2 Sept 2015

கீழத்தெரு


புதியதலைமுறை’ல ஒரு முறை கோணங்கி சொன்னார் “இன்னமும் கீழத்தெருவும் மேலத்தெருவுமே ஒன்னு சேரல, இதுல எங்கடே சாதியற்ற சமூகம் அமைப்பிங்க”னு. அன்றுதான் எனக்கு விளங்கியது எவ்வளவு வேறுபாடுகள் கொண்ட கிராமத்தில் வாழ்கிறோம் என்று. இரண்டையும் இணைக்குமிடம் பள்ளிகூடம்தான் அதுலயும் தான் எத்துனை வேறுபாடு. இருந்தாலும் கோயிலயும், சுடிகாட்டையும் ஒப்பிட்டு பார்த்தா, பள்ளிகூடம் எவ்வளவோ தேவலாம். எல்லா ஊருலயுமே அசால்டா இறுக்குது இந்த கீழத்தெரு மேலத்தெரு சாதிய சம்பரதாய அடக்குமுறை. மேலத்தெருவில் காலியாகும் வீடுகளில் சமீபமாக கீழத்தெருவினர் குடியேறுகின்றனர். ஆனால் அதுபோல கீழத்தெரு வீடுகளில் மேலத்தெருவினர் மாறுவதில்லை. வீடே இருப்பதில்லை என்பதும் ஒருபுறம் இருக்க, வீடிருந்தாலும் குடியேறுவதுமில்லை, மேலத்தெருவின் வீடுகள், கீழத்தெருவின் இடங்களை தின்று மேலத்தெருக்கலாக மாற்றுகின்றன, வாய்ப்பிருக்கும் சிலர் மேலத்தெருவில் குடியேறிக்கொள்ளலாம். சமீப காலமாக கிராமங்களில் கீழத்தெருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனவே தவிற, இரண்டும் ஒன்னு சேரவில்லை.


இதையெல்லாம் யோசிக்கறப்போ, நாங்க இப்போ குடியிருக்குற அக்ரகாரம் நியாபகம் வந்தது, அது பரவாயில்ல இப்போ எல்லோரும் குடியேறிவற்றாங்க, அக்ரகார ஆட்கள் டவுன் பக்கம் போறதால, இன்னைக்கு எங்க அக்ரகாரத்துல சரிசமமா எல்லாரும் இருக்கோம், இங்க சரிசமம்னு சொன்னது குடியிருக்குற அளவுல.

பி.கு: எங்க அக்ரஹாரத்துல சிவன் கோயில் கீழஅக்ரஹாரத்துலயும், பெருமாள் கோயில் மேல அக்ரஹாரத்துலயும் இருக்கு, ஆக மொத்தம் இங்கயும் சாதிமாதிரி என்னமோ இருக்கு போல.

No comments:

Post a Comment