15 Oct 2015

The Art of Handshaking




ஒரு கலாச்சாரத்தில் புனிதமாவோ, சடங்காவோ, வீரமாவோ, அன்பாவோ பார்க்கப்படுற சில பழக்கவழக்கங்கள், வேறு ஒரு கலாச்சார மக்களிடையே தவறாவும், அசிங்கமாவும் ஏன் அறுவருப்பாகவும்கூட பார்க்கப்படும் என்பது அறிந்ததே, இந்த ஸ்கூல்ல, காலெஜ்ல, அப்புறம் வேலை பாக்குற இடத்தில் என எல்லா இடத்திலும், இன்னொருத்தர்கிட்ட எப்படி கைகுழுக்குவது என க்ளாஸ் மேல க்ளாஸ் எடுத்துவிட்டனர். அதிலும் கை கொடுத்தலில் இருக்கும் “Body Language” மற்றும் “The Art of Handshaking” என உளவியல் சார்ந்த தியரிகள் வேறு, தியரிகளின் உண்மை தன்மையில் அய்யமேதுமில்லை, ஆனாலும் கை கொடுத்தல் பல நேரங்களில் அசௌகர்யத்தையே கொடுக்கும். உண்மையில் அந்த உளவியல் தியரிகள் கூட காரணமாக இருக்கலாம். ஆக பல சமயங்களில் நண்பர்களிடையே விளையாட்டாய் சிரித்து கொண்டே அரசியல்வாதி போல் கும்பிடு போடுவதும் உண்டு, பதிலுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் சிரிப்போடு கும்பிடு வரும், அதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்யும்.

நாம கும்புடு போடுவது, கை குழுக்கும் சமூகத்துக்கு காமெடியாக தெறியலாம், ஆனால் நமக்கு கை குழுக்குவது காமெடியாக தெறியாது, அதிலொரு ப்ரொஃபசனிலிஸ்ம் தான் நமக்கு தெறியும், ஆகவே தான் இங்கு இதை பதிய விளைகிறேன், தொன்னூறுகளுக்கு முன்பு வரை பல கை குழுக்கும் சமூகங்கள் தங்களுக்குள் சில ஒப்பந்தங்கள்(deal) செய்து கொள்ளும் போது கையில் எச்சில் துப்பி கை குழுக்கி கொள்ளும் முறையை வைத்திருந்தன, தற்போது அவற்றை பின்பற்றுவது இல்லை, அதற்கு காரணமொன்று தனியே தேவையில்லை.

சாதாரணமாக கை குழுக்கும் போதே ஏகப்பட்ட கிருமிகள் பரவுகின்றன என்று பல ஆய்வுகள் சொல்கின்றன, மேலும் கண்ட இடங்களில் கையை வைத்து பின் எதிரிக்கு கை கொடுத்து பழிவாங்கும் பல சீன்களும் ஹாலிவுட் படங்களில் பார்த்தது உண்டு, ஆக நமக்குள் நாம் கை குழுக்கிக்கொள்ளும் போது இது போன்ற பல சீன்கள் கண் முன்னே வந்து போகும்.

No comments:

Post a Comment