Koh-i-noor hardtmuth toison d'or 1900, இதுதான் நான் யூஸ் பண்ணுற பென்சில், அப்புறம் என்கிட்ட சஜ்ஜசன் கேக்குறவங்களுக்கு நான் சொல்லுறதும் இதுதான். கூடவே நான் சேத்து சொல்லுற இன்னொரு பிட்டு, 'அதாவது டார்க் ஷேட்லாம் அப்டி இருக்கும், சூப்பர் பென்சில்தான், ஆனா சீவ சீவ முக்குதான் உடஞ்சிட்டே இருக்கும்'னு சொல்லுவேன்.
இப்டியே சொல்லிட்டே இருந்தா வேலைக்கு ஆகாதுனு அந்த கம்பெனிக்கு கடுதாசி ஒன்னு எழுதுயிருந்தேன், ரெண்டுநாள்க்கு முன்ன பதில் வந்தது. 'உங்களோட அப்சர்வேஷனுக்கு நன்றி, நாங்க நல்லா செக் பண்ணிட்டோம் அந்த மாதிரி ப்ரச்சனையெல்லாம் இந்த பென்சில்ல இல்ல, எதுக்கும் நல்லா யோசிச்சு பாருங்க, நீங்க டேபில்ல இருந்து அல்லது அதுபோல கொஞ்சம் ஒசரத்துல இருந்து கீழ போட்டிருக்கலாம், அதுனால பென்சில் disrupted ஆகிருக்கலாம். However, we thank you for the information, we will keep an eye on the quality of graphite pencils.'னு சொல்லி சுபம் போட்டுருக்காங்க.
நானும் உக்காந்து நல்லா யோசிச்சு பாத்ததுல, நாந்தான் பல முறை கீழபோட்ருக்கேன்னு நியாபகம் வந்திருக்கு. அனாலும் ஒரு டெஸ்ட் எஞ்சினியறா உட்காந்து யோசிக்கசொல்ல, கீழ விழுந்தாலும் உடையாதமாதிரில்ல டெலிவர் பண்ணனும் இது கண்டிப்பா டிஃபெக்ட்டுதான்னு தோனுது, a delicate position.
😏

எனிவே மக்களே, நல்ல பென்சில் தேடுறவங்க நம்பி வாங்கலாம், வாங்கினதும் பூ மாதிரி பாத்துக்கணும். பெஸ்ட் பை லிங்க்ஸ் கீழே..
No comments:
Post a Comment