காங்க, இப்போ எல்லா பிரச்சனையும் அவங்ககிட்ட இருந்துதான். கடையோட முதல்நாள் வருமானம், முதல் வார வருமானம் இதயெல்லாம் பார்த்த அவங்க, ஒருநாள் கடை திறக்க வந்த செப்ஃ கிட்ட இருந்து சாவிய புடுங்கிகிட்டு இனி கடை எங்களோடது, இனி கடை நாங்கதான் நடத்துவோம்னு பல பிரச்சனைகள செஞ்சுட்டாங்க, சில நாட்கள் தொடர்ந்து பிரச்சனை பண்ணி கடைசியா அந்த கடை ஓனர், அவன் தங்கியிருக்கிற பிஜி ஓனர் என எல்லாரும் பேசி அந்த கடைய லோக்கல் ஆளுங்களுக்கே பேசி கொடுத்துட்டாங்க, கூடிய சீக்கிரமே பூரா பணத்தையும் இவன்கிட்ட செட்டில் பண்ண சொல்லியும் பேசிட்டாங்க. இப்போ, அவன் ஆசை ஆசையா ஆரமிச்ச அந்த ஃபாஸ்ட் ஃபுட் கடை கைமாரிடுச்சு. அதுக்காக செலவு பண்ணின பணமும் இன்னும் முழுசா கைக்கு வரல, எனக்கு தெரிஞ்சு அந்த கடைய ஆக்கிரமிச்சிருக்கிரவனுங்க, அதுல வருமானம் எடுத்துத்தான் இவனோட காச கொடுப்பானுங்க போல.

இதுஎல்லாம் நடந்து ஒரு மாசம்கிட்ட ஆச்சு, இப்போலாம் இதை பத்தி அவனிடம் யாரும் பேசுறது இல்ல, நம்ம ஊர்ல, நம்ம ஆளுங்களே இப்படி பண்ணினது எல்லாருக்குமே கொஞ்சம் அவமானமாதான் இருக்கு. ஆனா அவன் இப்பயும் நாங்க, நீங்க அப்படியெல்லாம் நினைச்சு பேசுறது இல்ல, இன்னைக்கும் முன்ன இருந்தது போலவேதான் இருக்கான், அப்படியேதான் பேசுறான், அப்படியேதான் சிரிக்கிறான். இன்னைக்கு அந்த கடையோட தினசரி வருமானம் கிட்டத்தட்ட பத்தாயிரம் இருக்குதாம், இந்நேரம் இவன் நடத்தியிருந்தா நல்லா இருந்திருக்கும், சீக்கிரமே நல்லா வந்திருக்கலாம் இப்படி சில விசயங்கள பத்தி பேசிட்டிருந்தப்போ, "இப்போ இல்லனா என்ன, கூடிய சீக்கிரமே மறுபடியும் முதலாளியா ஆகிடலாம்" அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுட்டு போறான். இப்பவும் சொல்லுறேன் இந்த தைரியமும், இந்த மனநிலையும் நமக்கெல்லாம் எக்காலத்துலயும் வரவே வராது, நாமெல்லாம் இங்கன அவங்கள பத்தி குறை சொல்லவும், அவங்கள ஏறி மிதிச்சு பெரியாள ஆகத்தான் லாயக்கு. லவ் யூ அண்ட் சாரி ரவீந்தர்!

26 Mar 2016

க்ளட்ச் பென்சில்








சின்ன வயசுல என்கிட்டே ஒரு பென்சில் இருந்தது, அது பேரு 'Mechanical Clutch pencil', கிட்டத்தட்ட அப்படியே முதல் ஃபோட்டோல இருக்குறமாதிறியேதான் இருக்கும். அது எங்க ஸ்கூல் ப்ரேயர் க்ரவுண்ட்ல பரப்பியிறுந்த மணல்ல கிடச்சதா நியாபகம். ஆனா அத எங்க எப்போ தொலைச்சேன்னு நியாபகம் இல்ல. அது என்கிட்டே இருந்தப்போ அது ஒரு ஏலியன் வஸ்துவா தான் எனக்கு தெரிஞ்சது. மொதோமுறையா பார்த்ததும் பென்சில்தான்னு மட்டும் தெரிஞ்சிடுச்சு. ஆனா அது எதோ எங்கயும் கிடைக்காத பென்சில்னும், முன்னால எப்பவாது யாராவது யூஸ் பண்ணிருப்பாங்க, இப்போ எங்கயும் கிடைக்காதுன்னும் நினைச்சு ரொம்போ பத்திரமா வச்சிருந்தேன். அந்த பென்சில்க்கான லெட்டும் தனியா கிடைக்கும்னெல்லாம் அப்போ தெரியாது, பென்சில சீவுறப்போ உடையுற பென்சில் மொக்கத்தான் அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன், அப்புறமா ஒரு நட்ராஜ் பென்சில் வாங்கி காம்பஸ வச்சு ரெண்டா பொளந்து அதுல இருக்குற பென்சில் லெட்ட தனியா எடுத்து அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன். கொஞ்சநாள்ல அதுல உள்ள அந்த ப்ளாஸ்டிக் ஹோல்டர் உடஞ்சிருச்சு, அப்புறமா எதோ ஒரு பேனாவோட ஹோல்டெர்லர்ல ஃபிக்ஸ் பண்ணி யூஸ் பண்ணுனேன், அதுமாறி ரெண்டுமூனு ஹோல்டர் ஒடஞ்சு, புதுசு புதுசா மாத்தி மாத்தி யூஸ் பண்ணிகிட்டிருந்தேன், அப்புறமாதான் அது தொலைஞ்சது. ரொம்போ ரேரான ஒரு பென்சில தொலச்சிடோமேனு நிறையநாள் நினச்சது உண்டு.


