30 Aug 2015

காமெரொன் டியாஸ்


காமெரொன் டியாஸ் - சார்லி’ஸ் ஏஞ்சல்ஸ் மாதிரி சில படங்கள்ல நடிச்சிருப்பாங்க, ஒரே மாதிரியான நடிப்பு எல்லா படங்கள்லயும் இருக்கும், இவரின் ஒரு ஐந்தாறு படங்கள் பார்த்தது உண்டு. எந்த படங்களிலும் ஒரு ஈர்ப்பு இருந்தது இல்லை கடைசியாக இவரின் ஒரு படத்தை பார்க்கும் வரை.




அந்த படம் ‘My sister’s keeper(2009)’. கேன்சர் போன்ற ஒரு சிவியர் நோயால் ஒரு சகோதரி(15) இறக்க போகிறாள், அவளை காப்பாத்துவதற்க்காக இன்னொரு மகளை(11) பெற்று வளர்க்கிறார்கள்(savior sister-என்ற பதத்தை கூகுல் பன்னவும்). அதாவது நோயுற்ற மகளுக்கு தேவையான இரத்தத்திசு கொண்ட குழந்தையை பெற்றெடுப்பது, அது மட்டுமில்லாமல் இங்கு அக்காவிற்காக, தங்கையின் ஒரு சிறுநீரகத்தையும் கொடுக்க முன்னரே முடிவெடுத்து விடுகின்றனர். இந்த விசயம் தெரிந்ததும் அந்த பதினோரு வயது தங்கை தன் சிறுநீரகத்தை கொடுக்க மறுக்கிறாள். தன் உடல் தனக்கே சொந்தம் என் அனுமதி இல்லாமல் என் சிறுநீரகத்தை தன் சகோதரிக்கு தர முடியாது என்றும், அவ்வாரு நான் கொடுத்தால் தன்னால் விளையாட, டான்ஸ் ஆட, குழந்தை பெற்றுக்கொல்ல முடியாது என கூறி சிறுநீரகத்தை தானம் செய்ய மறுக்கிறாள். ஒரு வக்கீலையும் சந்தித்து தனக்காக தனது பெற்றோர்களை எதிர்த்து வாதாடும்படியும் கேட்டுக்கொள்கிறாள்.


ஒரு மகள் சாகக்கிடக்க, மற்றொரு மகள் அவளுக்கு சிறுநீரகம் கொடுக்க மறுக்க, செய்வதறியாது தவிக்கும் அம்மா ரோலில் காமெரொன் நல்லாவே நடிச்சிருப்பாங்க, தானும் ஒரு வக்கில் என்பதால் தன் இளைய மகளுக்கு எதிரா, அவளின் சிறுநீரக தான உதவி வேண்டி வழக்கை தொடருவார்.

படத்தின் முதல் பாதியில் தங்கை மேல் நமக்கு வெறுப்பு வந்தாலும், பிறகு அது வெயில் பட்ட பனியாய் மறந்துவிடும், ஏன் என்பதன் காரணத்தை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும், ஹாஸ்பிடல் பெட்ல மூத்த மகள் சாகும் முன்னால ஒரு கான்வர்சேஷன் முடிஞ்சதும் டியாஸ் தேமி அழுது மகள் கூடவே சேர்ந்து தூங்கிடுவாங்க, அது தான் மூத்த மகளின் மற்றும் மகளுடனான கடைசி இரவு அவருக்கும். எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாலும், எனக்கு பெருசா பட்டது டியாஸின் நடிப்பு தான். பழைய ‘தி மாஸ்க்’ மூவில செம அழகா வற்ற ஹீரோயினும் இவங்க தான், அதுதான் டியாஸின் முதல் படமும் கூட. உண்மையில் ஒரு ஒர்த்தான ஒரு ஃபீல் குட் மூவி.

பை த வே இன்னைக்கு காமெரொன் டியாஸின் பிறந்தநாளாம், My sister’s keeper மூவியோட ஃபேஸ்புக் பேஜ்ல இப்போ தான் பார்த்தேன். ஏற்கனவே இந்த படத்தை பத்தியும், டியாஸ் பத்தியும் எழுதலாம்னு இருந்தேன். இன்னைக்கு எழுதினா நல்லா இருக்கும்னு அவசரமா எழுதியது. நிறைய நல்ல விசயங்களை எழுத வில்லை, படம் பார்த்து உணர்ந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment