26 Mar 2016

க்ளட்ச் பென்சில்








சின்ன வயசுல என்கிட்டே ஒரு பென்சில் இருந்தது, அது பேரு 'Mechanical Clutch pencil', கிட்டத்தட்ட அப்படியே முதல் ஃபோட்டோல இருக்குறமாதிறியேதான் இருக்கும். அது எங்க ஸ்கூல் ப்ரேயர் க்ரவுண்ட்ல பரப்பியிறுந்த மணல்ல கிடச்சதா நியாபகம். ஆனா அத எங்க எப்போ தொலைச்சேன்னு நியாபகம் இல்ல. அது என்கிட்டே இருந்தப்போ அது ஒரு ஏலியன் வஸ்துவா தான் எனக்கு தெரிஞ்சது. மொதோமுறையா பார்த்ததும் பென்சில்தான்னு மட்டும் தெரிஞ்சிடுச்சு. ஆனா அது எதோ எங்கயும் கிடைக்காத பென்சில்னும், முன்னால எப்பவாது யாராவது யூஸ் பண்ணிருப்பாங்க, இப்போ எங்கயும் கிடைக்காதுன்னும் நினைச்சு ரொம்போ பத்திரமா வச்சிருந்தேன். அந்த பென்சில்க்கான லெட்டும் தனியா கிடைக்கும்னெல்லாம் அப்போ தெரியாது, பென்சில சீவுறப்போ உடையுற பென்சில் மொக்கத்தான் அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன், அப்புறமா ஒரு நட்ராஜ் பென்சில் வாங்கி காம்பஸ வச்சு ரெண்டா பொளந்து அதுல இருக்குற பென்சில் லெட்ட தனியா எடுத்து அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன். கொஞ்சநாள்ல அதுல உள்ள அந்த ப்ளாஸ்டிக் ஹோல்டர் உடஞ்சிருச்சு, அப்புறமா எதோ ஒரு பேனாவோட ஹோல்டெர்லர்ல ஃபிக்ஸ் பண்ணி யூஸ் பண்ணுனேன், அதுமாறி ரெண்டுமூனு ஹோல்டர் ஒடஞ்சு, புதுசு புதுசா மாத்தி மாத்தி யூஸ் பண்ணிகிட்டிருந்தேன், அப்புறமாதான் அது தொலைஞ்சது. ரொம்போ ரேரான ஒரு பென்சில தொலச்சிடோமேனு நிறையநாள் நினச்சது உண்டு.


எங்க ஊர்ல இப்போவரைக்கும் பாலாஜி ஸ்டோர்ன்ற ஒரு கடைதான் ஸ்டேஷனரிக்கு ஃபேமஸ், அங்க போயி இந்த பென்சில கேக்கலாமா, பேரு தெரியாததால என்னனு சொல்லி கேக்குறதுனு தெரியல, 'பின்னால ப்ரஸ் பண்ணுனா நாலு பல்லு விரியும் அதுல பென்சில் லெட்ட போட்டு யூஸ் பண்ணலாம்' இப்படி சொன்னா கடைகாரருக்கு புரியுமா புரியாதா? இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சே அத வாங்க முயற்சிபண்ணாம விட்டுட்டேன். கடைசியா மூனு வருஷம் முன்னாலதான் இதோட பேரே தெரிஞ்சது, இது இன்னமும் கிடைக்குதுன்னும் அப்போதான் தெரிஞ்சது, ஆனா நான் தேடின எந்த கடைலயும் கிடைக்கல, அதுக்கு பதிலா லேட்டஸ்ட் மாடல்ல மைக்ரோடிக் பென்சில் மாதிரி மெக்கானிசம்ல தான் சில பென்சில்ஸ் கிடைச்சது. ஒரு வழியா இங்க சென்னைல ஹிந்துஸ்தான் ட்ரேடிங் கம்பனிலதான் இந்த க்ளட்ச் பென்சில் கிடைச்சது, விலை 150 ரூபாய்னாலும் ஓர்த்து. பென்சில் லெட் வாங்கி போட்டு யூஸ் பண்ணுறது மட்டும் இல்லாம, உடைஞ்ச லெட்டயும் போட்டு யூஸ் பண்ணிக்கலாம், ஃரன்ட்ல மெட்டல் கேஸ் இருக்கு, சோ பேலன்சிங் பாய்ண்ட் ஃரண்ட்ல இருக்றதால வரையுறப்போவும், எழுதுறப்போவும் சலிக்கவே சலிக்காது. படத்துல ரெண்டாவதா இருக்கிறது இப்போ என்கிட்டே இருக்குற மாடல், இப்போ என்கிட்டே இருக்குற பென்சில்ல ரொம்போ பிடிச்ச விஷயம் அதுக்கு பின்னால இருக்குற லெட் ஷார்ப்னர் தான். 
smile emoticon

17 Mar 2016

ஆயிஷா

நாம ஹிந்தில பார்த்ததே பத்து பதினஞ்சு படம்தான் இருக்கும்னாலும் இன்னைக்கு வரைக்கும் மனசுல நெறஞ்சு இருக்குற படம்னா அது 'Wakeup Sid' மட்டும் தான். நல்ல படம், நல்ல மியூசிக், நல்ல ஸ்க்ரீன்ப்ளே, நல்ல ஆர்ட் டிரக்சன் ப்லா ப்லா ப்லா எல்லாம் இருக்கட்டும் எல்லாத்துக்கும் மேல அது Aesthetics of Love, Life & Work'க பத்தி சொல்லுற படம், அதையும் விட படத்துல அழகா பட்டது கொங்கொனா சென் ஷர்மா தான், கரெக்டா சொல்லனும்னா அது கொங்கொனா இல்ல அது 'ஆயிஷா' :) . ஆயிஷா தான் படத்துல கொள்ளை அழகு!, அவ உடல்மொழி அழகு, well organised'ன்னா அது அவதான் அது அழகு, இண்டிபெண்டெண்டா தனக்கு பிடிச்சத செய்யுறது அழகு, தனக்கான ஸ்பேச எடுத்துக்றது அழகு, அவகிட்ட இருக்கும் அந்த டேட்டூ அழகு, 'ஆயிஷா'ன்ற கேரெக்டர் பேரு மனசுல பதிஞ்சிருச்சுனா பாத்துகோங்க அவ்வளவு அழகு~. அவள தவிர்த்து பார்த்தா, மும்பை, போடோக்ராப்ஃபி, ஜெர்னலிசம், காதல், நட்பு, அன்பு, அப்பா, அம்மா, கடைசியா லிவிங்-டுகெதர்'னு அதுல இருக்குற அழகான விசயங்கள அடுக்கிகிட்டே போகலாம், ஒரு நல்ல கதையோ அல்லது நாவலோ படிக்கிற ஃபீல் கண்டிப்பா இந்த படத்துல கிடைக்கும். A Feel Good Movie' படத்துக்கு இதுதான் கரெக்டான சொல்.
படத்தோட புகழ் பாடினது போதும் இப்போ விசயத்துக்கு வருவோம், "உன் கண் வழியா அவங்க என்ன பாக்கல போலருக்கு" இதுவும் மனசுல பதிஞ்ச ஒரு டயலாக் விடிவி'ல இருந்து, அது இங்க ஆயிஷாக்கும் பொருந்தும், ஒருவேளை எனக்கு மட்டும்தான் ஆயிஷா அழகா தெரியுறாலோன்ற நினைப்பு அப்போ அப்போ வர்றது உண்டு, எப்போவாவது யாரிடமாவது அந்த படத்தபத்தி பேசும்போதெல்லாம், 'செம்ம அழகு'ல்ல அந்த படத்தோட ஹீரோயின்' அப்படின்னு வார்த்தைகள் என்னையும் அறியாம வர்றது உண்டு, அதுக்கு சேம் ரியாக்சன எதிர்பார்க்குறதும் உண்டு, ஆனா பெரும்பாலும் ரியாக்சன் அப்படி இருக்காது. 'அவ்வளவு ஒன்னும் அழகு இல்லடா' இதுதான் பதிலா இருக்கும். மேலே ஆயிஷா பத்தி சொன்னதெல்லாம் இருக்கட்டும், அதெல்லாம் என் மூளை சொல்லுறது, தவிர்த்து எனக்கு சில முகங்கள் மீது காதல் ஏற்பட்டுவிடும், அதுபோலதான் இதுவும்னு என் மனசு சொல்லுது. கேரக்டரா? முகமா?, ஆயிஷாவா? கொங்கொனாவா?, எது அழகுன்னு தெரியல, இங்க ஃபேஸ்புக்ல அறிமுகமாகி பேசிகிட்டிருக்றப்போ நண்பர் உமையாழ் பெரிந்தேவி​ தன்கிட்ட கொங்கொனாவோட புகைப்படங்கள் நிறைய இருக்றதா சொல்லியிருந்தார், அவங்க நடிச்ச ' Mr. and Mrs. Iyer' இந்த படத்தையும் பார்க்க சொல்லி சஜ்ஜெஸ்ட் செஞ்சிருந்தார், ஒரு வழியா மூனு நாள் கஷ்டப்பட்டு படத்த டொரெண்ட்ல இறக்கியாச்சு, இனி அந்த படத்த பார்த்து யாரு அழகுன்னு முடிவு பண்ணனும் :)

பி.கு: " Mr. and Mrs. Iyer" படம் கொங்கொனா சென்'ஓட அம்மா அபர்ணா சென் டைரெக்ட் செஞ்சது, மேடம் அந்த படத்துக்கு 2002லயெ பெஸ்ட் ஆக்ட்ரெஸ் கேடகரில நேஷனல் அவார்ட் வாங்கியாச்சு!