எங்க ஊர்ல இப்போவரைக்கும் பாலாஜி ஸ்டோர்ன்ற ஒரு கடைதான் ஸ்டேஷனரிக்கு ஃபேமஸ், அங்க போயி இந்த பென்சில கேக்கலாமா, பேரு தெரியாததால என்னனு சொல்லி கேக்குறதுனு தெரியல, 'பின்னால ப்ரஸ் பண்ணுனா நாலு பல்லு விரியும் அதுல பென்சில் லெட்ட போட்டு யூஸ் பண்ணலாம்' இப்படி சொன்னா கடைகாரருக்கு புரியுமா புரியாதா? இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சே அத வாங்க முயற்சிபண்ணாம விட்டுட்டேன். கடைசியா மூனு வருஷம் முன்னாலதான் இதோட பேரே தெரிஞ்சது, இது இன்னமும் கிடைக்குதுன்னும் அப்போதான் தெரிஞ்சது, ஆனா நான் தேடின எந்த கடைலயும் கிடைக்கல, அதுக்கு பதிலா லேட்டஸ்ட் மாடல்ல மைக்ரோடிக் பென்சில் மாதிரி மெக்கானிசம்ல தான் சில பென்சில்ஸ் கிடைச்சது. ஒரு வழியா இங்க சென்னைல ஹிந்துஸ்தான் ட்ரேடிங் கம்பனிலதான் இந்த க்ளட்ச் பென்சில் கிடைச்சது, விலை 150 ரூபாய்னாலும் ஓர்த்து. பென்சில் லெட் வாங்கி போட்டு யூஸ் பண்ணுறது மட்டும் இல்லாம, உடைஞ்ச லெட்டயும் போட்டு யூஸ் பண்ணிக்கலாம், ஃரன்ட்ல மெட்டல் கேஸ் இருக்கு, சோ பேலன்சிங் பாய்ண்ட் ஃரண்ட்ல இருக்றதால வரையுறப்போவும், எழுதுறப்போவும் சலிக்கவே சலிக்காது. படத்துல ரெண்டாவதா இருக்கிறது இப்போ என்கிட்டே இருக்குற மாடல், இப்போ என்கிட்டே இருக்குற பென்சில்ல ரொம்போ பிடிச்ச விஷயம் அதுக்கு பின்னால இருக்குற லெட் ஷார்ப்னர் தான். 
smile emoticon

17 Mar 2016

ஆயிஷா

நாம ஹிந்தில பார்த்ததே பத்து பதினஞ்சு படம்தான் இருக்கும்னாலும் இன்னைக்கு வரைக்கும் மனசுல நெறஞ்சு இருக்குற படம்னா அது 'Wakeup Sid' மட்டும் தான். நல்ல படம், நல்ல மியூசிக், நல்ல ஸ்க்ரீன்ப்ளே, நல்ல ஆர்ட் டிரக்சன் ப்லா ப்லா ப்லா எல்லாம் இருக்கட்டும் எல்லாத்துக்கும் மேல அது Aesthetics of Love, Life & Work'க பத்தி சொல்லுற படம், அதையும் விட படத்துல அழகா பட்டது கொங்கொனா சென் ஷர்மா தான், கரெக்டா சொல்லனும்னா அது கொங்கொனா இல்ல அது 'ஆயிஷா' :) . ஆயிஷா தான் படத்துல கொள்ளை அழகு!, அவ உடல்மொழி அழகு, well organised'ன்னா அது அவதான் அது அழகு, இண்டிபெண்டெண்டா தனக்கு பிடிச்சத செய்யுறது அழகு, தனக்கான ஸ்பேச எடுத்துக்றது அழகு, அவகிட்ட இருக்கும் அந்த டேட்டூ அழகு, 'ஆயிஷா'ன்ற கேரெக்டர் பேரு மனசுல பதிஞ்சிருச்சுனா பாத்துகோங்க அவ்வளவு அழகு~. அவள தவிர்த்து பார்த்தா, மும்பை, போடோக்ராப்ஃபி, ஜெர்னலிசம், காதல், நட்பு, அன்பு, அப்பா, அம்மா, கடைசியா லிவிங்-டுகெதர்'னு அதுல இருக்குற அழகான விசயங்கள அடுக்கிகிட்டே போகலாம், ஒரு நல்ல கதையோ அல்லது நாவலோ படிக்கிற ஃபீல் கண்டிப்பா இந்த படத்துல கிடைக்கும். A Feel Good Movie' படத்துக்கு இதுதான் கரெக்டான சொல்.
படத்தோட புகழ் பாடினது போதும் இப்போ விசயத்துக்கு வருவோம், "உன் கண் வழியா அவங்க என்ன பாக்கல போலருக்கு" இதுவும் மனசுல பதிஞ்ச ஒரு டயலாக் விடிவி'ல இருந்து, அது இங்க ஆயிஷாக்கும் பொருந்தும், ஒருவேளை எனக்கு மட்டும்தான் ஆயிஷா அழகா தெரியுறாலோன்ற நினைப்பு அப்போ அப்போ வர்றது உண்டு, எப்போவாவது யாரிடமாவது அந்த படத்தபத்தி பேசும்போதெல்லாம், 'செம்ம அழகு'ல்ல அந்த படத்தோட ஹீரோயின்' அப்படின்னு வார்த்தைகள் என்னையும் அறியாம வர்றது உண்டு, அதுக்கு சேம் ரியாக்சன எதிர்பார்க்குறதும் உண்டு, ஆனா பெரும்பாலும் ரியாக்சன் அப்படி இருக்காது. 'அவ்வளவு ஒன்னும் அழகு இல்லடா' இதுதான் பதிலா இருக்கும். மேலே ஆயிஷா பத்தி சொன்னதெல்லாம் இருக்கட்டும், அதெல்லாம் என் மூளை சொல்லுறது, தவிர்த்து எனக்கு சில முகங்கள் மீது காதல் ஏற்பட்டுவிடும், அதுபோலதான் இதுவும்னு என் மனசு சொல்லுது. கேரக்டரா? முகமா?, ஆயிஷாவா? கொங்கொனாவா?, எது அழகுன்னு தெரியல, இங்க ஃபேஸ்புக்ல அறிமுகமாகி பேசிகிட்டிருக்றப்போ நண்பர் உமையாழ் பெரிந்தேவி​ தன்கிட்ட கொங்கொனாவோட புகைப்படங்கள் நிறைய இருக்றதா சொல்லியிருந்தார், அவங்க நடிச்ச ' Mr. and Mrs. Iyer' இந்த படத்தையும் பார்க்க சொல்லி சஜ்ஜெஸ்ட் செஞ்சிருந்தார், ஒரு வழியா மூனு நாள் கஷ்டப்பட்டு படத்த டொரெண்ட்ல இறக்கியாச்சு, இனி அந்த படத்த பார்த்து யாரு அழகுன்னு முடிவு பண்ணனும் :)

