18 Jan 2018

பெட்ரோல் ட்ரை சம்பவம்


சுமார் ஒரு மாசத்துக்கு முன்ன இருக்கும், இன்னைக்கு மாதிரியே அன்னைக்கும் ஆஃபிஸ்லேர்ந்து கெளம்பும்போதே பைக்கு முக்க ஆரம்பிச்சிருச்சு, ஆல்மோஸ்ட் டேங்க் காலி. ஆனா அன்னைக்கு சரியா மணி பண்ணிரண்டு, இன்னைக்கு பத்துதான். ஒரு ரெண்டு கி.மீட்டர் தாண்டிதான் புதுசா ஓபன் பண்ணின பெட்ரோல் பங்க் இருக்கு. ச்சோக்கையும், ஆக்ஸிலேட்டரையும் முறுக்கிபிடிச்சு வந்ததால நல்லபடியா கரெக்டா பெட்ரோல் பங்க் கிட்ட வந்து ஆஃப் ஆகியிருந்தது.

உள்ள போனதும், இரநூறு ரூபாய்க்கு போடுங்க ப்ரோன்னேன், இல்ல சார் பெட்ரோல் இல்ல என்றார். 'என்னங்க நைட் க்ளோஸ் பண்ணிடுவிங்களா என்ன? லாஸ்ட் வீக் வந்தேனே இந்த டைமுக்கு இருந்ததே?' என்று கேட்டேன். 'இல்ல சார் நம்ம பங்க் 24 ஹவர்சும் உண்டு, இன்னைக்கு ஸ்டோரேஜ் டேங்க்ல கொஞ்சம் வேலை போயிட்ருக்கு அதான்' அப்படின்னு டேங்கை நோக்கி கையை காட்டினார்.

இது என்னடா நமக்கு வந்த சோதன இன்னும் மூனு கி.மீட்டர் வேற தள்ளனுமேன்னு நெனச்சுட்டே வண்டிய அங்கிருந்து நகர்த்த ஆரம்பிச்சேன், சரியா மூனு நாளு செகண்ட்லயே 'சார்! வண்டி ட்ரையிங்களா!?'ன்னு அந்த நபர் கூப்பிட்டு கேட்டார். 'ஆமா ப்ரோ! இங்க வந்துதான் நின்னுச்சு!' என்றேன்.

'மொதொல்லயே சொல்லிருக்கலாம்ல சார், பெட்ரோல் இருக்கு வாங்க போட்டுக்கலாம், ட்ரையாயிட்டு வர்றவங்களுக்குன்னு ஒரு பத்து லிட்டர் எடுத்து வச்சிருக்கோம். டெய்லி எப்படியும் நைட்டுக்கா அஞ்சு பத்துபேர் பெட்ரோல் ட்ரையின்னு வர்றாங்க அதுக்காண்டிதான் எடுத்து வச்சோம்' என்றார். நான் கரெக்டா பெட்ரோல் பங்க் உள்ள வந்து பைக்க நிப்பாட்டினதால பெட்ரோல் இருக்குன்னு நினைத்துவிட்டார் போல.

'அளந்துதான் சார் போட முடியும், நூறு ரூபாய்க்குதான் சார் வரும் இரநூறுக்கு வராது இன்னும் ஆளுங்க வருவாங்க'ன்னு சொல்லி பெட்ரோலை அளந்து ஊத்தினார்.
பணம் கொடுத்துவிட்டு, தேங்ஸ் சொல்லிவிட்டு, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புன்னகை பரிமாறிக்கொண்டதற்க்கு பிறகு அங்கிருந்து கிளம்பினேன்.

இன்னைக்கும் அன்றைக்குபோலவே ஒரு பெட்ரோல் ட்ரை சம்பவம், அதே பங்கில் இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு, அதே நபருடன் பரஸ்பரம் புன்னகை பரிமாற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருக்கிறேன். அந்த பெட்ரோல் பங்க்காரர் போன்ற நபர்கள் இருக்கும்வரை நம் பெட்ரோல் டேங்க்குகள் காலியாகும் வரை வண்டியை ஓட்டலாம், தப்பில்லை :)

No comments:

Post a Comment