8 Mar 2016

Old Man | முதியவர்






Graphite pencils on paper

Pencils         Steadtler (2B, B, H)
                    Koh-i-noor (6B, 8B)
Paper           Brustro Paper (200gsm A4)
Duration       20+ Hours

Based on a Photograph by Prabhu Kalidas

7 Mar 2016

எண்ணச்சிதைவு

இருபது நிமிடம் விடாது பேசிய அவளின் வார்த்தைகள், அவன் காது வழியே பயணித்து மூளையில் பரவி பல யோசனைகளை தந்துகொண்டிருந்தது. என்ன பேசுகிறாள் என்றெல்லாம் யோசிக்க மனம் ஒத்துழைக்கவில்லை, எதோ ஒருநாள் இருநாள் என்றால் வார்த்தைகளின் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள முயற்சித்திருப்பான், தினமும் மணிக்கணக்காக தொடரும் அவளின் பேச்சு, அவனுக்கு தீராத்தலைவலியையும், எண்ணச்சிதைவையும் தந்துகொண்டிருந்தது. வாசலில் நீர் தெளிப்பதுபோல இடைவெளியற்று அடுத்தடுத்து பல விசயங்களை சொல்லிவிட்டு 'இப்போ நா என்ன சொன்னேன்சொல்லு?' என கேட்பாள் , அவன் சரியாகவே சொன்னாலும் 'அது இப்போ சொன்னது அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன் சொல்லு?' என கேள்விகளை அடுக்கிகொண்டே போவாள். அவள் தெளித்தவையெல்லாம் அவனிடத்தேதான் இருக்கின்றன, ஆனால் தொடக்கமும், முடிவும், இடையும் தெறியாது அவனுக்கு.

'நேத்து கனவுல உன்ன வேற பொண்ணுகூட பாத்தேன்!, ஏண்டா நீ என்ன எமாத்திடுவியா?' என கேட்டாள். அவனுக்கு அடிக்கடி வரும் ஒரு கனவு நியாபகம் வந்தது, ட்ரவுசர் போடாமலேயே ஸ்கூலுக்கு போவதுமாதிரியான ஒரு கனவு அது. சட்டென நினைவு மீள இப்போது அவளின் பேச்சு புதியதாக அவள் வாங்கியிருக்கும் டிரெஸ்ஸை பற்றி போய்கொண்டிருக்க, இன்னமும் வாங்கமுடியாமல் இருக்கும் ஒரு ப்ளாக் ஷர்ட் அவன் நினைவில் வந்து போனது. அடுத்து, தான் ஆஃபீசுக்கு போகும் வழியில் பார்த்த ஒரு ஆக்ஸிடெண்டை விளக்கிக்கொண்டிருந்தாள், அந்நேரத்தில் அவனுடைய நினைவு இதுவரை ஆக்சிடெண்டில் கை, கால் உடைத்துக்கொண்ட அத்தனை நண்பர்கள் மீதும் படர்ந்திருந்தது. இப்படியே அடுத்ததாக தனக்கும் அம்மாவுக்கும் நடந்த சண்டையை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள், நேற்று அம்மாவுக்கு ஃபோன் செய்ய மறந்தது அவனின் நியாபகத்திற்கு வந்துபோக போனைத்தேடினான் காணவில்லை. கடைசியாக எதோ ஒரு கால் பேச தன் கையில் ஃபோனை பார்த்ததுதான் அவனுக்கு நினைவிலிருக்கிறது, அப்புறம் எங்கே போனது என்பதன் நினைவு வரவேயில்லை. எங்கே 'போனை காணாம்' என்று சொன்னால் முன்னமே ஒருமுறை அவள் வாங்கிகொடுத்து தொலைத்த ஒரு மோதிரம் பற்றிய பேச்சை எடுத்து புலம்ப ஆரம்பிப்பாலோ என நினைத்து "எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட் வொர்க் இருக்கு, கொஞ்ச நேரத்துல திரும்ப பேசுறேன்"னு சொல்லி ஃபோன் காலை கட் செய்தான்.