பி.கு: " Mr. and Mrs. Iyer" படம் கொங்கொனா சென்'ஓட அம்மா அபர்ணா சென் டைரெக்ட் செஞ்சது, மேடம் அந்த படத்துக்கு 2002லயெ பெஸ்ட் ஆக்ட்ரெஸ் கேடகரில நேஷனல் அவார்ட் வாங்கியாச்சு!

8 Mar 2016

Old Man | முதியவர்






Graphite pencils on paper

Pencils         Steadtler (2B, B, H)
                    Koh-i-noor (6B, 8B)
Paper           Brustro Paper (200gsm A4)
Duration       20+ Hours

Based on a Photograph by Prabhu Kalidas

7 Mar 2016

எண்ணச்சிதைவு

இருபது நிமிடம் விடாது பேசிய அவளின் வார்த்தைகள், அவன் காது வழியே பயணித்து மூளையில் பரவி பல யோசனைகளை தந்துகொண்டிருந்தது. என்ன பேசுகிறாள் என்றெல்லாம் யோசிக்க மனம் ஒத்துழைக்கவில்லை, எதோ ஒருநாள் இருநாள் என்றால் வார்த்தைகளின் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள முயற்சித்திருப்பான், தினமும் மணிக்கணக்காக தொடரும் அவளின் பேச்சு, அவனுக்கு தீராத்தலைவலியையும், எண்ணச்சிதைவையும் தந்துகொண்டிருந்தது. வாசலில் நீர் தெளிப்பதுபோல இடைவெளியற்று அடுத்தடுத்து பல விசயங்களை சொல்லிவிட்டு 'இப்போ நா என்ன சொன்னேன்சொல்லு?' என கேட்பாள் , அவன் சரியாகவே சொன்னாலும் 'அது இப்போ சொன்னது அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன் சொல்லு?' என கேள்விகளை அடுக்கிகொண்டே போவாள். அவள் தெளித்தவையெல்லாம் அவனிடத்தேதான் இருக்கின்றன, ஆனால் தொடக்கமும், முடிவும், இடையும் தெறியாது அவனுக்கு.

'நேத்து கனவுல உன்ன வேற பொண்ணுகூட பாத்தேன்!, ஏண்டா நீ என்ன எமாத்திடுவியா?' என கேட்டாள். அவனுக்கு அடிக்கடி வரும் ஒரு கனவு நியாபகம் வந்தது, ட்ரவுசர் போடாமலேயே ஸ்கூலுக்கு போவதுமாதிரியான ஒரு கனவு அது. சட்டென நினைவு மீள இப்போது அவளின் பேச்சு புதியதாக அவள் வாங்கியிருக்கும் டிரெஸ்ஸை பற்றி போய்கொண்டிருக்க, இன்னமும் வாங்கமுடியாமல் இருக்கும் ஒரு ப்ளாக் ஷர்ட் அவன் நினைவில் வந்து போனது. அடுத்து, தான் ஆஃபீசுக்கு போகும் வழியில் பார்த்த ஒரு ஆக்ஸிடெண்டை விளக்கிக்கொண்டிருந்தாள், அந்நேரத்தில் அவனுடைய நினைவு இதுவரை ஆக்சிடெண்டில் கை, கால் உடைத்துக்கொண்ட அத்தனை நண்பர்கள் மீதும் படர்ந்திருந்தது. இப்படியே அடுத்ததாக தனக்கும் அம்மாவுக்கும் நடந்த சண்டையை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள், நேற்று அம்மாவுக்கு ஃபோன் செய்ய மறந்தது அவனின் நியாபகத்திற்கு வந்துபோக போனைத்தேடினான் காணவில்லை. கடைசியாக எதோ ஒரு கால் பேச தன் கையில் ஃபோனை பார்த்ததுதான் அவனுக்கு நினைவிலிருக்கிறது, அப்புறம் எங்கே போனது என்பதன் நினைவு வரவேயில்லை. எங்கே 'போனை காணாம்' என்று சொன்னால் முன்னமே ஒருமுறை அவள் வாங்கிகொடுத்து தொலைத்த ஒரு மோதிரம் பற்றிய பேச்சை எடுத்து புலம்ப ஆரம்பிப்பாலோ என நினைத்து "எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட் வொர்க் இருக்கு, கொஞ்ச நேரத்துல திரும்ப பேசுறேன்"னு சொல்லி ஃபோன் காலை கட் செய்தான்.

2 Mar 2016

ஷூ

ஆஃபீஸ்ல டெய்லி ஷூ போடணும் அப்படின்னு ஒரு ரூல் இருக்கு, அதாவது கிளிஞ்சதோ கிழியாததோ, ஃபார்மலோ கேஷுவலோ, எதோ ஒன்னு போடணும், ஆக மொத்தம் ஷூ போட்டாகனும். செருப்பு போட்டுபோனாலும் ஒன்னும் பிரச்சன இல்ல போகலாம், ஆனா கேட்ல என்ன ரீசன்னு ரேக்கார்டுல எழுதிட்டு போனும், காலு வலி, ஷூ பின்சிருச்சு, ஷூ லாக்கர்ல இருக்கு இப்படி ஏதாவது ஒன்ன எழுதிட்டுதான் உள்ள போக முடியும். நின்னு எழுதிட்டு போறதுக்கு சங்கடப்பட்டே கழுத ஏதாவது ஒரு ஷூவ போட்டுகிட்டு போறது வழக்கம். அதுவும் நா வச்சிருக்குறது ஒரு வருஷம் முன்னால இண்டெர்வியூக்காக வாங்கினது, 300 ரூவா ஃபார்மல் ஷூதான், செம அடி வாங்கியிருந்தாலும், சூப்பர் க்லூ போட்டு ஒட்டி, டெய்லி லைட்டா துடைச்சுட்டு யூஸ் பண்ணுறதால ஒன்னும் தெரியாது, ஆனாலும், பிராண்டட் ஷூ போடுற ஒரு கம்ஃபர்ட்னஸ் கொடுக்கவே கொடுக்காது. ஆஃபீஸ் ஜாய்ன் பண்ணுனப்போ ஒன்னு சொன்னாங்க 'Invest in your shoes'னு, அது கொஞ்சம் உண்மை தான், அதாவது முன்னூரு ரூபாய்க்கு மூனு ஷூ வாங்குறதவிட ஆயிரம் ரூபாய்க்கு நல்ல ஷூவா ஒன்னு வாங்குறதுதான் பெட்டர்னு சொல்லுவாங்க, ஆனா நமக்குதான் மண்டைல வேற தோணுமே!, ஆயிரம் ரூபாய்க்கு ஒரே ஒரு ஷூ வாங்குறதுக்கு பதிலா பஜார்ல மூனு கலர்ல மூனு ஷூ வாங்கலாம்னு யோசிச்சு அப்புறம் அதுக்கும் மனசு வராம ஒரே ஒரு ஷூ வாங்கி சமாளிப்போம்.

ஒருவழியா இப்போதான் கொஞ்சம் நல்ல ஷூவா வாங்கலாமேன்னு யோசிச்சு, நெட்ல அப்புறம் ஃபிரன்ட்ஸ் கிட்டவெல்லாம் விசாரிச்சு லீ கூப்பர்ல ஒரு ஷூ வாங்கலாம்னு பிக்ஸ் ஆகியாச்சு. அப்புறம்தான் இன்னொரு யோசனை, எப்படியோ ஷூ வாங்கபோறோம், அப்டியே வாட்ச்சும் ஒன்னு வாங்குவோம், ஒரு நாள் கூட வாட்சே கட்னது இல்லையே, எப்படித்தான் இருக்குனு போட்டு பாத்துடலாம்னு ஒருத்தங்கிட்ட விசாரிச்சா, அவன் போட்ருக்க வாட்ச் 'டாமி ஹில்ஃபிங்கராம்' விலை பத்தாயிரம் ரூபாய்ங்க்றான், அதோட கண்ணாடிவேற உடைஞ்சு இருந்துச்சு, ஏன் ப்ரோ சரி பண்ணலையா?ன்னு கேட்டத்துக்கு கண்ணாடி மாத்த ரெண்டாயிரம் ஆகும் ப்ரோ அதான் மாத்தலங்கறான்!. அந்தோ பாவம்னு நினைச்சு, சரி என்னென்ன பிராண்ட்லதான் வாட்ச்செல்லாம் போடுறாங்கன்னு பாக்கலாமேன்னு கூட பேசுற எல்லாரு வாட்சையும் நோட் பண்ணுனதுல, ஒரு நாலு பேரு கைல ஓடாத வாட்ச், ஏங்க ஓடாத வாட்ச கட்டிருக்கீங்கன்னு கேட்டா, தெரியும்ங்க சரி பண்ணவெல்லாம் நேரமில்லங்க, வாட்ச் கட்டலன்னா ஒருமாறி இருக்கு, வாட்ச் கற்றது இங்க ஒரு ஸ்டேடஸ் அதான், இப்படி ஓடாத வாட்சுக்கு டிசைன் டிசைனா பதில் வந்துச்சு. நல்ல வேலையா வாட்ச் கட்டனும்ன்றது ஆஃபீஸ்ல ரூல் கிடையாது.

16 Feb 2016

முழுமை


அவனுக்கென சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் இருக்கிறது, அது ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட ஒரு ஆம்னிவேன். தினமும் விடியற்காலையிலேயே எழுந்து குளித்துமுடித்து தன் துணையாள் எழும்பும் வரைக்கும் காத்திருப்பான், அவள் எழும்பியபின் காப்பி போடுவதுமுதல், மகனை ஸ்கூலுக்கு கிளப்புவதுவரை எல்லாவேலையையுமே இருவருமாக சேர்ந்து செய்வதுதான் வழக்கம். தினமும் இது வழக்கமென்றாலும் எல்லாமுமே ஒரு எமெர்ஜென்சி ஃபோன்கால் வரும்வரைதான் நீடித்திருக்கும். எப்பவுமே இருவரும் மனதளவில் கொஞ்சம் தயாராகத்தான் இருப்பார்கள். ஃபோன்கால் வந்ததும், அவனுக்கு சட்டை மற்றும் சாவி எடுத்துகொடுத்து அனுப்பிவைப்பது அவளுக்கு வழக்கம். தினமும் சாமி கும்பிட்டாலும் ஒவ்வொருமுறை எமெர்ஜென்சிக்கு கிளம்பும்போதும் தன் நெற்றியில் இருக்கும் திருநீரை அழித்துவிட்டு கிளம்புவது அவனுக்கு வழக்கம், ஒவ்வொருமுறை கிளம்பும்போதும் மகன் வீட்டிலிருந்தால் முதலில் மகனை, அப்புறம் மனைவியை, கடைசியாக வீட்டிலிருக்கும் கடிகாரத்தை ஒரு கணம் பார்த்துவிட்டுதான் அவனது ஓட்டம் ஆரம்பிக்கும்.


