9 Oct 2015

தூக்கம் பறித்த வார்த்தைகள்

அவனுக்கு எட்டு மணிக்குதான் தினமும் பஸ். ஆஃபீஸ் முடிந்து ஏழு நாற்பதுக்கு அருகிலிருக்கும் பேருந்துநிருத்தத்திற்கு சென்று காத்திருப்பது வழக்கம். காத்திருப்பது என்றால் பேருந்துநிருத்தத்தின் நீண்ட இருக்கைகளில் அமர்ந்திருப்பது அல்ல, தினமும் நிற்கவே செய்வான். அது ஒரு நீளமான பேருந்துநிருத்தம், நான்கைந்து நீண்ட இருக்கைகள் இருக்கும் என்றாலும் யாராவது ஒருவராவது அவைகளில் அமர்ந்திருப்பர். அவனுக்கு தனியே அமர்வதுதான் இஷ்டம் என்பதால், ஒருநாளும் அவற்றில் அமர்ந்தது இல்லை.

அன்று ஏனோ சீக்கிரம் வேலைகள் முடிய ஏழு இருபதிற்கே வந்துவிட்டான், ஒரு நீண்ட இருக்கை மட்டும் ஆளின்றியிருக்க, மீதமணைத்திலும் ஓரிருவர் அமர்ந்திருந்தனர். பேருந்திற்கு வெகுநேர காத்திருக்க வேண்டுமென்பதால் சென்று அமர்ந்தான். பேருந்து நிருத்தத்திற்கே உண்டான அழுக்கு துணி உடுத்திய தாடி மழிக்காத உருவம் கொண்ட ஒருவர் அவனருகே வந்து நிற்பதை கவணித்துகொண்டு கையிலிருந்த ஃபோனை நோண்ட ஆரம்பித்தான். கண நேரத்தில், மெலிந்த குரலில் “கொஞ்சம் அங்க போயி வுட்க்காருப்பா!” என்றார் அவர். அவன் கவணிக்காததுபோல் இருந்தான். அப்படி அவன் கவணிக்காதபடி அமர்ந்திருந்தது அவனின் அன்றைய தூக்கத்தை பறிக்கப்போகிறது என்பது அப்போது அவனுக்கு தெறியாது.

ஒரே நிமிடம்தான்... கேட்டதை வாங்கிதறாத பெற்றோரிடம் கத்தும் குழந்தை போல சத்தமாக கத்த ஆரம்பித்துவிட்டார், “படுக்க சீட்டுதானே கேட்டேன், உங்களுக்கெல்லாம் வீடு இருக்கு, வீட்டுக்கு போக பஸ்ஸுக்கு காத்திருக்கிங்க, எனக்கெல்லாம் என்ன இருக்கு, நான் என்ன வீடு கட்ட காசு கேட்டேனா, இல்ல சோத்துக்குதான் காசு கேட்டேனா! நகந்துபோககோட மாட்டேன்றிங்க”னு கத்திக்கொண்டே தரையில் படுத்து, வைத்திருந்த துணியால் போற்றிக்கொண்டார். சுற்றியிருக்கும் அனைவரின் கண்களும் அவனை வித்தியாசமாக பார்க்க, சட்டென எழுந்து அடுத்த பேருந்துநிருத்தத்திற்க்கு நடக்க தொடங்கினான்.

அங்கிருந்தவர்களெல்லாம் செல்லும் வரை, அவர் கத்தின வார்த்தைகள் அந்த நீண்ட இருக்கையில் சாவகாசமாய் படுத்துக்கொண்டது.

No comments:

Post a Comment