2 Mar 2016

ஷூ

ஆஃபீஸ்ல டெய்லி ஷூ போடணும் அப்படின்னு ஒரு ரூல் இருக்கு, அதாவது கிளிஞ்சதோ கிழியாததோ, ஃபார்மலோ கேஷுவலோ, எதோ ஒன்னு போடணும், ஆக மொத்தம் ஷூ போட்டாகனும். செருப்பு போட்டுபோனாலும் ஒன்னும் பிரச்சன இல்ல போகலாம், ஆனா கேட்ல என்ன ரீசன்னு ரேக்கார்டுல எழுதிட்டு போனும், காலு வலி, ஷூ பின்சிருச்சு, ஷூ லாக்கர்ல இருக்கு இப்படி ஏதாவது ஒன்ன எழுதிட்டுதான் உள்ள போக முடியும். நின்னு எழுதிட்டு போறதுக்கு சங்கடப்பட்டே கழுத ஏதாவது ஒரு ஷூவ போட்டுகிட்டு போறது வழக்கம். அதுவும் நா வச்சிருக்குறது ஒரு வருஷம் முன்னால இண்டெர்வியூக்காக வாங்கினது, 300 ரூவா ஃபார்மல் ஷூதான், செம அடி வாங்கியிருந்தாலும், சூப்பர் க்லூ போட்டு ஒட்டி, டெய்லி லைட்டா துடைச்சுட்டு யூஸ் பண்ணுறதால ஒன்னும் தெரியாது, ஆனாலும், பிராண்டட் ஷூ போடுற ஒரு கம்ஃபர்ட்னஸ் கொடுக்கவே கொடுக்காது. ஆஃபீஸ் ஜாய்ன் பண்ணுனப்போ ஒன்னு சொன்னாங்க 'Invest in your shoes'னு, அது கொஞ்சம் உண்மை தான், அதாவது முன்னூரு ரூபாய்க்கு மூனு ஷூ வாங்குறதவிட ஆயிரம் ரூபாய்க்கு நல்ல ஷூவா ஒன்னு வாங்குறதுதான் பெட்டர்னு சொல்லுவாங்க, ஆனா நமக்குதான் மண்டைல வேற தோணுமே!, ஆயிரம் ரூபாய்க்கு ஒரே ஒரு ஷூ வாங்குறதுக்கு பதிலா பஜார்ல மூனு கலர்ல மூனு ஷூ வாங்கலாம்னு யோசிச்சு அப்புறம் அதுக்கும் மனசு வராம ஒரே ஒரு ஷூ வாங்கி சமாளிப்போம்.

ஒருவழியா இப்போதான் கொஞ்சம் நல்ல ஷூவா வாங்கலாமேன்னு யோசிச்சு, நெட்ல அப்புறம் ஃபிரன்ட்ஸ் கிட்டவெல்லாம் விசாரிச்சு லீ கூப்பர்ல ஒரு ஷூ வாங்கலாம்னு பிக்ஸ் ஆகியாச்சு. அப்புறம்தான் இன்னொரு யோசனை, எப்படியோ ஷூ வாங்கபோறோம், அப்டியே வாட்ச்சும் ஒன்னு வாங்குவோம், ஒரு நாள் கூட வாட்சே கட்னது இல்லையே, எப்படித்தான் இருக்குனு போட்டு பாத்துடலாம்னு ஒருத்தங்கிட்ட விசாரிச்சா, அவன் போட்ருக்க வாட்ச் 'டாமி ஹில்ஃபிங்கராம்' விலை பத்தாயிரம் ரூபாய்ங்க்றான், அதோட கண்ணாடிவேற உடைஞ்சு இருந்துச்சு, ஏன் ப்ரோ சரி பண்ணலையா?ன்னு கேட்டத்துக்கு கண்ணாடி மாத்த ரெண்டாயிரம் ஆகும் ப்ரோ அதான் மாத்தலங்கறான்!. அந்தோ பாவம்னு நினைச்சு, சரி என்னென்ன பிராண்ட்லதான் வாட்ச்செல்லாம் போடுறாங்கன்னு பாக்கலாமேன்னு கூட பேசுற எல்லாரு வாட்சையும் நோட் பண்ணுனதுல, ஒரு நாலு பேரு கைல ஓடாத வாட்ச், ஏங்க ஓடாத வாட்ச கட்டிருக்கீங்கன்னு கேட்டா, தெரியும்ங்க சரி பண்ணவெல்லாம் நேரமில்லங்க, வாட்ச் கட்டலன்னா ஒருமாறி இருக்கு, வாட்ச் கற்றது இங்க ஒரு ஸ்டேடஸ் அதான், இப்படி ஓடாத வாட்சுக்கு டிசைன் டிசைனா பதில் வந்துச்சு. நல்ல வேலையா வாட்ச் கட்டனும்ன்றது ஆஃபீஸ்ல ரூல் கிடையாது.