அவன் இலக்கு இல்லாமல் வேகமாக பயணிப்பதில்லை, அவனுக்கென இரண்டு இலக்குகள். ஒன்று எமெர்ஜென்சி ஸ்பாட், இன்னொன்று ஹாஸ்பிட்டல். வேகத்தால் அவனுக்கு ஏதும் ஆக்ஸிடென்ட் ஆகிடாது என்ற நம்பிக்கை, அவன் ஆம்புலன்சஸில் ஏறி சைரனை ஆன் பண்ணினதும், மெயின்ரோட்டின் சப்தம் குறைவதிலேயும், வாகனங்கள் வழிவிட்டு நகருவதிலேயுமே இருவருக்கும் கிடைத்துவிடும். தவிற, தினசரி வழக்கமாகிப்போன இந்த வாழ்க்கை ஒருபோதும் சலிப்பை தந்ததில்லை. காரணம் இருவருக்குமான எதிர்பார்ப்புகள் குறைவு. அவளுக்கான அதிகபட்ச அன்பு காலையில் எழும்பி ஒரு ஃபோன்கால் வரும் வரைக்குமான அந்த இடைவெளியில் நிரம்பவே கிடைத்துவிடுகிறது. அவனுக்கான அன்பு இன்னும் குறைவு, கிளம்பும்போது அவள் கைகள் மூலம் சட்டையும், சாவியுமாகவே கிடைத்துவிடும். கூலிக்காகத்தான் எல்லா தொழிலுமே என்றாலும், இங்கு தினமும் வீடு திரும்பினதும் “என்ன ஆச்சு?” என்பதுதான் முதல்கேள்வியாக இருக்குமே தவிற “எவ்வளவு கிடைச்சது?” என்பதுவல்ல. எதிர்பார்ப்புகளையும், அன்பையும் முழுமைபடுத்தி வாழ்கின்றனர் அவளும் அவனும்.

11 Feb 2016

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு


கொஞ்ச வருஷம் முன்னால எதோ ஒரு டிவி நிகழ்ச்சில ஒரு ஃபாரின்காரர் ரொம்ப அழகா தமிழ் பேசினத பார்த்திருந்தேன். அமெரிக்கால இருக்குற யேல் யுனிவர்சிட்டில அவர் ஒரு தமிழ் ப்ரொபெசர், அவர் பேரு 'பெர்னார்ட் பேட்-Bernard Bate'ன்றது மட்டும்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது, அதுக்குள்ளே அந்த நிகழ்ச்சி முடிஞ்சுபோச்சு. திடீர்னு அவர் நியாபகம் வர, அவர் தமிழ்ல பேசின வீடியோ ஏதாவது கிடைக்குமான்னு யூடியூப்ல தேடிக்கிட்டிருந்தேன்.

முதல்ல, எதோ ஒரு தமிழ் மொழித்திருவிழாக்காக அவர் தமிழில் பேசிய ஒரு சின்ன க்ளிப்-வீடியோ கிடைச்சது, தமிழ் மொழியப்பத்தி அழகாவும் செம்மையாவும் பேசியிருப்பாரு, என் கணிப்பு சரியா இருந்தா அது செம்மொழி மாநாட்டுக்காகவா இருந்திருக்கும். அடுத்து அவர் கொஞ்ச நிமிடம் பேசிய இன்னுமொரு வீடியோ கிடைத்தது, அவ்வளவுதான் அதுக்கப்புறம் என் தேடல் முழுமையா வேற திசைல போக ஆரம்பிச்சது, தமிழ்ல பேசியதா பல வெளிநாட்டு காரவங்களோட வீடியோக்கள் யூடியூப்ல வரிசைல நிக்க சுவாரஸ்யமா ஒவ்வொன்னா பாக்க ஆரமிச்சேன்!

அடுத்து ஒரு ஜெர்மன் லேடி ரொம்ப அருமையா தமிழ்ல பேசியிருந்தாங்க, உண்மையா அது எல்லோரும் பாக்க வேண்டிய ஒன்னு, அவங்க பேசினதுல இருந்துதான் ஐரோப்பல பெரும்பாண்மையா தமிழுக்கான அடையாளமா இலங்கையத்தான் பாக்குறாங்க, தமிழ்நாட்ட இல்லன்னு தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் ஒரு சைனா காரர் மலேசியால தமிழ், மலாய், மாண்டரின் சைனீஸ்ல பேசி பழங்கல விக்கிறதா பாத்தேன், அது பெருசா ஆச்சர்யபடுத்தல, ஏன்னா மலேசியால ஒரு ஏசியன் தமிழ் பேசுறது ஒன்னும் புதுசு இல்லயே.

பிறகு இன்னுமொரு சைனா லேடி, 'சைனாவில் ஒரு இன்ப உலா' அப்படின்னு ஒரு புக் எழுதியிருப்பாங்கபோல அதபத்தி ஒரு வீடியோ வந்தது, அப்புறம் இங்கிருந்து ரஜினியோட முத்து படம் ஜப்பானுக்கு எப்படி 'ஒடுரு மகாராஜா'வா பயனமாச்சுனும் தெரியவந்தது, அப்புறம் ஆஸ்திரேலியால ஒருத்தன் பைபிள் படிக்கத்தான் நான் முதன்முதலில் தமிழ் கத்துக்க ஆரமிச்சேன் அப்படின்னு சொல்லி அடுத்த வீடியோல பேசினான், தேவையில்லாத லைன்ல போகுதேன்னு ஸ்கிப் பண்ணியாச்சு. அப்புறம் தமிழ்ல பாட்டு பாடுற சில ஃபாரின் காரங்க வீடியோவா வந்துச்சு, அதையும் ஸ்கிப் பண்ணியாச்சு.

அதுக்கப்புறம் எல்லாம் மொக்கையா வர மறுபடியும் ஒரு விடியோல ஒரு கொரியாக்காரரு கொரிய மொழில பல தமிழ் சொற்கள் கலந்து இருப்பதாவும், கிட்டத்தட்ட 500 சொற்களுக்கு மேல இணையா இருக்குறதாவும் சொல்லி, செம்மொழி மாநாட்டுக்கு ரெடி பண்ணுன கட்டுரைய எக்ஸ்ப்லேயின் பண்ணுனாரு, அப்புறம் ஒரு தமிழ் ஆளு ஆப்பிரிக்கால சில இனத்து மக்கள் பேசும் மொழி நம்ம தமிழ்மொழியோட ஒத்துபோகுதுன்னு அவரு சைடுக்கு சில வார்த்தைகள காட்டி விளக்குனாரு, கிட்டத்தட்ட எல்லாம் சரியாத்தான் இருந்தது, ஆனாலும் நம்ம ஆளுங்கதான் மாடு 'ம்ஆ'னு கத்தினாலும் அது தமிழ்னு சொல்லுவாங்களே அதனால அதையும் ஸ்கிப் பண்ணி அடுத்த வீடியோக்கு போயாச்சு.

அப்புறம் தான் நம்ம ஹீரோ வந்தாரு, அதுதான் நம்ம மோடி, 'மலேசியாவில் தமிழில் பேசிய மோடி' அப்படின்னு டைட்டில் போட்டு இருந்துச்சு க்ளிக் பண்ணினதும், "உங்ளில் பலர் தமில்னட்டு சேரம்தவர்கள உங்களனைவருக்கும் வணக்கம் இண்டியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பகு முக்கியம்" அப்படின்னு பேசினாரு. மலேசியால போயி இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியம்னு டமிழ்ல என்டா பேசினாருனு யோசிச்சுபாத்து, சரி பொதுவா தமிழ் தெரியாத ஒருத்தன் தமிழ்ல என்ன பேசினாலும் நம்ம ஆளுங்க கைதட்டுவானுங்கனு புரிஞ்சிருக்குற நம்மல்ல ஒருத்தன்தான் டயலாக் எழுதி கொடுத்திருப்பன்னு விட்டாச்சு.

அடுத்தது ஒரு ஹான்காங் ஹீரோயின், சில தமிழ் வார்த்தைகளோட ஒரு கெட்டவார்த்தையையும் பேசியிருந்தது. அந்த கெட்டவார்த்தைய சொல்லி கொடுத்தவன்தான் அந்த வீடியோவையும் ரெக்கார்டு பண்ணியிருந்தான். என்ன கருமம்டா இது, இதுக்கு நம்ம மோடிக்கு தமிழ் சொல்லி கொடுத்தவனே தேவலாம்னு யோசிச்சு ப்ரௌசரையே க்ளோஸ் பண்ணிட்டேன், கடைசியா ஒன்னுதான் புரிஞ்சது. கழுத, தமிழ்ல எந்தநாட்டுக்காரன் என்ன பேசுனாலும் சுவாரசியமா வாயப்பொலந்து நம்மஆளுங்க பாப்பானுங்கன்றதுக்கு நானும் ஒரு எக்சாம்பிள் ஆகிட்டேன்! 
unsure emoticon

25 Jan 2016

பைரைட் கியூப்

வட்டம்/கோளம் என்பது இயற்கை வடிவம், சதுரம்/கனசதுரம் என்பது செயற்கை வடிவம் என்பதுதான் என் புரிதலாக இருந்தது, இந்த 'பைரைட் கியூப்'ஐ பார்க்கும் வரை. "Natural Pyrite cubic crystals - இயற்கையாக உண்டான பைரைட் கனசதுர கனிமப்படிகம்" இதன் பெயர். பல கனிம படிகங்களை பற்றி நாம் பள்ளியிலே நிறைய படித்திருப்போம், படிகமானது வித விதமான வடிவ அமைப்புகளை பெற்றிருக்கும், உதாரணத்திற்கு, பனிக்குகைகளில் கூர் கூராக நீர் உறைந்து தொங்கிகொண்டிருக்கும் பனிக்கட்டி புகைப்படங்களை நினைத்துக்கொள்ளலாம், அது ஒரு உதாரணம் தான், அது போல பல வடிவ அமைப்புகளை கொண்ட க்ரிஸ்டல்கள் இயற்கையாகவே உள்ளன என்பது அறிந்ததே, ஆனால் கனசதுர அமைப்புகளில் இதுபோல இயற்கையான எந்த வடிவத்தையும் முன்னர் கண்டது இல்லை, குறிப்பாக உள்ளங்கை அளவுகளில். இந்த பைரைட் கனிமம், இரும்பு & சல்பைடின் கலவைதான், இது பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் துப்பாக்கிக்கு தீப்பற்றவைக்கும் மருந்தாக பயன்பட்டிருக்கிறது, பார்க்க தங்கம் போல இருப்பதால் 'Fool's Gold' என்ற பெயரும் உண்டு, இது கனசதுரம் மட்டுமல்லாமல் பல வடிவங்களில் இருந்தாலும் கவனத்தை ஈர்த்தது இந்த கியூப் வடிவம் தான்!.

                          


இந்த கியூபை பார்த்ததும் என் நியாபகத்திற்கு வந்தது, 1968'ல் எடுக்கப்பட்ட "2001-A Space Odyssey" என்ற படத்தில் வரும் சில காட்சிகள். 'குரங்கிலிருந்து மனிதன்', அதாவது, ஒரு குரங்கின் குகையில் திடீரென ஒரு வஸ்து தோன்றியிருக்கும் அதனைக்கண்ட குரங்குகள் முதலில் அச்சப்படும், பின்னர் ஒவ்வொன்றாக அதை தொட்டுப்பார்க்கும், அதை தொட்டுப்பார்த்த பின்னறே வேட்டையாடுதல், ஆளுமை செலுத்துதல் போன்ற சில அடிப்படை அறிவு அவைகளுக்கு கிடைத்ததாக அந்த படத்தின் இயக்குனர் சொல்லியிருப்பார். அந்த வஸ்து ஒரு "Monolith - ஒற்றைக்கல்" அதாவது இந்த கியூபைப்போலவே கருமை நிறத்தில் செவ்வகமாக நீண்டு இருக்கும் ஒரு Unknown Object. அந்த Object ஒரு ஏலியன் வஸ்து என்பதுபோலும், மனித அறிவுக்கு மேலான ஒன்றுதான், மனிதனுக்கு அடிப்படை அறிவை புகுத்தியதுபோலவும் படத்தின் இயக்குனர் சொல்லியிருப்பார்.


ஆக மனிதஅறிவுக்கு மேலான ஒன்று இருப்பதாக நானும் நம்புகிறேன், அது இயற்கையாகத்தான் இருக்க முடியும். இயற்கையை விஞ்சிய ஒரு அறிவோ, படைப்போ இல்லையென உணர்கிறேன். பல விதவிதமான வடிவங்களில் காட்சியளிக்கும் இயற்கையில், இந்த கியூப், சமுத்திரத்தில் ஒருதுளி.

21 Jan 2016

ப்ராப்ளம்


நேத்திக்கு மதியம் எனக்கு ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்துச்சு, ப்ரொஃபைல் நல்லா செக் பண்ணினப்புறம் அது ஒரு மலையாள பையனோட ப்ரொஃபைல்னு தெரிஞ்சது, பேரும் 'நிவின் பவுலே' கணக்கா நல்லாத்தான் இருந்துச்சு, மியூட்டுவல் ஃபிரண்டு யாருமில்லை ஆனாலும் ஒரிஜினல் ஐடிதான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன், சோ அக்செப்ட் செஞ்சேன்!. ஃபேக் ஐடியாவே இருந்தாலும் அக்செப்ட் பண்ணுவேன்றது வேற கத!. அப்புறம் சாயங்காலம் நாலு மணிக்கிட்ட 'ஹாய் ப்ரோ'னு ஒரு மெசேஜ் வந்திருக்கு, நான் பாக்கல, அப்புறம் ஒரு ஆறு மணிக்கிட்ட 'ஹேய்'னு ஒரு மெசேஜ் அதையும் நா பாக்கல, இது கொஞ்சம் அதட்டுர தொனில வேற இருந்துச்சு, எட்டு மணிக்குதான் ரெண்டு மேசெஜயும் பார்த்தேன். சிலர் நீங்க வரையுறது நல்லா இருக்குனு வாழ்த்துறதுக்காகவும், சிலர் ஏதாவது சந்தேகங்களுக்காகவும் மெசேஜ் செய்வது வழக்கம் தான், ஆனாலும் இப்போல்லாம் சில பேர் நமக்கு டெக்ஸ்ட் பண்ணி நாம ரிப்ளை பண்ணலைனா கொஞ்சம் விரக்தியாயி ஒன்னு திட்டுறாய்ங்க, இல்லன வருத்தப்படுறாய்ங்க, நம்மால ஒருத்தர் ஹர்ட் ஆக கூடாதுனு நானும் 'ஹேய் ஹாய்' அப்படின்னு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.

எட்டு மணிக்கு ஒரு ரிப்ளை வந்தது 'டுமார்ரோ இஸ் மை பர்த்டே ப்ளீஸ் டிராயிங் மை போட்டோ' இப்படி இருந்தது. 'யார்றா இவன், யார்னே தெரியல டக்குனு விசயத்துக்கு வந்துட்டான், சரியான கிறுக்கனா இருப்பான் போல' அப்படின்னு நினைச்சு கொஞ்சம் சிரிப்புதான் வந்துச்சு, அப்புறம் அவன் ப்ரொஃபைல் ஃபுல்லா அலசுனதுல பையன் கொஞ்சம் தெளிவுதான்னு தெரிஞ்சது. அப்புறம் இன்னைக்கு, பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிட்டு, மன்னிக்கணும் இப்போ என்னால வரைய முடியல முடிஞ்சால் இன்னொரு நாள் வரையரேன்னு சொல்லி ஒரு மேசேஜ அனுப்பிருக்கேன், என்ன ரிப்ளை வரும்னு காத்துட்ருக்கேன்!.

இங்கன வரையரவங்களுக்கெல்லாம் ஒரு பொதுவான சங்கடம் வரும் அதுக்கு பேரு "கேன் யூ ட்ராவ் மீ?" ப்ராப்ளம்!. அதுக்குள் நானும் அடக்கம். முன்னமே ஒருமுறை கேரளா நண்பரிடம் மாட்டினேன் "ப்ரோ, நீங்க என்னைய வரஞ்சு கொடுங்க, பதிலுக்கு நான் ஒன்னு செய்யுறேன், நானும் எங்க டீமும் இங்க நிறைய மலையாள நடிகைகளோட ஃபேஸ்புக் பேஜுக்கு அட்மினா இருக்கோம், சோ ஒரு ஹீரோயினோட ஃபோடோவையும் வரைஞ்சிங்கனா அந்த பேஜுல ஷேர் பண்ணி உங்களை ப்ரொமோட் பண்ணுறோம்"னு சொல்லி டீலிங் வேற பேசுனாப்ள, எப்படியோ சமாளிச்சு தப்பிச்சேன்!. ஒரு முறை பாகிஸ்தான்ல இருந்தும் இந்த சங்கடம் வந்தது, ஒருமுறை ரெண்டுமுறையல்ல அந்த பாகிஸ்தான் நண்பர் விடாம ஒரு பத்துபதினைந்துமுறை கேட்டுவிட்டார், உச்சகட்ட டென்சனுக்கு போனதுக்கு அப்புறம்தான் வரைந்து கொடுக்க முடிந்தது! அதுவும் நான் வரைந்த ஒரிஜினல் அவருக்கு தேவையில்லை, ஜஸ்டு வரைஞ்ச போட்டோவ ஷேர் பண்ணனும் அவ்வளவுதான், அப்புறம் அந்த நண்பரின் ப்ரொபைல் பிக்சர் போல்டெர் போன அப்புறம் தான் தெரிந்தது, என்னமாறி பல பேருகிட்ட வரைஞ்சு வாங்கிருக்காருன்னு!.

இது ஒரு பக்கமிருக்க, எனக்கு இதெல்லாம் விட பெரிய ப்ராப்ளம் இருக்குது அதுதான் வரையுறது, அவ்வளவு ஈசியா என்னால வரைய முடியறது இல்ல, பல நண்பர்கள் வரைய சொல்லி கேட்டிருக்குறாங்க, அதுல சிலருக்குதான் வரைஞ்சு தர முடிஞ்சிருக்கு, எனக்கு பிடிச்சவங்களுக்கு மட்டும்தான் வரையுவேன்னெல்லாம் ஒன்னும் இல்ல, பல நேரங்கள்ல வரையவே தோன மாட்டேங்குது அதுதான் பிரச்சனை. கமிஷனுக்கே வரையுறதுன்னாலும் இதே பிரச்சனைதான். ப்ளஸ் பலர் கொடுக்குற ஃபோட்டோக்கலிலும் குவாலிட்டி இருப்பதில்லை, இன்னும் சிலர் வரைஞ்ச போர்ட்ரெய்ட்ட வாங்காமலும் விட்ருக்காங்க, பட் அது பெரிய பிரச்சனை இல்ல! சில நண்பர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் வரைஞ்சு தர்றதா சொல்லி, பின்னால வரைய முடியாம போனதால பெரிய தர்மசங்கடத்துக்கும் ஆளாயிருக்கிறேன், காரணம் என்னன்னா மேல சொன்னதுதான் "வரைய தோன மாட்டேங்குது" அவ்வளவுதான். என் மேல கொஞ்சம் ஓவரா நம்பின ஒரு நண்பரின் நட்பையும் இழந்துமிருக்கேன், இத்தனைக்கும் அவர் அவரின் புகைப்படத்த வரைய சொல்லல, ஒரு சினிமா ப்ராஜெக்ட்க்காக வரைய சொன்னார். இதுபோல பலருக்கு நான் வரைஞ்சு தர்றதா சொல்லி பின்ன வரைய முடியாம போனதால, சில தருணங்கல்ல நிமிர்ந்து கூட பார்க்க முடியுறது இல்ல. இங்க எல்லாத்துக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக்குறேன்!. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி, எப்படி என்னை மாத்திக்கலாம்னு யோசிச்சுகிட்டிருக்கிறேன் ஏதாவது ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்! 
smile emoticon

11 Jan 2016

நிதர்சனம்


வாழ்வின் நிதர்சனத்தை எண்ணி வானத்தையே பார்த்துகொண்டிருந்தான் அவன். நீலவானமும், உஷ்ணம் பீய்ச்சும் சூரியனும், வெண்மேகமும், இடம்பெயரும் பறவைகளும் தெரியுமென நினைத்திருப்பான் போலும் ஆனால் கண்களின் மேல் தெரிந்ததென்னவோ மிதக்கும் சில வஸ்துகள் தான். ஒன்றையாவது சற்று நிறுத்தி பார்த்துவிடலாம் என ஒவ்வொரு முறை எத்தனிக்கையிலும் வஸ்து அங்குமிங்கும் நகர்ந்துகொண்டேயிருந்தது.

வஸ்துவின் மேலிருந்த கவனம் விலகி சலிப்புதட்டியபின், எவையெல்லாம் தெரியுமென நினைத்தானோ அவையெல்லாம் தெரிய ஆரம்பித்தது. நிதர்சனமென்பது யாதென அப்போதுதான் புரிந்தது அவனுக்கு.

நிதர்சனமென்பது பார்வைதான்!

6 Jan 2016

ரணம் சுகம்


எவர்மேலும் நம்பிக்கையின்றி, எல்லோரையும் சந்தேகக்கண்களோடு பார்க்கும் சிலரை காணமுடிகிறது, யாரோ ஒருசிலரால் காயம்பட்டிருக்கலாம் அதற்காக சொந்தம், நட்பு, அனுதினம் பார்க்கும் மனிதர்கள் என எல்லோரிடத்திலும் வெறுப்பை உமிழ்கின்றனர் அல்லது விலகியே இருக்கின்றனர், இப்படியே இருக்க வேண்டுமா என்ன!. 


எல்லோரையும் நேசிக்கலாம், ஒரே தருணத்தில் எல்லோரும் நம் எதிர்பார்ப்புகளை குத்திக்கிழித்துவிடப்போவதில்லை. எல்லோரிடத்திலும் நேசம் கொள்கையில் ஒருவர் குத்திக்கிழித்தால் அவ்வளவாக வலிக்கப்போவதுமில்லை. மாறாக ஒரே இடத்தில் நாம் அன்பை குவித்துவைக்கையில் சரிந்து விழத்தான் செய்யும் பின் அந்த வலிக்கு மருந்துகள் கிடைக்கவே கிடைக்காது.

எல்லோரையும் நம்புதல் எவ்வளவு அபத்தமோ, அதைவிட அபத்தமும் ஆபத்தும் நிறைந்தது எவரையும் நம்பாமல் தனித்து இருத்தல். எல்லோரையும் நேசிப்போம், குத்திக்கிழிப்பவர்கள் கிழிக்கட்டும், அந்த வாய்ப்பை எல்லோருக்கும் கொடுப்போம், அப்போதுதான் அதற்கு மருந்தும் கிடைக்கும். 

ரணம் சுகம் 
heart emoticon